Monthly Archives: பிப்ரவரி 2016

திமுக விற்கு இழப்பு; குமரி முத்து மரணம்

சிறந்த நடிகர், திராவிட இயக்க வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு பேசக் கூடிய சிறந்த பேச்சாளர் குமரிமுத்து மரணம். அவருடைய மரணம் அவர் குடும்பத்தாரைவிடவும் கலைஞரின் குடும்பத்தாருக்குத்தான் பெரிய இழப்பு. தேர்தல் நேரத்தில் அவருடைய இழப்பு, அவர்களால் ஈடு செய்து கொள்ள முடியாது. கிராமங்கள், நகரங்களின் இடுக்குகளில் எல்லாம் சென்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், திமுகவிற்காகத் தீவிர பிரச்சாரம் … Continue reading

Posted in பதிவுகள் | 2 பின்னூட்டங்கள்

இளையராஜா ஆயிரம்; ரசிகர்களுக்கு அபராதமும் தண்டனையும்

25 ஆயிரம், 10 ஆயிரம், 5 ஆயிரம், 3 ஆயிரம், ஆயிரம், 5 நூறு ரூபாய்களில் டிக்கெட். யாருக்கோ நிதி உதவிக்காக இவ்வளவு கட்டணம் போல. அந்த ‘யாருக்கோ’தான் யாருன்னு தெரியல. பாவம் ரசிகர்கள். தீவிர ரசிகர்களாக இருந்தால் இப்படிதான் அபராதம் கட்டவேண்டும் போலும். கட்டணங்களைப் பொருட்படுத்தாமல் திரண்டிருந்தார்கள் திடல் முழுக்க. இவ்வளவு விலை வைத்த … Continue reading

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

பெரியாரின் பெண்ணியம்

‘பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசாம்..’ – -பட்டினத்தார். அவரே தாயை பற்றி ‘ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்று..’ ‘அடிடா அவள, உதடா அவள, வெட்றா அவள..’ – தனுஷ். அவரே அம்மாவைப் பற்றி ‘அம்மா அம்மா நீ எங்க அம்மா ஒன்னவிட்டா எனக்காரு அம்மா’ – . நூற்றாண்டுகள் ஆனாலும் பெண்களைப் பற்றிய ஆண்களின் இரட்டை … Continue reading

Posted in கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

ஆமோகமான ஆப்பு; யாருக்கும் வெட்கம் இல்லை

‘மலடிகள் வாழத் தகுதியற்றவர்கள்’ – பிரேமலதா விஜயகாந்த் ‘உனக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தால்தானே ஆண்களை மதிக்கத் தெரியும்’ எனறு தமிழக முதல்வரை பார்த்து, பிரேமலதா பேசிய வன்முறையான பேச்சு, ‘மலடி’ என்று மருமகளைத் துன்புறுத்துகிற மாமியாரின் பேச்சை விட இழிவானது. அதுகூட அறியாமையிலும் தன் மகன் மற்றும் குடும்ப வாரிசு ஏக்கத்திலும் வருகிற சொல். ஆனால் பிரேமலதாவின் … Continue reading

Posted in கட்டுரைகள் | 9 பின்னூட்டங்கள்

விசாரணை

நேற்று இரவு காட்சி பார்த்தேன்.(12 February) விசாரணை. தீவிரமாக விமர்சிக்கப்பட வேண்டிய அளவிற்கு ஒன்றுமில்லை. தூக்கி வைத்துக் கொண்டாடுமளவிற்கும் இல்லை. ஆனால், அவரின் இரண்டு படங்களில் இருந்த யதார்த்தம், செய்நேர்த்தி இதில் இல்லை. பாத்திரப் படைப்பில், நடிப்பில் செயற்கைத் தனம் இருக்கிறது. குறிப்பாக நான்கு இளைஞர்கள் நடிப்பும் பாத்திரப்படைப்பும். கோர்ட் வாசலில் வைத்து பிரமுகரை கடத்துவது … Continue reading

Posted in கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

பார்த்திட வேண்டியதுதான்..

‘விசாரணை படம் பார்த்தீர்களா?’ என்று நிறையத் தோழர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பார்த்த எல்லோருமே பாராட்டுகிறார்கள். பார்த்துப் படம் புடிச்சிருந்தா சந்தோசம். பிடிக்காமல் போனாதான் சிக்கல். பிறகு அதுகுறித்து எழுதினால் ‘இவுனுக்கு இதான் வேலை..’ என்பார்கள் எப்போதும் என்னை எதிர்ப்பவர்கள். நெருக்கமான தோழர்களும் கூட வருத்தப்படுவார்கள். அப்படிதான் ‘காக்க முட்டை’ யை எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்று … Continue reading

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

‘தொடப்பக் கட்டையாலேயே அடிக்க வேண்டும்’ ; எதுக்கு பாலசந்தர் பாணி?

‘முழுமையாக முடிக்கப்பட்ட script பிறகு படமாக எடுக்கப்படுகிறது என்ற முறையான சினிமா பாணி, பெண் குத்துச்சண்டையை முதன்மைப்படுத்துகிறது, அதை விட மிக முக்கியம் இயக்குநர் பெண்.’ இந்தக் காரணங்களால் ‘இறுதிச்சுற்று’படம் பார்க்கலாம் என்றிருந்தேன். இன்று காலை தற்செயலாகத் தொலைக்காட்சியில் அந்தப் படத்திலிருந்து ஒரு காட்சி, சூழல் மீனவ கிராமம். வீடு. நாயகியின் தந்தை சாமிக்கண்ணு, குடித்துவிட்டு … Continue reading

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்