பக்தி படங்களின் மதநல்லிணக்கமும்; சமூகப் படங்களின் மதவெறியும்

கட்சி அரசியல் சார்பற்றவர்களில் தமிழ் திரைப்பட உலகில் செறிவான ஆற்றல் உள்ளவர் என்றால் யாரை குறிப்பிடுவீர்கள்?

-என். சுகுமார், மதுரை.

ஏ.பி. நாகராஜனை. இன்றைய சமூக படங்கள் தீவிரமான இந்து பிரச்சார படமாகவும், இஸ்லாமிய எதிர்ப்பு படமாகவும் இருக்கிறது. ஆனால், ஏ.பி. நாகராஜன் எடுத்த இந்து புராண பக்தி படங்கள் சிறந்த சமூக படங்களாக, பொழுதுபோக்கு படங்களாக இருந்திருக்கிறது.

புராணக் கதை அடிப்படையில் அவர் எடுத்த ‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் இருந்த சுவாரஸ்யமான திரைக்கதையால், இந்துக்கள் மட்டுமல்ல இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் கூட விரும்பி பார்த்தார்கள். அந்தப் படத்தின் வசனங்கள் எல்லா மதக்காரர்களுக்கும் மனப்பாடம்.

கொத்தமங்கலம் சுப்புவின் கதையை சிறந்த திரைக்கதையாக்கி ‘தில்லான மோகனாம்பாள்’ என்று அவர் எடுத்த திரைப்படத்திற்கு இணையாக இதுவரை தமிழில் பொழுது போக்கு படம் வந்ததில்லை.

தில்லான மோகனாம்பாளை தழுவி எடுத்த கரகாட்டக்காரனும் பெரிய வெற்றி பெற்றது. தில்லான மோகனாம்பாளையும்-கரகாட்டக்காரனையும் கலந்து அடித்த, சங்கமமும் பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றி எல்லாம் ஏ.பி. நாகராஜனைத்தான் சாரும்.

***

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2010 டிசம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

ஆர்யாவின் திறமையான இன உணர்வும் – சரத்குமார், குகநாதனின் சலசலப்பும்

‘கோகோ கோலா, ரஜினி போன்றவைகளிடமிருந்து மக்களை போலிகள்தான் பாதுகாக்கிறது

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

பராசக்தி படமும் பிச்சைக்காரர்களும்

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

13 thoughts on “பக்தி படங்களின் மதநல்லிணக்கமும்; சமூகப் படங்களின் மதவெறியும்

  1. தங்களின் பதில்கள் அனைத்துமே சிந்திக்க வைக்கின்றன.. சங்கமம் தோல்வி படம் என்று நினைக்கிறேன்..

  2. சகோதரர் மதிமாறன் அவர்களின் இந்தக் கட்டுரை மிக சிறப்பாக உள்ளது.

    மத நல்லிணக்கத்தின் அவசியத்தை விளக்கும் கட்டுரைகளை சகோதரர் மதிமாறன் தொடர்ந்து வெளியிடுவார் என்று நம்புகிறோம். மத சகிப்புத் தன்மையால் உருவான மத வெறியானது உலகிலே கோடிக் கணக்காணவர் உயிர் இழக்க காரணாமாகி விட்டது. பிற மதங்களை வெறுக்காமல் ஆக்கபூர்வமான கண்ணோட்டத்தோடு அணுகினால் இன்று உலகில் இருக்கும் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

    அதே போல சமத்துவ, நாகரிக சமுதாயம் அமைப்பதும் மிக முக்கியமானதே. உலகில் அனைவரும் – மத, இன, மொழி, சாதீய, பிராந்திய , வர்க்க, பாலின … வேறுபாட்டின் அடிப்படையில் நோக்கப் படாமல் – அனைவர்க்கும் முழுப் பாது காப்பு வழங்கப் படவேண்டும், மரியாதையுடனும் , கண்ணியத்துடனும் நடத்தப் படவேண்டும், சம உரிமை , சம வாய்ப்பு, சம நீதி வழங்கப் பட வேண்டும் என்பதுதான் நியாமான நாகரீக சமுதாயம். பாதிக்கப் பட்டவர்கள் முன்னேற சிறப்பு சலுகைகள் தர வேண்டும்.

