அய்ரோப்பிய வானொலியில்…

mutram

நமது ‘ரி-ஆர்-ரி’ யில் மற்றுமொரு புத்தம் புதிய நிகழ்ச்சி ‘முற்றம்’.

பிரான்சில் இருந்து இயங்குகிற – ஜெர்மன், இத்தாலி, சுவிஸ், டென்மார்க், சுவீடன், நார்வே இன்னும் இதுபோன்ற ஐரோப்பிய நாடுகள் முழுக்க ஒலிக்கிற TRT தமிழ்ஒலி வானொலியில் ‘முற்றம்’ என்கிற பெயரில் புதிய நிகழ்ச்சி.

இந் நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு பெரியாரியல் பார்வையில் தொலைபேசிவழியாக பதில்அளிக்கிறேன்.

இந்நிகழ்ச்சி ஒரு நேரடி ஒலிபரப்பு.

ஒலிபரப்பாகும் நாள்:
30.12.2008 செவ்வாய்

நேரம்:
இரவு 10 மணி (அய்ரோப்பிய நேரம்)

இரவு 2.30 மணி (இந்திய நேரம்)

இது 2 மணிநேர நிகழ்ச்சி.

அய்ரோப்பிய நாடுகளில் இருக்கும் தோழர்கள், நேரமிருந்தால் உரையாடலில் கலந்துகொள்ளுங்கள்.

நன்றி.

கீழே உள்ள சுட்டி நிகழ்சிச்சியைக் குறித்து தமிழ்ஒலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒலிச்சுட்டி. அழுத்தினால் நீங்களும் கேட்கலாம்.

20 Responses to அய்ரோப்பிய வானொலியில்…

 1. நிலவன் சொல்கிறார்:

  அண்ணேன்..

  கலக்குறீங்க.. பெரியாரியலை உலகமெலும் பரவும் வகை செய்யும் உங்கள் பணிக்கு வாழ்த்தும், வணக்கமும்.

  வாழ்க தமிழுடன்,
  நிலவன்

 2. தமிழ் ஓவியா சொல்கிறார்:

  தங்களின் பெரியாரியல் பரப்பும் பணி கண்டு பெருமிதம் அடைகிறேன். மகிழ்ச்சி.

 3. நல்ல முயற்சி, பெரியாரை மற்றும் பெரியாரியல் பற்றி அதிகம் தெரிய வாய்பில்லாமல் போன புதியவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

 4. sridhark2k சொல்கிறார்:

  பெரியார் புகழ் உலகம் முழுதும் பரவ வகை செய்யும் உங்கள் பணிக்கும் TRT வானொலிக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும்.

 5. அர டிக்கெட்டு ! சொல்கிறார்:

  நன்பரே தயவு செய்து பெரியாரியல் என்றால் என்ன என்பதை சுருக்கமாக இப்பின்னூட்டத்தில் எழுதுவீர்களா…???

 6. princenrsama சொல்கிறார்:

  அறிவுக்கு வேலை கொடு!
  பகுத்தறிவுக்கு வேலை கொடு!

 7. ஆறுமுகம் சொல்கிறார்:

  மகிழ்ச்சி.

 8. Ramanan சொல்கிறார்:

  இந்த நிகழ்வில் பங்கேற்கும் அண்ணன் மதிமாறன் அவர்களின் சேவைக்கு (கடமை) நன்றி..,நிகழ்வை ஏற்பாடு செய்து இருக்கும் வானொலி நிலையத்தாருக்கு நன்றி….

 9. Pingback: டாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும் « வே.மதிமாறன்

 10. சசி சொல்கிறார்:

  பெரியார் புகழ் உலகம் முழுதும் பரவ வகை செய்யும் உங்கள் பணிக்கும் TRT வானொலிக்கும் வாழ்த்துக்கள்

 11. Nithil சொல்கிறார்:

  good luck

 12. ந.செந்தில் சொல்கிறார்:

  போற்றுதலுக்குரிய இப்பணியில் ஈடுபட்டிருக்கும்
  தங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.தொடரட்டும் இச்சிறப்பு பணி.
  பெரியாரியலை அனைத்து தமிழர்க்கும் தெரியப்படுத்துதல் என்பது மிகச்சிறந்த பணி.

 13. Charles சொல்கிறார்:

  பெரியார் புகழ் உலகம் முழுதும் பரவ வகை செய்யும் உங்கள் பணிக்கும் TRT வானொலிக்கும் வாழ்த்துக்கள்

 14. கவிஓவியன் சொல்கிறார்:

  தோழர் வே.மதிமாறன் அவர்கள் தொகுத்து வழங்கும் “முற்றம்” நிகழ்ச்சியின் நேரடி ஒலிபரப்பினை உலகம் முழுவதும் உள்ள நண்பர்கள் இணையத்தளம் ஊடாக கேட்க்கலாம்.
  இணையதள முகவரி: http://www.tamilolli.com

 15. Thamizhan சொல்கிறார்:

  இன்றைய சூழலில் தாழ்த்தப்பட்டோர்,பிற்படுத்தப் பட்டோர் இவர்களிடையே நிகழும் ஒற்றுமையில்லாததுதான் பெரியாரின்
  வெற்றிக்குக் குறுக்கே நிற்பதாகக் கருதலாமா?
  பெரியாரும்,பாபா சாகேப் அம்பேத்கரும் ஒரு நாண்யத்தின் இரண்டு
  பக்கங்கள் என்பதை நம் மக்களுக்குப் புரியவைக்க என்ன செய்ய வேண்டும்?

 16. siva சொல்கிறார்:

  தோழர் வே.மதிமாறன் அவர்கள் தொகுத்து வழங்கும் “முற்றம்” நிகழ்ச்சியின் நேரடி ஒலிபரப்பினை கேட்டேன் மிக மிக அருமை தொகுப்பு மிக மிக அருமை தொடுரங்கள்

 17. barani சொல்கிறார்:

  தலைவர் திருமாவளவன் அவர்களே தாங்கள் உண்ணாவிரதம் இருந்து உங்களை வருத்தி கொள்வதால் இந்த ஈன இந்திய அரசும், இலங்கை அரசும் திருந்த போவதில்லை, மாறாக மக்களாகிய நாம் வரயிருக்கிற சுதந்திர தினத்தையும், குடியரசு தினத்தையும் புறக்கணிப்போம், தமிழ் மாநிலமாகிய நாம் தனி நாடாக உருவாக வேண்டும் நமக்கு என்று தனியாக முப்படை படையை அமைக்க வேண்டும் ஏன் என்றால் நாம் இவ்வளவு எடுத்து சொல்லியும் அவர்கள் உணரவில்லை உணரமறுக்கிறார்கள் என்பதே உண்மை
  இப்படியே போகுமானால் நாளை நமக்கு எதாவது பிரச்சனை வருமாயின் இந்த ஈன இந்திய அரசு நம்மவர்களை காப்பாற்ற போவதில்லை. வந்தே மாதரம், ஜனகன மனகதி இப்படி புரியாத பாடலை பாடி நம்மளை நாமலே ஏமாற்றியது போதும்
  இனி ஒரு விதி செய்வோம் அதை தமிழில் பறை சாற்றுவோம்

 18. வாய்ப்பாடி குமார் சொல்கிறார்:

  “பதிவர்களே ஈழத்து பிரச்சினையில் குளிர்காயாதீர்கள்”

  மேற்படி கருத்து சொல்பவர்களுக்கு,

  பதிவின் மூலமாகவாவது தமிழனின் ஆதங்கங்களை வெளீப்படுத்த‌
  முடிவதால் பதிவர்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை.

  வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம்.,

  தொலைக்காட்சி ஒன்றை உலகம் முழுவதும் கிடைக்கும் படியாக சேட்டிலைட் மூலமாக DTH மூலமாக இந்தியா கவரேஜ் உடன் ஒரு நாளைக்கு 2 மணி நேரமாவது கிடைக்கும் படி செய்தால் புலம் பெயர் தமிழர்கள், தமிழர்கள்
  மனம் மாற வழி கிடைக்கும்.

 19. தமிழக மீனவர்கள் சொல்கிறார்:

  நல்ல பணி செய்கிறீர் தோழரே. பணிகள் தொடரட்டும்.

 20. sirippousingaram சொல்கிறார்:

  ஐ எழுத்த அய் ன்னு எழுதீறீர…நீரு ஹிந்துக்கள்கிட்ட் மட்டும் பகுத்தறிவு பேசீட்டு மத்த மதத்துக்காரர்களைக் கண்டா பொத்திகிட்டு போற வீரமணி குரூப்பா….??இல்ல கிருச்தவன்கிட்டேயும்,முஸ்லீம்கிட்டேயும் ஹிந்துக்களை காட்டிகொடுத்து காசு பாக்குற திருவாரூரு தங்கராசு,திருமா குரூப்பா யாருப்பா நீ..?????யாரு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s