சந்தேகமே வேண்டாம்; காந்தி துரோகி தான் !

432

அங்கனூர் தமிழன் வேலு

தோழர் வே.மதிமாறன் அவர்கள் எழுதி வெளிவந்திருக்கும்காந்தி நண்பரா? துரோகியா?” நூலை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்பை பெற்றேன். வாசித்து முடித்தவுடன் வேறு யாருக்காவது கொடுக்கவேண்டும் என்றுதான் நினைத்தேன். அப்படியே எனக்கு நன்கு அறிமுகமான 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவருக்கு கொடுத்தேன்.  அவர் காந்தியின் தீவிர விசுவாசியாக இல்லாவிட்டாலும் காந்தியின் மீது வெறுப்பு கொண்டவர் இல்லை; பெருமதிப்பு உடையவர். புத்தக தலைப்பை பார்த்தவுடனே ஒரு முறை என்னை ஆழமாக பார்த்தார். படித்துவிட்டு சொல்லுங்கள் என்று கிளம்பிவிட்டேன்.

இரண்டு நாள் கழித்து அவரிடம் சென்றேன்; புத்தகம் படித்தீர்களா? என்றேன். படித்தேன், என் நண்பருக்கு அந்த புத்தகத்தை கொடுத்திருக்கிறேன் என்றார். அவரையும் அறிமுகம் செய்துவைத்தார். அவர் படித்துவிட்டு அவருடைய நண்பருக்கு அதை படிக்க கொடுத்திருக்கிறார்; அவர் அவருடைய நண்பருக்கு கொடுத்திருக்கிறார். இப்படியே பலரையும் தாண்டி பயணித்து இறுதியாக ஒரு பள்ளி சிறுவனுக்கு அதை கொடுத்திருக்கிறார்கள். பலரையும் கடந்து வந்த புத்தகத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அந்த முதியவரிடம் கேட்டேன்.

அவர் “புத்தகத்தின் மீது என்னால் மறுப்புரை சொல்ல முடியவில்லை; காந்தியின் சத்திய (பொய்) சோதனையில் இருந்தே விமர்சனம் செய்திருப்பதால் யாராலும் மறுப்பு சொல்ல இயலாது. நல்ல பயனுள்ள நூல் கொடுத்தமைக்கு நன்றி” என்று மிகவும் நேர்மையான மதிப்பீட்டை வழங்கினார். அவருடன் பேசியதில் “காந்தியின் மீது அவர் வைத்திருந்த பெருமதிப்பில் தோழர் வே.மதிமாறன் அவர்கள் கல்லெறிந்து விட்டார் என்பது மட்டும் நிச்சயம்” என்று புரிந்துகொண்டேன்.

 அந்த மகிழ்ச்சியோடு, காந்தி நண்பரா? துரோகியா?” நூலை வாசித்ததன் மூலம் நான்  பெற்ற அனுபவத்தையும், அதன் மீதான மதிப்பீட்டையும் வழங்க விரும்புகிறேன்.

 வருடத்தில் மூன்று மாதங்கள் காந்தி பக்தர்களுக்கு கொண்டாட்டம் தான். ஜனவரி 15 முதல் 26 வரை, ஆகஸ்ட் முதல் தேதி முதல் 15 வரை, செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 வரை அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்களில் கலைக் கூத்தாடிகளின் அரை நிர்வாணப் படத்திற்கு தடா. அதற்குப் பதில் காந்தி வருவார் அரை நிர்வாணத்தில். அதை கண்டுகளித்து மகிழும் காந்தி பக்தர்களின் கனவில் கல்லெறிந்து விட்ட வே.மதிமாறன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் (?) …!

ஒருவன் என்ன தான் பொதுநலன் குறித்து சிந்திக்க கூடியவனாக இருந்தாலும் சாதிப்பித்து கொண்டவனாக  இருப்பானேயானால் அவனின் பொது நலன் சார்ந்த சிந்தனைகள் அனைத்துமே சாதியின் கோரமுகத்தின் வடிவாகவே இருக்கும். அப்படித்தான் இந்நூலின் மூலம் காந்தியின் அஹிம்சை “கோடானு கோடி மக்களை எப்படி இம்சித்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம்”

 ஸ்ரீ ராமனுக்கு பெரியார் என்றால் பயம். அப்படித்தான் “காந்திக்கு பீமாராவ் என்றால் பயம்,  என்பதை இந்நூலின் மூலம் வாசகர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் காந்தியின் அண்டப்புளுகு ஆகாசப் புளுகையும், துரோகத்தையும் காந்தியின் சத்திய (பொய்) சோதனையில் இருந்தும், புரட்சியாளர் அம்பேத்கரின் மூலமும் தோலுரித்திருப்பது சிறப்பு…!

அவற்றில்…

“இந்திய கிராமங்கள் தீண்டப்படாதவர்களை சுரண்டி வாழ்வதற்காக இந்துக்களால் உருவாக்கப்பட்ட ஒரு வகை காலனி ஆதிக்கமே” என்று காந்தியின் கிராமராஜ்ஜியத்தையும்

“காந்தியைப் பற்றி ஜாக்கிரதையாக இருங்கள்” என்று புரட்சியாளரின் வாய்மூலமாக தாழ்த்தப்பட்டவர்களை எச்சரிப்பதை  மனமார வரவேற்கிறேன். காந்தியைப் பற்றி மட்டுமல்ல; காந்தியின் பக்தர்களிடம் கூட ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும்.

“காந்தி கறுப்பர் என்பதால்   ரயிலில் இருந்து வெள்ளையர்கள் இறக்கி விட்டதாகவும், அதனால் ஏற்றத்தாழ்வுகளை கண்டு மனம் நொந்து மக்களுக்காகப் பாடுபட வந்தார் காந்தி மகான் என்று காந்தியின் காவடி தூக்கிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கையில் “ரயிலில் படுக்கை வசதிக்கு டிக்கெட் எடுக்காத காரணத்தினால் தான் ரயிலில் இருந்து நான் இறக்கிவிடப்பட்டேன்” என்று காந்தியின் வாயாலேயே சொல்ல வைத்து விட்டீர்களே தோழர் சபாஷ்…!

“வெள்ளைக்காரன் காந்தியை அவனுக்கு அருகில் உட்கார வைக்காமல் வண்டியின் உள்ளே உட்கார வைத்ததையே அவமானமாக கருதிய காந்திக்கு ” இந்தியாவில்  ஒரு சாதி இந்து தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரேக் காரணத்திற்காக புரட்சியாளர் அம்பேத்கரை கீழே தள்ளினானே அது அவமானமாக தெரியவில்லையா? அதற்கு காரணமான சாதி மக்களை பிரித்தது அவமானமாக தெரியவில்லையா?

“வெளிநாடுகளுக்கு செல்லும் காந்தி அங்கே இருக்கும் இந்தியர்களின் வீடுகளில் தங்காமல், வாடகைக்கு வெள்ளையர்களின் வீடுகளிலே தங்கியிருக்கிறார்; அதற்கு காரணம் இந்தியர்கள் கூலி விவசாயிகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதாலே; இது அவரின் சாதிப் புத்தியே… அதை ” சுற்றிலும் இருந்த ஆங்கிலேயருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நம் மக்கள் பழக்கங்கள் சுகாதரக் குறைவாக இருந்ததை கவனித்திருக்கிறேன்” என்று காந்தி வாயாலே நான் சாதிப் புத்தி கொண்டவன் என்று ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறார் தோழர்!

“காந்தியின் துரோகம் தெரியவேண்டுமென்றால் அம்பேத்கர், பகத்சிங் கண்களால் பார்க்கவேண்டும்; பார்ப்பன பயங்கரவாதம் தெரியவேண்டுமென்றால் காந்தி கொலையின் ஊடாக  பார்க்க வேண்டும்” என்ற காந்தியின் துரோக – பார்ப்பன பயங்கரவாத  ஒப்பிட்டு தெளிவான விளக்கம்…!

” ஹரிஜன் என்ற சொல்லுக்கு இப்படி ஒரு பின்னணி இருக்கிறது என்பது  யாருக்கு அவர்ப் பெயர் சூட்டினாரோ அவர்களுக்கே தெரியாது என்பது தான் வினோதம்; இதுதான் காந்தியத்தின் கயமைத்தனம்; மேலும் காந்தியின் ஹரிஜனைப் பற்றி படிக்கும் போது கமலஹாசனின் அன்பே சிவத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை; இரண்டுக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லையே! ஏன் அன்பே சிவமாகத்தான் இருக்க வேண்டுமா? அன்பே அல்லாஹ் வாக இருக்க கூடாதா? அன்பே இயேசுவாக இருக்க கூடாதா? இதுதானே பார்ப்பனப் புத்தி!

காந்தி பக்தர்கள் காந்திக்கு காவடி தூக்க அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை “காந்தி தாழ்த்தப்பட்ட மக்களின்  உடையை கண்டு மனம் நொந்து தாழ்த்தப்பட்டவர்கள் நல்ல உடை அணியும் வரை நானும் நல்ல உடை அணியமாட்டேன் என்று சபதம் எடுத்து அவரும் கோவணம் கட்டிக் கொண்டார்” என்பார்கள். அதுபோலவே  சமீபத்தில் காந்தியின் காவடி தூக்கி ஒருவர் ” தலித் தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று பார்த்தால், அவர்கள் அணிந்திருக்கும் ஸூவிலிருந்து, பீட்டர் இங்கிலாந்து சட்டை வரை தோராயமாக கணகிட்டுப் பார்த்தால் எப்படியும் பத்தாயிரம் ரூபாய் பொருமானாதாக இருக்கும்; கோவணம் கட்டிக் கொண்டு வயலில் இறங்கி வேலைபார்க்கும் தலித் மக்களின் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்” என்று தலித் தலைவர்களின் ஆடைகளைப் பார்த்து பொறாமைப்பட்டு, வேதனைப் பட்டு இருக்கிறார்.

அப்படி காந்தியின் காவடித் தூக்கிகள் காந்தியின் அரைநிர்வாணப் படத்தை வைத்து அரசியல் செய்து பிழைத்துக் கொண்டிருந்தார்கள். அட்டைப் படத்திலே காந்தியையும், காந்திப் பக்தர்களின் கயமைத்தனத்தையும் நிர்வாணப் படுத்திவிட்டீர்களே… இது உங்களுக்கே நியாயமா தோழர்?

வ.உ.சி. யின் தியாகம் மெய் சிலிர்க்க வைக்கிறது; காங்கிரசின் துரோகம் அடிநெஞ்சில் அனலை கிளப்புகிறது; காந்தி மிகப்பெரிய பணக்காரர் என்றும், அவர் எளிமையாக வாழ்ந்தார்  என்றும் பொய் சொல்கிறவர்களுக்கு “வெளிநாட்டு தமிழர்கள் வ.உ.சி. க்கு கொடுக்க சொல்லி காந்தியிடம் கொடுத்த 5000 ரூபாய் பணத்தை ஏமாற்றியது தெரியுமா?

வாஞ்சிநாதன் எனும் தேசத் தியாகியின் சாதிப்பற்றை நான் இன்றைக்குத்தான் தெரிந்து கொண்டேன் நன்றி தோழரே..! “காந்தியின் தொங்குசதை அன்னாஹசாரே”; “பாபா ராம்தேவின் ஊழல் எதிர்ப்பில் பானுமதியின் வறுமை ஒழிப்பு நடிப்பு” ஒப்பீடு அருமை.

நான் காந்தியை விமர்சனம் செய்ததற்கு, காந்தியின் காவடித் தூக்கி ஒருவர் எனக்கு விளக்கம் எழுதியப் போது “காந்தியைப் பற்றி தெரியாமலே, வெறும் பூனா ஒப்பந்தத்தை மட்டும் வைத்து விமர்சனம் செய்கிறார்கள்; அது அவர்களது அறியாமையைத் தான் காட்டுகிறது;என்று எழுதினார்.  அவருக்கு இந்நூல் அதற்கும் மேலே… அதற்கும் மேலே…

வேரறுக்க வேண்டியது காங்கிரஸ் மட்டும் அல்ல; இந்தியாவின் மீது போர்த்தப்பட்டுள்ள காந்தியின் பிம்பமும் தான்….

“காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்; பார்ப்பன பயங்கரவாதத்தை மன்னிக்கவும் மாட்டோம்…!

இறுதியாக எனக்கு ஒரே வருத்தம் தான் “காந்தி நண்பரா? துரோகியா?” என்று சந்தேகப் படவேண்டாம், சந்தேகமே வேண்டாம்; காந்தி துரோகி தான் …!

அங்கனூர் தமிழன் வேலு  

gandhi

புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள:

‘அங்குசம்’ ஞா. டார்வின் தாசன் – 94443 37384

கோயம்புத்தூர்: வழக்கறிஞர் பாலா – 98942 30138 –

திருச்சி : நாக. குணராஜ் – பெரியார் நூல் நிலையம் – 98655 96940

தஞ்சை: தோழர் எழிலரசன் – 94885 45546

தொடர்புடையவை:

குமுதம், விகடன்கள், தினமணி, தினமலர், துக்ளக், காலச்சுவடு இவைகளுடன் தினகரன்

காந்தி…?

இரண்டாண்டுகளில் மூன்று பதிப்பு..

16 thoughts on “சந்தேகமே வேண்டாம்; காந்தி துரோகி தான் !

  1. Neengha ithuvaraikkum… ethanai porattam panni irukinga ?? Angelayae Achiyai vida… ippo aniyayam nadakuthu… neegha enn oru eluchi porattam thodanga kudathu…. summa vettil ukkanthuttu pesurathu sulapam… nalla eluthnga.. athukku munnadi… intha oorukkum nattukum ethavthu senjuttu eluthunga…

  2. Nalla Mathipeedu Tholare!!
    In Next Publication surely- it might be published in mathipuri………..

  3. “காந்தியின் மீது அவர் வைத்திருந்த பெருமதிப்பில் தோழர் வே.மதிமாறன் அவர்கள் கல்லெறிந்து விட்டார் என்பது மட்டும் நிச்சயம்”

    அதானே, கல்லெறிதல் மட்டும்தானே நம்மால் முடிந்தது. தொடருங்கள் தங்கள் திருத்தொண்டை.

  4. காந்தி ஒரு தனி மனிதனாக அன்றைய சில கோடி இந்தியர்களை ஒன்றுபடுத்த முடிந்தது. அவர் ஒரு சகாப்தம். குறைகளற்ற மனிதன் என்று யாரும் இருக்க முடியாது. அவர் சாதித்தது அதிகம். இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றின் அருமையினை நம்மால் உணர முடிந்தால்…..

  5. வே.மதிமாறன் என்ற பெயரைவிட மதியற்றமாறன் என்ற பெயர் பொருத்தமானது.

  6. நீங்கள் செய்வது தீண்டாமையைவிட மோசமானது

  7. நம் மக்களுக்கு காந்தியின் மேல் ஏற்பட்ட இந்த மயக்கமான பரவசம் என்பது அதிகார மையம் எதை ஆதரிக்குதோ அதையே இவர்களும் பிடித்துத் தொங்குவது என்பது, தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் எந்தவித தொல்லையோ இடைஞ்சலோ இந்த அரசினால் இல்லாமல் இருக்கும் ஒரு பாதுகாப்புக் கவசம் போன்றும், அதே நேரத்தில் தன்னுடைய பொது அக்கரையையும் அதன்மூலம் வெளிப்படுத்துவது போலும் ஆகும் இந்த செயல், ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்துவதற்கு ஒப்பாகும் என்பதால் காந்தியை வலிந்து போய் ஆதரிப்பது: அவரைப் பற்றி எதுவும் தெரியாமலே!
    உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், வெள்ளையனுக்கு சிறு கல்லடி கூட படக்கூடாது என்று பதறியதையோ, சௌரி சௌரா தேசப்பற்றுள்ள இராணுவப் படையினரை சுட்டு மேலே அனுப்பியதை ஆதரித்து, வெள்ளையனுக்கு விசுவாசமான, உண்மையான நண்பனாக நடந்து கொண்ட காந்தியை, சாக்கடையில் விழுந்து புரளும் பன்றிகள் மேயும் இந்திய நாடாளுமன்றத்தில் (கருத்து உதவி: மாமேதை கார்ல் மார்க்சு.) வெடிகுண்டு வீசிய பகத்சிங், இராசகுரு, சுகதேவ் போன்ற மாவீரர்களுக்கு இலாகூர் காங்கிரசு மாநாட்டின் முன்பாகவே அவர்களை முடித்துவிட நாள் குறித்து வெள்ளையனுக்கு கடிதம் எழுதி, இந்தியாவின் முதல்தரமான துரோகி தான்தான் என்று, தன்னை அடையாளம் காட்டிய காந்தி…
    இப்படி பல விடயங்கள் மகா&ஆத்மா வைப் பற்றிச் சொல்லலாம்!
    காந்தியின் அகிம்சை நெறியை அவராலேயே கடைபிடிக்க முடியவில்லை! இரண்டு இளவயது பெண்களுடன் பிறந்த மேனியாய் படுத்தவர், எப்போதும் பணக்காரர்களுடனேயே சுற்றியவர், டாடா பிர்லாவே இவரது சகாக்கள்! கடைசியாய் போய்ச் சேர்ந்தபோதும் பிர்லா மாளிகையில்தான் பஜனை நடத்திக்கொண்டிருந்தார்.
    முதன்மையாக தாழ்த்தப்பட்ட மக்கள் இவரை எதிரியாகவே, அதுவும் அபாயகரமான எதிரியாகவே கொள்ள வேண்டும்.
    இவ்வளவு சிறப்புடைய காந்தியைப் பற்றி நண்பர் மதிமாறன் விமர்சிப்பது தாங்கமுடியல்லப்பா…!
    மதிமாறனை வசைபாடுவது அப்புறம் வையுங்க நண்பர்களே… முதல்ல காந்தியப் பத்தி படிங்க..! அப்புறம் பாருங்க.. மதிமாறனே வந்து உங்களை அமைதிப் படுத்தும்படியா ஆகிடும்..! அந்த அளவுக்கு கடுப்பாயிடுவீங்க காந்தி மேல! காசிமேடுமன்னாரு.

  8. 64 ஆண்டுகளுக்குப் பிறகு, இணைய தளத்தில் கூட காந்தியை பற்றி எழுதாமல் பேசாமல் இருக்க முடியாது இதுவே காந்தியின் வெற்றி.

  9. //காந்தி ஒரு தனி மனிதனாக அன்றைய சில கோடி இந்தியர்களை ஒன்றுபடுத்த முடிந்தது. அவர் ஒரு சகாப்தம். குறைகளற்ற மனிதன் என்று யாரும் இருக்க முடியாது. அவர் சாதித்தது அதிகம். இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றின் அருமையினை நம்மால் உணர முடிந்தால்….//

    காந்தி என்ற தனி மனிதனின் உண்ணாவிரத பசப்பு வேலையா இந்த நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்தது? எத்தனை காலத்திற்கு இந்த ஏமாற்று வேலை. தன்னுடைய உயிரை பணயம் வைத்து போராடி உயிரையும், உடமைகளையும் இழந்து உணமையாக தியாகம் செய்த தியாகிகள் இந்த நாட்டில் பிறந்தது குற்றமா? அவர்கள் எல்லாம் போராடவில்லையா, ஆரம்ப கல்வி பயிலுவதில் இருந்தே குழந்தைகளுக்கு, “காந்தி சுதந்திரம் வாங்கி தந்தார்” “காந்தி சுதந்திரம் வாங்கி தந்தார்” என்று மனதில் பதிய வைத்து மற்ற தியாகிகளை எதோ காந்திக்கு பின்னால் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்கள் போல சித்தரிக்கும் கதை தான் இங்கே நடந்து கொண்டு இருக்கிறது. நம் சுவாசிக்கும் சுதந்திர காற்றுக்கு உழைத்தது காந்தி என்ற வேடதாரி மட்டும் அல்ல எண்ணற்ற உண்மையான தியாகிகள், ஆனால் அவர்கள் பெயர் எல்லாம் இங்கே பெயரளவிற்கு தான் உச்சரிக்கப்படுகிறது. அரிதாரம் பூசியவர்களுக்கு தானே இங்கே மதிப்பு அதிகம்.

    //64 ஆண்டுகளுக்குப் பிறகு, இணைய தளத்தில் கூட காந்தியை பற்றி எழுதாமல் பேசாமல் இருக்க முடியாது இதுவே காந்தியின் வெற்றி.//

    காந்திக்கு பல ஆண்டுகளுக்கு முந்தையவரான எட்டப்பனை பற்றி கூடத்தான், பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறோம். உங்கள் அளவின் படி எட்டப்பனுக்கு கூட அது மிகப்பெரிய வெற்றி தான்.

  10. gandhi was against untouchability when many were supporting it. gandhi was able to mobilise a big group among hindhus against untouchality. pople like madurai vaidhyanathaiyer and madurai nmr subbaraman , gandhian followers did lot of goodwork for the development of DALITS. Theysacrifised a lot about 75 years back.we sholud not just ignore history

  11. நேதாஜி அவர்களின் எதிர்ப்பும், இந்தியாவி இனிமேல் சுரண்டுவதற்கு ஒன்றுமே இல்லை, வருவாய் இல்லாத இடத்தில நாம் ஏன் செலவு செய்ய வேண்டும்
    என்ற நினைப்பும் தான் இந்த சுதந்திரம் பெற காரணம், காந்தி அல்ல

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading