பாலா vs கங்கைஅமரன்

மிகக் கொடூரமாக அமைந்துவிட்டது இசைஞானி யின்ஆயிரமாவது படம். அவருக்கு மட்டுமா? நேற்று இரவு எனக்கும் தான். பொங்கல் எனக்கு இப்படியா விடிய வேண்டும்?
*
இசைஞானியாலும் நமக்குக் கெடுதல், அவரால் இந்த மாதிரி படங்களையும் நாம் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.
ஒரு வகையில் என் நிலைமையாவது பரவாயில்லை. இசைஞானி இளையராஜா வின் நிலை தான் பரிதாபத்திற்குரியது. பாவம். ரீ ரெக்கார்டிங்காகத் தாரை தப்பட்டை யின் கொடூரக் காட்சிகளை எத்தனை முறை பார்த்தாரோ?
அவுரும் வழக்கம்போலச் சிறப்பா வாசிக்கிறாரு.. பாடலும், பின்னணி இசையும் ஒட்டல. துறுத்திகிட்டு நிக்குது. குறிப்பா கர்நாடக சங்கீத பாணியிலான பாடல்கள்.
எனக்கென்னமோ அவுருக்கு இனிமேலும் இதெல்லாம் வேண்டாத வேலையாதான் படுது.
பேசாமல்.. சர்வதேச இசை ஆல்பம் தயாரிப்பில் ஈடுபடலாம். இன்னும் எதுக்கு.. இவுங்களோடேயே மல்லுக்கட்டிக்கிட்டு.
*

கரகாட்ட பெண் கலைஞர்கள் ஆட்டத்தின் போது, குட்டையாக உடை உடுத்துகிறார்கள் என்பதற்காக, பாடல் காட்சிகளில் கீழே சப்பனம் போட்டு உட்கார்ந்து கொண்டு அவர்களின் கால்களுக்கு இடையே சிக்கி சிக்கித் தவிப்பதும்,
கிட்டே போய்த் தொடைகளுக்கு நடுவே எட்டிப் பார்ப்பதுமாகத் தன் ஆண் பார்வையாளர்களுக்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறது கேமரா?
ஒப்பிட்டால், கங்கை அமரன் மகா கலைஞன் தான். ‘தாரை தப்பட்டை’யில் வந்துபோல், ஒரே ஒரு ஷாட் கரகாட்டக்காரனில் பார்த்திருக்கவே முடியாது.
*

போஸ்ட்மார்ட்டம் செய்கிற பணியில் இருக்கிற தோழர்கள் மிகப் பரிதாபத்திற்குரியவர்கள். எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் பிணத்தைக் கூறு போட்டு அறுக்கிற வேலை, அவர்கள் மீது நிகழ்த்தப்படுகிற கொடூரம்.
ஆனால் தாரை தப்பட்டையோ, பார்வையாளர்களிடம் அவர்களையே கொடூரமானவர்களாகச் சித்தரிக்கிறது.
*
‘நாயகி சூறாவளி யை திட்டமிட்டுத் திருமணம் செய்து கொள்கிறான் வில்லன். எதுக்காக அதைச் செய்கிறான் என்று சொல்ல வந்த இயக்குர்.. பிறகு அதை மறந்துட்டாரோ.. கடைசி வரை அதைச் சொல்லவே இல்லையே?’ – கேட்டான் உடன் படம் பார்த்த சு.ம. கவின். (Kavin Smk)
எனக்குத் தெரியல. இயக்குநர் பாலாவிற்குத் தெரியுமா?
*
தன் குழுவிலிருந்து ஒருவர் தன் தங்கையுடன் தனியாகச் சென்று சினிமா பாடலுடன் ஆபாசமான வார்த்தைகளும், அசைவுகளுமாக ஆடி பிழைப்பதைப் பார்த்த நாயகன்;
‘இதெல்லாம் ஒரு பொழப்பா’ என்று கடுமையாகத் திட்டுகிறார்.

ஒரு ஊரின் நடுவில் அதுபோல் ஆடி பிழைக்கிற அவரையே கடுமையாகத் திட்டுகிறாரே நாயகன்,
அவர் தன் தங்கையுடன் ஆடுகிற அந்த ஆபாச ஆட்டத்தை அப்படியே தனது படத்தில் வைத்து, உலகம் முழுவதும் கொண்டு போயிருக்கிற தனது இயக்குநர் பாலா வை திட்டினால் எப்படித் திட்டுவார்? (நாயகனுக்குக் கோபம் வந்தால் பெண்களையே ‘அரிப்பெடுத்தாடி..அலையிற..’ என்பார்)
*
கொலைக்காரனை கருணாமூர்த்தி ன்னு கூப்பிடறமாதிரி.. எவன்டா வைச்சான் இந்தப் படத்துக்குப் பேரு ‘தாரை தப்படை’ என்று.
படத்துக்குப் பொருத்தமில்லாமல் பெயர் வைக்கிறதுல ஆஸ்கர் அவார்டு கொடுக்கிறதா இருந்தா.. தமிழ் சினமாகாரர்கள் மொத்த ஆஸ்கர் அவார்டையும் போட்டியே இல்லாமல் தட்டிக்கிட்டு வந்துடுவாங்க.

நேற்று facebook ல் எழுதியது.

அவன்-இவன்; பாலாவின் ஜல்லிக்கட்டு

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

7 Responses to பாலா vs கங்கைஅமரன்

 1. Pingback: பாலா vs கங்கைஅமரன் | தேன்கூடு

 2. மலர்வண்ணன் சொல்கிறார்:

  தாரை தப்பட்டை சிலருக்கு பிடித்திருக்கலாம், சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அவரவர் ரசனையைப் பொருத்தது…

  //மிகக் கொடூரமாக அமைந்துவிட்டது இசைஞானியின் ஆயிரமாவது படம். அவருக்கு மட்டுமா? நேற்று இரவு எனக்கும் தான்//
  – ஆமா, இளையராஜாதான் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்து வெளியிட்டிருக்கிறார்…!!

  //பால vs கங்கைஅமரன்… ஒப்பிட்டால், கங்கை அமரன் மகா கலைஞன். ‘தாரை தப்பட்டை’யில் வந்துபோல், ஒரே ஒரு ஷாட் கரகாட்டக்காரனில் பார்த்திருக்கவே முடியாது//
  – சில நூறு தங்கக் கரடி, தங்க நரி, தங்க டைனசர் எல்லாம் கான்ஸ், பெர்லின்-ன்னு பறந்து பறந்து கங்கைஅமரன் வாங்கியது உங்களுக்கு மட்டும் தான் தெரிஞ்சிருக்கு..!!

  //போஸ்ட்மார்ட்டம் செய்கிற பணியில் இருக்கிற தோழர்களை பார்வையாளர்களிடம் கொடூரமானவர்களாகச் சித்தரிக்கிறது//
  – படத்துல வர்ற டாக்டர்கள், ஜோசியக்காரன், PIMP, போன்றவர்களை சுதந்திரப் போராட்ட தியாகிகளாக சித்தரிக்கிறார்கள்!! பாலா படத்துல ஏதுங்க நல்லவன்..!!

  //சூறாவளியை திட்டமிட்டுத் திருமணம் செய்து கொள்கிறான் வில்லன். எதுக்காக அதைச் செய்கிறான்? எனக்குத் தெரியல. இயக்குநர் பாலாவிற்குத் தெரியுமா?//
  – படத்த தியேட்டர்ல பாத்தீங்களா? திருட்டு cd-ல பாத்தீங்களா? இதுல review வேற!!

  //இளையராஜாவின் நிலை தான் பரிதாபத்திற்குரியது. பாவம். ரீ ரெக்கார்டிங்காகத் தாரைதப்பட்டையின் கொடூரக் காட்சிகளை எத்தனை முறை பார்த்தாரோ? பேசாமல் சர்வதேச இசை ஆல்பம் தயாரிப்பில் ஈடுபடலாம்//
  – அவுத்துப் போட்டு வர்றது மட்டுந்தான் “A” or “R” ரேட்டிங் படம் இல்ல. பி.வாசு, SAC, போன்றோரின் கொடூரங்களுக்கு already இசையமைத்த அனுபவங்கள் இருக்கே!! அந்த சர்வதேச மேட்டர உங்க சார்பா ராஜா கிட்ட சொல்லிடுவோம்..!!

  //எவன்டா வைச்சான் இந்தப் படத்துக்குப் பேரு ‘தாரை தப்படை’ என்று, படத்துக்குப் பொருத்தமில்லாமல்//
  – உங்களுக்கு கூடத்தான் நல்ல பேரு வெச்சிருக்காங்க.. நாங்க ஏதாவது சொன்னோமா?!

 3. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  /// படத்துக்குப் பொருத்தமில்லாமல் பெயர் வைக்கிறதுல ஆஸ்கர் அவார்டு கொடுக்கிறதா இருந்தா.. தமிழ் சினமாகாரர்கள் மொத்த ஆஸ்கர் அவார்டையும் போட்டியே இல்லாமல் தட்டிக்கிட்டு வந்துடுவாங்க. ///
  —————————————–

  “நல்ல பாம்பு” எனும் பெயரை கண்டுபிடித்து தனக்குத்தானே பகுத்தறிவை மழுங்கடித்துக் கொள்ளும் ஜாதிவெறி மூடனுக்கு, பொருத்தமில்லாத சினிமா பெயர்கள் வைப்பது சும்மா ஜுஜுபி.

 4. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  /// இசைஞானி இளையராஜா வின் நிலை தான் பரிதாபத்திற்குரியது. பாவம். ரீ ரெக்கார்டிங்காகத் தாரை தப்பட்டை யின் கொடூரக் காட்சிகளை எத்தனை முறை பார்த்தாரோ? ///
  ——————————–

  “தாரை தப்பட்டை” சினிமா கதைக்கு பொருத்தமில்லாமல் இருக்கலாம். ஆனால், இதில் ஜாதி உணர்வு பின்னிப்பிணைந்துள்ளது.

  “தாரை தப்பட்டை” பறையரின் ஜாதி அடையாளம். பணமும் புகழும் வந்தபின், நவீன பாப்பான் எனும் மாயையில் சிலகாலம் மதிமயங்கி கிடந்த இளையராஜாவை, “உயர உயர பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகாது” எனும் உண்மையை “தேவர் மகன்” சொல்லிவிட்டார். அதுதான் அவருக்கு தனது பறையர் ஜாதி ஞாபாகம் வந்துவிட்டது.

  “பறையர் மகன்” என சொல்ல வெட்கமாய் இருப்பதால், “தாரை தப்பட்டை” என சொல்லி மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். வேறு வழி?.

 5. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  /// படத்துக்குப் பொருத்தமில்லாமல் பெயர் வைக்கிறதுல ஆஸ்கர் அவார்டு கொடுக்கிறதா இருந்தா.. ///
  ——————————

  “ஜாதிகள் இல்லையடி பாப்பா” எனும் உலகமகா புருடாவை 2000 வருடங்களாக கேட்டு கேட்டு சூடு சொரணையெல்லாம் மறத்துப் போய்விட்ட தமிழனுக்கு இதெல்லாம் உரைக்காது.

 6. Pingback: இளையராஜா ஆயிரம்; ரசிகர்களுக்கு அபராதமும் தண்டனையும் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s