    மத நல்லிணக்கம், சமத்துவம் இந்த இரண்டுமே மிக சிறந்த கொள்கைகள், உலக அமைதிக்கு அவசியமானவை. இவற்றில் சகோதரர் மதிமாறன் கவனம் செலுத்துவதை வரவேற்கிறோம்.

    திருவிளையாடல் படத்தை எல்லோரும் விரும்பி பார்க்கலாம். அதில் சிறந்த நகைச் சுவை காட்சிகள் இருந்தன என்பதை நினைவு கூர்கிறோம். பாடல்களும் இசையும் சிறப்பானவை. மேலும் பிற மதங்களின் கோட்பாட்டை , தெய்வங்களை இழிவு படுத்தும் படியான எந்தக் காட்சியும் அந்தப் படத்தில் இல்லை. இருக்கவும் முடியாது. ஏனெனில் முருகன், கருமாரி அம்மன்…. உட்பட பெரும்பாலான இந்துக் கடவுள்களின் வழி பாட்டு முறைகள் பிற மதங்களின் கடவுள்களை வெறுக்க சொல்லவில்லை. எந்த ஒரு இந்துக் கடவுளும், என்னைத் தவிர பிற கடவுள்களை வழிபடக் கூடாது என்றோ, வழிபட்டால் தண்டிப்பேன் என்றோ சொல்லவில்லை.

    இயேசு கிறிஸ்து கூட எந்த ஒரு இடத்திலும் பிற மதத்தினரின் கடவுள்களை இகழவோ, கேலி செய்யவோ சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால், என்னுடைய கொள்கைகளை பின்பற்றுவதினால் அல்லாமல் என்னைப் பார்த்து கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்வதினால் ஒருவன் மீட்சி அடைய மாட்டன் என்கிற ரீதியில் சொல்லி உள்ளார்.

    இவ்வாறாக எல்லா மதங்களிலும் நல்லிணக்கத்துக்கான கோட்பாடுகள் உள்ளன. யாரையும் அவர்கள் மதங்களை விட்டு விடும்படி சொல்லவில்லை, பிற மதங்களை, அவர்கள் கடவுளாக வழிபடுபவர்களை, காரணம் இல்லாமல் வெறுக்க வேண்டாம் என்பதையே, மத நல்லிணக்கத்தின் முதல் கோட்பாடாக சொல்லுகிறோம்.

  3. சகோதரர் மதிமாறன் அவர்களின் இந்தக் கட்டுரை மிக சிறப்பாக உள்ளது.

    மத நல்லிணக்கத்தின் அவசியத்தை விளக்கும் கட்டுரைகளை சகோதரர் மதிமாறன் தொடர்ந்து வெளியிடுவார் என்று நம்புகிறோம். மத சகிப்புத் தன்மையால் உருவான மத வெறியானது உலகிலே கோடிக் கணக்காணவர் உயிர் இழக்க காரணாமாகி விட்டது. பிற மதங்களை வெறுக்காமல் ஆக்கபூர்வமான கண்ணோட்டத்தோடு அணுகினால் இன்று உலகில் இருக்கும் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

    அதே போல சமத்துவ, நாகரிக சமுதாயம் அமைப்பதும் மிக முக்கியமானதே. உலகில் அனைவரும் – மத, இன, மொழி, சாதீய, பிராந்திய , வர்க்க, பாலின … வேறுபாட்டின் அடிப்படையில் நோக்கப் படாமல் – அனைவர்க்கும் முழுப் பாது காப்பு வழங்கப் படவேண்டும், மரியாதையுடனும் , கண்ணியத்துடனும் நடத்தப் படவேண்டும், சம உரிமை , சம வாய்ப்பு, சம நீதி வழங்கப் பட வேண்டும் என்பதுதான் நியாமான நாகரீக சமுதாயம். பாதிக்கப் பட்டவர்கள் முன்னேற சிறப்பு சலுகைகள் தர வேண்டும்.

    மத நல்லிணக்கம், சமத்துவம் இந்த இரண்டுமே மிக சிறந்த கொள்கைகள், உலக அமைதிக்கு அவசியமானவை. இவற்றில் சகோதரர் மதிமாறன் கவனம் செலுத்துவதை வரவேற்கிறோம்.

    திருவிளையாடல் படத்தை எல்லோரும் விரும்பி பார்க்கலாம். அதில் சிறந்த நகைச் சுவை காட்சிகள் இருந்தன என்பதை நினைவு கூர்கிறோம். பாடல்களும் இசையும் சிறப்பானவை. மேலும் பிற மதங்களின் கோட்பாட்டை , தெய்வங்களை இழிவு படுத்தும் படியான எந்தக் காட்சியும் அந்தப் படத்தில் இல்லை. இருக்கவும் முடியாது. ஏனெனில் முருகன், கருமாரி அம்மன்…. உட்பட பெரும்பாலான இந்துக் கடவுள்களின் வழி பாட்டு முறைகள் பிற மதங்களின் கடவுள்களை வெறுக்க சொல்லவில்லை. எந்த ஒரு இந்துக் கடவுளும், என்னைத் தவிர பிற கடவுள்களை வழிபடக் கூடாது என்றோ, வழிபட்டால் தண்டிப்பேன் என்றோ சொல்லவில்லை.

    இயேசு கிறிஸ்து கூட எந்த ஒரு இடத்திலும் பிற மதத்தினரின் கடவுள்களை இகழவோ, கேலி செய்யவோ சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால், என்னுடைய கொள்கைகளை பின்பற்றுவதினால் அல்லாமல் என்னைப் பார்த்து கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்வதினால் ஒருவன் மீட்சி அடைய மாட்டான் என்கிற ரீதியில் சொல்லி உள்ளார்.

    இவ்வாறாக எல்லா மதங்களிலும் நல்லிணக்கத்துக்கான கோட்பாடுகள் உள்ளன.

    யாரையும் அவர்கள் மதங்களை விட்டு விடும்படி சொல்லவில்லை, பிற மதங்களை, அவர்கள் கடவுளாக வழிபடுபவர்களை, காரணம் இல்லாமல் வெறுக்க வேண்டாம் என்பதையே, மத நல்லிணக்கத்தின் முதல் கோட்பாடாக சொல்லுகிறோம்.

  4. I wholeheartedly repeat Thiruchchikkaaran,s words.

    Tolerence to other religions is imbibed in Hindu way of thinking.

    We hope other religions will follow this one day.

  5. விஜய் எனும் நடிகர் கிறித்துவர். உங்கள் பாசையில் தளித் அவருடைய படங்களில் இந்துக் கடவுளை உயர்த்திப் பிடித்தே எடுக்கப்பட்டிருப்பதினை பார்த்திருக்கின்றீர்களா.

    அந்தப் படங்கள் மட்டுமே ஓடும் என அவர் நினைப்பதற்கு இந்துக்கள் எதுவும் செய்ய இயலாது. மற்ற மதத்தினரை விட இந்துக்களே அதிக சகிப்பு தன்மையுடன் வாழ்கின்றார்கள். இப்போது கூட காசியில் குண்டு வெடித்தது, குழந்தை செத்தது. யாரும் கண்டுகொள்ள வில்லை. அதுதான் இந்துக்கள். இதே சம்பவம் மசுதியிலோ, சர்ச்சிலோ நடந்திருந்தால் கூட்டம் கூடியிருக்கும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும். பழிவாங்குதலும் நடைபெற்றிருக்கும்.

    உண்மையை புரிந்தும் புரியாதது போல நடிக்காதீர்கள் நண்பர்களே!..

  6. சகோதரன் திருச்சிக்காரன் என்ன சொல்கீறீர்கள்? இந்து மதத்தை வெறுக்காதீர்கள்…..மதம் மாறாதீர்கள் என்று சொல்லவருகிறீர்களா?

  7. சகோதரர் சிவராஜ் அவர்களே,

    இந்து மதம் மட்டும் அல்ல, புத்த மதமோ, கிறிஸ்தவ மதமோ,இஸ்லாமோ எந்த ஒரு மதத்தையும் வெறுக்க வேண்டியதில்லை என்று சொல்லுகிறேன்.

