‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு

peranmai_wallpaper_poster_01

பெரியார், அம்பேத்கர் பற்றி  அதிகம் எழுதுகிற, பேசுகிற நீங்கள்,  சமூகநீதியின் பின்னணியில், பேராண்மை திரைப்படத்தில் ஆதிக்கசாதியின் சாதி திமிரை அம்பலப்படுத்தி பல இடங்களில் வசனம் இடம் பெற்றது. அந்த வசனங்களைப் பாராட்டி ஒரு வார்த்தைக்கூட நீங்கள் எழுதவில்லை. அந்த வசனங்களை நீக்கிய சென்சார் போர்டின் மோசமான நடவடிக்கைப் பற்றியும் ஒரு வார்த்தைக்கூட கண்டிக்கவில்லை?

-ரவி

‘பேராண்மை’ திரைப்படத்தில் ஒரு இடத்தில் கூட ஆதிக்கஜாதியை விமர்சித்து ஒரு வரிகூட வசனம இடம் பெறவில்லை. மாறாக, தாழ்த்தப்பட்ட அல்லது மலைவாழ் மக்களை இழிவாக, மிக மோசமாக பேசிய வசனங்கள்தான் இடம் பெற்றன.

‘ஆதிக்க ஜாதியின் மனநிலையை காட்டுவதற்காக,  எதிர்நிலையில் இருந்து  வசனம் எழுதப்பட்டிருக்கிறது.’ இது மிக தந்திரமான குறியீடு. இப்படி இருப்பதால், ஆதிக்க ஜாதிகளின் ஜாதி வெறியை கண்டித்து வசனம் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. அதனால்தான், மலைவாழ் மக்களை அவ்வளவு இழிவாக ஜாதியை குறிப்பிட்டு பேசியபோதும், எந்த கதாபாத்திரமும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘பரம்பரை பரம்பரையா உன் ஜாதியோட புத்தியே அதுதானடா. ஆதிக்க ஜாதிவெறி நாயே’ என்று அந்த அதிகாரியை கண்டித்து வசனம் பேசவில்லை.

‘நடைமுறையில், ஒரு உயர்அதிகாரியை, அப்படி முகத்திற்கு நேராக எதிர்த்துப் பேசுவது எப்படி முடியும்? அதுவா யதார்த்தம்?’ என்று அறிவாளிகள் கேள்வி கேட்கலாம்.

ஒரு உயர் அதிகாரி தன் குலதெய்வத்தை அவமானப்படுத்திவிட்டார் என்பதற்காக, கால் ஊனமுற்ற மலைவாழ் இனத்தைச் சேர்ந்த ஒருவர், ஆத்திரம் கொண்டு உயர்அதிகாரியை அடிப்பது போல் காட்சி வைப்பது யதார்த்தமா? அப்படி ஒரு காட்சியை வைக்க முடிந்தபோது, ஆதிக்கஜாதியை எதிர்த்து ஒருவரி வசனம் கூட வைக்க முடியவில்லை என்றால், அது யதார்த்ததிற்காத்தான் தவிர்க்கப்பட்டிருக்கிறதா?

அப்படி எதிர்த்து பேசப்படுகிற வசனம் சென்சார் செய்தாலும் பரவாயில்லை. வைத்துப் பார்ப்போம் என்று  முயற்சிக்ககூட இல்லை. படத்தில்  மலைவாழ் மக்கள் அதிகாரியை பார்த்து பேசுகிற இடங்களில் சென்சாரால் நீக்கப்பட்டு, வெறும் வாயசைப்பான காட்சி ஒரு இடத்தில்கூட  இடம் பெறவில்லை. ஆதிக்க ஜாதி மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது வன்முறை நிகழ்த்துகிற இடைநிலை ஜாதிகளின் தலித் விரோதத்தை, நேரடியான வார்த்தைகளால் அல்லது ஓரே வார்த்தையால் ஒப்புக்கு கண்டிப்பதைக்கூட தந்திரமாக தவிர்த்திருக்கிறது படம். (பிற்படுத்தப்பட்டவர்கள் பெருமளவில் படம் பார்க்க வேண்டாமா?)

அதன்பொருட்டேதான், தாழ்த்தப்பட்ட மக்களை மிகக் கேவலமாக நினைக்கிற, அண்ணல் அம்பேத்கரை பற்றி அவதூறாக எழுதிய,  அண்ணல் அம்பேத்கரை திட்டமிட்டு புறக்கணிக்கிற, பார்ப்பனர்கள் உட்பட்ட ஆதிக்க ஜாதி வெறியர்களும் இப்படத்தைப் பாராட்டுகிறார்கள்.

இடஒதுக்கீடு, சமூகநீதி என்று  (தன்ஜாதிக்கான கோரிக்கைகளை மட்டும் உள்ளடக்கி) ஆதி்க்க ஜாதிகளுக்கு எதிரானவர்களைப்போல், காட்டிக்கொள்ளும் ‘முற்போக்கானவர்களும்’, தன் ஜாதியை சேர்ந்த ஜாதிவெறியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தும் போது, அதை கண்டும் காணாமல், அதைக் கண்டித்து பேசுவதை தவிர்ப்பதற்காகவே ‘சுற்றுப்புற சூழல் மாசு, இயற்கை வேளாண்மை, அந்நிய விதை, கத்திரிக்காய், வெண்டைக்காய், அப்புறம் தமிழன உணர்வு’ என்று திட்டமிட்டு திசைமாற்றி பேசுகிறவர்கள் கூட இந்தப்படத்தின் சமூகநிதி வசனங்களுக்காக சிலிர்த்துப் போகிறார்கள்.

‘மகாகவி காளிதாஸ்’ என்ற திரைப்படத்தில் சிவாஜி, சவுகார்ஜானகியைப் பார்த்து, அப்பாவியாக அய்ந்து விரல்களையும் மடக்கி செய்கையால், ‘குத்திப்புடுவேன்’ என்பார். உடன் இருக்கும் புலவர்கள் அல்லது அறிவாளிகள், ”ஆஹா, என்ன அடக்கம்! என்ன அறிவு! ஐம்புலன்களும் எனக்குள் அடக்கம் என்கிறார் இந்த மகான்” என்று அதற்கு அறிவு சார்ந்த விளக்கம் கொடுப்பார்கள். அதுபோல் நம்முடைய சமூகநீதி எழுத்தாளர்கள், மூலஆசிரியர் நினைக்காததை உரைஆசிரியர் சொல்வதுபோல், இயக்குநர் ஜனநாதன் நினைக்காததை எல்லாம் இவர்கள் புதிது புதிதாக யோசித்து தங்களை சிறந்த ஆய்வாளர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

‘இந்தப் படம், ஆதிக்கஜாதி உணர்வாளன் அப்படி ஜாதிவெறியோடுதான் தாழ்த்தப்பட்ட மக்களை பேசுவான், என்பதை பதிவு செய்கிறது’ என்று அறிவாளிகள் சொல்வது உண்மைதான். ‘அப்படி இழிவாக பேசுகிற ஒரு ஜாதிவெறியனுக்கு எதிராக தாழ்த்தப்பட்டவர்கள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக இருந்து, தங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்வார்கள்’ என்கிற மோசமான கருத்தையும் தன்னையறியாமல் பதிவு செய்கிறது, என்கிற உண்மையையும் அறிவாளிகள் ஒத்துக் கொள்ளவேண்டும்.

சமூகநீதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இவைகளுக்கு ஆதரவாக வருகிற மேலோட்டமான சில வசனங்கள், அந்த அரசியல் பற்றி ஆர்வம் கொண்ட சிலரை மட்டும்தான் ஈர்க்கும். ஆனால், இதுபோல் எந்த அரசியல் நிலைபாடும் இல்லாமல், சினிமா மேல் உள்ள ஆர்வத்தில், சுவாரஸ்யத்திற்காக படம் பார்க்கும் பெருவாரியான மக்களின் மனதில் இந்தப் படம் தோற்றும்விக்கும் ஒட்டு மொத்த உணர்வு, மணிரத்தினத்தின் ‘ரோஜா’ படம் தோற்றுவித்த செயற்கையான ‘தேசபக்தி’ உணர்வுதான் என்பது ஆழ்ந்து பார்த்தால் அல்ல, மேலோட்டமாக பார்த்தாலே தெரியும்.

என்னைப் பொறுத்தவரை இந்தப்படத்தில் சென்சார் போர்டு சிறப்பாக செயல்பட்டதாகவே உணர்கிறேன். இன்னும் சிறப்பாக செயல்பட்டு, மலைவாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாக பேசுகிற வசனங்களை முற்றிலுமாக நீக்கியிருக்கலாம்.

***

தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வந்த ரஷ்ய படத்தை, கொஞ்சமும் பொருத்தமில்லாத இந்திய சூழலுக்கு பொருத்தி எடுத்ததே இந்தப்படத்தின் அடிப்படையான, முதன்மையான தவறு.

‘ஆதிக்க ஜாதிக்கரர்களின் செத்த மாட்டை அப்புறப்படுத்தக்கூடாது, அவர்களின் வீட்டுச் சாவுக்கு, திருவிழா போன்றவைகளுக்கு பறை அடிக்கக் கூடாது’ என்று தாழ்த்தப்பட்ட மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, ஆதிக்க ஜாதிவெறியர்களுக்கு எதிராகப் போராடி ஆதிக்க ஜாதிக்காரர்களால் கொலை செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞனின் போர்குணமிக்க வாழ்க்கையை, கொஞ்சம் மாற்றி, இடஒதுக்கீட்டில் படித்து அதிகாரியான ஒரு இளைஞன், தன் உயிரை பணயம் வைத்து ஆதிக்கஜாதி்க்காரர்களுக்கு ஆதரவாக பங்காளி தகராறில் பாதிக்கப்பட்டு, நின்றுபோன  ஊர்கோயில் திருவிழாவை பல சதிகளை முறியடித்து வெற்றிகரமாக நடத்தி முடிக்கிறார்’ என்று படம் எடுப்பது எவ்வளவு தவறானதோ, அதுபோல்தான் இந்தப் படத்தை பொறுத்தமற்ற இந்தியதேசிய சூழலில் பொறுத்தி படம் எடுத்ததும்.

அதனால்தான் ‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’ என்று இந்தப் படம் பற்றிய முந்தைய விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

‘பேராண்மை’ பற்றிய விமர்சனம் எழுதுபவர்கள், A zori zdes tikhie என்கிற ரஷ்ய படத்தைப் பார்த்திருந்தால் நல்லது. அந்தப் படத்தை குறிப்பிட்டு எழுதுபவர்கள் தலைவர் ஸ்டாலினைப் பற்றி கண்டிப்பாக குறிப்பிட்டு எழுதவேண்டும். அப்படி அவர் குறித்து எழுத மறுப்பவர்கள், ஸ்டாலின் எதிர்ப்பு மனோபாவம் கொண்ட பின்நவீனத்துவவாதிகளாகவோ, கம்யூனிச விரோதிகளாகவோத்தான் இருப்பார்கள்.

நாஜிகளை எதிர்த்து, தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அந்த வீரம் நிறைந்த போர் இல்லை என்றால், இன்று உலகில் ஜனநாயகமே இருந்திருக்காது. ‘A zori zdes tikhie’ என்கிற ரஷ்ய படமும் உருவாகி இருக்காது. அப்புறம் எங்கிருந்து ‘பேராண்மை’? அப்புறம் எப்படி அதுக்கு விமர்சனம்?

முந்தைய விமர்சனம்:

‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

தனம்  திரைப்பட விமர்சனம்:

கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்

29 thoughts on “‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு

  1. அன்பினிய மதிமாறன் வணக்கம்.
    பேராண்மை க்கான இந்தக்கருத்துக்கள் இன்னும் புதிதாக இருக்கிறது.

  2. போராண்மை திரைப்பட விமர்சனத்தை விட இந்த பதிவு சிறப்பாக இருக்கிற‌து தோழர் மதிமாறன். இது போன்ற படங்களை எடுப்பதை விட தில்லானா மோகணாம்பாள், கரகாட்டக்காரன் போன்ற படங்களை எடுப்பது தான் தமிழ் சினிமாவுக்கு செய்யும் நண்மை. இந்த படம் எதை சாதித்தது, ஏன் இந்த படத்தை விமர்சனம் செய்யக்கூடாது என்கிறார்கள் என்கிற கேள்விக்கு இந்த பதிவு பல இடங்களில் பதிலளித்துள்ளது.

    ///////////இடஒதுக்கீடு, சமூகநீதி என்று (தன்ஜாதிக்கான கோரிக்கைகளை மட்டும் உள்ளடக்கி) ஆதி்க்க ஜாதிகளுக்கு எதிரானவர்களைப்போல், காட்டிக்கொள்ளும் ‘முற்போக்கானவர்களும்’, தன் ஜாதியை சேர்ந்த ஜாதிவெறியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தும் போது, அதை கண்டும் காணாமல், அதைக் கண்டித்து பேசுவதை தவிர்ப்பதற்காகவே ‘சுற்றுப்புற சூழல் மாசு, அந்நிய விதை, கத்திரிக்காய், வெண்டைக்காய், அப்புறம் தமிழன உணர்வு’ என்று திட்டமிட்டு திசைமாற்றி பேசுகிறவர்கள் கூட இந்தப்படத்தின் சமூகநிதி வசனங்களுக்காக சிலிர்த்துப் போகிறார்கள்.///////////

    இந்த படத்தை ஆதரிப்பவர்களில் ஒரு பிரிவினரை மேற்குறிப்பிட்ட பாரா சுட்டிக்காட்டியுள்ளது, இந்த‌ ‘முற்போக்காளர்கள்’ தான் படத்தின் சில காட்சிகளுக்காக சிலிர்த்து போகிறார்கள்.

    /////////////சமூகநீதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இவைகளுக்கு ஆதரவாக வருகிற மேலோட்டமான சில வசனங்கள், அந்த அரசியல் பற்றி ஆர்வம் கொண்ட சிலரை மட்டும்தான் ஈர்க்கும். ஆனால், இதுபோல் எந்த அரசியல் நிலைபாடும் இல்லாமல், சினிமா மேல் உள்ள ஆர்வத்தில், சுவாரஸ்யத்திற்காக படம் பார்க்கும் பெருவாரியான மக்களின் மனதில் இந்தப்சிலிர்த்துப் போகிறார்கள்படம் தோற்றும்விக்கும் ஒட்டு மொத்த உணர்வு, மணிரத்தினத்தின் ‘ரோஜா’ படம் தோற்றுவித்த செயற்கையான ‘தேசபக்தி’ உணர்வுதான் ஆழ்ந்து பார்த்தால் அல்ல, மேலோட்டமாக பார்த்தாலே தெரியும்./////////

    மொத்த படமும் ஏற்படுத்தும் இறுதி விளைவு இதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை அழகாக சொல்லி விட்டீர்கள்.ஆனாலும் இவர்கள் இதையெல்லாம் கேட்கவா போகிறார்கள்..

    நீங்கள் எதை தான் விட்டு வைத்திருகிறீர்கள் எல்லாவற்றையும் விமர்சனம் செய்வதே உங்களுக்கு வேலை என்று பழையபடியே சலித்துக்கொள்ளத்தான் போகிறார்கள். மற்றபடி இந்த பதிவு படம் பற்றிய உங்கள் நிலையை மேலும் தெளிவு படுத்திய பதிவாக இருந்தது.

    நன்றி

  3. ///////////சமூகநீதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இவைகளுக்கு ஆதரவாக வருகிற மேலோட்டமான சில வசனங்கள், அந்த அரசியல் பற்றி ஆர்வம் கொண்ட சிலரை மட்டும்தான் ஈர்க்கும். ஆனால், இதுபோல் எந்த அரசியல் நிலைபாடும் இல்லாமல், சினிமா மேல் உள்ள ஆர்வத்தில், சுவாரஸ்யத்திற்காக படம் பார்க்கும் பெருவாரியான மக்களின் மனதில் இந்தப்சிலிர்த்துப் போகிறார்கள்படம் தோற்றும்விக்கும் ஒட்டு மொத்த உணர்வு, மணிரத்தினத்தின் ‘ரோஜா’ படம் தோற்றுவித்த செயற்கையான ‘தேசபக்தி’ உணர்வுதான் ஆழ்ந்து பார்த்தால் அல்ல, மேலோட்டமாக பார்த்தாலே தெரியும்.////////

    நூத்துக்கு நூறு உண்மைங்க..

    ஜனநாதன் நல்ல இயக்குனர், திருடியதை ஒத்துக்கொண்டிருக்கலாம். இப்ப வரும் திரைப்படங்களில் (ஈழ இனப்படுகொலைக்குப் பிறகு) திட்டமிட்டே இந்திய தேச உணர்வு கொஞ்சம் அதிகமாக திணிக்க படுகிறது தோழரே..

    மணிரத்தினம், சங்கர், தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன் வகையரா படம்..

  4. //‘இந்தப் படம், ஆதிக்கஜாதி உணர்வாளன் அப்படி ஜாதிவெறியோடுதான் தாழ்த்தப்பட்ட மக்களை பேசுவான், என்பதை பதிவு செய்கிறது’ என்று அறிவாளிகள் சொல்வது உண்மைதான். ‘அப்படி இழிவாக பேசுகிற ஒரு ஜாதிவெறினுக்கு எதிராக தாழ்த்தப்பட்டவர்கள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக இருந்து, தங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்வார்கள்’ என்கிற மோசமான கருத்தையும் தன்னையறியாமல் பதிவு செய்கிறது, என்கிற உண்மையையும் அறிவாளிகள் ஒத்துக் கொள்ளவேண்டும்.
    //
    மிகவும் உண்மை

  5. பெரும்பான்மையான தமிழ் மசாலா படங்களுக்கு இடையில், சற்றே வித்தியாசமாக இயக்குநர் ஜனநாதன் தனது மூன்றாவது படமான பேராண்மையையும் படைத்திருக்கிறாரே.. அதை பாராட்டக்கூட வேண்டாம், விமர்சனம் என்ற பெயரில் அவர் ஆதிக்க சாதிகளுக்குத் தான் துணை போகிறார் என்பது வீண் பழி சுமத்துவது போல் தெரிகிறது.. இந்தப் படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருந்தாலும், மொத்தத்தில் ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது.

  6. “சரஸ்வதி சபதம்’ என்ற திரைப்படத்தில் சிவாஜி, சவுகார்ஜானகியைப் பார்த்து, அப்பாவியாக அய்ந்து விரல்களையும் மடக்கி செய்கையால், ‘குத்திப்புடுவேன்’ என்பார். உடன் இருக்கும் புலவர்கள் அல்லது அறிவாளிகள், ”ஆஹா, என்ன அடக்கம்! என்ன அறிவு! ஐம்புலன்களும் எனக்குள் அடக்கம் என்கிறார் இந்த மகான்“ என்று அதற்கு அறிவு சார்ந்த விளக்கம் கொடுப்பார்கள். அதுபோல் நம்முடைய சமூகநீதி எழுத்தாளர்கள், மூல ஆசிரியர் நினைக்காததை உரை ஆசிரியர் சொல்வதுபோல், இயக்குநர் ஜனநாதன் நினைக்காததை எல்லாம் இவர்கள் புதிது புதிதாக யோசித்து தங்களை சிறந்த ஆய்வாளர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள்”
    மதிமாறன் அவர்களுக்குத்தான் அதில் முதலிடம்,,,

  7. “The Dawn here are Quite” என்னும் அந்த ரஷ்ய படம் அருமை. 50களிலேயே யதார்த்தமாக எடுக்கப்பட்ட படம். யதார்த்தம் என்றால் நம் தமிழ் சினிமாவில் 5 பெண்களுக்கு ஒரு குண்டு கூட படாமல் சண்டை செய்வது போலல்ல. அப்படத்தில் 5 பெண்களும் இறந்து விடுவார்கள்.

    கதாநாயகன் வசனத்தில் தோழர் ஸ்டாலின் மீது வைத்திருந்த அன்பை காணலாம்.

    ’பேராண்மை’ – இந்தியாவின் இல்லாத இறையாண்மையை போற்றும் படம்.

    இப்படத்திற்கு நல்ல ஒரு விமர்சனம்.

    வாழ்த்துகள்..

  8. ungal karuthukku yerpa padam yedukka vendumaanal,oru produserum varamaataan.appadiye yeduthalum sensor vidaathu.vittalum padam paarkka indraiya ilaiya samoogam avan yendha jaathiyaaga irundalum varamaattan.tholar, konjam yethaartha ulagukku vaarungal.

  9. மணிமகன், நல்லா காமெடி பண்ணிருக்கீங்க. வணிக சினிமா எடுப்பதுதான் நோக்கம் என்றால் ஜனநாதனும் எடுத்துவிட்டுப் போகட்டும். பிறகு எதற்கு இந்த முற்போக்கு முகமூடி எல்லாம். நீங்கள் சொல்லுகிற அத்தனைக் கூறுகளுக்ககவும் சமரசம் செய்து கொண்டே ஆகவேண்டும் என்றால் தில்லானா மோகனாம்பாள் மாதிரிதான் படம் எடுக்க வேண்டும். “எதார்த்த” உலகிற்கு வரவேண்டியது தோழரல்ல, நீங்களே…

  10. இலங்கையில் மனித உரிமை மீறல் நடப்பதாக கூறி ராஜபக்சே கேட்ட ரூ.5,000 கோடி கடனை வழங்க உலக வங்கி மறுத்து விட்டது. ஆனால் இந்திய அரசு ரூ.5,000 கோடி கடன் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.இந்தியா தமிழர்களுக்கு எதிரானதா இல்லையா ? இந்தியாவின் இந்த நிலை தொடர்ந்தால் தமிழர்கள் இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்.

  11. அப்படி இழிவாக பேசுகிற ஒரு ஜாதிவெறியனுக்கு எதிராக தாழ்த்தப்பட்டவர்கள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக இருந்து, தங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்வார்கள்’ என்கிற மோசமான கருத்தையும் தன்னையறியாமல் பதிவு செய்கிறது, என்கிற உண்மையையும் அறிவாளிகள் ஒத்துக் கொள்ளவேண்டும்./////

    unmai Unmai…

    nalla karuthu…

    enna eppo paartharum ரஷ்ய ரஷ்ய nu soluringa…..?

    avarukku padam yedukka neinaitha kadai ai yeduthu irukaru……

    avolo dhan…

    Padam nalla iruku nu Makkal soluranga….

    and

    Ithu Tamil Padam paaa

  12. dei unakku vela vetti ethum irruka illaya? summa mathavan pandratha pathi korai sollara….poi pullinkallla padika vai, 4 perruku nallathu sei, free ya blog irruku, padikarathukku enna mathri allunka irrukanga nuu summa arach mava ee thirumba thirumba ari katha

    unnalla eppo enna nadanthudumnuu ninaikiraa, ulagam romba perusu, oru chinna vattathukulla illama veliya va,

    accept everyone ,you cant change history , but you can make

    my lost comment ,

    fuck your self

  13. தோழர் மதிமாறன் அவர்களே நீங்கள் விமர்சனம் பண்ணவேண்டும் என்று பன்னுகீறேர்களா அல்ல உங்களக்கு தனிப்பட்ட முறையில் ஜனாவை பிடிக்கவில்லை என்று விமர்சனம் பண்ணுகிறீர்களா. ஒன்றுமே புரியவில்லை. எல்லாமே ரஷ்ய திரைப்படம் போல அப்படியே எடுக்க இயலாது இங்குள்ள தமிழ் சினிமா சூழலில். ஒரு கருத்தை சொல்ல ஆயிரத்தெட்டு மசால் தேவை இந்த மானம்கெட்ட தமிழனுக்கு. உங்களுக்கு புரியாதது அல்ல. இன்று உள்ள தமிழ் சூழலில் இது போன்ற படங்கள் வருவதே அரிது. இதில் உங்களை போன்றவர்களே விமர்சித்து இந்தனை குலைப்பிவிடுவீரகள். ( பெரியார் தலித்துகளுக்கு எதிரானவர் என்று சிலர் கூறுவது போல)

  14. தோழர் மதிமாறன் அவர்களே நீங்கள் விமர்சனம் பண்ணவேண்டும் என்று பன்னுகீறேர்களா அல்ல உங்களக்கு தனிப்பட்ட முறையில் ஜனாவை பிடிக்கவில்லை என்று விமர்சனம் பண்ணுகிறீர்களா. ஒன்றுமே புரியவில்லை. எல்லாமே ரஷ்ய திரைப்படம் போல அப்படியே எடுக்க இயலாது இங்குள்ள தமிழ் சினிமா சூழலில். ஒரு கருத்தை சொல்ல ஆயிரத்தெட்டு மசால் தேவை இந்த மானம்கெட்ட தமிழனுக்கு. உங்களுக்கு புரியாதது அல்ல. இன்று உள்ள தமிழ் சூழலில் இது போன்ற படங்கள் வருவதே அரிது. இதில் உங்களை போன்றவர்களே விமர்சித்து இந்தனை குலைப்பிவிடுவீரகள்//

    மசாலா தடவுகிறேன் என்று சுண்ணாம்பை தடவினால் சாப்பிடுவீர்களா? என்ன எழுதியிருக்கிறார் என்னும் சாராம்சத்தை புரிந்து கொண்டு எழுதுங்கள்.

    இல்லையேல் இப்படி தான் நீங்களும் இப்பட்டித்தான் குலைப்பி குழப்பி எழுதுவீர்கள்.

  15. நல்லாயிருக்குங்க, படம் பார்த்துட்டு அப்புறம் வர்றேன்.

  16. தோழருக்கு எமது நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள்

  17. சர்வதேச வியாதிகளே,

    பஞ்சை பராரி விவசாயியிடம் இருக்கும் துண்டு துக்கடா நிலத்தையும்,

    பொது உடமை என்ற பெயரில் பிடுங்கிக் கொண்டு,

    ஏழை விவசாயியின் குடும்பத்தை- அராசங்கம் என்ற பெயரில் நடத்தும் அராஜகத்துக்கு- கொத்தடிமை ஆக்கும் முறையை,

    வாழ்த்தவில்லை , வைகிறேன்!

  18. யோவ் திருச்சிக்காரரே சும்மா உளராதீர். பஞ்சை பராரி விவசாயியிடம் இருக்கும் துண்டு துக்கடா நிலத்தையும், பறிப்பது ஏகாதிபத்தியம். அதை மீட்டெடுப்பது தான் நக்ஸல்பாரிகளின் பணி. வரலாறை ஒரு முறை படியும் அய்யா.

  19. யோகேச‌ர்,

    வரலாறு என்ன, அதான் கண் முன்னே பார்க்கிறோமே.

    மேற்கு வங்கத்திலே நடந்தது என்ன?

    சிங்க்கூரிலே செய்தது என்ன?

    இந்த பொதுவுடமை வாதிகளையோ, அல்லது முதலாளித்துவவாதிகளையோ அல்லது சோசலிசவாதிகளையோ நம்பி இல்லை சமுதாயம்.

    8000 வருடங்களுக்கு மேலாக வாழும் சமுதாயம் இது. பல குறைகள் உண்டு. திருத்திக் கொள்ளலாம். சரிப் படுத்திக் கொள்ளலாம்.

    பெரிய‌ ப‌ண்ணையார்க‌ளிட‌ம் இருந்து ச‌ட்ட‌ம் இய‌ற்றி, இழ‌ப்புத் தொகை கொடுத்து நில‌ம் பெற்று ஏழைக‌ளுக்கு கொடுத்தால் பாராட்ட‌லாம்.

    ஆனால் தலை முறை தலை முறையாக மக்களின் வாழ்வாதாரமாக இருந்த துண்டு நிலத்தையும் பறித்துக் கொண்டு, அவர்களை அம்போ என்று விடுகிறீர்கள். அதுவும் முதாலாளிக்கு தரகு வேலை.

    கம்பெனி காரனே நேராக வந்து வாங்கியிருந்தால் அதிக பணமாவது கிடைத்து இருக்கும். அடி மாட்டு ரேட்டுக்கு தரகு வேலை.

    இதை சொன்னால் ந‌க்ச‌ல்பாரியாம். துப்ப‌க்கியைத் தூக்கிக் கொண்டு வ‌ந்து விடுவார்க‌ள். வாழ விட‌ மாட்டார்க‌ள். சாக‌ ப‌ல‌ வ‌ழிக‌ள் தருவார்கள்.

    ந‌க்ச‌ல்பாரிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இருக்கிர‌தா?

    முத‌லில் ம‌க்க‌ளிட‌ம் இருந்து ப‌டிப்பினை பெறுங்க‌ள்.

    மக்க‌ளிட‌ம் உங்க‌ள் கொள்கைக‌ளைத் திணிக்க‌ முய‌லாதீர்க‌ள்.

    ம‌க்க‌ளிட‌ம் இருந்து புதிய‌ கொள்கைக‌ளை உருவாக்கிக் கொள்ளுங்க‌ள்.

  20. தாழ்த்தப் பட்ட இன மக்கள் ஆதிக்க சாதியை இழிவு படுத்திப் பேசுவது போல வசனம் வைத்தால் கட்டாயம் சென்சார் அதை நீக்கி விடும். ஏனென்றால் அப்படிப்பட்ட காட்சி ஆதிக்க சாதியினர் பால் பரிதாபத்தையும், தாழ்த்தப் பட்டவர்கள் பால் கோபத்தையும் உண்டாக்கும்.

    திரைப்படங்கள் எப்போதுமே தாழ்த்தப் பட்டவர்களை பரிதாபத்துக்குரியவர்களாகவே காட்டும். அதைத்தான் அரசாங்கம், சென்சார் போர்ட் எல்லாமே ஆதரிக்கும்.

    http://kgjawarlal.wordpress.com

  21. உங்களின் பார்வை மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு தெளிவாக உள்ளது. அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்திலும் உள்ளது சிறப்பிக்கத்தகுந்தது.

  22. இந்த படம் பார்வைக்கு மிகவும் நன்ராக உள்ளது.மற்றபடி ஜாதி
    இணம் என்று பார்த்தால் மேல் ஜா கீழ் ஜாதி என்று என்னும்போது
    கீழ்லிருந்துதான் அனைத்தும் உறியப்பட்டு மேலே செல்கிறது.
    அடுத்தவன் உழைப்பை,என்,நாந்தான் செய்தேன் என்று கூறும் போது அந்த அதிகாரி , மேல் ஜா கேவலமாணவர்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது என்று எண்ணிப் பார்க்க மறவகுடாது. நன்றி.

  23. எத்தனை முறை படித்தழும் மூழ்கி விடுகிறேன் உங்கள் வார்த்தைகளில் செய்யும் வேலையே மறந்து!

  24. நீங்கள் குறிப்பிட்ட The Battleship Potemkin, October: Ten Days That Shook the World, A zori zdes tikhie போன்ற படங்கள் கிடைக்கும் இடத்தை குறிப்பிடவும்…

  25. i wont accept the Nationalism spoken by this film. On the other hand, we have to accept the realities in the groundlevel. This film tries to describe that. Did you ppl ever heard such dialogues against ST ppl in the past? think positively. Jananathan should try best. But this effort is better.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading