Monthly Archives: ஜூலை 2016

நமஸ்தே மதுரை

‘அண்ணே மதுரையில் போக்ஸ் வேகன் கார் கம்பெனியின் அலுவலக முகப்பில்என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த அலுவலகம் சென்று கண்டிக்க வேண்டும்’ என்று தம்பி அமர்நாத் (Amarnath Pitchaimani) சொன்னார். மதுரையிலிருந்து பொதுக்கூட்டத்திற்காக அத்திப்பட்டி செல்லும் வழியிலிருந்த அந்த நிறுவனத்திற்கு 23 ஆம் தேதி மாலை திராவிட இயக்கத் தமிழர் பேரவை, திராவிடர் கழகத் தோழர்களுடன் சென்றோம். … Continue reading

Posted in பதிவுகள் | 3 பின்னூட்டங்கள்

கபாலி எதிர்ப்பு; நன்றி பேராசிரியர் சுபவீ – இயக்குநர் ரஞ்சித்

கபாலி; திரைப்படத்தைத் தாண்டியும் அதைக் கடுமையாக எதிர்ப்பதற்கு முக்கியக் காரணம் ‘காந்தி-அம்பேத்கர் உடை ஒப்பீடு வசனம்’தான். ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைச்சோம்’ என்று நுற்றாண்டு அடிமைப் புத்தியேடு பணக்கார கவுண்டராக நடித்த ரஜினிகாந்தைப் பார்த்து மக்கள் பாடுவதுபோல் வந்தபோது, வராத கோபம், ‘காந்தி சட்டைய கழட்டுனதுக்கும் அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் உள்ளாற இருக்கிற … Continue reading

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

தருண் விஜய் வள்ளுவரை ஆதரித்ததே அவருக்கு செய்த அவமானம்தான்

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 ‘வள்ளுவருக்கே தமிழ் உணர்வு கிடையாது’

Posted in பதிவுகள் | 11 பின்னூட்டங்கள்

கபாலி: கோட் – காந்தி – டாக்டர் அம்பேத்கர் – பெரியார்

கபாலி: காந்தி சட்டைய கழட்டுனதுக்கும் அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் உள்ளாற இருக்கிற அரசியல் உங்களுக்கு புரியாது. (பெரியார் உடை?) * அண்ணல் அம்பேத்ரின் உடை ஆதிக்கத்திற்கு எதிரான குறியீடு, காந்தியின் உடை அடிமைத்தனத்தை நிலை நிறுத்துவதற்கான குறியீடு.-2011 அக்டோபர். * டாக்டர் அம்பேத்கருடைய உடல் மொழியும் எப்போதும் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதாக இருக்கும். காந்தி, நேரு போன்ற … Continue reading

Posted in கட்டுரைகள் | 15 பின்னூட்டங்கள்

‘நெருப்புடா’

பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறுகிற குஜராத்தில் உனா என்ற இடத்தில் செத்துப்போன பசுமாட்டின் தோலை உரித்ததற்காகத் தலித் மக்கள், இந்துமத ஜாதிவெறி கும்பலால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகினர். அந்தக் கொடூரத்தைக் கண்டித்து, நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி குஜராத்தை நிலைகுலைய வைத்தனர் தலித் இளைஞர்கள். பட்டேல் சமுகத்தினர் நடத்திய அநீதியான போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த … Continue reading

Posted in கட்டுரைகள் | 9 பின்னூட்டங்கள்

மலையாள தேவரும் தமிழ் நாயரும்

சுவாதி படுகொலையை ஜாதியோடு தொடர்புபடுத்துவது மோசமானது. மற்ற ஜாதிக்காரர்கள் மீது நடத்துகிற தனிமனித தாக்குதல்களையும் தலித் மக்கள் மீது நடத்துகிற ஜாதிய தாக்குதல்களையும் தொடர்புபடுத்திப் பார்ப்பது தவறு. அது தலித் விரோத ஜாதிய கண்ணோட்டம் தான். சுவாதி மீது நடத்தப்பட்டிருக்கிற கொடூரம், பெண்களுக்கு எதிரான வன்முறை. பெண் ஆணுக்கான நுகர்வுப் பொருளாகப் பார்க்கப்படுகிற புத்தியின் கொடூர … Continue reading

Posted in பதிவுகள் | 12 பின்னூட்டங்கள்

‘மர்மம்’ விசாரணையில்தான் இருக்கிறது; சுவாதியின் படுகொலையில் அல்ல

கொலையாளி யார் என்று கண்டுபிடிப்பதில் எந்தச் சிக்கலும் இருப்பதாய் தெரியவில்லை. மிக எளிதாகக் குற்றவாளியை அடையாளம் காணக்கூடிய வழக்கு. யாருக்கும் தெரியாமல், காட்டில் வைத்து நடந்ததல்ல சுவாதியின் படுகொலை. பகல் நேரத்தில் அதிகம் மக்கள் கூடுகிற பொது இடத்தில் நடந்தது. கொலைக்காரன் எந்த முகமூடியும் அணியாமல் பதட்டமில்லாமல் கொலை செய்துவிட்டு, அதன் பிறகு‘ம்’ அவன் முகத்தை … Continue reading

Posted in கட்டுரைகள் | 10 பின்னூட்டங்கள்