    எந்த ஒரு மதத்தையும் , எந்த ஒரு கோட்பாட்டையும் (கம்யூனிசம், கேபிடலிசம்… போன்றவற்றை ) ஒட்டு மொத்தமாக வெறுத்து ஒதுக்கவும் வேண்டியதில்லை. கண்ணை மூடிக் கொண்டு அப்படியே ஆதரிக்கவும் வேண்டியதில்லை.

    ஒவ்வொரு மதத்தையும் கோட்பாட்டையும் ஆக்க பூர்வமாக அணுகுகிறோம், அதில் சொல்லப் பட்டுள்ள கருத்துக்களில் மனித குல நன்மைக்கு உதவக் கூடியவற்றை தயங்காமல் ஏற்றுக் கொள்ளுகிறோம், அதே நேரம் அவற்றில் உள்ள ஆட்சேபிக்கக் கூடிய கருத்துக்களை விட்டு விட சொல்லவும் தயங்குவதில்லை.

    சொல்லப் பட்டுள்ள ஒவ்வொரு கருத்தையும் பகுத்தறிவின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்து விருப்பு வெறுப்பில்லாமல் முடிவு எடுக்கிறோம்.

    மத நல்லிணக்க அடிப்படையில் நான் சர்ச்சுக்கு சென்று பிரேயரில் கலந்து கொள்ளவும், ராமதானில் நோன்பு இருக்கவும், கோவிலுக்கு செல்லவும் தயார், இதை செய்து கொண்டுதான் இருக்கிறேன். நம்முடைய தளத்திலே வெளியான ” மத நல்லிணக்கம் என்பது என்ன?” என்கிற கட்டுரையை படிக்குமாறு கோருகிறோம்.

    அதே நேரம் கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியை வைக்கும் உரிமையை , ஆராய்ச்சி செய்யும் உரிமை எங்களுக்கு உண்டு. நாங்கள் எந்தக் கடவுளையும் குறிப்பிட்டு இகழ்ந்து வெறுப்புணர்ச்சியை காட்டவில்லை. கடவுள் என்கிற ஒருவர் அல்லது கடவுள் என்கிற நிலை இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முயல்கிறோம், இது உண்மையை அறிய விரும்பும் ஆர்வம் ஆகும்.

    பிற மத வழிபாட்டு முறைகளை தெய்வங்களைக் கண்டாலே சிலருக்கு, பலருக்கு தடுக்க முடியாத வெறுப்புணர்ச்சி பீரிட்டு வருகிறது. இது மத சகிப்புத் தன்மை மனதிலே இல்லாததால் உருவான விளைவு. இந்த சகிப்புத்தன்மை இன்மையால் உருவாகும் வெறுப்புணர்ச்சி, எந்த அளவுக்கு அதிகமாகிறதோ அந்த அளவுக்கு அவர் ஆபத்தனவராகிறார்.

    என் கடவுள் மட்டுமே உண்மையான ஜீவனுள்ள கடவுள், மற்ற கடவுள்கள் எல்லாம் பொய்யானவை, என் மதம் மட்டுமே உண்மையான மதம் ,மற்றவை பொய்யானவை, என் மத்தை மட்டுமே இந்த உலகில் உள்ள அனைவரும் ஒத்துக் கொண்டு பின்பற்ற வேண்டும், என்கிற கோட்பாடு சமூகங்களுக்கு இடையிலே மோதலை உருவாக்கி அமைதியை அழித்து பல உயிர்கள் மரணம் அடையக் காரணமாக இருக்கிறது.

    இவ்வளவு தெளிவாக விளக்கியும் பலர், “நான் சொல்லும் கடவுள் மட்டுமே உண்மையானவர்” என்று மீண்டும் மீண்டும் சொல்லுகின்றனர். பிற மதக் கடவுள்கள் எல்லாம் பொய்யானவை என்றால், உங்கள் கடவுள் மட்டுமே உண்மையானவர் என்றால், சரி அதை ஒத்துக் கொள்ளுகிறோம், முதலில் அதை நிரூபியுங்கள்.

    முதலில் கடவுள் என்று ஒருவர் இருப்பதை நிரூபியுங்கள், உங்கள கடவுள் மட்டுமே உண்மையானவர் என்றால், அதை நிரூபியுங்கள். வானிலே தொடர்ச்சியாக எல்லா நாட்களிலும் முழு நிலவாக ஒளிரும்படி இப்படி ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக ஒளி விடும்படி செய்யுங்கள், நீங்கள் சொல்லும் கடவுள் மட்டுமே உண்மையான கடவுள் என்று ஒத்துக் கொள்கிறேன்.

    ஆனால் சரி பார்த்துக் கொள்ளக் கூடிய எந்த ஒரு நிரூபணமும் தராமல் (Verifiable proof) , நான் சொல்லும் கடவுள் தாண்டா உண்மையான கடவுள் , அப்படியே ஒத்துக் கொள் என்று உறுமுகின்றனர். நான் சொல்லும் கடவுளை, நான் சொல்லும் முறையில் மட்டுமே வணங்க வேண்டும் என்று வற்புறுத்தவும் ஆரம்பிக்கின்றனர். நீ வணங்கும் தெய்வமும் தவறு, வணங்கும் முறையும் தவறு என்கின்றனர். அதே கோட்பாட்டை பிற மதத்தவரும் சொல்லுகின்றனர்.

    யார் சொல்லுவது உண்மை என்று எப்படிக் கண்டு பிடிப்பது? யாரிடமும் நிரூபணம் இல்லை. எனவே பகுத்தறிவு ஆராய்ச்சிக்கு வழி இல்லை. ஆனால் தான் நம்புவது மட்டுமே உண்மை என்று ஆக்கி விட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்கள். என்ன செய்வது, உருவு வாளை, யார் ஜெயிக்கிறோமா, அவர்கள் கோட்பாடு உண்மை என்று ஆரம்பித்து இன்று நவீன ஆயுதங்களுடன் போர் தொடருகிறது.

    வரலாற்றின் பக்கங்களில் இவை எல்லாம் நிரம்பிக் கிடக்கிறது. மத வெறிக்கான வரலாற்றுக் காலம் முடிவடையட்டும், மத நல்லிணக்கத்துக்கான காலத்தை ஆரம்பிப்போம் என்கிறோம்.

    யார் எந்த மதத்தில் இருந்தாலும் சரி,

    – அவர்கள் பிற மத வழிபாட்டை பார்த்து எரிச்சல் அடையாத வரையில், பிற மதங்களை சகித்துக் கொள்ளும் மனநிலையில் இருக்கும் வரை,

    அமைதியாக தங்கள் வழிபாட்டை நடத்திக் கொள்ளும் மன நிலையில் இருப்பவன்,

    எல்லா மதங்களிலும் கடவுளை தொழுபவன் தன்னைப் போலவே அதே நம்பிக்கையுடனும், மரியாதையுடனும், மனக் குவிப்புடனும் தான் கடவுளைத் தொழுகிறான் என்பதை புரிந்து கொண்டவன் –

    அவன் மத நல்லிணக்க பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டான், அவன் எந்த மதத்தில் இருந்தாலும் அவன் மனிதத்தின் நண்பன் தான்.

    பிற மதங்களை வெறுக்க வேண்டாம், அவற்றைப் புரிந்து கொள்ளுவோம், அவர்களின் ஆன்மீகத்தை உணர்ந்து கொள்ளுவோம், அவர்களுடன் நல்லிணக்கத்தில் கலந்து கொள்ளுவோம் என்கிற கோட்பாட்டை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒருவர் எந்த மதத்தை பிரச்சாரம் செய்தாலும் அதனால் மக்களுக்கு, உலகத்துக்கு, சமூகத்துக்கு கெடுதல் இல்லை, அதில் ஆட்சேபிக்க ஒன்றும் இல்லை.

    நான் சொல்லுவதில் ஆட்சேபனை இருக்கிறதா சகோதரர் சிவராஜ் அவர்களே?

  8. மத நல்லிணக்கம் குறித்து தங்கள் பதிவு நன்றாக இருக்கிறது.அதில் வெளியாகியுள்ள செய்தியில் ஒரு திருத்தம்
    கர்ணன் திரைப்படத்தை இயக்கியவர் B R பந்துலு .ஏ பி நாகராஜன் அல்ல

  9. அனைத்து மதத்தினரையும் மதிப்பவன் மதம் மாற வேண்டிய அவசியம் இல்லை,
    மேலும் பல மூடநம்பிக்கைகள் இருந்தாலும் அது தான் இந்தியாவின் பழமையான மதம் ,அது நம் கலாச்சாரம்,மொழி,பண்பாடு ,வாழ்க்கை முறை ஆகியவற்றில் மற்ற மதங்களை விட அதிகம் பிணைந்துள்ள மதம்,அதில் உள்ள மூடநம்பிக்கைகளை அவசியம் கலையவேண்டும்,ஆனால் அதற்காக அதில் இருந்து கொண்டே போராட வேண்டுமே ஒழிய மதம் மாறக்கூடாது.கிறிஸ்துவம்,இஸ்லாம் போன்ற மதங்கள் பிறகாலத்தில் நம் நாட்டில் நுழைந்த மதங்கள்,அதனால் அம் மதங்களை பின்பற்றும் போது,நாம் அம்மதம் வந்த நாட்டின் கலாச்சாரம்,பண்பாட்டையும் பின்பற்ற வேண்டியுள்ளது,இது தவிர்க்க முடியாத ஒன்று,
    ஆனால் இந்து மதம் சுதந்திரமான மதம்,அதில் இருந்து கொண்டே ஒருவர் மசூதிக்கும் போகலாம்,சர்ச்சுக்கு போய் தியானமும் செய்யலாம்,அப்படி இருக்க நாம் ஏன் அம்மதங்களுக்கு மாற வேண்டும்,
    ஒரு மனிதன் கிறிஸ்துவனாக மாறி தான் யேசுவை வழிபட வேண்டும் என்பதில்லை,ஆகவே மதம் மாறுவது தேவையற்றது மட்டும் அல்ல அது நம் சமூகத்தில் வீண் பிளவை ஏற்படுத்த கூடியது,
    நான் எந்த மதத்திற்கும் எதிரானவன் அல்ல,ஆனால் அதே சமயம் மத மாற்றத்திற்கு எதிரானவன்,
    அதனால் தான் பெரியார் கடைசி வரை வேறு மதத்திற்கு மாறவில்லை,ஆனால் இங்குள்ள சில தலீத் அமைப்புகள் ,பிராமணர்கள் மீது உள்ள கோபத்தில் இந்து மதத்தை எதிர்த்து பேசுவது மட்டும் அல்லாமல்,அம்பெத்கர் புத்தமதத்தை தழுவினார் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு புத்தமததை ஆதரித்து பேசி வருகின்றன,இது தவறான அனுகுமுறை,அந்த புத்த மதத்தை சேர்ந்த சிங்களவர்கள்,ஈழத்தில் தமிழர்களை கொன்று குவிக்கிறது,
    அப்படி இங்குள்ள தமிழன் புத்த மதத்தை தழுவதாக வைத்துக் கொள்வான்,அவன் வழி தோன்றும் தமிழ் இனம்,மதத்தின் அடிப்படையில் சிந்திக்க ஆரம்பிப்பார்கள்,விளைவு எதிர்காலத்தில் இந்த புதத மதம் தழுவிய தமிழர்கள்,சிங்கள புத்தமதத்தினரை ஆதரித்து,ஈழத்தமிழர்களை அந்நியமாக கருதும் நிலை உருவாகும்,ஆகவே அம்பெத்கர் நாம் மதிக்கும் தலைவர் என்றாலும்,நமக்கு நாட்டுக்கு நம் இனத்திற்கு எது தேவையே அதை தான் செய்யவேண்டும்,அப்படியே அவர் சொன்னதை எல்லாவற்றையும் ஈயடித்தான் காப்பியக்க தேவையில்லை,

  10. மேலும் இந்து மதம் எதோ பாப்பனர் ம்தம் என்று எண்ணுவதும் தவறு,அவர்கள் கோயிலில் அர்ச்சகர் அந்தஸ்தில் இருப்பதினாலேயே ,இந்து மதம் அவர்களுக்கு சொந்தம் என்று ஆகிவிடாது,
    இந்து மதம் என்று தற்காலத்தில் சொல்லப்படுகிற சைவம்,வைணவன்,மற்றும் இயற்கையை வழிபடுதல் இவை அனைத்தும் தமிழர்களது திராவிடர்களது மதம்,இடைக்காலத்தில் அதில் ஆரியர்கள் நுழைந்து ஆதிக்கம் செலுத்தினார்கள் அவ்வளவு தான்,எந்த பிராமணனும் கோயில்கள் கட்டியது இல்லை,அந்த காலத்தில் நம் நாட்டை ஆண்ட சத்திரியர்கள் தான் கோயில்களை கட்டினார்கள்,பிராமணன் வேலைக்கு அமர்த்தபட்டவன்,அவன் பூசை செய்யும் வேலைக்காரன்,
    திருவாசகம்,திருபாவை,தேவாரம்,நாலாயிரம் திவ்விய பிரபந்தம் இவை அனைத்தும் தமிழில் தான் உள்ளன்,
    சித்தர் பாடல்கள் இவையும் தமிழில் தான் உள்ளன்,
    அறுபத்திமூணு நாயன்மார்களில் பெரும்பாண்மையானவர்கள் தமிழர்கள் தான்,
    அதே போல் ஆழ்வார்களில் பெரும்பாண்மையினர்கள் தமிழர்கள் தான்,
    இன்றும் ஆந்திராவில் உள்ள தெலுங்கர் கூட திருபாவையை அப்படியே தெலுங்கில் எழுதி பாடிக்கொண்டு இருக்கிறார்கள்,
    அது மட்டும் அல்ல நம் கிராமத்து அய்யனார் சாமி,முனியாண்டி,கருப்பன்ன சாமி,மாரி அம்ம இவர்களும் தமிழ் தெயவங்களே.அது மட்டும் அல்ல இன்று அந்தண மடங்களுக்கு இணையாக ,இன்று பிராமணர் அல்லாத ஆன்மீக சாமியார்களும் இன்று உருவாகிவிட்டார்கள்,(அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது வேறு விஷயம்)இன்று தமிழகத்தில் உள்ள பெரும்பாண்மையான கோயில்கள் ஒன்று தமிழக அரசின் கட்டுபாட்டில் உள்ளது மற்றவைகளில் பெரும்பாண்மை கோயில்களும் பிராமணர்கள் அல்லாத தமிழர்களின் நிறுவாகத்தின் கீழ் தான் உள்ளது,
    ஆகவே மிகவும் சிறுபாண்மையாக உள்ள பிராமணர்களுக்காக நாம் நம் இந்து மதத்தை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்,

  11. ///மத நல்லிணக்கம் குறித்து தங்கள் பதிவு நன்றாக இருக்கிறது.அதில் வெளியாகியுள்ள செய்தியில் ஒரு திருத்தம்
    கர்ணன் திரைப்படத்தை இயக்கியவர் B R பந்துலு .ஏ பி நாகராஜன் அல்ல///

    என்று திரு. ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். உண்மைதான்.

    அர்த்தமற்று ஊதாரித்தனத்துடன் பிரம்மாண்டமாக படம் எடுதக்கும் இயக்குநர்கள் மத்தியில் கதைக்கு தேவையான முறையில் மிக பிரம்மாண்டமான கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை எடுத்த B R பந்துலுதான் கர்ணன் படத்தின் இயக்குநர். தயாரிப்பாளர். அவருக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு.

    கர்ணன் படத்தின் வசனத்தை எழுதியவரும் ஏ பி நாகராஜன் அல்ல. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு மிக சிறப்பாக வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமி தான் கர்ணன் படத்திற்கும் வசனம்.

    தவறுககு வருத்தம் தெரிவித்து பதிலில் உள்ள கர்ணன் படம் பற்றிய தகவலை நீக்கிவிடுகிறேன்.
    திரு. ராமகிருஷ்ணனுக்கு நன்றி.

    -வே.மதிமாறன்

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading