புராண காலத்திலும் அதன் பிறகு ‘நவீன’ பாரதியிடமும் .. அதுபோலவே இன்றும்..

அதென்னங்க பார்ப்பன இந்துப் பார்வை?

-என். குமார்.

அடுத்தவன் மனைவி மீது ஆசைப்பட்டு அவளை கடத்தி சென்று கை படாமல் வைத்திருந்தாலும் அவன் ஒழுக்கக்கேடன். அவனுக்கு மரணதண்டனைதான் தீர்ப்பு என்று ராவணன் மூலமாக நீதி சொன்ன பார்ப்பனியம்,

அடுத்தவர்களின் ஏகப்பட்ட மனைவிகளை கவர்ந்து அவர்களிடம் உடல்ரீதியாக உறவும் வைத்துக் கொண்ட பெண் பித்தன் இந்திரனை தேவர்களின் தலைவர்களாக கொண்டாடுவதை பழைய புராண, இலக்கியத்தில் உள்ள பார்ப்பன இந்து பார்வை என்று சொல்லலாம்..

‘நவீன’ இலக்கியத்தின் ‘தந்தை’யான பாரதியார், பெண்ணை நிர்வாணபடுத்த முயற்சிப்பதை கண்டித்து,

பாஞ்சாலி சபதத்தில், பாஞ்சாலியின் குரலாக

தேவி திரௌபதி சொல்வாள்; – ஓம்
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவி துச்சாதனன் செந்நீர் – அந்தப்
பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தம் ,
மேவி இரண்டுங் கலந்து – குழல்
மீதினற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான் – இது
செய்யுமுன்னே முடியே’ என்றுரைத்தாள்.

என்று வீர முழக்கம் இடுகிறார்.

பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமைக்கு எதிராக, அப்படி பொங்கிய பாரதியே இன்னொரு இடத்தில்,

குளத்தில் குளிக்க சென்ற பெண்களின் துணியை தூக்கிக்கொண்டு, அவர்களை கை இரண்டையும் மேல தூக்கி கும்பிட்டபடி நிர்வாணமாக மேலேறி வந்தால்தான் துணியை திருப்பி தருவேன் என்று பெண்களிடம் பொறுக்கித் தனம் செய்த ஈவ்டீசிங் பேர்வழி கண்ணனின்  (இவன்தான் பாஞ்சாலி மானம் காக்க தன் கை கொடுத்தான்) இதுபோன்ற ஈனச் செயல்களை,

‘தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன் தெருவிலே பெண்களுக்கொ யாத தொல்லை’  என்று பெருமித்தோடு கொஞ்சி மகிழ்கிறார்.

இது நவீன இலக்கியத்தில் உள்ள பார்ப்பன இந்துப் பார்வை.

இதுபோல் பல நியாய தர்மங்கள், பார்ப்பனர்களால், பார்ப்பன எழுத்தாளர்களால், ஊடகங்களால் ‘நான் ரொம்ப ஸ்ட்ரிட்டு..’ என்ற பாணியில் இன்றும் வழங்கப்படுகிறது.

23 thoughts on “புராண காலத்திலும் அதன் பிறகு ‘நவீன’ பாரதியிடமும் .. அதுபோலவே இன்றும்..

  1. அடுத்தவன் மனைவியை கடத்தலாம், ஆனால் கைபடாமல் வைத்திருந்தால் அவன் யோக்கியன் ஆகிவிடுவானாக்கும்…

    இந்திரன் என்பது பதவி.. எந்த இந்திரன் செய்தானோ..??

    குழந்தைக் கண்ணனின் ஆடை ஒளித்து வைக்கும் குறும்பு விளையாட்டுக்கும், ராவணனின் மாற்றான் மனைவி கடத்தல் லீலைக்கும் வித்தியாசம் இல்லையா?!

  2. வைசூரி
    இந்தக் கட்டுரையில் என்ன மதிமாறன் விளக்கி இருந்தாரோ அதற்கு பொருத்தமாக இருக்கிறது உங்களுடைய பின்னூட்டம்

  3. நாட்டாமை தீர்ப்பு மாற்றமுடியாததா??

  4. சீதையே தானாக விருப்பப்பட்டு வலிய ராவணனுடன் வந்தாளோ என்னவோ யாருக்குத் தெரியும் ?

    குழந்தை கண்ணனின் குரும்பு விளையாட்டுக்கும், கிருஷ்ன பரமாத்மா 60,000 கோபிகையர் வீட்டில் செக்ஸ் சாமியார் போல எப்போதும் சல்லாபமாக இருப்பதற்கும் வித்தியாசம் இல்லையா ?!

    செய்தி : சங்கராச்சாரியார் பெண்ணின் கையையும் அங்க இங்கயும் பிடிச்சு இழுத்தாராமே.

    சங்கராச்சாரி என்பது பதவி. எந்த சங்கராச்சாரி செய்தாரோ ?

  5. நிகழ்காலத்தில் செய்யும் தப்புக்களுக்கு புராணகாலத்தை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்து நியாயம் கற்பிக்க முற்படுற மாதிரி தோணுது……..

  6. ம.வெங்கடேசனுக்கு டேக்கா கொடுக்கிறாராம்…இதை விட திராவிட தலைவர்கள் வாழ்ந்தே காட்டியிருக்கிறார்களே ? பார்ப்பன பார்வை தான் பிரச்சனை பார்வையை நடமுறை படித்தினால் அவர் அதி தீவர திராவிடர்.

  7. தந்தை பெரியார் சொன்னது என் நினைவிற்கு வந்தது .கண்ணன் குழந்தையாக இருந்தபோது வெண்ணை திருடியபோதே கண்டித்து இருந்தால் ,பெரியவனாகி சேலை திருடி இருக்க மாட்டான் .

  8. மிஸ்டர் வைசூரி, உங்க வீட்டுப் பெண்கள் குளிக்கும் போது நான் அவுங்க ஆடைகளைப் புடுங்கி ஒளிச்சு வைச்சா 30 வயசு குழந்தை ஒருவனின் விளையாட்டுன்னு அப்பயும் பெருந்தன்மையா எடுத்துக்குவீங்களா.

  9. பொட்டைகளா! ராமசாமி நாயக்கரின் பொறுக்கித்தனத்தை வெளிப்படுத்திய பின்னூட்டத்தை தூக்கி விட்டீர்கள்! இது தான் தமிழ் வீரமோ?!

  10. @Viajayagopalswami,

    30 வயசிலும் ‘குழந்தையாக’ இருப்பவர் இப்படி விளையாடினால் எப்படி தவறாகப் புரிந்துகொள்ள முடியும்.. 2 தட்டு தட்டி, இனிமே இப்படியெல்லாம் செய்யாதே குயந்தே என்று கண்டிக்கத்தான் முடியும்.

  11. கண்ணனை போல சிறுவயதில் நான் வெண்ணை திருடியதோ வேறு எந்தக் குறும்புமோ செய்தது இல்லை. கண்ணனுக்கு இருந்த துணிச்சல் எனக்கு இல்லை என சொன்னார்கள். ஆனாலும் கண்ணன் வெண்ணை திருடியது சரியா என்றால் அதுதான் குறும்பு என்கின்றனர். அதிலும் ஒருத்தர் குளிக்கும்போது துணியை எடுத்துக் கொண்டு குறும்பு செய்வது கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது.

    ஆனால் கண்ணனின் குறும்புக்கும் துரியோதனின் அக்கிரமத்துக்கும் வேறுபாடு உள்ளது.

    துரியோதனனின் எண்ணம் திரவுபதியை பலர் முன்னே மான
    பங்கம் செய்வதோடு, திரவுபதியை தனது தொடையில் உட்கார செய்ய விரும்பினான். துரியோதனின் செய்கை அப்பட்டமான கற்பழிப்பு முயற்சி மற்றும் அவமானப் படுத்தும் நிகழ்ச்சியாகும்.

    கண்ணனின் நோக்கம் திரவுபதியை கற்பழிப்பதோ, அவளை அவமானப் படுத்துவதோ இல்லை. கண்ணன் செய்தது தோழமையின் உரிமையில் செய்யப்பட குறும்பு. அதில் காம உணர்வோ, அவமானப் படுத்தும் நோக்கமோ இல்லை. எனவே தான் திரவுபதியும் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டாள். பொங்கிப் பாய்ந்து சீறி சினந்து கண்ணனின் கையை உடைத்து பெரும் இரத்தத்தை என் கூந்தலில்பூசுவேன் என சபதம் செய்யவில்லை. எனவே பாரதியும் அப்படியே எழுதி இருக்கிறார்.

    தெளிவான இந்த விடயத்தை புறந்தள்ளி
    எப்படியாவது பாரதியாரை குறை சொல்ல வேண்டும், அப்படியே கண்ணனையும் திட்டிக்கலாம் என்று காழ்ப்புணர்ச்சி அடிப்படியில் எழுதப் பட்ட கட்டுரை போல உள்ளது.

  12. Kannan
    கட்டுரையாளர் என்ன சொல்லியிருக்கிறார் என்றுகூட தெரிந்து கொள்ளாமல், நீங்கள் பாட்டுக்கு எதையாவது எழுதிவிடுகிறிர்கள்.
    உங்களைபோன்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
    மீண்டும் ஒரு முறை மதிமாறன் எழுதியயை பொறுமையாக படிக்கவும்.

  13. நீலகண்டன்,

    இன்னொரு முறையும் படித்தேன்!

    இராவணன், சீதை மேல கையே வைக்கலை, ஆனா கொன்னுட்டாங்க , இந்திரன் அகலிகையை உடலுறவே செய்து இருக்கிறான் ஆனால் அவனை கொல்லவில்லை இது சரியான நீதியா என்கிறார். இராவணன் ஒழுக்கக் கேடன் என்பதால் அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு விட்டதே என்று எழுதி இருக்கிறார்.

    இராவணன் ஒழுக்கக் கேடன் என்பதால் அவனுக்கு மரண தண்டனை வழங்கினார்களா? ஒரு பெண்ணை அவள் விருப்பத்துக்கு மாறாக அவள் வசிக்கும் இடத்தில் இருந்தி கடத்தி வருவது சரியா , அவளை தன ஆசைக்கு இணங்கும்படி நெருக்குதல் தருவது சரியா. அந்த நிலையில் அந்தப் பெண் விடுவிக்கப் பட வேண்டுமா அல்லது, அவன்தான் உன் மேல கையே வைக்கலையே, அப்ப நீ அப்படியே இரு என்று அந்தப் பெண் விடுவிக்கப் படாமல் கட்டுண்ட நிலையிலே வைக்கப் பட வேண்டுமா .

    இராவணன் சீதையை விடுவித்து இருந்தால் அவனுக்கு தண்டனை இல்லையே. எந்த நிலையிலும் சீதையை விடுவிக்க மாட்டேன் என்று இராவணன் இருந்து விட்டான்.- சரி பரவாயில்லை வச்சுக்க என்று விட்டு விட முடியுமா.

    இந்திரனும் பிறர் மனைவிகளோ மயக்கி அனுபவித்து இருக்கிறான், குடுபங்களை கெடுத்து இருக்கிறான், அவனும் தண்டிக்கப் பட்டு இருப்பதாக உள்ளது.இந்திரனுக்கு காயடிக்கப் பட்டதாகவும், இந்திரன் மற்ற தேவர்களிடம் அழுததாகவும், ஒரு ஆட்டின் கொட்டையை எடுத்து இந்திரனுக்கு வைத்தார்கள் எனவும் உள்ளது. இராவணன் பெண்களை கடத்தி வந்து பர்மனன்டா காவலில் வைப்பவனாக இருக்கிறான், இந்திரன் கள்ளக் காதல் செய்து விட்டு நைசாக ஓடப் பார்பவனாக
    இருக்கிறான்.இந்திரனுக்கும் மரண தண்டனை கொடுக்கப் பட வேண்டியதுதான். இந்திரன் அமுதம் குடிச்சிட்டான், அவனை சாக அடிக்க முடியாது என்கிறர்கள். நாம எதைக் குடிக்கிறது?

    எப்படியோ காம வசப் பட்ட ஆண்களால் பெண்களின் வாழ்க்கை நரகம் ஆகிறது. இராமனிடம் தோள் வலிமை இருந்தது. இராவணனைக் கொன்று கொன்று சீதையை விடுவித்தான் . கவ்தமனிடம் தவ வலிமை இருந்தது இந்திரனை காயடித்து விட்டான். சாதாரண மனிதன் என்ன செய்ய முடியும். இன்றைக்கும் இந்திரனையும், இராவணனையும் போன்றவர்கள் பிறன் மனைவியை அடைய முயலாமல் இருக்கிறார்களா? . அவர்களிடம் இருந்து சாமானியன் தப்புவது எப்படி? சாமானியருக்கும் பாதுகாப்பு கிட்டி கண்ணியமாக வாழும் வகையில், சாமானியரின் கரத்தை வலுப்படுத்துவதே அவசியமாகும். அதிகாரத்தை பயன் படுத்தி அபலை பெண்களை தங்கள் உடமையாக்கி அனுபவிக்க முயல்பவர்களை, “கொஞ்சம் கெட்டவன் ஆனா ரொம்ப நல்லவன்” என்பது போல சித்தரிப்பது அப்படிப் பட்ட போக்கை நியாயம் போலக் காட்டி, சாமானியருக்கு பாதுகாப்பையும் , கண்ணியத்தையும் தரும் நோக்கில் பின்னடைவை உருவாக்க கூடும்

    நன்றி.

  14. நண்பர் கண்ணன்
    உங்களின் நீண்ட விளக்கம் பார்ப்பன ஆதிக்கத்தை ஒத்துக் கொள்வதாக இருக்கிறது.
    அதுதான் ஒரே தப்புக்கு இரண்டு நீதி என்பதைதான் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
    அது ஏன் என்பதுதான் கேள்வி.

  15. // ஒரே தப்பு //

    இதுதான் பகுத்தறிவைப் பயன்படுத்தும் அழகோ?!

  16. நண்பர் நீலகண்டன்,

    ஒரே தப்புக்கு ஒரே நீதி என்பது சரியே. ஆனால் வெவ்வேறு வகையான தவறுகளுக்கு வெவ்வேறு ரியாக்சன் உருவாகிறது.

    கண்ணன் தன்னிடம் உடல் இன்பம் அனுபவிக்க ஆசைப் பட்டதாக பாஞ்சாலி கருதவில்லை, குளிக்கும் போது கண்ணன் ஆடையை எடுத்ததை பாஞ்சாலி ஒரு குறும்பாகவே கருதி இருக்கிறாள். ஆனால் துரியோதனன் துரவுபதியை அவமானத்தில் கூனிக் குறுக வைத்து, அவளை ஆடையின்றி தன தொடையில் உட்கார வைத்தே ஆக வேண்டும் என்கிற மூர்க்கத் தனமான வன்முறை துன்புறுத்தலை ஒன்றாக எப்படிக் கருத முடியும்.

    பெண்களை அடைத்து துன்புறுத்தி அனுபவிக்க நினைப்போரிடம் இருந்து அவர்களை விடுவிக்கும் போராட்டம் தொன்று தொட்டு நடந்து வருகிறது. எந்த அளவுக்கு சக்தி இருக்கிறதோ அந்த அளவுக்கு எதிர்க்கிறார்கள்.

    கவுதமனால் இந்திரனை கொல்ல முடியவில்லை. காயடித்து விட்டு விட்டான். இராமன் கூட சீதையை விட்டு விடும்படி தூது அனுப்பினான், ஆனால் இராவணன் விட தயார் இல்லை, இராமனைக் கொன்னுட்டா சீதை வேற வழி இல்லாம தன ஆசைக்கு இணங்க வேண்டிய நிலைக்கு வருவாள் என்று இராவணன் நினைத்து போருக்கு கிளம்பினான்.

    முடிந்த வரை எதிர்க்கிறார்கள். அதிகாரம் பலமாக இருக்கும் போது எதிர்க்க முடியவில்லை. பலம் குறையும் போது இராம ஜெயமாகி விடுகிறது.

    பார்ப்பன ஆதிக்கத்தை ஒத்துக் கொள்ளவில்லை. எதிர்க்கிறேன். பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரான முயற்சியானது, அதிகார முதலாளிகள் பெண்களை துன்புறுத்தி அனுபவிக்கும் கோட்பாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைய தேவை இல்லை.

    நன்றி.

  17. ஐயா வைசூரி, எனக்கு ஒரு நியாயம் கண்ணனுக்கு ஒரு நியாயமா? செருப்பால அடிக்கிறதா இருந்தா ரெண்டு பேரையும் அடி. அதத் தான கேக்குறேன்.

  18. //கண்ணன் தன்னிடம் உடல் இன்பம் அனுபவிக்க ஆசைப் பட்டதாக பாஞ்சாலி கருதவில்லை, குளிக்கும் போது கண்ணன் ஆடையை எடுத்ததை பாஞ்சாலி ஒரு குறும்பாகவே கருதி இருக்கிறாள். //

    மிஸ்டர் கண்ணன், உங்க வெர்ஷன் ஆஃப் மகாபாரதத்துல கூட பாஞ்சாலிக்கு கிருஷ்னன் அண்ணன் தானா? அண்ணன் தான் என்றால் எந்த அண்ணன் தங்கச்சி குளிக்கும் போது துணியை ஒளிச்சு வைச்சு அம்மணமா வந்தாத் தான் தருவேன்னு விளையாடுவான்?

  19. Vijay Gopalswami,

    கண்ணன் என்று நினைப்போ?!

    நீங்களும் உங்கள் குட்டித்தம்பியும் ஆத்தங்கரைக்குப் போய் துணியை ஒளித்துவைத்து விளையாடுங்கள். யாருக்கு அதிகமாக கிடைக்கிறது என்று பாருங்கள்.!

    பாஞ்சாலியின் துணியை கண்ணன் ஒளித்து வைத்ததாக எந்த புராணத்திலும் இல்லை.

  20. வைசூரி, கண்ணன் பாஞ்சாலி கதை நான் சொல்லல, கண்ண நல்லா தெறந்து பாரும். இங்கே இன்னொரு கண்ணன் எழுதுன விஷயம் அது.

  21. மிஸ்டர் வை”ஷூ”ரி, உங்களுக்கு அந்த ஆசையிருந்தா நீங்க போய் விளையாடுங்க. நான் கொஞ்சம் பேரத் திரட்டிக்கிட்டு பிஞ்ச செருப்புகளோட வற்றேன்.

  22. Vijay Gopiyarswami, நான் கண்ணனல்ல, அவன் குறும்பை ரசித்தார்கள், என் குசும்புக்கு செருப்புடன் வேறு என்னவெல்லாம் வரும் என்று தெரியாது, இந்த ஆட்டத்தை நீங்களே ஆடிப்பார்த்து தெளிந்துணருங்கள்..

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading