‘கண்ணதாசன் சிறந்த கவிஞர்’; தமிழர்களின் மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தனது கருத்தாழமிக்க திரைப்படப் பாடல்களால் கோடிக்கணக்கான தமிழர்கள் இதயங்களில் இடம் பிடித்தவர் கண்ணதாசன். அவர் பாடல்களை கேவலம் என்று சொல்லிவிட்டிர்களே?
-சுப.சீனிவாசன், காரைக்குடி.

தமிழர்களுக்கு இருக்கும் பல்வேறு மூடநம்பிக்கைகளில் கண்ணதாசன் பற்றிய மூட நம்பிக்கையும் ஒன்று. ‘கண்ணதாசனின் பாடல் வரிகள் மிகச் சிறப்பானவை’ என்று நினைத்துக் கொண்டிருப்பதும் ஒரு மூட நம்பிக்கைதான்.

சிறந்த பாடல் என்று சிலாகிக்கிற பெரும்பானமையான பாடல்களின் வரிகள் பல்லவியைத் தாண்டி பல பேருக்கு தெரியாது என்பதே உண்மை. காரணம் அந்தப் பாடலின் மெட்டுதான் அவர்களை வசீகரித்து இருக்கும். தனக்கு தானே பாடிக் கொள்கிற பலபேர், இரண்டு வரிக்கு மேல் பாடல் வரிகளை தவறவிட்டு “தன னா தன னா…” என மெட்டைதான் பாடிக் கொள்வார்கள்.

அந்த இனிய மெட்டை தனக்கு தெரிந்த மொழியின் மூலமாக ஞாபகம் வைத்துக் கொள்வதால் இசையப்பாளருக்கு சேர வேண்டிய பெருமை, கவிஞனுக்குப் போய் சேர்ந்தது.

இளையராஜாவின் வருகைக்குப் பிறகு அவருடைய இசைதான் மிகத் துல்லியமாக இந்த வேறுபாட்டை பிரித்துக் காட்டி மக்களின் இசை ரசனையை தனியாக அடையாளம் காட்டியது. சினிமா வரலாற்றில் ஒரு நடிகனைவிடவும் மக்களிடம் அதிக செல்வாக்குப் பெற்ற நபராக ஒரு இசையமைப்பாளர் (இளையராஜா) உருவானார். (ஆனால் ஆபாச வரிகள் மெட்டையும் தாண்டி ஆக்கிரமிக்கும் என்பது வேறு)

ஒப்பீட்டளவில் பார்த்தால் தமிழ் சினிமாவில் கருத்தாழமிக்க பாடல்கள் எழுதிய ஒரே நபர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மட்டும்தான். மெட்டுக்களை உருவிட்டு வாசித்தாலும் வலிமையோடு இருக்கும் அவருடைய வார்த்தைகள்.

“தனியுடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா, தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா” என்று குழந்தைக்கு அவர் சொன்ன சேதியில் தெறித்த பொதுவுடமையும்,

“நான் கருங்கல்லுச் சிலையோ, காதல் எனக்கில்லையோ, வரம்பு மீறுதல் முறையோ” என்று ஒரு பெண் தன் காதல் உணர்வை, தன்னுடைய சுயமரியாதை உணர்வோடு சேர்த்து பாடுவது போல் எழுதிய ஒரே கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்தான்.

காரணம், தனக்கென்று தத்துவமும் அரசியலும் கொண்ட திரைப்படப் பாடலாசிரியர் அவர் மட்டும்தான்.

அதேபோல் கவிஞர் சுரதா, குறைந்த பாடல்கள் எழுதினாலும் இலக்கிய தரமிக்க பாடல்கள் எழுதியவர்.

ஆனால் கண்ணதாசனிடம் இருந்தது வெறும் தொழில் நேர்த்திதான். கதையின் சூழ்நிலைக்கும், மெட்டுக்கும் பொருத்தமான வரிகளை விரைவில் எழுதுகிற ஆற்றல். அதனால்தான் அவர் அதிக பாடல்களை எழுதினார்.

சில நேரங்களில் சூழலுக்குப் பொருத்தமற்ற வரிகளையும் நிறைய எழுதியிருக்கிறார்.

‘நெஞ்சில் ஒர் ஆலயம்’ படத்தில், “ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா? ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா?” என்று தன்னை மறுமணம் செய்து கொள்ள சொன்ன நோய்வாய்ப்பட்ட கணவனைப் பார்த்து மனைவி பாடுவது போல் உள்ள பாடல்.

ஆனால் கதையின்படி அந்தப் பெண்ணுக்கு கணவன் இரண்டாவதாக மலர்ந்த மலர். முதல் மலர் டாக்டர்.

16 வயதினிலே படத்தில், கல்வி அறிவற்ற சப்பானி, “இது வள்ளுவனின் ஏட்டில் உண்டு.. பரம்பரை பாட்டில் உண்டு.. தவறில்லை மகராணி” என்று பெரிய பண்டிதனைப் போல் பாடியிருப்பார்.

ராஜபார்வை திரைப்படத்தில், பார்வையற்ற கதாநாயகன் தன் காதலியை, “சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன. சேர்ந்த பல் வரிசையாவும் முல்லை போன்றன” என்று நெற்றிகண்ணோடு சேர்ந்து மூன்று கண்களும் தெளிவாகத் தெரிகிற சிவபெருமான் பாடுவது போல் எழுதியிருப்பார்.

எனக்கு தெரிந்து மெட்டைத் தாண்டி வலிமையான வார்த்தைகளோடு ஒரே ஒரு பாடலைத்தான் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். அது ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் ஒர் அடிமை பாடுவது போல், அமைந்த பாடல்.

“காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
வானம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல், தாய்மை, பாசம் நம்மை வெறுப்பதில்லையே”

ஒரு வேளை இந்தப் பாட்டை யாராவது மண்டபத்துல எழுதிக் கொடுத்தாங்களோ என்னவோ?

*

திரு. காமராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த சமூக விழிப்புணர்வு ஜூலை 2007 இதழுக்காக எழுதியது.

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து….

புத்தக தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

தங்கம் இதழை  ஆன்லைன் வழியாக பார்க்க:

http://ebook.thangamonline.com/may2011/

தொடர்புடையவை:

இளையராஜா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

‘கண்ணதாசன் சிறந்த கவிஞர்’; தமிழர்களின் மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று க்கு 26 பதில்கள்

 1. Rafeek says:

  “இந்தப் பாட்டை யாராவது மண்டபத்துல எழுதிக் கொடுத்தாங்களோ என்னவோ?”

  ethellaam over a theriyala? unga baanila sonna simply kutram kandupidithu peru vanga muyarchikum kuttam !!

 2. johan-paris says:

  தமிழில் சிறந்த கவிஞர்களில் கண்ணதாசனும் ஒருவர்- மாற்றுக் கருத்தில்லை.

 3. murasu says:

  ”எல்லாரும் எல்லாவும் பெற வேண்டும்
  இங்கு இல்லாத இல்லாமை நிலை வேண்டும்
  வல்லான் கையில் உள்ள தனிவுடமை நீங்கி
  வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை”
  இந்தப் பாடலும் கூட கண்ணதாசனின் பாடல் தான்.
  ‘சிறந்த’ என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று நாம் வருவித்துக்கொள்வதில் தான் இருக்கின்றது நமது பார்வை.
  கவிஞன் என்கின்ற முறையில் கண்ணதாசன் உண்மையிலேயே ஒரு சிறந்த கவிஞன் தான். கவிதைப் புலமை என்கின்ற வகையில் சொல்வதானால். //‘நெஞ்சில் ஒர் ஆலயம்’ படத்தில், “ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா? ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா?” என்று தன்னை மறுமணம் செய்து கொள்ள சொன்ன நோய்வாய்ப்பட்ட கணவனைப் பார்த்து மனைவி பாடுவது போல் உள்ள பாடல்.// இங்கே மலர் என்பது ஆண் பெண்ணின் திருமண உறவால் ஏற்பட்ட காதல். திருமணத்திற்கு முன் ஏற்படும் காதலுக்கும் திருமணத்திற்குப் பின் ஏற்படும் காதலுக்கும் வித்தியாசம் இருக்கின்றது. எனவே தாங்கள் குறிப்பிட்ட பார்வை இங்கே இல்லை.
  //ராஜபார்வை திரைப்படத்தில், பார்வையற்ற கதாநாயகன் தன் காதலியை, “சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன. சேர்ந்த பல் வரிசையாவும் முல்லை போன்றன” என்று நெற்றிகண்ணோடு சேர்ந்து மூன்று கண்களும் தெளிவாகத் தெரிகிற சிவபெருமான் பாடுவது போல் எழுதியிருப்பார்.// காதலியினை உயர்வாய்ப் பேச கண்கள் தேவையில்லையே. மேலும் யாரேனும் இது இப்படி இருக்கும் என்று கேட்ட உவமையை தானும் சொல்வது என்பதற்கு பேசும் ஆற்றல் இருந்தாலே போதும். கண்ணதாசனை குறைத்துபேச வேண்டியதில்லை. உண்மையிலேயே கண்ணதாசன் சிறந்த கவிஞனே. ஆனால் தத்துவப்பார்வை எல்லாவிடங்களிலும் பின்னி வருகின்ற பாவிகமாக இருந்ததில்லை. ஆனால் அது பட்டுக்கோட்டையிடம் இருந்தது. அது அவருக்குக் கொடுக்கப்பட்ட சூழல்களைப் பொருத்தே அமையும். நன்றியுடன் முரசு.

 4. elayaraja says:

  உங்க கருத்துக்களை மிக வன்மையாக கண்டிக்கிறேன் …

  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு மிக சிறந்த கவிஞர் அதுல யாருக்கும் சந்தேகமில்ல, அது மட்டுமில்லாம கண்ணதாசனோட ஒப்பிட்டாலும் இவரோட பாட்டுக்கள் எல்லாமே மிக சிறந்தது,

  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்ந்த காலமும் மிக மிக குறைவு.

  என்ன சொன்னாலும் கண்ணதாசனோட வரிகள் ஒரு மூட நம்பிக்கை அப்படியெல்லாம் சொல்லறத எதுக்குவே முடியாது.

  கண்ணதாசனோட வரிகளிலே என்னக்கு மிக பிடிச்ச வரி .
  நானிருக்கும் நிலையில் என்ன செய்வேன் , தினம் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்டேன்

  கிழே இறுக்கும் லிங்க் கொஞ்சம் படிங்க

  http://classroom2007.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D

 5. Ravi says:

  இப்படி எல்லாம் எழுத வேண்டும் என்று உட்கார்ந்து யோசிப்பீர்களோ? ரொம்ப ஓவர் சார்..

 6. padmahari says:

  //ஒப்பீட்டளவில் பார்த்தால் தமிழ் சினிமாவில் கருத்தாழமிக்க பாடல்கள் எழுதிய ஒரே நபர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மட்டும்தான்.//

  மறுக்கமுடியாத உண்மை…..

  ஒரு பானை சோற்றுக்கு (பாட்டுக்கு) ஒரு சோறு பதம் என்பதுபோல் கீழ்வரும் வரிகள்…..

  //“நான் கருங்கல்லுச் சிலையோ, காதல் எனக்கில்லையோ, வரம்பு மீறுதல் முறையோ” என்று ஒரு பெண் தன் காதல் உணர்வை, தன்னுடைய சுயமரியாதை உணர்வோடு சேர்த்து பாடுவது போல் எழுதிய ஒரே கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்தான்.//

  நன்றி,
  பத்மஹரி,

  http://padmahari.wordpress.com

 7. //ஒப்பீட்டளவில் பார்த்தால் தமிழ் சினிமாவில் கருத்தாழமிக்க பாடல்கள் எழுதிய ஒரே நபர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மட்டும்தான்.//

  உங்களுக்கு புரோட்டா குருமாதான் காலை சிற்றுண்டிக்குப் பிடிக்கும்ன்னா இட்லி,தோசை சாப்பிடும் பெரும்பாலோரை உவ்வே சொல்வது சரியா:)

 8. பட்டுகோட்டை கலியாணசுந்தரம் சிறந்த கவிஞர் தான். அதனால் கண்ணதாசன் சிறப்பில்லை என சொல்வது தான் கம்யூனிசமா ??? புரியலையே !!!

  ஏனப்பா வாலி எல்லாம் சிறந்த கவிஞர்னு சொல்றாங்க… அது என்ன மலையாளிகளின் மூட நம்பிக்கையா ???

 9. jeeno says:

  நீங்க சொன்னதுக்கு அப்படியே உல்டாவா உடன்படுகிறேன்… :)

 10. Varadharajan says:

  ஏன் அவரிடமுள்ள குறை மட்டும் உங்கள் கண்னுக்கு தெரிகிறது? நீங்கள் நினைத்தால் அவரை பாராட்டி எழுத நாலு விஷயம் நிச்சயம் இருக்கும். பாமரர்களை விட ஒரு படி மேலே போய் யோசிப்பதால் உங்களுக்கு பாமரர்களுக்காக பாட்டு எழுதியவரை பிடிக்கவில்லை.

 11. TSri says:

  தமிழர்களுக்கு இருக்கும் பல்வேறு மூடநம்பிக்கைகளில் கண்ணதாசன் பற்றிய மூட நம்பிக்கையும் ஒன்று.

  தங்களுடைய இந்த கருத்தை முழுமையாக ஏற்று கொள்கிறேன். இதே மாதிரி பிரபாகரன் சிறந்த தமிழர்கள் தலைவன் என்று ஒரு மூட நம்பிக்கையும் உருவாக்கபடுகிறது.

 12. shanmuganantham says:

  thamizhar galin pala muda nambikkaikalil ithuvum ondru. adhutha muda nambikkai rajini enkira mayai. nandri thozhar.

 13. karrupu says:

  இப்படி ஏதாவது பேசினா தான், தன்னை புத்திசாலின்னு பிறர் நினைப்பாங்ககிறது, சிலரோட மூட நம்பிக்கை.

 14. kumar says:

  மதிமாறன்,
  நல்லவேளையாக உங்க்கள் இந்தக் கருத்தை முதலில் படிக்க நேர்ந்தது. உங்கள் அறிவின ஆழம் புரிகிறது. இனி உங்கள் மற்ற இடுகைகளப் படித்து நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை!
  மிக்க நன்றி.

 15. padaiyappa says:

  வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை….

  உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி மனிதன் எதையோ பேசட்டுமே உன் மனதைப்பார்துக்க நல்லபடி
  கதை கட்ட ஒருவன் இருந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால் கள்வர்கள்
  வாழ்விலும் நியாயமுண்டு கோட்டுக்கு தேவை சில சாட்சி உன் குணத்துக்கு உன் குணத்துக்கு தேவை மனசாட்சி .

  மனசாட்சி இல்லாமல் வாதம் புரியும் மக்களுக்கு எங்கள் கண்ணதாசன் தன் பாடல் மூலம் அன்றே பதில் அளித்து விட்டார்.

 16. zarrypotter says:

  //நல்லவேளையாக உங்க்கள் இந்தக் கருத்தை முதலில் படிக்க நேர்ந்தது. உங்கள் அறிவின ஆழம் புரிகிறது. இனி உங்கள் மற்ற இடுகைகளப் படித்து நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை!//

  Repeat

 17. knvijayan says:

  பிள்ளைக்கு தந்தை ஒருவன் என்ற பாடலில் ‘உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம்,அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்,இல்லாத இடம் தேடி வருவான் நம் எல்லோர்க்கும் தந்தை இறைவன்”என்று எழுதியிருப்பார்,என் போன்ற பாமரனுக்கு இந்த அளவிற்கு கடவுளை புரிய வைத்தது வேறு யாரும் இல்லை.

 18. dhanaraj0 says:

  //நல்லவேளையாக உங்க்கள் இந்தக் கருத்தை முதலில் படிக்க நேர்ந்தது. உங்கள் அறிவின ஆழம் புரிகிறது. இனி உங்கள் மற்ற இடுகைகளப் படித்து நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை!//

  Repeat

 19. Balu Natarajan says:

  பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,
  அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்.

  கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்

  அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
  ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
  ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
  அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

  மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
  வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்

  – கவிஞர் கோ கண்ணதாச

  திருவடி தீக்ஷை(Self realization)

  இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
  நாம் நிலையிள்ளத உடம்பு மனதை “நான்” என்று நம்பி இருக்கிறோம்.
  சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

  Please follow

  (First 2 mins audio may not be clear… sorry for that)

  Online Books

  http://www.vallalyaar.com/?p=409

  http://sagakalvi.blogspot.com/

  Contact guru :
  Shiva Selvaraj,
  Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
  17/49p, “Thanga Jothi “,
  Kalaignar kudi-iruppu – Madhavapuram,
  Kanyakumari – 629702.
  Cell : 92451 53454

  அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
  தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி

 20. Ramu says:

  கண்ணதாசனைத் தாறுமாறாகத் திட்டி ஒருவர் ஓர் கட்டுரை எழுதினர் . கண்ணதாசனிடம் சென்று அதற்கு மறுப்புரையோ, விளக்கமோ கொடுங்கள் என்று கேட்ட போது அவர் சொன்னது:
  என் மறைவிற்குப் பின் என் எழுத்துக்கள் அனைத்தும் தொகுக்கப் படும்.
  இந்த முட்டாளுக்கு நான் மறுப்புரை எழுதினால் அதுவும் என்னுடைய தொகுப்பில் இடம் கொண்டு சாகா வரம் பெற்று விடும். இந்த ஆளுக்கு அந்தப் புகழை நான் தர விரும்பவில்லை !

  நான் சொல்வது சிலருக்குப் புரிந்தால் கூடப் போதும் !

 21. alex says:

  loosu thanama ippadi yellaam yeludhaama….poyi moottai thookki pilaippu nadathu…kannadasanai varnikka unakkellaam yenna arugathai irukku nu nenacha nee???

 22. chandru says:

  ஆமாம் நீ யார்…….? “தமிழையே” குறை சொல்கிறாய்! வேற ஒரு பதிவில் “தமிழ் மக்களையே” குறை சொல்கிறாய்! அப்போதுதான் உன்னை யாரவது திரும்பி பார்ப்பார்கள் என்ற எண்ணத்திலா….? திரை பாடலில் கண்ணதாசன் தமிழை கையாண்ட விதம்…… இனி ஒருவன் பிறந்தால்தான் உண்டு! (அதற்காக நான் பட்டுகோட்டையை குறை கூற வில்லை) அதே போல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழ் மக்கள் மேல் கொண்ட பாசம் போல் இனி ஒருவர் பிறப்பாரா என்பது சந்தேகமே (அதற்காக கர்ம வீரர் காமராசரை குறை கூற வில்லை)

 23. Pingback: கண்ணதாசனும் கடவுள் ஆகலாம் பச்சை தண்ணியும் போதையாக்கலாம் « வே.மதிமாறன்

 24. ve.manimaran says:

  there is no man to discribe about kannathasan he is a god to all ,if you write again in any webpage i will teach my technology. means u can’t put in any weppage any thing

 25. Pingback: பட்டுக்கோட்டை பாடல் பற்றிய.. | வே.மதிமாறன்

 26. Pingback: வைரமுத்துவிற்கு வாழ்த்துகள் சொல்லலாமா? | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s