விஸ்வரூபம் வெளியீடு; பிரியாணி கிடைக்குமா?

mutton-biryani

 11-12-2012 -அன்று எழுதியது

“விஸ்வரூபம்’ படம், வெளியாவதற்கு, 8 மணி நேரத்திற்கு முன்பாக, டி.டி.எச்., முறையில், ஒரே ஒரு காட்சி, “டிவி’யில் வெளியிட, கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். கமலின் இந்த முயற்சி, தமிழ் சினிமாவை அழித்துவிடும் எனவும், இந்த முயற்சியை கைவிட வேண்டும் எனவும், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கங்கத்தைச் சேர்ந்தவர்கள், வலியுறுத்தி வருகின்றனர்.

இன்னும் சிலரோ, ‘கமல் இந்திய சினிமாவின் வர்த்தகத்தை எங்கேயோ கொண்டு சென்று விட்டார்.’ என்று வரவேற்கிறார்கள்.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு போல், ‘சினிமா வியாபாரத்தில் திரையரங்குகளைத் தாண்டிய ஒரு வருமானம்’, என்கிற பாணியில் குதித்திருக்கிற கமலின் இந்த முயற்சிக்கு,

இயக்குநர்களும், தயாரிப்பாளார்களும் ‘படம் ரிலீசாவதற்கு முன்பே நமக்கு லம்பா கிடைக்கும்போல..’ என்ற கனவில், அவர்களும் இதை வரவேற்று இருக்கிறார்கள்.

ஆனால், எனக்கென்னவோ இது கமல்ஹாசனின் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் தெரிகிறது.

“விஸ்வரூபம்’ படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு தீவிரமாக இருக்கலாம். அதனால் இந்தப் படத்தை திரையிட்ட முதல் நாளே அதற்கான எதிர்ப்பு அதிகமாகி படத்தில் உள்ள முக்கிய காட்சிகளை நீக்க வேண்டும் என்ற நிலை ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் ஒட்டுமொத்த படத்தையுமே நிறுத்த வேண்டியிருக்கும் என்பதால், அதை டி.டி.எச் முறையில் டிவி’யில் வெளியிடுவதின் மூலம், தன் பணத்திற்கான ‘மினிமம் கேரண்டி’ என்ற பாணியில்தான் இந்த டி.டி.எச் சேவை.

‘துப்பாக்கி’ படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பிற்கு பின்னேதான் கமலுக்கு இப்படி ஒரு யோசனை வந்திருக்க வேண்டும். ஏனென்றால் அதற்கு முன் வரை, குறிப்பாக நவம்பர் 7 தேதி, தனது பிறந்தநாள் அன்று,

“விஸ்வரூபம்’ படம் தான் ஆசியாவிலேயே ஆரோ 3டி என்ற புதிய சவுண்ட் தொழில்நுட்பத்தில் வெளிவரும் முதல்படம். சாதாரணமாக இருக்கும் ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டத்தில் ஒலி இரு பக்கவாட்டிலும் இருந்து கேட்கும்.

ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தில் தலைக்கு மேலிருந்தும் கூட ஸ்பீக்கர்களில் ஒலி கேட்கும். படம் பார்க்கும் போது தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும்.

சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் மட்டும் இந்த தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் 30 தியேட்டர்களில் இந்த தொழில்நுட்பம் உள்ளது. அதேபோல ‘விஸ்வரூபம்’ படம் மூலம் தமிழ்நாட்டிலும் குறைந்தது 30 தியேட்டர்களிலாவது இந்த தொழில்நுட்பம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.” என்று விஸ்வரூபம் காலமாதத்திற்கான காரணம் சொன்னார் கமல்.

விஸ்பரூபம் படத்தை இன்றைய நவீன திரையங்குகளில்கூட பார்ப்பதற்கான வசதிக் கிடையாது. என்று சொன்ன கமல்தான் இப்போது அதை டி.வியில் பார்ப்பதற்கு தீவிரமாக பரிந்துரைக்கிறார். முயற்சிக்கிறார்.

இதில் வெறும் வர்த்தகம் மட்டும் பின்னணியாக இல்லை. நாம் முன்பே குறிப்பிட்டதைப் போல் சர்வதேசிய ‘இஸ்லாமிய தீவிரவாத்திற்கு’ எதிராக அமெரிக்க சார்பு கொண்ட ஒரு அய்யங்கரின் அதிரடி ஆக்ஷன் படமாகத்தான் இருக்கு வேண்டும். வைணவ டச்சஸோடு.

‘என் படத்தை பார்த்து முஸ்லீம்கள் மனம் மாறி, தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே’ என்று, வருத்தப்படுவர் என, கமல்ஹாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஒரு விசயத்தைக் குறித்து ஆயிரம் விளக்கங்களை விட, ஒரு செயல் அதை தெளிவாக விளக்கிவிடும்.

முக்கியமான இஸ்லாமியத் தலைவர்களுக்குப் படத்தை போட்டுக் காண்பித்தால் அவர்களே படத்தை வரவேற்று அறிக்கை கொடுத்துவிட்டு போகிறார்கள். ஏன் இந்த தேவையில்லாத பதட்டம்? விளக்கம்?

உண்மையிலேயே கமல்ஹாசன் சொல்வதுபோல், விஸ்வரூபம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இல்லை என்றால்..?

ரொம்ப மகிழ்ச்சி.

‘படத்தில் முஸ்லிம்களை அவமதிக்கும் காட்சிகள் இல்லையெனில், கமல்ஹாசன் முன்னிலையில் பத்தாயிரம் ஏழைக் குழைந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்படும்’ என்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.

நம்மளும் வரிசையில் நின்னு உலக நாயகன் கையால, ஒரு பிரியாணி பொட்டலத்த வாங்கி சாப்பிட்டு வரவேண்டியதுதான்.

எனக்கென்னமோ, பிரியாணி தானம் நடக்காதுன்னுதான் தோணுது.

பாப்போம் நம்ம ‘அதிர்ஷ்டம்’ எப்படின்னு?

தொடர்புடையவை:

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

விஸ்வரூபம் படத்தின் டிரைலரும் கவுண்டமணி வசனமும்

19 thoughts on “விஸ்வரூபம் வெளியீடு; பிரியாணி கிடைக்குமா?

  1. பகிர்வுக்கு மிக்க நன்றி……

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  2. சென்ற வாரம் உங்களின் முந்தைய கட்டுரையின் அடிப்படையில் இதே கருத்தில் நண்பர்களிடம் விவாதித்தேன். //எனக்கென்னமோ, பிரியாணி தானம் நடக்காதுன்னுதான் தோணுது//
    எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது.

  3. பிரியாணி கிடைக்க வாழ்த்துக்கள்!

    சென்சார் போர்ட் சான்றிதழ் அளித்த ஒரு படத்தை வேறொரு குழுவிடம் காட்டி அனுமதி கேட்க வேண்டும் என்று கூறுவது சரியாகப் படவில்லை.

  4. நான் அப்படி சொல்லவில்லை.
    கமல் அப்படி இல்லை என்று சொன்னதால், அதற்கு ஒரு எளிய வழியாக குறிப்பிட்டேன்.

  5. ஐயா மதிமாறன் அவர்களே ,RSS இந்துமுன்னனி போனற அமைப்புகள் மன்மதன் அம்பு படதில் அரங்கநாதனை கிண்டல் பன்கிற பாடலை நீக்க வேண்டும் கூறியபோது..கமல் முடியாது என்று கூறினார்..அதேபோல் இதுவும்

  6. கமலை எதிர்த்துதான் எழுதவேண்டும் என்ற உங்கள் போக்கு கேவலம்…பால்தாக்கரே என் தந்தை போன்றவர் என்று ரஜினி கூறியபோது கண்டித்து எழுதாத நீங்கள்..அமெரிக்கா எதிரான கருத்து படத்தில் Irundhaal salaam poda thayara?

  7. CPM ஆதரிக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அன்பே சிவம் திரைபடத்தை எதிர்த்த கும்பல் தானே நிங்கள்..ஒரிசாவில் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரனம் பெற்றுதரும் சிறந்த Communistaga varum kamal.. nichayam parata vendiya vishayam..

  8. //ஒரு விசயத்தைக் குறித்து ஆயிரம் விளக்கங்களை விட, ஒரு செயல் அதை தெளிவாக விளக்கிவிடும்.//
    படம் வரட்டும் பார்ப்போம். அதுவரை கமலை விட்டுவிடுவோம்…

  9. மதி !
    நான் திரைப்படத்துறையில் உதவிஇயக்குநராக பணியாற்றிவருகிறேன்.

    உங்களுடைய எல்லா எழுத்துக்களையும் தொடர்ந்து படித்து வருபவன். உங்கள் இந்த எழுத்து எனக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. கமலை எதிர்ப்பதில் நீங்கள் இரண்டு விஷயங்களை குறிப்பிடுகிறீர்கள்.

    முதல் விஷயம் தொழில்நுட்பம்.

    உதாரணத்திற்கு எங்கள் ஊரைப்பற்றி குறிப்பிடுகிறேன். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இருக்கும் சிங்கபுரம் கிராமம். மொத்த மக்கள் தொகை 10,500. வாழப்பாடி-தம்மம்பட்டி சாலையில் ஒரு பலசரக்கு கடை இருக்கிறது. எனக்கு பரிச்சயமான அந்த கடையில் சிடிக்களும் விற்பனை செய்கிறார்கள். எல்லாம் ஆங்கில படங்களும், பழைய தமிழ்படங்களும், புதிய தமிழ்படங்களும் விற்பனையாகிறது.
    கடந்த தீபாவளிக்கு வெளிவந்த துப்பாக்கி திரைப்படத்தின் சிடி மட்டும் ரூ.3,00,000 விற்பனையாகி இருக்கிறது என்று கடை உரிமையாளரே என்னிடம் கூறினார். எல்லாம் திருட்டு சிடிக்கள். அதாவது நெட் பிரிண்ட என்று இவற்றை கூறுகிறார்கள். இவையெல்லாம் பாண்டிச்சேரியிலிருந்து வந்து சேருகிறது. அதுவும் தீபாவளி அன்று இரவு 7 மணிக்கு கடைக்கு வந்து விடுகிறது. துப்பாக்கி மட்டுமல்ல. போடா போடி, அம்மாவின் கைப்பேசி கூட. 13ம் தேதி முதல் 25ம் தேதி வரை இந்த நெட் பிரிண்ட் விற்பனையாகிறது. அதற்கு பிறகு ஒரிஜினல் என்று சொல்லப்படுகிற லோட்டஸ், பிரமிட், சுருதிலயம் என்று பல்வேறு லேபிள்களில் அதே படங்கள் வந்து விடுகிறது. அதுவும் நன்று விற்பனையாகிறது. தியேட்டரில் மக்கள் சென்று பார்த்தப்பின்பும் மக்கள் வாங்கிய சிடிக்களின் தொகை ஒரு படத்திற்கு இவ்வளவு என்றால் மற்ற இரண்டு படங்களுக்கும் நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்.

    வெள்ளிக்கிழமை தோறும் ஏதாவது ஒரு தமிழ்படம் வெளியாகிறது. குறைந்தது 30,000 முதல் 3,00,000 வரை ஒரு படத்திற்கு சம்பாதிக்கும் இந்த தொகை எங்கள் ஊரில் மட்டுமே. 5வது கிலோ மீட்டரில் வாழப்பாடியும், 7வது கிலோ மீட்டரில் திம்மநாயக்கன் பட்டியும் இருக்கிறது. அந்த ஊர்களில் இரண்டுக்கும் மேற்பட்ட கடைகள் இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் எத்தனை கடைகள் என்று தோராயமாக உங்களுக்கு தெரிந்திருக்கும்.

    எங்கள் ஊர் கடைக்காரர் போலீஸ் மாமூல், கேஸ் செலவு போக, மாதம் ரூ.2,00,000 இந்த சிடி விற்பனை மூலம் வருமானம் பார்க்கிறார்.

    இந்த தொகையெல்லாம் யாருக்கு போகவேண்டியது. கண்டிப்பாக தயாரிப்பாளருக்குத்தான்.

    எத்தனை கோடி இழப்புகள்.

    சரி. டிடிஎச் வந்து விட்டால் திருட்டு சிடி ஒழிந்து விடுமா என்றால் ஆகாதுதான். ஆனால் தயாரிப்பாளருக்கு முன்னமேயே ஒரு தொகை வந்துவிடுகிறது அல்லவா. சிடி முதல் நாள் வந்தால் என்ன? அடுத்த நாள் வந்தால் என்ன? அதை நிச்சயம் ஒழிக்க முடியாது.

    ஆனால் தயாரிப்பாளருக்கு வரவேண்டிய வருமானத்தொகை வந்தே தீரவேண்டும். அதை மனதில் கொண்டு கமலின் இந்த முயற்சியை ஆதரிக்காமல் புழுதி வாரி தூற்றுகிறீர்களே…எப்படித்தான் முடிகிறதோ?

    இரண்டாவதாக…

    கருத்து சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது. பார “தீ” பற்றிய உங்கள் எழுத்துக்களை படித்து நண்பர்களிடம் பாராட்டியவன். பெரியாரிய சிந்தனைகளால் வளர்தெடுக்கப்பட்ட நீங்கள் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக வன்மமான கருத்துக்களை வெளியிடுவது ஆபத்துக்குரியது.
    விஸ்வரூபம் திரைப்படம் தீவிரவாதத்தை பற்றி பேசுகிறது என்ற ஒரே காரணத்திற்காக அது சென்னை ஆயிரம் விளக்கு பகுதிகளில் வாழும் இஸ்லாம் மக்களைத்தான் குறிக்கிறது என்று ஆதாரமற்ற கருத்துகளை குறிப்பிடுவது எந்த விதத்தில் நியாயம் என்றே தெரியவில்லை. உலகெங்கும் தீவிரவாதம் தலை தூக்கி வருகிறது. இஸ்லாம், இந்து, சிங்கள என்று எல்லா வித தீவிரவாதங்களும் பெருகிவருகிறது. எந்த தீவிரவாதத்தைப்பற்றிதான் பேசாமல் இருப்பது? பெரியார் அன்றைக்கு தெரு தெருவாக “பிள்ளையார்“ சிலையை தூக்கி கொண்டு செருப்பால் அடித்துக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஊர் ஊராக போனார். இன்றைக்கு அது முடியுமா?

    தயவு செய்து கமலை எதிர்க்கிறேன் என்று இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு காவடி தூக்காதீர்கள். நாளை அது உங்களையும் அழித்துவிடும்.

    உங்களுடைய வஞ்சக சிந்தனைகளால், வன்மமான கருத்துக்களால் இன்றிலிருந்து உங்களுடைய இந்த பிளாக்கை படிப்பதையும், உங்களுடைய எழுத்துக்களை வாசிப்பதையும் நிறுத்தப்போகிறேன். மன்னிக்கவும்.

  10. ///விஸ்வரூபம் திரைப்படம் தீவிரவாதத்தை பற்றி பேசுகிறது என்ற ஒரே காரணத்திற்காக அது சென்னை ஆயிரம் விளக்கு பகுதிகளில் வாழும் இஸ்லாம் மக்களைத்தான் குறிக்கிறது என்று ஆதாரமற்ற கருத்துகளை குறிப்பிடுவது எந்த விதத்தில் நியாயம் என்றே தெரியவில்லை.////

    ///தயவு செய்து கமலை எதிர்க்கிறேன் என்று இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு காவடி தூக்காதீர்கள். ///

    அப்படியா? இதெல்லாம் நான் எப்போ சொன்னேன்?

    ///உங்களுடைய வஞ்சக சிந்தனைகளால், வன்மமான கருத்துக்களால் இன்றிலிருந்து உங்களுடைய இந்த பிளாக்கை படிப்பதையும், உங்களுடைய எழுத்துக்களை வாசிப்பதையும் நிறுத்தப்போகிறேன். மன்னிக்கவும்.///

    நீங்கள் என் எழுத்துக்களை தொடர்ந்து படித்தமைக்கு நன்றி. அது எனக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
    இனி என் எழுத்துக்களை வாசிப்பதை நிறுத்தப்போகிறேன் என்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

    உங்களின் விரிவான கருத்துகளுக்கு நன்றி.

  11. கமலின் விசுவரூபம் திரைப்படம் நிச்சயமாக இசுலாமிய தீவிரவாதத்தை நுனிப்புல்லாகத்தான் மேயப்போகிறது! ஏனென்றால் தீவிரவாதம் குறித்து கமல் எவ்வளவு அறிவோடு இருக்கிறார், தெளிவோடு இருக்கிறார் என்பதை அவரின் குருதிப்புனலில் பார்த்துவிட்டோமே…! தான் ஒரு பார்ப்பன அய்யங்கார் என்ற சிந்தனை அறிந்தோ அறியாமலோ அவருக்கு உண்டு என்பதை அவரின் மீண்டும் கோகிலா முதல் தசாவதாரம் வரை எல்லோருக்கும் அவரே உணர்த்தி விட்டார். அந்த எண்ணத்தின் மிச்சம் மீதிதான் அமெரிக்க அடிவருடித்தனமாக அவரிடம் வெளிப்படுகிறது. இதற்காகவே அவர் விமர்சிக்கப்படுகிறார் பெரியார் தொண்டர்களால்!
    திரைத்துறையில் உள்ள நண்பர் மனமுடைந்து போய் எழுதியிருக்கிறார். கமலின் மாய பிம்பத்தோடே கமலைப் பார்த்து பழகியதால் நேர்ந்த மனக்காயம் நண்பருக்கு! அதற்காக அவரை விமர்சனத்திற்கு அப்பால் தள்ளி வைக்கவா முடியும்? விமர்சனத்தோடுதான் ஒருவரை ஏற்றுக் கொள்ள முடியும்! தமிழ் நாட்டில் பெரியார் தொண்டர்களால், கடவுளுக்கு நேர்ந்த கதியை விடவா கமலுக்கு நேர்ந்து விட்டது? சற்றே நடுநிலையோடு நண்பர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!
    தீவிரவாதத்தை தமிழ்நாட்டில், இந்தியாவில் விதைத்தது இந்து பார்ப்பனியாமே! இசுலாமிய தீவிரவாதம் ஒரு எதிர் வினை மட்டுமே! மற்றபடி தீவிரவாதம் என்று வரும்போது எல்லோரையும் போல நுனிப்புல் மேய்வது போன்று, விளைவை மட்டும் நாங்கள் பார்ப்பதில்லை, மூலத்தைத் தான் பெரியார் தொண்டன் பார்க்கிறான்! அதுதான் சரியான பார்வை! அது மதத் தீவிரவாதமோ அரச பயங்கரவாதமோ… அவைகளை விமர்சனத்திற்குள்ளாக்குவதில் பெரியார் தொண்டன் முன்னேதான் நிற்பான்! தீவிரவாதத்தை உருவாக்குவதில், வளர்ப்பதில் பெரும்பங்கு இந்த அரசுகளுக்கு உண்டு! இந்த உண்மையை பெரியார் தொண்டனால்தான் சொல்ல முடியும்! மற்றவர்களால் உணரக் கூட முடிவதில்லை! அதனால்தான் இப்படிப்பட்ட விமர்சனங்களும் சினங்களும் நண்பர்களிடத்தில் எழுகின்றன!
    நண்பர் மதிமாறனுக்கு வாழ்த்துகள்! காசிமேடுமன்னாரு.

  12. //எனக்கென்னமோ, பிரியாணி தானம் நடக்காதுன்னுதான் தோணுது.//

    தோழரே, கடைசியில் நீங்க சொன்னது உண்மையா போச்சி, ” ‘வைதீக பிராமணனை விட, முற்போக்கு பிராமணன் மிகவும் ஆபத்தானவன்’ என்று சொன்ன ஐயா பெரியாரின் கருத்தை கமல் மூலம் உண்மை என அறிய முடிகிறது.”

    தடை செய்யும் வரை போராட்டம் அறிவித்துள்ளது இஸ்லாமிய அமைப்புகள்….

    ஏன் இந்த கீழ்த்தனமான எண்ணம் அவருக்கு ???

  13. தணிக்கை குழுவைத் தாண்டிய கும்பல்களிடம் அடிபணிய வேண்டிய கருத்துச் சுதந்திரமே இந்தியாவில் இருக்கின்றது. மதவாதிகள் கையில் சிக்கி சின்னா பின்னமாகும் கலைத்துறைக்கு எவர் தான் ஆதரவு, சல்மான் ருஸ்டி, தஸ்லிமா நஸ்றின், ஓவியர் உசேன், தீபா மேத்தா இன்று கமலஹாசன் . வாழ்க இந்தியா ! வளர்க உங்கள் பகுத்தறிவு !

  14. பிரியாணி கிடைக்காது என்றே தோன்றுகிறது. முஸ்லிம்கள் போர்க்கொடி தூக்கிவிட்டர்கள். சாதிவீகமாக போராடுவார்களா? அல்லது வன்முறைதானா ?

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading