எம்.ஜி.ஆர், சிவாஜி; டி.எம்.எஸ் குரலில் வித்தியாசம் காட்டியது உண்மையா?

டி.எம்.எஸ், எம்.ஜி.ஆருக்கு பாடும்போது, மிகச் சாதரணமாக பாடியதாகவும், சிவாஜிக்கு பாடியபோது கஷ்டப்பட்டு, அடிவயிற்றிலிருந்து பாடியதாகவும் சொல்கிறார்களே?

-என். முகமது, சேலம்.

“அப்படியெல்லாம் கெடையாது. நாங்க என்ன கொடுக்குறமோ அததான் பாடினார்.” என்று எம்.எஸ்.வியே சொல்லியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். பாடல்களில் கமகம், சங்கதி, ஹை பிச் இந்த வகைகளில் பாடல்கள் அமையாது. பாடல்கள் அப்படி அமைந்தால், நுணுக்கமான பாவங்கள்காட்டி நடிக்க வேண்டிவரும். அது எம்.ஜி.ஆருக்கு அறவே பிடிக்காத விசயம்.

துள்ளல் இசையோடு, வேகமான டெம்போக்களில். FLAT NOTES களில்தான் அவர் பாடல்கள் அமையும். அதை பாடுவது பாடகர்களுக்கு சுலபம். (‘அழகிய தமிழ் மகள் இவள்..’ நெஞ்சம் உண்டு.. நேர்மை உண்டு..’ ஒரு பெண்ணைப் பார்த்து..’ பாரப்பா பழனியப்பா..’ நான் ஆணையிட்டால்..’).

அதனால்தான் எம்.ஜி.ஆர், பாடல் காட்சிகளில் முகபாவனைகளைவிட, அதிகம் கைகளை பயன்படுத்தினார். கைகளை சுழட்டி, சுழட்டி நடிக்கும் பாணியே இதுபோன்ற பாடல்களால்தான் அவருக்கு உருவானது.

அதற்கு நேர் மாறாக, சிவாஜிக்கு அமைந்த பாடல்கள் சங்கதி, கமகம், ச,ரி,க,ம,ப,த,நி என்று சுரங்களை சொல்லியும், தா, தை என்று ஜதிகளோடும். ஹை பிச், லோயர் பிச், நார்மல் பிச் என்று எல்லா வகையிலும் பல இசை நுணுக்கங்கள் அமைந்ததாக இருக்கும். அவர் நுணுக்கமாக நடிக்கக் கூடியவர் என்பதால் இசையமைப்பாளர்கள் அதுபோன்ற பாடல்களை உருவாக்கினார்கள். (‘பாட்டும் நானே…’ ‘எங்கே நிம்மதி..’)

அதனால்தான் டி.எம்.எஸ் பாடியதில் எம்.ஜி.ஆர்., சிவாஜி வித்தியாசத்தை உணர முடிந்தது.

அநேகமாக பாடல் காட்சிகளில் அதிக க்ளோசப்பில் நடித்த நடிகர் சிவாஜியாகத்தான் இருப்பார். சில நேரங்களில் ஒரிஜனலாக பாடிய, டி.எம்.எஸை விட இவர் ரொம்ப சிரமப்பட்டு பாடியது போலவும் மிகைப்படுத்திவிடுவார்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையது:

டி.எம்.சவுந்தரராஜனுக்கு பாடத் தெரியாது: இளையராஜா அப்படியா சொன்னார்?

12 thoughts on “எம்.ஜி.ஆர், சிவாஜி; டி.எம்.எஸ் குரலில் வித்தியாசம் காட்டியது உண்மையா?

  1. நானும் கேள்வியைப் போலத்தான் நம்பிக்கொண்டு இருந்தேன்.அடடா,என்னைய இப்படி ஏமாத்திட்டாங்களே!

  2. டி.எம்.எஸ், எம்.ஜி.ஆருக்கு பாடும்போது, மிகச் சாதரணமாக பாடியதாகவும், சிவாஜிக்கு பாடியபோது (கஷ்டப்பட்டு***), அடிவயிற்றிலிருந்து பாடியதாகவும் சொல்லியதை நானே கேட்டிருக்கிறேன்.
    ***இந்த வார்த்தையை அவர் உபயோகிக்கவில்லை

  3. டி.எம்.எஸ், எம்.ஜி.ஆருக்கு பாடும்போது, மிகச் சாதரணமாக பாடியதாகவும், சிவாஜிக்கு பாடியபோது (கஷ்டப்பட்டு***), அடிவயிற்றிலிருந்து பாடியதாகவும் அவரே சொல்லியதை நானே கேட்டிருக்கிறேன்.
    ***இந்த வார்த்தையை அவர் உபயோகிக்கவில்லை

  4. ஒரு சிறந்த தமிழ்ப் பாடகனை- வழிப்போக்கன் அவர்கள்,
    குறைவாக விமர்சனம் செய்தல் சரியாகப் படவில்லை.
    வாழ்க T.M.S. அவர்களின் இசைப்பணி.

  5. இது டி.எம்.எஸ்.சை எங்கே குறை சொல்கிறது? எம்.ஜி.ஆர் தன் படங்களில் எல்லா க்ராஃப்டுகளிலும் தலையிடுவார். இசை, கேமரா என்று சகலத்திலும் அவருடைய தலையீடு இருக்கும். அங்கே இசையமைப்பாளன் தன் திறமையை சுயேச்சையாகக் காட்டிவிட முடியாது. எம்.எஸ்.வியால் என்ன தரமுடியுமோ அதைத் தந்திருக்கிறார், டி.எம்.எஸ். என்ன தரமுடியுமோ அதைத் தந்திருக்கிறார். அவ்வளவே.

  6. வாழ்க உலக மக்கள் அனைவரும்! வாழ்க ஈரேழு லோகங்களும்!!!

    “தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றமாட்டோம்:

    தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் என்ற பெயரைக் கொண்டிருப்பதால், இந்தப் பிரச்னையில் எந்த தர்மசங்கடமும் இல்லை. தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கம் என்று உருவாக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.

    கலைக்கு மொழி, மதம், சாதி கிடையாது. பல திரைப்பட பிரபலங்கள் பொறுப்பு வகித்த பாரம்பரியம் மிக்க அமைப்பு இது. இதன் பெயரை மாற்ற முடியாது. தொடர்ந்து இந்தப் பெயரிலேயே சங்கம் செயல்படும். விருப்பம் இருப்பவர்கள் புதிதாகத் தொடங்கலாம். மாற்றுக் கருத்து இல்லை.”-சரத்குமார்”

    நீங்க சொல்வது உங்கள் சம்பத்தப்பட்ட வகையில் மிகவும் சரியே. ஹி…ஹி..ஹி.. ஏன்னா திராவிடத்தையும் தாண்டி நீங்க பொது கலாசார முன்னேற்றத்தின் தலைவர் என்பது எங்களுக்கு தெரியாதா என்ன??? வாழ்க உலக மக்கள் அனைவரும்! வாழ்க ஈரேழு லோகங்களும்!!!

    Pl c Link:
    http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=544550&SectionID=129&MainSectionID=129

  7. // அநேகமாக பாடல் காட்சிகளில் அதிக க்ளோசப்பில் நடித்த நடிகர் சிவாஜியாகத்தான் இருப்பார். சில நேரங்களில் ஒரிஜனலாக பாடிய, டி.எம்.எஸை விட இவர் ரொம்ப சிரமப்பட்டு பாடியது போலவும் மிகைப்படுத்திவிடுவார். //

    டி.எம்.எஸ்சுக்கே அவர்தான் பாடினாரோ என்று ஐயம் வந்துவிடும் அளவுக்கு..!!!

  8. நீங்கள் சொல்வது மிகச் சரி…

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading