அப்சல் குருவுக்கு தூக்கு; காங்கிரசின் விஸ்வரூபம்!

hang

அப்சல் குரு தூக்கிலிடப் பட்டிருக்கிறார்.

காங்கிரஸ், பி.ஜெ.பி இரண்டு கட்சிகளுக்கும்; பெயர்களும் தலைவர்களும்தான் வேறு, வேறு. எஜமான் ஒருவர்தான்.

காங்கிரசின் இந்த நடவடிக்கை, இந்து மனநிலையின் வெளிபாடு மட்டுமல்ல; அதுதான் அமெரிக்க விசுவாசமும் கூட.

இது காங்கிரசின் விஸ்வரூபம்.

கமலின் அமெரிக்க பாசமும், இஸ்லாமியர் மீதான வெறுப்பும் கலந்த, விஸ்வரூபம் போன்றவைகளுக்கு ‘கருத்து சுதந்திரம்’ என்ற பெயரில் ‘அறிவாளிகளே’ ஆதரவு தெரிவித்தால், இஸ்லாமிய நாடுகளின் மனித உரிமை மீறல்களை, மதத் தீவிரவாதத்தை கமல்ஹாசனுக்கு ஆதரவாக மடை மாற்றினால்,
அப்சல் குருவை தூக்கில் போடாமல்..?

அமெரிக்க கம்பெனியான ‘யூனியன் கார்பைடு’ மூலம், விஷவாயு கசிவால் போபாலில் 15, ஆயிரம் ஏழை இந்தியர்களை கொன்று விட்டு, அமெரிக்காவில் பதுங்கி இருக்கும் ஆண்டர்சனையா தூக்கில் போட முடியும்?

விஸ்வரூபத்தை ஆதரித்த அதே ஆட்கள் அப்சல் குரு தூக்கையும் ஆதரிக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் அதே அமெரிக்க, இந்து நியாயங்கள் குவிந்து கிடக்கின்றன.

அவர்களிடம் நாம் என்ன கேட்க முடியும்?

சவுதி அரேபியாவின் கொடூரமான தண்டனைக்கு பலியான அப்பாவி இலங்கை பெண்ணின் வீடியோவை பார்த்து கை நடுங்க;  ‘விஸ்வரூப எதிர்ப்பு இந்திய முஸ்லிம்களுக்கு’ அறிவுரை சொன்ன இந்து அறிவாளிகள்,

அப்சல்குருவின் மரண தண்டனை வீடியோவை பார்த்தால் அதேப்போல் கை நடுங்க கருத்துச் சொல்வார்களா?

காட்சியாக பார்க்கும்போது எந்த மரணமும் கொடூரம்தான்.

கொடூரம் என்பது தலையை தனியாக வெட்டுவது மட்டுமல்ல; கயிறால் கழுத்தை இறுக்கி கொல்வதும்தான்.

சவுதிஅரேபிய அரசின் மனிதாபிமானமற்ற அந்தக் கொலைக்கும், ‘ஜனநாயக’ நாடான இந்திய அரசின் இந்தக் கொலைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

அவரவர்களின் ஜாதி, மத, வர்க்க அரசியல் கண்ணோட்டத்தைத் தவிர.

எது மனிதாபிமானம்?

அதுவும் இவைகளின் அடிப்படையிலேயே பரிசிலிக்கப்படுகிறது.

மரணத்திற்கு கண்ணீரா? கை தட்டலா? அதையும் அவரவர்களின் அரசியலே முடிவு செய்கிறது.

தொடர்புடையவை:

மூன்று தமிழர்களை தூக்கிலிட துடிக்கும் ‘தினகரன்’

விஸ்வரூப தந்திரம்

விஸ்வரூபம்; தமிழக அரசின் தடையை ஆதரிப்போம்!

இது விஸ்வரூபம் விமர்சனம் கிடையாது…

20 thoughts on “அப்சல் குருவுக்கு தூக்கு; காங்கிரசின் விஸ்வரூபம்!

  1. ரிசானா கொலை செய்யப்பட்ட விடயத்தில் மதிமாறன் பாய் கள்ள மவுனம் சாதித்தது ஏன்?

  2. மதிமாறனின் எழுத்தில் பெட்ரோல் வாசனை ரொம்ப அடிக்கிறதே தற்போது?

  3. அதெப்படிங்க உங்களால மட்டும் இப்படி விடாம பேத்த முடியுது? எதாச்சும் வரம் வாங்கிட்டு வந்திருக்கீங்களா?

    ரிசானா மைனர் பெண். சிறு குழந்தையை கொன்றதாக பொய் குற்றம் சாட்டபப்ட்டு, ஆதாரங்கள் எதுவும் கொடுக்காமல் சவுதி அரசாங்கத்தால் கொல்லப்பட்டார்.

    அப்ஸல் குரு பாராளுமன்ற தாக்குதலில் தானே பங்கெடுத்ததை பற்றி பேசியிருக்கிறார். அவர்களுக்கு உதவியதை பெருமையாக கூறியிருக்கிறார்.

    அப்படி இருக்கும்போது ரிசானாவையும் அப்ஸல் குருவையும் எப்படி ஒப்பிடமுடியும்?

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=9zJcFO8VvqA

    http://indiatoday.intoday.in/video/mohamammed-afzal-guru-pranab-mukherjee-parliament-attack-case/1/249612.html

    முஸ்லீம் என்றாலே தீவிரவாதிதான் என்று திருப்பி திருப்பி சொல்லுவதும், எல்லா முஸ்லீம் தீவிரவாதிகளுக்கும் நீங்கள் ஆதரவளிப்பதும், முஸ்லீம்கள் எல்லோரும் இந்த தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கிளப்பிவிடுவதும் நீங்களே.

    இதில் அப்பாவி முஸ்லீம்களும் பலியாகிவிடுகிறார்கள்.

    ஒரு அஸ்ஸாமிய இந்து அஸாம் தனி நாடாக ஆகவேண்டும் என்று இவ்வாறு அப்பாவிகளை கொன்றிருந்தால் எந்த இந்துவும் அவனுக்காக வாதாடப்போவதில்லை.

    ஆனால், ஒரு முஸ்லீம் பயங்கரவாதி செய்தால் உடனே அவனை சப்போர்ட் செய்து சாதாரண முஸ்லீம்களை கிளப்பிவிட்டு அவர்களை பயங்கரவாதிகளாக ஆக்குவது உங்களை போன்ற மக்கள் விரோதிகள்தான்.

    உங்களுக்குத்தான் மத வாத கண்ணோட்டம் இருக்கிறது. நீங்கள் மற்றவர்களிடம் இருப்பதாக கூறுவது காமெடி.

  4. தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்களை
    தூக்கு ..தூக்கு இந்த உலகத்தை விட்டே தூக்கு ..
    மேலே முதலில் பின்னூட்டமிட்டவர்கள் இரண்டு பேரும் ” கும்பலில் கோயிந்தா ” போடுபவர்கள் ..
    நிம்மதியில்லா இந்த உலகத்துக்கு முழு முதற்
    காரணம் ” கள்ள கிறிஸ்தவர்களே ” இவர்களை வழிக்கு கொண்டு வந்துவிட்டால், உலகம் நிம்மதியும் .சுபிட்சமும் பெறும் ……
    கக்கூசுக்கு போனாலும் நெஞ்ஜோடு செக்ஸ் பைபிளை அணைத்துக்கொண்டு போகும் கள்ள கிறிஸ்தவர்களே சிந்திப்பீர்களா ..???

  5. //ஆனால், ஒரு முஸ்லீம் பயங்கரவாதி செய்தால் உடனே அவனை சப்போர்ட் செய்து சாதாரண முஸ்லீம்களை கிளப்பிவிட்டு அவர்களை பயங்கரவாதிகளாக ஆக்குவது உங்களை போன்ற மக்கள் விரோதிகள்தான்.// சரியாகச் சொன்னீர்கள். இஸ்லாமியர்களுக்கு விரோதிகள் தீவிரவாதத்தை தூண்டும் இஸ்லாமியர்களே. இவர்கள் சில காபிர்களையும் தங்கள் திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

  6. //சவுதிஅரேபிய அரசின் மனிதாபிமானமற்ற அந்தக் கொலைக்கும், ‘ஜனநாயக’ நாடான இந்திய அரசின் இந்தக் கொலைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?//

    ஆஹா …!

  7. மக்கள் விரோதிகளும் திருடர்களும் றவுடிகளும் கூடிக் கும்மாளமிட்டு, சட்டையைக் கிளித்துக்கொள்ளும் இந்திய பாராளுமன்றத்தை தாக்கிய அப்சல் குருவுக்கு என்ன நோக்கம் இருந்ததோ தெரியாது! செய்த செயலில் குற்றம் இருப்பதாக மக்களை நேசிப்பவர்கள் சொல்ல மாட்டார்கள்! இந்தியன்.

  8. Mathimaran.. Indiavilea neengal oruvar dhaan arivaali enru ninaikureergala? Ennai poruthavarai madhavaadhigalai pol neengalum oru mutaal.americavil america car pogamal india cargala pogum.muttaal manidhare..kamalukkum afsalguruvukkum enna samandham. America adhigaram ungalukku mattum therindha maadhiri pesaadheer.afsal guru thookil podum mun rajivai konra 3perai thookil podavendum.theeviravadhathirku sombu thookatheergal.police idam adi vaangavenduma.naatai pidithavargalai edhirthu kolvathu ok..aanaal appavi makkalai gundu vaithu kolvathai support seigireergala?

  9. ஒருத் தீயவனுக்குக் கிடைக்கும் மரணத் தீர்ப்பு -உலகில்
    பல நல்லவர்களுக்கு கிடைக்கும் அன்பளிப்பு.
    ஜெய்ஹிந்த்.

  10. Brilliant Logic.. A kid is equated with a terrorist. Are you sure you mean what you have written.. Enna Periyar dasan vazhi katinara .. Petro dollars smells better for some.

  11. உள்நாட்டில் நடக்கும் இந்த அநீதிக்கு ஒரு அறிவு ஜீவிகளும் குரல் கொடுக்க மாட்டார்கள்.மீடியாக்கள் கண்ணை மூடிக்கொள்ளும். அம்பிகள் மனம் மகிழ ரசிப்பார்கள். ஏனென்றால் பாதிக்கப்பட்டது ஒரு முஸ்லீம். இவனை தீர விசாரித்தால் வாஜ்பாய் அத்வாநிகளின் முகத்திரை கிழியும். அநேக குண்டு வெடிப்புகளில் காவிகளின் குட்டு வெளிப்பட்டது போல் அவர்களின் உண்மை முகமும் வெளிப்பட்டுவிடும். ஆனால் வழக்கு விபரமே தெரியாமல் நாடுவிட்டு நாடு தாண்டி அரேபிய ரிசானா வழக்கிற்கு நாடி நரம்பு புடைக்க பல உண்மைகளை விழுங்கிவிட்டு நம்ம அறிவு ஜீவிகளும், நடுநிலை வாதிகளும், மீடியாக்களும், வகை வகையாய் கண்ணை மூடிக்கொண்டு கருத்து சொல்வார்களே … அடா அடா… என்ன ஒரு நடுநிலைமை ? ஏனென்றால் அது சரியத் அமல்படத்தும் அரேபியநாடு என்பதால் இந்த நடுநிலை.

  12. நண்பர் சிராஜ் பல நாடு,,பல இனம் என்பதை தவிர்த்து 8கொலைக்கு 1மரணம் என்ற கோணத்தில் பார்த்தால் உண்மை புரியும் என கருதுகிறேன்

  13. இப்ப மரண தண்டனை வேணான்றிங்களா, இல்ல அப்சல்குரு செஞ்சது குத்தம் இல்லன்றீங்களா? தெளிவா சொல்லுங்க

  14. மரணதண்டனை வேண்டும். அப்சல்குரு செஞ்சது குத்தம்

  15. இங்கிருக்கிற நடுநிலை நடு செண்டர்கள் ரிசானா கொலையைக் கண்டித்ததும் இஸ்லாமியக் காழ்ப்பில் தான். அப்சல்குரு தூக்கை ஆதரிப்பதும் இஸ்லாமியக் காழ்ப்பில் தான். ஆனால் ரிசானாவை ஆதரிக்கும் போது மரண தண்டனை எதிர்ப்பாளர்களாக இருக்கிறவர்கள், அப்சல்குரு தூக்கை ஆதரிக்கும் போது மரண தண்டனைக்கு ஆதரவாளர்களாகிவிடுகிறார்கள்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading