எம்.எஸ்.வி மரணம்; விருதுகளுக்கு அவமானம்

msv
தமிழர்களின் கண்ணீர், கவலை, துக்கம் என்று எல்லாச் சோக உணர்வுகளின் போதும் ஆறுதல் அளித்துத் துணை நின்று, பதிலுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அள்ளித் தெளித்த அந்த மாமேதை இன்று மரணித்தார்.

பத்ம ஸ்ரீ உட்பட மத்திய அரசு விருதுகள் கடைசி வரை அவருக்குத் தரப்படாமல், இழிவான, மலிவான அரசியலை நடத்தி அம்பலப்படுத்திக் கொண்டன.

விருதுகளால் மேதைகள் அங்கீகரிக்கப்படுவதில்லை, மேதைகளால் தான் விருதுகள் அங்கீகாரம் பெறுகின்றன. மெல்லிசை மன்னரின் மரணத்தால் அவமானப்பட்டுப்போனது விருதுகள்.
*
13 ஆண்டுகால பத்திரிகையாளன் பணியில் வீணாகப் போன என் நாட்களில்; எனக்குக் கிடைத்த ஒரே அங்கீகாரம். 30-10-2005 அன்று மெல்லிசை மன்னரை நேர்காணல் செய்ததுதான்.
*
மெல்லிசை மன்னர் உங்களின் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடியுமா?
உண்மை அதுதான்.
சிக்கலான நேரங்களில், உங்களின் தனிமை அவரோடு கழிந்து இருக்கும்.

‘மனசே சரியில்லை’ என்று நீங்கள் சோர்ந்த நேரங்களில், “மயக்கமா…. கலக்கமா… மனதிலே குழப்பமா…” என்று உங்களை ஆறுதல் படித்தியிருப்பார்.

“இல்லை, இந்தப் பிரச்சினைக்கு அழுதே தீரவேண்டும்” என்றால், “கண்ணிலே நீர் எதற்கு? காலம் எல்லாம் அழுவதற்கு” என்று உருக்கும் மெட்டோடு உங்களோடு சேர்ந்து அழுதிருப்பார்.

உற்சாகமான நேரங்களில், உங்களை இன்னும் கூடுதல் மகிழ்ச்சியாக்க, “மதன மாளிகையில்… மன்மத லீலைகளாம்…’ என்கிற வித்தியாசமான காம்போஸிஸனோடு இனிமையான மெட்டில் உங்களை மயக்கி இருப்பார்.

ஆம், அந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனோடுதான் இந்தச் சந்திப்பு.
யானை தன்னைவிடப் பலவீனமான பாகனுக்குக் கட்டுப்பட்டு இருப்பதுபோல், இந்த நுட்பமான இசையமைப்பாளர் தன்னிடம் உள்ள அற்புதமான திறமையை நடிகருக்கும், கவிஞருக்கும், இயக்குநருக்குமே காணிக்கையாக்குகிறார்.

‘என் திறமையே அவர்களால் வந்ததுதான்’ என்று உறுதியாக நம்புகிறார்.

‘இசை வார்த்தைகளை விட நுட்பமானது’ என்கிற கருத்தை முற்றிலுமாகத் தள்ளிவிடுகிறார்.
சிறந்த கலைஞனின் மனநிலை, ‘ஒளிவு மறைவின்றி, கள்ளம் கபடமின்றி இருக்கும்’ என்பார்கள். ஆம், அதற்கு ஓர் உதாரணம் போல் இருக்கிறார் மெல்லிசை மன்னர்.
ஒரு கோடை மழைபோல் பாட்டும், பேச்சுமாகக் கொட்டியது அவர் பேட்டி,

* வறுமையான குடும்பத்தில் பிறந்த நீங்க, ஏகலைவன்-துரோணரை தூரமா இருந்து பார்த்து, வில்வித்தைக் கத்துகிட்டா மாதிரி, உங்க சொந்த முயற்சியிலே இசையைக் கத்துக்கிட்டு மிகப் பெரிய இசையமைப்பாளரா உருவானீங்க. இன்றைய உங்களின் நிறைவான வாழ்க்கையில் இருந்து, உங்களின் கடந்த கால வாழ்க்கைக்குப் போயிட்டு உடனே திரும்பி வாங்களேன்…

எனக்கு அப்பா கிடையாது. அம்மாதான். கேரளாவில் கண்ணணூரில் ஜெயிலரா இருந்த என் தாத்தாதான் என்னை வளர்த்தார். எனக்குப் பள்ளிக்கூடம் போறதுக்கு விரும்பம் கிடையாது.

ஏன்ன, ‘புத்தகம் பையிலே, புத்தியோ பாட்டிலே’ அப்படிங்கறா மாதிரி எனக்கு இசையிலேதான் நாட்டம்.
எங்க ஊர்ல நீலகண்ட பாகவதர்ன்னு ஒரு இசை அறிஞர், சின்னப் பசங்களுக்குப் பாட்டு சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தார். அத தூரமா இருந்து நான் கவனிப்பேன்.

இப்படி ஒரு வருடம் போன பிறகு என்னைக் கவனித்த பாகவதர், ‘கூலிக்கு மாரடிக்கிறேன். ஒரு பயலுக்கும் இசை வரல. உனக்குக் காசு வாங்காம சொல்லிக் கொடுக்கிறேன்’ ன்னு, 13 வயசிலேயே என்னை அரங்கேற்றம் பண்ண வச்சார்.

பிறகு ஜெயிலரான எங்க தர்ததாவும் பாகவதரும் நண்பர்களா இருந்ததாலே ஜெயில்ல ஒரு நாடகம் போட பாகவதருக்கு வாய்ப்பு கிடைச்சது.
அந்த நாடகத்துல நான் லோகிதாசனா நடிச்சேன். நாடகம் பார்க்க வந்த உயர் அதிகாரிகள் என் நடிப்பை பாத்திட்டு என்னை நடிகனா வர உற்சாகப்படுத்தினது மட்டுமல்லாம, திருப்பூர்ல இருந்த ஜுபிடர் பிக்சர்ஸல என்னைச் சேர்த்து விட்டாங்க.

ஜுபிடர் பிக்ஸர்ல அப்போ கண்ணமாவை வைச்சு ‘கண்ணகி’ படம் எடுத்துக்கிட்டு இருந்தாங்க. அதலு எனக்குப் பால கோவலன் வேசம்.
எனக்கு ஜோடியா நடிச்ச பொண்ணு என்னை விடப் பெரிய பொண்ணா இருந்தது. அவள படத்துல இருந்து தூக்காம, என்ன தூக்கிட்டாங்க. அதனால அதே கம்பனியிலே ஆபிஸ்பாயா ஆனேன்.
அங்கே எஸ்.வி. வெங்கட்ராமன், டி.ஆர். பாப்பா போன்ற இசையமைப்பாளரெல்லாம் என்னோட இசை அறிவைப் பார்த்துட்டு என்னை அவுங்க கூடச் சேர்த்துக்கிட்டாங்க.

* அப்போ உங்க நடிப்பு ஆசை அதோட நின்னுப் போச்சா?

டி.எஸ். பாலைய்யா அண்ணனோட பழக்கம் கிடைச்சது. அவருக்கு என்னை நடிகனாக்கிப் பாக்கணும்னு ஆசை. அவருகூடச் சேலம் பக்கத்துல ஆத்துர்ல ராமாயணம் நாடகத்தில நடிச்சேன்.
அதுல எனக்கு, சீதை சுயவரத்திலே வில்லு ஒடிக்க வர ராஜாக்கல்ல ஒரு ராஜாவா வேசம். நான் வில்லை ஒடிக்க முடியாம கீழே போட்ட உடனேயே அந்த வில்லு பக்கத்துல இருந்த சுட்ச்சு பாக்ஸ்ல பட்டு உடைஞ்சு போச்சு.

அவ்வளவுதான் ஜனங்க எல்லாம் மேடைக்கு வந்து ‘மரியாதையா இவனுக்குச் சீதையைக் கல்யாணம் பண்ணி வை’ன்னு தகராறு பண்றாங்க. உள்ள போக முடியாது. உள்ள போனா பாலைய்யா அண்ண(ன்) என்னைக் கொன்னே போட்ருவாரு. வெளியே தகறாறு. வேற வழியில்லாம உள்ள போனேன்.

அவ்வளவுதான் பாலைய்யா என்ன பின்னு, பின்னுன்னு பின்னி என் முகத்த தரையில வைச்சு தேய்ச்சாரு. ஆள விட்டா போதும்ன்னு அங்க இருந்து தப்பிச் சேலத்துக்கு வந்தேன்.
அப்போ எங்க தாத்தா சேலம் ஜெயிலுக்கு மாற்றலாகி வந்திருந்தாரு. அவரைப் பார்த்துட்டு, மார்டன் தியேட்டஸ்ல இருந்த கே.வி. மகாதேவன்கிட்ட கோரஸ் பாட வாய்ப்புக்கேட்டுப் போனேன்.
அவரு ‘உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. ஜுபிடர் பிக்சர்ஸ்லேயே போய்ச் சேரு’ ன்னு சொல்லி ரயில் செலவுக்கு இரண்டு ரூபா பணம், புதுவேட்டி, சட்டையும் எடுத்துக் கொடுத்து அனுப்புனாரு. நேரா கோவையில் இருந்த ஜுபிடர்ல போய்ச் சேர்ந்தேன்.

அங்க எஸ்.என். சுப்பையா நாயுடு இசையமைப்பாளரா இருந்தாரு. அவருக்கிட்டே உதவியாளரா சேர்ந்தேன். கூட ஜீ.கே. வெங்கடேஷ் எல்லாம் இருந்தாங்க. சுப்பையா நாயுடு இல்லாதப்ப ஆர்மோனியப் பெட்டி எடுத்து நான் மெட்டு போடுவேன். அத ஒரு நாள் அவரு பாத்துட்டு, ‘என்னடா பண்றே’ ன்னு? அதட்டுனார்.

அதுக்கு ஜீ.கே. வெங்கடேஷ், ‘இவ்வளவு நேரம் உங்களுக்கு வராத மெட்டை அவன் போட்டுட்டான்’ அப்படின்னாரு. அந்த மெட்டை சுப்பையா அண்ணன்கிட்ட வாசிச்சி காம்பிச்சேன்.
அவரு, ‘இதை நீ போடடதா சொல்லாத நான் போட்டதா வாத்திய கோஷ்டி கிட்ட சொல்லு’ ன்னாரு.

அந்தப் பாட்டு சூப்பர் ஹிட்டு. அதுக்கப்புறம் எனக்கு ஒவ்வொரு படத்திலேயும் இரண்டு பாட்டு, ஆனா அது அவர் பேர்ல வரும். எல்லாம் ஹிட்டு. திடீர்ன்னு சுப்பையா நாயுடு உட்பட எங்க எல்லாத்துக்கும் ஜுபிடர்ல கணக்கு முடிச்சு அனுப்பிட்டாங்க.

எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. வாழ்க்கை இருண்டு போச்சு.
ஒருநாள் சுப்பைய நாயுடு திடீர்ன்னு தெய்வம்போல வந்து, என்னை ஜுபிடர் முதலாளிகிட்ட, ‘இதுவரைக்கும் ஹிட்டான பாட்டெல்லாம் இவன் போட்ட மெடடுதான்’ ன்னு சொல்லிட்டாரு. அதுக்குப் பிறகு எனக்கு நல்ல வாழ்க்கை.
1948ல சென்னைக்கு வந்து சுப்பராமன்கிட்ட சேர்ந்தேன். பிறகு இசையமைப்பாளரா உயர்ந்தேன்.

* உங்களைப் பற்றிச் சொல்லியாச்சி. இனி நேரடியா உங்க இசைக்கு வந்துடுறேன்.
ஊட்டி வரை உறவு படத்தில், ‘பூமாலையில் ஒர் மல்லிகை’ நெஞ்சிருக்கும் வரையில் ‘முத்துக்களோ கண்கள்’ இந்தப் பாடல்களின் மெட்டுக்கள் காதலை இனிமையாகச் சொன்னாலும், அதன் உள்ளே ஒரு சோக உணர்வு ஓடிக் கொண்டே இருக்கிறதே? அதை நீங்கள் திட்டமிட்டு செய்தீர்களா?

அதான் மெலடி. காதல்ல, லவ் சாங்ல கச்சா முச்சான்னு கூத்தடிச்சிக்கிட்டு பாடமுடியாது. அப்படி மென்மையாதான் பாட முடியும். அதுல ஒரு சோகம் இருக்கும். அதான் மெலாடியோட இனிமை. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து… பார்த்த ஞாபகம் இல்லையோ… இந்தப் பாடல்களில் கூட அந்த உணர்வு இருக்கும். சோகத்துக்குள்ளே இனிமை இருக்கும். இனிமை உள்ளார சின்னச் சோகம் இருக்கும். அதுதான் அந்தப் பாட்டின் சோக உணர்வுக்குக் காரணம்.

* ‘பாலிருக்கும்… பழமிருக்கும்… பசியிருக்காது….’ இந்தப் பாடலின் சிறப்பு, பெண் குரல் வார்த்தைகளால் பாடும். ஆண் குரல் பாடல் முழுக்க ‘ஹம்மிங்’ செய்து கொண்டே இருக்கும். இந்த வித்தியாசமான கற்பனையின் பின்னணி என்ன?

அந்த ‘ஹம்மிங்’ என்னுடைய குரல்தான். புதுசா பண்ணணும்னு திட்டமிட்டுப் பண்ணதுதான். ஆண்-பெண் உறவு பற்றி, ஆண் பாடுனா பெண்ணுக்கு வெட்கம் வரும். பெண் பாடுனா ஆணுக்கு வெட்கம் வராது. அதானால ‘ஹம்மிங்’ ல பாடிடுறான்னு வச்சோம். புதுமை, புதுமை, புதுமை-பழமை மாறாதா புதுமை.

* இளம் விதவையின் சோகத்தைப் பாடலின் வார்த்தைகளையும் மீறி உருக்கியிருந்தீர்கள் ‘பாக்கியலட்சுமி’ படத்தில் ‘மாலை பொழுதின் மயக்கத்திலே’ என்ற பாடலில். குறிப்பாக ‘கணவன் என்றால் அவன் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி’ என்ற முடிவின் தொடக்கத்தில், ‘ஷெனாய்’, இசைக்கருவியைப் பயன்படுத்தியிருப்பீர்கள்.
அதுவரை மெட்டு கலக்கமான மனநிலையை உருவாக்கி அழவைத்திடுமோ என்ற நிலையில் இருக்கும்போது, அந்த ‘ஷெனாய்’ ஒலி அழவைத்தே விடுகிறது. நிற்கதியாய் இருக்கிற பெண்ணின் சோகம், ஏக்கம், விரக்தி என்று உணர்வுகளால் தளும்பி இருக்கிறது ‘சந்திர கவுன்ஸ்’ ராகத்தில் அமைந்திருக்கிற அந்தப் பாடல்….

அதான் மூடு மியூசிக். அந்த மூடை இசையமைப்பாளர் உணர்வது மாதிரி கதையை விளக்கி சொல்ற இயக்குநரோட திறமையைப் பொறுத்துதான் நல்ல பாட்டு அமையும். கதையை சரியாப் புரிஞ்சுக்கிற இசையமைப்பாளன் அந்தக் கதாபாத்திரமாவே மாறிடுவான். கண்ணுல தண்ணி வந்ததுன்னு சொன்னீங்க இல்ல, கண்ணுல தண்ணி வரணும்னுதான் அங்க ‘ஷெனா’யை வச்சது.

* ‘ஷெனாய்’ மிகச் சிறந்த இசைக்கருவி. அதில் மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற உணர்வுகளைக் கூடத் தரமுடியும். ஆனால், ‘சோகம் என்றால் ஊது ஷெனாயை’ என்பது போல் அதைத் துக்க உணர்விற்கே நீங்கள் நிறையப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்?

சோகம், துக்கம் என்றில்லை எல்லா உணர்வுகளுக்கும் ஷெனாயை கொண்டு வரலாம். பக்தி, மகிழ்ச்சிக்குக்கூடப் பயன்படுத்தலாம். ‘சரவணப் பொய்கையில் நீராடி’ என்ற பாட்டிற்கும் ‘ஷெனா’ யை பயன்படுத்தியிருக்கிறேன்.

* எளிமையான மெட்டு. அதிகமான வாத்தியக்கருவிகள் இல்லாமல் உருவான ‘சக்கபோடு போடு ராஜா… உ(ன்) காட்டுல மழை பெய்யுது…’ இந்தப் பாட்டுக்கு இணையாக அதனோடே, எகத்தாளமான பேச்சு ( ஆமா, மழைபெய்யுது…நீ வந்து கொடை புடி… ஏன்டாங்…) என்று வித்தியாசமா அமைஞ்சிருந்தது…

ஆமாம், வித்தியாசமாகச் செய்யணும்னுதான் அதைச் செஞ்சோம். டைரக்டர் ஏ.சி. திருலோகச்சந்தர் ரொம்பப் பிரமாதமா கதையை விளக்கிச் சொன்னார்.
மனசாட்சியைப் பார்த்து பாடற மாதிரியான சூழல். அத நாங்க ஒரு டீமா பேசி உருவாக்கினோம்.
அந்தப் பாட்டு சூப்பர் ஹிட்டாச்சி. ஏ.வி.எம்.மின் பாரதவிலாஸ் படத்தில் வர பாட்டு.

* இதைக் கண்டிப்பா உங்ககிட்ட கேட்டே ஆகணும். கவிஞர்கள் உங்க முதுகுல சவாரி செஞ்சி, உங்களைவிட அதிகமான புகழ் சேர்த்துகிட்டாங்களோன்னு தோணுது. கண்ணதாசனையும் சேர்த்தே சொல்றேன்….

இல்லை, தப்பு. பலமுறை கண்ணதாசன் எழுதுன பாட்டுக்கு மெட்டுப் போட்டிருக்கேன். மெட்டும், வார்த்தையும் இணைந்ததுதான் பாடல்.

* சரிதான், அத நான் மறுக்கல, வார்த்தையை உருவிட்டாக்கூட மெட்டு இனிமையோடு இருக்கும். மெட்டை உருவிவிட்டா வார்த்தை சுவாரஸ்ய மற்று இருக்கும்.
ரசிகர்கள் கூட, ‘நல்ல பாட்டு’ என்று சிலாகிக்கிற பாடல்களில் அவர்களுக்குப் பெரும்பாலும் பல்லிவியைத் தாண்டி அடுத்த வரி தெரியாது என்பதே உண்மை. வயலின், வீணை போன்றவற்றில் சினிமா பாடல்களை வாசிப்பது, செல்போனில் ரிங் டோனாக இருப்பது மெட்டின் மீதுள்ள மயக்கமே, ஆக மெட்டுதான் அவர்களை வசப்படுத்தியிருக்கிறது…

இல்லை, இதை நான் ஒத்துக்க முடியாது.
பாட்டுக்குள்ளே மெட்டு இருக்கு. மெட்டுக்குள்ளே பாட்டிருக்கு. மீட்டருக்கு மேட்டரு. மேட்டருக்கு மீட்டரு.

* சரி அதை விடுங்கள், ‘மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ’ என்ற தயக்கம் இல்லாமல், இசையமைப்பாளர் என்கிற ஒரே உணர்வோடு, சுதி சுத்தமாக, பாவத்தோடு, பாடுபவர்களை வரிசைப்படுத்துங்களேன்?

இது சரியான கேள்வி இல்லை. அந்தப் பாட்டுக்குப் பொருத்தமான குரல் எதுவோ அதைதான் பயன்படுத்துவேன். குருவி தலையிலே பனங்காய் வைக்கமாட்டேன்.
‘இந்தப் பாட்டை இவர் பாடுனாதான் சரியா இருக்கும்’னா அவரைப் பாட வைப்பேன்.

நீங்க பாடுறீங்களா சொல்லுங்க, உங்க குரலுக்குப் பொருத்தமான பாட்டை உருவாக்கி அதைப் பிரபலமாக்கி காட்றேன்.

* கண்டசாலாவின் குரல் தனித்த ஆளுமை மிக்கது. அவரின் குரலுக்கு மயங்கிய ஆந்திரமக்கள் ‘தன் உடமைகளைக் கூட அவருக்கு எழுதி வைக்கிற அளவுக்கு இருந்தார்கள்’ என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் அவரைச் சுத்தமாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையே?

இசையமைப்பாளர் சுப்பராமன் இசைக்குழுவில் உதவியாளரா இருந்தப்ப, தேவதாஸ் படத்துல வர ‘உலகே மாயம், வாழ்வே மாயம்’ பாடலை நான்தான் போட்டேன். அந்தப் பாட்டைக் கண்டசாலா, ‘உல்கே மாயம், வால்வே மாயம்’ ன்னுதான் பாடியிருப்பாரு.

நானும் அவரோட எவ்வளவோ போராடி பார்த்தேன். என்னால முடியில.அவரு தப்பாப் பாடுனதுக்கு என்னை ஓங்கி அறைஞ்சாரு, அந்தப் பாட்டை எழுதுன உடுமைலை நாராயணக்கவி.

“என்னடா பாடுறாரு அந்த ஆளு” ன்னு கேட்டு அடிச்சாரு.
“அவருக்கு அப்படிதாங்க வருது” ன்னு சொன்னேன்.
“எவனுக்கு ஒழுங்கா வார்த்தை வருதோ அவனைப் பாடவைக்க வேண்டியதுதானேடா” ன்னு திரும்பவும் அடிச்சாரு. அப்போ நான் சின்னப் பையன்.

தெலுங்கு மக்கள், மலையாள மக்கள், இந்திகாரங்க அவுங்க மொழியைத் தப்பா பாடுனா சும்மா விடமாட்டாங்க. நம்ம ஊர்ல, ‘பிரியமான பெண்ணைக் காதலிக்கிறேன்’னு பாடறதுக்கு ‘பெரியம்மா பெண்ணைக் காதலிக்கிறே’ ன்னு பாடிட்டுப் போயிடுறாங்க.

* நீங்கள் லயித்து உருவாக்கிய மெட்டு, தள்ளுபடி செய்யப்பட்டுப் பிறகு வேறு படத்துக்குப் பயன்படுத்திப் பிரபலமாகி இருக்கிறதா?

நான் டியூன் போடும்போது, என் கூட என் உதவியாளர்கள், சங்கர்-கணேஷ், கோவர்த்தனம் எல்லாம் இருப்பாங்க.
அப்படித்தான் ‘உயர்ந்த மனிதன்’ படத்துக்குப் போட்ட ஒரு டியூனை பயன்படுத்தாம, அதை ‘சிவகாமியின் செல்வன்’ படத்துக்குப் பயன்படுத்த முடிவு பண்ணி பாட்டெல்லாம் எழுதி ரெக்காடிங்குக்குத் தயாரானபோது, அந்தப் படத்தோட வசனகர்த்தாவான ஏ.எல். நாராயணன் முன்னாலேயே ரெக்காடிங் தியேட்டருக்கு போயிட்டாரு.

போனவரு அங்கிருந்து எனக்கொரு போன் பண்ணாரு, “விசு, நீங்க போட்ட அந்த டியூனை இங்க சங்கர்-கணேஷ் ரெக்கார்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க” ன்னு ரொம்பப் பதட்டமா பேசுனாரு.
நான், “சரி அத அப்படியே விட்டுறுங்க” ன்னு சொல்லிட்டு, அந்த டியூனை மாத்தி ‘சிவகாமியின் செல்வன்’ படத்துக்கு வேற போட்டேன்.

உயர்ந்த மனிதன் படத்துல என்னோட உதவியாளரா வேலைபார்த்த சங்கர்-கணேஷ் பயன்படுத்திக் கிட்ட என்னோட டியூன் இதுதான்,
‘இனியவளே… என்று பாடிவந்தேன்…’

* எம்.ஜி.ஆர். உடனான உங்கள் இசை அனுபவம்?

அத கேட்டா உங்களுக்குப் பைத்தியம் பிடிச்சுடும்.
“விசு, இந்த டியூன் ரொம்ப நல்லா இருக்கு. ரெக்காட் பண்ணிடு” ன்னு சொல்வார்.
ரெக்காட் பண்ணிட்டு வந்தா, “அந்தப் பாட்டை அப்படியே மாத்திட்டு, வேற டியூன் பேடு” ன்னு சொல்லுவாரு.

நேற்று இன்று நாளை படத்துக்காக ஒரு பாட்டுக்கு 100 டியூன் போட வச்சாரு. அப்போ அது வேதனையா இருந்தது. இப்போ அது சாதனையா இருக்கு. அவருக்கு நல்ல இசை ரசனை உண்டு.

* சந்திரபாபுவோட குரல் தமிழில் வித்தியாசமான, எளிமையான குரல். அந்தக் குரலுக்குப் பொருத்தமா ‘சுலோ ரிதத்தில்’ நிறையப் பாட்டு போட்டு இருக்கீஙக… அவருக்கும் உங்களுக்கும் நல்ல நட்புன்னு…..

அவனை நான் முதல்ல பார்த்தது, 1945 லனு நினைக்கிறேன். அப்போ சென்ட்ரல் ஸ்டூடியோ கோவையில் இருந்தது. அங்க எஸ்.என். சுப்பையா நாயுடுகிட்ட உதவியாளரா இருந்தேன்.
“இவன் ஏதோ பாடுவான்னு சொல்றான், இவன் குரலை கொஞ்சம் டெஸ்ட் பண்ணேன்” னு சொன்னாரு சுப்பையா அண்ணன். பண்ணேன்.

“என்ன நல்லா பாடுனானா?” ன்னு கேட்டாரு.
“இவன் எங்க பாடுனான்? டயலாக்கை அப்படியே பேசுறான்” னு சொன்னேன்.
என்னை மொறைச்சு பாத்துட்டுப் போனான். கொஞ்சம் வருஷம் கழிச்சு அவன் பெரிய நடிகனா ஆயிட்டான். நான் இசையமைப்பாளரா ஆயிட்டேன்.

டி.ஆர். ராமண்ணாவின் ‘குலேபகாவலி’ படத்துக்கு நான்தான் மியூசிக். அதுல சந்திரபாபவுக்கு ஒரு பாட்டு. நான் டியூனை போட்டுட்டு, ‘எப்படி?’ன்னு கேக்குறேன்.
அவன், “இதெல்லாம் ஒரு டியூனா? இதுக்கு ஆட்டமே வராது, பெரிய மெட்டு போட்டுட்டாரு, வேற போட சொல்லுங்கன்னு…” ராமண்ணாக்கிட்ட சொல்றான்.

நான் உடனே என் உதவியாளர்களை அந்த டியூனை இசையோட வாசிக்கச் சொல்லிட்டு, எழுந்து ஆடி காண்பிச்சேன்.
“இதுக்கு மேலே எப்படி ஆடுறதுன்னு சொல்லு”ன்னு கேட்டேன்.
அந்தப் பாட்டு ‘சொக்காப் போட்ட நவாப்பு…’ அதல இருந்து எனக்கும் அவனுக்கும் காதல் பிறந்துடுச்சி. நெருக்கமான நண்பர்களானோம். அவனுக்கு இசையறிவு உண்டு. உணர்வுபூர்வமான கலைஞன்.

* உங்கள் சம்பந்தப்பட்ட ஒரு செய்தி, நீங்கள் இருக்கும் போதே பலரால் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒருத்தரும் இதுவரை உங்களிடம் கேட்டதில்லை. நீங்களும், ‘ஆமாம்-இல்லை’ என்று சொன்னதுமில்லை.
வேறு ஒன்றுமில்லை, பாரதியாரை உங்களுக்கு யார் என்றே தெரியாமல், ‘மெட்டுக்கு வார்த்தை இடிக்கிறது, கூப்பிடு அந்தப் பாடலாசிரியரை’ என்று நீங்கள் சொன்னதாகச் சொல்கிறார்களே, உண்மையா?

பொய். அதுல பாதிதான் உண்மை.
கே.எஸ். கோபால கிருஷ்ணன் என்னை எப்பவும் ‘சிங்கம்’ னுதான் கூப்பிடுவாரு.
ஒருநாள், “சிங்கம், எழுதிகிட்டே பாட்டு பாடுற மாதிரி ஒரு டியூன் போட்டா எப்படி இருக்கும்?” னு கேட்டாரு.
“போடலாமே” ன்னு ஆர்மோனியத்தை எடுத்தேன்.
“சிங்கம் நான் சொல்றதை எழுது சிங்கம்” னு சொன்னாரு.
“சரி, சொல்லுங்க” ன்னு நான் பேப்பர்ல எழுத ஆரம்பிச்சேன்.
அவர் சொன்னாரு, நான் எழுதிகிட்டே வந்தேன்.

‘சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்ற வரி வந்தப்போ, ‘பாட்டி செத்து’ன்னு இருக்கா மாதிரி இருக்கு கூப்பிடுங்க பாடலாசிரியரை’ ன்னு என்னை மறந்து போய்ச் சொன்னேன்.
தொழில் தீவிரத்துல வந்த வார்த்தை அது. பாரதியாரை தெரியாம சொன்ன வார்த்தையல்ல. அதுக்கு முன்னாடியே அவரோட ‘சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா…’ பாடலைப் போட்டவன் நான்.

* இளையராஜாவின் திருவாசகம் கேட்டீர்களா?

எனக்குத்தான் அதை முதலில் போட்டுக் காட்டினான். அதைக்கேட்டுட்டு, அவன் கையைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, கையைப் பிடித்துக் கொண்டே, “நீ வயசுல சின்னவனா இருக்கிறதுனால கையைப் பிடிச்சுகிட்டு சொல்றேன். பெரியவனா இருந்தா…’ என்று சொன்னேன். அவன் நெகிழ்ந்து போனான். அதில் அவனின் உழைப்பு சாதாரணமானது அல்ல.

(30-10-2005 தினகரன் இணைப்பிதழ் வசந்தம்)

மெல்லிசை மன்னர் வடை விற்ற தியேட்டர், சந்திரபாபு குடியரசு தலைவர் ராதகிருஷ்ணன் மடியில் உட்கார்ந்தது, மெல்லிசை மன்னரின் தற்கொலை முயற்சி, சிவாஜியின் தர்ம சங்கடம், எம்.ஜி.ஆரின் வருத்தம், சூரிய உதயத்தையே பார்க்காத நடிகரும், சூரிய அஸ்தமனத்தையே பார்க்காத கவிஞரும், சிவாஜி-எம்.ஜி.ஆர் தலைமையில் சோ வின் தொகுப்புரையோடு தன் குருவிற்கு மெல்லிசை மன்னர் நடத்திய பாராட்டு விழா, மூன்றே சுரத்தில் இசையமைத்த பாடல், ஒரு மரண வீட்டில் மெல்லிசை மன்னர் இசையமைத்த சோக பாடல்களோடு இறுதி ஊர்வலம்.. .

இப்படி ‘வசந்தம்’ இதழில் வெளிவராதா சுவாராஸ்யமான பல தகவல்களோடு, ‘மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனோடு சந்திப்பு – பாகம் இரண்டு’ சில நாட்கள் கழித்து….

மெல்லிசை மன்னருக்கு விருது இல்லை; அந்த விருதுகளுக்கு தகுதியுமில்லை

ராஜபார்ட் ரங்கதுரையை மற்ற கழிசடைகளோடு..

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

33 Responses to எம்.எஸ்.வி மரணம்; விருதுகளுக்கு அவமானம்

  1. valipokken சொல்கிறார்:

    ‘மனசே சரியில்லை’ என்று நீங்கள் சோர்ந்த நேரங்களில், “மயக்கமா…. கலக்கமா… மனதிலே குழப்பமா…” என்று உங்களை ஆறுதல் படித்தியிருப்பார்.

  2. krishnan parasuraman சொல்கிறார்:

    இந்தியாவின் சிறந்த இசைஅமைப்பாளர் வடநாட்டில் NAUSHAD ஷங்கர்-ஜைகிஷேன்
    சலில் சவுதிரி வரிசையில் இவரும் ஒருவர் 40 வருடம் முன்பே குறைந்த பட்சம் பத்மபூசன்
    விருது கிடைத்து இருக்க வேண்டும் அன்னார் ஆத்மா இறைவனை அடைய வேண்டுகிறேன்

  3. krishnan parasuraman சொல்கிறார்:

    கர்ணனில் கண்கள் எங்கே என்ற பாடலில் வடநாட்டு கருவிகளான சாரங்கி, சந்தூர் எல்லாம் வைத்து அற்புதமான மெட்டு போட்டு இருப்பார்
    அவருடைய சிறந்த இசைக்கு யார் அந்த நிலவு, ஆகாய பந்தலிலே, அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு போன்ற பாடல்கள் சொல்லலாம்

  4. Asokan Ponnusamy சொல்கிறார்:

    விருதுகள் எதுவாக இருப்பினும் அவைகள் எதுவுமே திறமைக்காக மட்டும் தரப்படுவதில்லை. அது நொபெலாக இருக்கட்டும், நம் கிராமச் சந்து பொந்துகளில் தரப்படும் விருதுகளாகட்டும், எல்லாமே பல சமயங்களில் திறமையைக் கருத்தில் கொள்ளாமலும் தரப்படலாம். நொபெல் பரிசு பற்றி அறிய The Prize என்ற இர்விங் வாலஸ் எழுதிய புத்தகம் படிக்கவும். இப்படியிருக்கையில் விருதுகளில் சிறிதும் கவனம் செலுத்தாமல் தத்தம் பணியைச் செவ்வனே செய்தல்தான் சிறந்தது. அவ்வகையில் விஸ்வநாதன் அவர்கள் விருதுகளுக்கு அப்பாற்பட்டவர். விருதுகள் ஒருவரை அந்த விருதுகளுடைய எல்லைக்குள் அடக்கி விடுகின்றன. அதற்கு மேலே ஒருவர் போனாலும் அந்த விருது வரையறுக்கும் எல்லைக்குள் அடங்கி இருப்பதாகவே கருதப்படும்.

    விஸ்வநாதன் அவர்களுடைய எண்ணற்ற பாடல்களுக்கு எல்லை வரையறுக்க முயன்றால் நான் பரிதாபமாகத் தோற்றுப் போவோம். “யார் அந்த நிலவு, ஏன் இந்தக் கனவு”, எங்கே நிம்மதி, வரவு எட்டணா, உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்(வெளிவராத ‘மணிமண்டபம்’ படத்தில் சுசீலா பாடிய பாடல்), பொன்னெழில் பூத்தது புதுவானில், ஆங்கிலப்பாடல்களின் தழுவலான அனுபவம் புதுமை, தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் போன்ற ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு எல்லை போடமுடியுமா? காலவரையரையாவது போடமுடியுமா?

    மற்றவர்கள் மறுக்கலாம் ஆனால் இளையராஜாவோ ரஹ்மானோ விஸ்வநாதனளவுக்கு திறமை வாய்ந்தவர்கள் என்று நான் கருத மாட்டேன். அவர்களுடைய சிலபாடல்கள் உண்மையிலேயே சிறந்தவை.இளையராஜாவுடைய பல பாடல்கள் ஒப்பற்றவை. ரஹ்மானுடையவும் பல அப்படியே. உதாரணமாக நான் தேடும் செவ்வந்திப்பூவிது, வராக நதிக்கரை ஓரம் ஆகிய பாடல்களைக்கூறலாம்.
    ஆனால் இவர்கள் விஸ்வநாதனுடன் ஒப்பிடப்பட முடியுமா?

    இறந்தவர்கள் திரும்பி வரமாட்டார்கள். அதனால் என்ன? அவர்கள் நமக்காக விட்டுச்சென்றவை இருக்கின்றனவே!

  5. GiRa ஜிரா சொல்கிறார்:

    விருதுகள் அரசியலுக்கு வழங்கப்படுகின்றவை. நல்ல கலைஞனுக்கும் அதற்கும் தூரம்.

    மெல்லிசை மன்னர் மக்களின் மனதில் நிரந்தர இடம் என்ற சிறந்த விருது வாங்கியவர். கைகாட்டிக் குற்றம் சொல்ல முடியாத தூய வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப் போன கலைஞன் அவர்.

    இசை இருக்கும் வரை அவர் புகழ் இருக்கும்.

  6. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

    விஸ்வநாதன், ராமமூர்த்தி, கண்ணதாசன், பி.சுசிலா, சீர்காழி, சந்திரபாபு. தமிழின் மீது காதல் வர இவர்கள்தான் காரணம். இவர்கள் பாடிய பாடல்கள், போட்ட ட்யூன்கள் காலத்தால் அழியாதது.

    இயல், இசை, நாடகம் மூலம் தமிழை வளர்த்ததில் ப்ராமின்ஸின் பங்கை யாரும் மறுக்கமுடியாது. பாப்பான் பாப்பான் என திட்டினாலும், பல உயர்ந்த மனிதர்களும் அந்த சமுதாயத்தில் உள்ளனர் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.

    1960 முதல் 1990 வரை தமிழிசை, தமிழ் திரைப்படங்களின் பொற்காலம். இப்பொழுது தமிழ் செத்துவிட்டது.

  7. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

    நெஞ்சில் நின்ற வரிகள்:

    “தாயாலே வந்தது தீயாலே வெந்தது, மெய்யென்று மேனியை யார் சொன்னது?
    கருவோடு வந்தது தெருவோடு போவது, மெய்யென்று மேனியை யார் சொன்னது?”

    என கேட்டு நமது ஆனவத்தை அடக்கினானே கவிஞன் வாலி. அவனை மறக்கமுடியுமா?.
    ——-

    வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே அது வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே
    ——–

    காவிரி ஆறென நீர் விளையாட
    கன்னி மலர்கள் தேன்மழையாக …
    பாதி விழிகள் காதலில் மூட
    பாலில் விழுந்த பழம் போலாட
    ——

    எத்தனை பெண் படைத்தான்
    எல்லோர்க்கும் கண் படைத்தான்
    அத்தனை கண்களிலும்
    ஆசையெனும் விஷம் கொடுத்தான்
    ———–

    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
    ——

    முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா கண் மூடினால் காலில்லா கட்டிலடா
    ——-

    செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா
    —–

    நான் ஒரு முட்டாளுங்க
    ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
    ————-

    தென்னை இளம்கீற்றினிலே
    தாலாட்டும் தென்றலது
    தென்னை தனை சாய்த்து விடும்
    புயலாக வரும் பொழுது
    —-

    உங்களுக்கும் பிடித்த வரிகளை சொல்லுங்கள். தமிழருவியில் சிறிது நனைவோம்.

  8. krishnan parasuraman சொல்கிறார்:

    Asokan Ponnusamy

    நண்பரே
    தமிழ் இசையில் M .S .விஸ்வநாதன் ஒரு மைல் கல். இளையராஜாவோடு தற்போது ஒப்பிடு தேவை இல்லை
    அவர் பணியை சிறப்பாக செய்து இருக்கிறார். இளையராஜா இல்லை என்றால் நீங்களும் நானும் ஹிந்தி பாடல்களை
    தான் கேட்டு இருப்போம் அந்த காலத்தில் இளையராஜா வரும் வரை அப்படி தான் இருந்தது. எப்படி A .R . ரஹ்மான் புயலோ
    அது போல S .D . பர்மன்,லக்ஷ்மிகாந்த் பியாரிலால், கல்யாண்ஜி ஆனந்த்ஜி, மற்றும் அற்புதமான R .D .பர்மன் வேறு இருந்தார்
    MSV யும், ராஜாவும் சிறப்பான இசை கோர்பாளர்கள்

  9. pradeep சொல்கிறார்:

    அண்ணே இன்னிக்குதான் உருப்படியா போட்டிருங்கிங்க‌

    மெல்லிசை மன்னர் மற்றும் இசை ஞானி ஆகியோர் இசையமைத்த பாடல்கள் மூலம்

    தமிழ் இசைக்கான புதிய வரையரைகளை உருவாக்கதா திராவிட திருடர்களை

    பற்றி திருவாய் மலருங்கள்

  10. johan-paris சொல்கிறார்:

    வள்ளுவருக்கு, கம்பருக்கு,அருணகிரியாருக்கு, தியாகராஜருக்கு விருதா கொடுத்தார்கள்.
    அதை இவர்களே வைத்திருக்கட்டும்.

  11. GiRa ஜிரா சொல்கிறார்:

    நண்பர் கிருஷ்ணன் பரசுராமனுக்கு என்னுடைய மறுமொழி,

    இளையராஜா மிகச்சிறந்த இசைமேதை என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர் வருகைக்கு முன்பு தமிழகம் இந்திப் பாடல்களையே கேட்டுக் கொண்டிருந்தது என்பது மாயை. இந்திப் பாடல்கள் 50களிலும் 50களிலும் 70களிலும் மட்டுமல்ல 80களிலும் 90களிலுமே தமிழகத்தில் பிரபலமாக இருந்தன. ஏக் தோ தீன் – தேசாப், மிஸ்டர் இண்டியா, ஹம், மைனே பியார் கியா என்று தமிழகத்தையும் கலக்கிய இந்திப் பாடல்கள் 80களில்தான் வந்தது. இந்தப் பட்டியல் இன்னும் பெரிது. அதனால் தமிழர்கள் இந்திப் பாடல்களையே கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்று சொல்வது தவறானது.

    மெல்லிசை மன்னரின் காலகட்டத்திலும் அப்படித்தான் நடந்தது. மெல்லிசை மன்னரின் பாடல்களைத் தமிழர்கள் கேட்காமலா இன்றைக்கும் நாம் கேட்டுக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறோம்?

    மெல்லிசை மன்னர் தமிழ்த் திரையிசையை இந்த அளவுக்கு முன்னேற்றியிருக்காவிட்டால், அவர் செய்த வேலையை அடுத்து வந்தவர் செய்திருக்க வேண்டும். அந்த வகையில் மெல்லிசை மன்னரின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது. இளையராஜாவின் பங்களிப்பும் போற்றுதலுக்குரியது.

  12. krishnan parasuraman சொல்கிறார்:

    GiRa ஜிரா

    நீங்கள் சொல்வதை ஏற்று கொள்கிறேன். மிக அடக்கமான மனிதர் சினிமா மாதிரி துறையில் அவர் போல் இருப்பவர் மிக சிலர்.ஆனால் ராஜா வரும் முன் ஹிந்தி இசையின் தாக்கம் அதிகம் சென்னையில் இருந்தது
    சென்னையில் பாடல்களுக்காகவே ஓடிய ஆராதனா ஷோலே மற்றும் ராஜேஷ்கண்ணா படங்கள்

  13. VETRI VEL.K சொல்கிறார்:

    GREAT MAN

  14. GiRa ஜிரா சொல்கிறார்:

    கிருஷ்ணன்,

    அதனால்தான் கேட்கிறேன். மைனே பியார் கியா, தேசாப், கயாமத் சே கயாமத் தக், மிஸ்டர் இண்டியாவெல்லாம் சென்னையில் சூப்பர் ஹிட். எங்க போனாலும் டிங்கு டாங்கு டிங்.. ஹவ்வா ஹவ்வா ஏ ஹவ்வா. இந்த ஹவ்வா ஹவ்வா பாட்டை வைத்து செந்தில் காமெடியே செய்தார். அந்த அளவுக்கு பிரபலம். அவையெல்லாம் 80களில் வந்தது என்பதால் மும்பையின் தாக்கம் ராஜா வந்த பின்னும் தொடர்ந்தது என்று கொள்ளலாமா?

  15. காரிகன் சொல்கிறார்:

    நண்பர் ஜி ரா,

    சிலரிடம் நாம் என்ன உண்மையை நேர்மையாக எடுத்துக்கூறினாலும் எல்லாம் பாலைவனத்தில் பெய்யும் மழை போலத்தான்.அதுவும் இளையராஜாவின் ரசிகர்கள் என்று வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். என்ன வேணா சொல்லிக்கொள் ஆனால் எங்க ஆளை தொடாதே என்ற அடாவடித்தனம்.

    எம் எஸ் வி க்கு இணையான இன்னொரு மகத்தான இசைஞர் தமிழில் இல்லை என்பதே உண்மை. அது இளையராஜாவோ ரஹ்மானோ வேறு யாரும் எம் எஸ் வி யின் அருகே வருவது கூட சிலரில் கற்பனையில் மட்டுமே சாத்தியம்.

    இந்த- ஹிந்திப் -பாடல்கள் -கேட்ட -தமிழர்கள் புனைவு பரவலாக பேசப்படும் தவறான தகவல். நீங்கள் சொல்வதுபோன்றே பல ஹிந்தி படங்கள் அதன் பாடல்கள் இளையராஜாவின் காலத்திலும் தமிழகத்தில் கொடிக்கட்டுப் பறந்தன. அவ்வளவு ஏன்? இளையராஜாவின் கேளடி கண்மணி பாடகன் சங்கதி என்ற புதுப் புது அர்த்தங்கள் படப் பாடல் அப்போது புகழ் பெற்ற தேசாப் என்ற படத்தின் சோகையா என்ற பாடலின் தழுவல்தானே? இதை மறுப்பவர் இரண்டு பாடல்களையும் கேளுங்கள் பிறகு பதில் சொல்லலாம்.

  16. KRISHNANPARASURAMAN சொல்கிறார்:

    இளையராஜாவை விட MSV
    தான் சிறந்த இசைஅமைப்பாளர்
    எனக்கு
    எந்த
    ஆட்சபனையும்
    இல்லை
    சந்தோஷமாகவே
    ஏற்று
    கொள்கிறேன்

  17. krishnan parasuraman சொல்கிறார்:

    GiRa ஜிரா சொல்கிறார்:
    எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை இளையராஜாவை விட நல்ல இசை அமைப்பாளர் என ஒத்துக்கொள்கிறேன்

  18. R Nagaraj சொல்கிறார்:

    nile nile amber par chaandu sab aaye என்ற இந்திப் பாட்டு இளைய நிலா பொழிகிறதே போல இருக்குதே…..

  19. krishnan parasuraman சொல்கிறார்:

    R Nagaraj சொல்கிறார்:
    nile nile amber par chaandu sab aaye என்ற இந்திப் பாட்டு இளைய நிலா பொழிகிறதே போல இருக்குதே//

    ஆமாம் ஹிந்தியில் அந்த பாட்டிற்கு கல்யாண்ஜி ஆனந்த்ஜி கஷ்டப்பட்டு இசை அமைத்தார்
    ஆனால் இளையராஜா இசை அமைத்தது போல் இல்லை இதை SPB ஒரு மேடை நிகழ்ச்சியிலும் சொல்லி இருக்கிறார்

  20. krishnan parasuraman சொல்கிறார்:

    GiRa ஜிரா சொல்கிறார்:

    எம்எஸ்வி – ஓர் அஞ்சலி
    http://solvanam.com/?p=41097#sthash.hF7Kv5l6.dpuf

    கட்டுரை நன்றாக உள்ளது படியுங்கள்

  21. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

    திருவள்ளுவர் ஒரு வேத ப்ராஹ்மணர். அவர் உண்மையான வேதம் சொல்லும் உருவமற்ற பகவானை வணங்கினார். சமஸ்கிருத வேத மந்திரங்களை ஓதினார். ஆகையால்தான் “ஆதி பகவன் முதற்றே உலகு” என திருக்குறளை தொடங்கினார்.

    பகவான் என்பது தூய சமஸ்கிருத வார்த்தை. தமிழ் வார்த்தையல்ல.

  22. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

    காதல் தமிழ்:

    தமிழ் கவிஞர்களனைவரும் பெண்களின் அழகை வர்ணிக்கும் பொழுது ப்ராஹ்மின் பெண்களின் அழகைத்தான் வர்ணித்துள்ளனர். உதாரணத்துக்கு:

    சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
    செந்தாமரை இரு கண்ணானதோ
    பொன்னோவியம் என்று பேரானதோ
    என் வாசல் வழியாக வலம் வந்ததோ
    ———–

    அழகிய தமிழ் மகள் இவள்
    இரு விழிகளில் எழுதிய மடல்
    மெல்ல மொழிவது உறவெனும் குறள்
    படித்தால் ரசிக்கும் கனி போல் இனிக்கும்
    —————

    நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
    நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன
    இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
    என் உயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ
    ———

    மதுரையில் பறந்த மீன் கொடியை
    உன் கண்களில் கண்டேனே
    போரில் புதுமைகள் புரிந்த சேரனின் வில்லை
    புருவத்தில் கண்டேனே …
    தஞ்சையில் பறந்த புலிக்கொடியை
    உன் பெண்மையில் கண்டேனே…
    இவை மூன்றும் சேர்ந்து தோன்றும்
    உன்னை தமிழகம் என்றேனே

    காஞ்சித்தலைவன் கோவில் சிலைதான்
    கண்மணியே உன் பொன்னுடலோ
    குடந்தையில் பாயும் காவிரி அலைதான்
    காதலியே உன் பூங்குழலோ
    சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான்
    சேயிழையே உன் செவ்விதழோ
    தூத்துக்குடியின் முத்துக் குவியல்
    திருமகளே உன் புன்னகையோ

    பொதிகை மலையில் புறப்படும் தென்றல்
    இளையவளே உன் நடையழகோ …
    புதுவை நகரில் புரட்சி கவியின்
    குயிலோசை உன் வாய்மொழியோ
    ————-

    இந்த பாடல்களில் நடித்த கதாநாயகிகள் அனைவருமே ப்ராஹ்மின்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் மற்ற ஜாதிப்பெண்களின் அழகைப்பற்றி பாடும்பொழுது:

    “கட்டபுள்ள குட்டபுள்ள கருகமணி போட்டபுள்ள
    நாக்கு சிவந்தபுள்ள கண்ணம்மா…”

    அதாவாது ப்ராஹ்மின்ஸ் மட்டும் இல்லாதிருந்தால், தமிழுக்கு காதலென்றால் என்னவென்றே தெரியாமல் போயிருக்கும். தமிழுக்கு காதலிக்க கற்று தந்தவர் ப்ராஹ்மின்ஸ்தான் என்றால் மிகையாகாது.

  23. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

    தமிழுக்கு காதல் இலக்கணம் கற்றுத்தந்த ப்ராஹ்மின்ஸ்: இதோ நடிகர் திலகம் அந்த பேரழகிலே உருகுகிறார்:

    கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
    கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
    சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
    சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா

    கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
    கல்லைக் கனி ஆக்கும் உந்தன் குரு வாசகம்
    உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக்கண் அல்லவா
    இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா

    கம்பன் கண்ட சீதை உன் தாயல்லவா
    காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா
    அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
    சென்ற பின் பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி
    **************

    புரட்சித்தலைவருக்கு காதலிக்க கற்றுத்தந்த ப்ராஹ்மின்ஸ்:

    தொட்டால் பூ மலரும்
    தொடாமல் நான் மலர்ந்தேன்
    சுட்டால் பொன் சிவக்கும்
    சுடாமல் கண் சிவந்தேன்
    கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை
    நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை
    ***********

    இந்த அழகும் திறமையும் மற்ற சாதிக்காரர்களுக்கு வருமா?. அவர்களை வைத்து சினிமா எடுத்தால் எவன் பார்ப்பான்?. ப்ராஹ்மின்ஸ் இல்லாவிட்டால், தமிழ்த்திரையுலகத்தை இழுத்து மூடவேண்டியதுதான். லட்சக்கணக்கானோர் வேலையிழப்பர். தமிழகத்தின் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும். தமிழும் இருக்காது, தமிழ்நாடும் இருக்காது.

  24. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

    டைட்டாக மடிசார் கட்டி, பிட்டத்தை ஆட்டி ஆட்டி சரோஜாதேவியும் ஜெயலலிதாவும் நாட்டியப் பேரொளிகளும் நடக்கும் போது, தமிழகமே தள்ளாடுகிறது. மறத்தமிழனின் மரத்துப்போன உணர்வுகள் விழிக்கின்றன. தமிழகத்தில் ஜொள்ளு பிரவாகமெடுக்கிறது. அந்த ஜொள்ளு வெள்ளத்தில் அப்படியே தமிழன் அடித்து செல்லப்பட்டு வாக்குவங்கியை அவாளிடம் தாரைவார்த்து விடுகிறான்.

    ஜெயாவுக்கு கிட்டத்தட்ட 70 வயதாகிவிட்டது. தமிழகத்தின் அடுத்த முதல்வராகும் தகுதி இனி யாருக்கு இருக்கிறதென பார்த்தால், தீபிகா படுகோனே மற்றும் ப்ரியங்கா காந்தி பாப்பாவுக்கு தமிழனின் ரசனைக்கேற்ற அழகும் திறமையும் சாமுத்ரிகா லட்சணங்களும் இருக்கிறது. குறிப்பாக ப்ரியங்கா பாப்பாவின் அந்த அழகிய புன்னகையும் பொன்னிற மேனியும் பார்த்தால் “பாப்பவோட கலருக்கும் சிரிப்புக்குமே சரியாப்போச்சு” என்று ஓட்டு குத்துகுத்தென்று குத்திவிடுவான்.

    பாப்பாரப்பட்டியிலே எதாவது ஒரு ஒல்லியான தமிழ்க்கிழவியை கட்டிப்பிடித்து ஒரு போஸ் கொடுத்தால் போதும். 237 தொகுதிகளிலும் பாப்பாதான் ஜெயிக்கும். பழைய கெளடுகளையே எவ்வளவு நாளைக்கு பார்த்து அவலை நினைந்து உரலை இடிப்பது?. வானம் பார்த்த பூமியாக தமிழகம் ஏங்கி நிற்கிறது. காலையில் எழுந்ததும் அழகிய பாப்பாக்களின் சிரிப்பை பார்த்தால் தமிழனுக்கு ஒரு புத்துணர்ச்சி வரும்.. “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு, இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு” என பாடிக்கொண்டே காலைக்கடன்களை முடித்து மளமளவென காரியம் செய்வான். மயிலாப்பூர் மஹாவிஷ்னுக்கள் மனசு வைப்பார்களா?.

  25. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

    ஹிந்தி படங்கள், ஹிந்தி பாடல்களென சொன்னாலும் அவையனைத்தும் உருது மொழிதான். சுத்த ஹிந்தியிலே படமெடுத்தால் அது ஓடாது. ஏன் ஹிந்தி படவுலகில் உருது மொழியும் முஸ்லிம் ஹீரோக்களின் ஆதிக்கமும் அதிக அளவிலிருக்கிறது?. இதற்குக் காரணம் 800 வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்த இஸ்லாமிய பேரரசு என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

    மொகலாயர் ஆட்சி 1500ல் தொடங்கியது. அதற்கு முன் 400 வருடகாலம் துருக்கியர் ஆட்சி செய்தனர், முஹமது பின் துக்ளக், அலாவுதீன் கில்ஜி ஆகியோரெல்லாம் துருக்கிய வம்சாவழியினர். முகலாயர் எனும் வார்த்தை மங்கோலியர் எனும் வார்த்தையின் திரிபு. இவர்கள் ஆப்கானியர். மொகலாய பேரரசின் முதல் மாமன்னர் பாபர். அதற்குப்பின் ஹுமாயூன், அக்பர், ஷாஜஹான், அவுரங்கசீப் என கடைசியாக 1857 வரை இந்தியாவை ஆட்சி செய்த பேரரசர் பகதூர் ஷா ஜாபர்.

    மொகலாயர் ஆட்சி காலத்தில் ஆடல் பாடல் இயல் இசை ஆகிய கலைகள் உச்சகட்டத்தை அடைந்தன. அவர்களுடைய மணைவிகளும் அந்தப்புர ஆசை நாயகிகளும் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த அழகிய பிராமின் பெண்கள்தான். ஆகையால்தான் ஆரியவர்த்தா என் சொல்லப்படும் பிராமின்ஸின் சாம்ராஜ்யமான ஆப்கான், காஷ்மீர், பாக்கிஸ்தான் ஆகிய பகுதிகள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவியது.

    இதன் விளைவைத்தான் நாம் இன்றைக்கும் ஹிந்தி படங்களில் காண்கிறோம். ஹீரோ முஸ்லிமாகவும் ஹீரோயின் பிராமின் பெண்ணாகவுமிருந்தால், அந்த படம் பாக்கிஸ்தான், ஈரான், அரேபியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சக்கை போடுபோடுகிறது. ஆகையால்தான் திலீப் குமார், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் போன்ற பாக்கிஸ்தானி பத்தான் வம்சாவழி ஹீரோக்கள் ஹிந்தி படவுலகில் கொடிகட்டி பறக்கின்றனர்.

  26. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

    ஆரியவர்த்தா சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த அழகிய ப்ராஹ்மின் பெண்கள் எப்படி மொகலாய பேரரசர்களை ஆடிப்பாடி மகிழ்வித்தனரென்பதை “நேத்து ராத்திரி யம்மா” பாடலில் மிக அழகாக விவரிக்கிறார் கமலஹாசன்.
    ————-

    “ஆவோஜி ஆவ் அனார்கலி அச்சா அச்சா பச்சைக்கிளி
    அம்மாடி ஆத்தாடி உன்னால தான்

    கண்டேனடி காஷ்மீர் ரோஜா வந்தேனடி காபூல் ராஜா
    என் பேருதான் அப்துல் காஜா என் கிட்டேதான்
    அன்பே ஆஜா..

    அனார்கலி நான்தானய்யா அன்பே சலீம் நீதானய்யா
    அம்மாடி ஆத்தாடி உன்னால தான்..

    என்னோடு வா துபாய் ஏராளந்தான் ருபாய்
    ஒட்டகங்கள் இருக்கு பெட்டகங்கள் இருக்கு
    உன்னை நானும் வெச்சிருப்பேன் அன்பாய்

    குபேரன் உன் பையைத் தொட்டேன்
    குசேலனின் கையைவிட்டேன்
    அந்தப்புரம் வந்தவுடன் அந்தரங்கம் கண்டவுடன்
    ஆசைகள் அப்பப்பா ..”

    ஷாஜஹானுக்கு குபேர் எனும் பெயருமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

  27. GiRa ஜிரா சொல்கிறார்:

    மெல்லிசை மன்னர் சிறந்த இசையமைப்பாளரா இசைஞானி சிறந்த இசையமைப்பாளரா என்ற பிரச்சனைக்கே நான் வரவில்லை. இருவரும் அவரவர் வழியில் சிறந்தவர்கள். இருவரையும் நான் மதிக்கிறேன்.

    நான் சொல்ல விரும்பிய கருத்து ஒன்றே ஒன்று. இளையராஜா வருவதற்கு முன்பு தமிழர்கள் தமிழ்ப் பாட்டே கேட்கவில்லை. ஹிந்திப் பாட்டுதான் கேட்டார்கள் என்று சொல்லும் தவறான கருத்தைத்தான் நான் எதிர்க்கிறேன். ஹிந்திப் பாடல்கள் தமிழகத்தில் எப்போதும் கேட்கப்பட்டுக் கொண்டுதான் இருந்தன. 80களில் தமிழ்நாட்டில் சூப்பர் ஹிட்டாக ஓடிய இந்திப் படங்களின் பெயர்கள் சிலவற்றைக் குறிப்பிட்டிருக்கிறேன். படமாக இல்லாமல் வெறும் கேசட்டாக வெளிவந்து சக்கை போடு போட்ட ஹவா ஹவா பாட்டை மறுக்க முடியுமா? மேட் இன் இண்டியா என்றொரு பாட்டு தொன்னூறுகளின் தொடக்கத்தில் பிரபலமானதையும் மறுக்கத்தான் முடியுமா?

    2000க்குப் பிறகுதான் தமிழகத்தில் இந்திப் பாடல்கள் கேட்பது குறைந்தது என் கருத்து. ஏனென்றால் அங்கும் நல்ல இசையமைப்பாளர்கள் இல்லை. அவ்வளவுதான் விஷயம்.

    இளையராஜா வருவதற்கு முன்பும் பின்பும் பிரபலமான இந்திப் பாடல்கள் தமிழகத்தில் கேட்கப்பட்டன என்பதே நான் சொல்ல விரும்பும் கருத்து. இதில் இளையராஜாவுக்கு எந்த மரியாதைக் குறைவும் இல்லை. அவரது இசைராஜாங்கம் அப்போது மிகச்சிறப்பாகவே நடந்தது.

    இளையராஜா வந்துதான் இந்திப் பாடல் கேட்ட தமிழர்களைத் தமிழ்ப் பாடல் கேட்க வைத்தார் என்று சொல்லப்படும் பொய்யான வாதத்தை மட்டும் நான் மிகத்தீவிரமாக எதிர்க்கிறேன். இளையராஜாவை நான் எதிர்க்கவில்லை.

  28. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

    நினைத்தாலே இனிக்கும் படத்திற்கு பிறகு எம்.எஸ்.வி கிட்டத்தட்ட ரிட்டையர் ஆகிவிட்டார் என்றே சொல்லலாம். அந்த காலகட்டத்தில், “செந்தூரப் பூவே” பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கத்தொடங்கியது. எம்.எஸ்.வி விட்டுச்சென்ற ராஜாங்கத்தை இளையராஜா மிக அருமையாக நடத்தினார். 90க்குப் பிறகு இளையராஜா இசைஞானியாகி கிட்டத்தட்ட துறவறம் வாங்கிவிட்டார் என்றே சொல்லலாம். பாரதிராஜா போன்ற அருமையான டைரக்டர்கள் காணாமல் போய்விட்டனர்.

    இன்று தமிழ்த்திரையுலகில் நல்ல திறமைசாலிகள் யாருமில்லை. கமல் ரஜினி சகாப்தம் முடிந்தது. நாயகன் படத்தில் வாப்பாவுக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அந்த கொடுங்கோல் போலிஸ்காரனை தெருத்தெருவாக விரட்டியடித்து ஹிந்து முஸ்லிம்களின் மனதை கொள்ளை கொண்ட வேலு பாய் எங்கே?. இன்று ஹிந்துத்வா விட்டெறியும் ரொட்டித்துண்டுக்கு விஸ்வரூபமெடுத்து வாலாட்டும் பாப்பான் கமல் எங்கே?. அய்யகோ. அருமையான நாயகன் வீணாகிப் போய்விட்டான்.

  29. gilbert johnson சொல்கிறார்:

    முஹம்மத் அலி ஜின்னா

    பாய் ஏன் இப்படி பொலம்பற போய் டாக்டர பாரு

  30. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

    // பாய் ஏன் இப்படி பொலம்பற போய் டாக்டர பாரு //
    —————-

    பாபரி மஸ்ஜிதை இடித்தான். நாங்கள் பேசவில்லை.

    கோவையில் குண்டுவைத்து முஸ்லிம்கள் மீது பழி போட்டான். நாங்கள் பேசவில்லை.

    குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்தான். நாங்கள் பேசவில்லை.

    இப்பொழுது கொலைகாரன் பிரதமன் ஆகிவிட்டான். இனியும் பேசாமலிருந்தால் எங்களை கப்ரஸ்தானுக்கு அனுப்பிவிடுவான். ஆகையால்தான் பேசுகிறோம். பேச வைத்துவிட்டான்.

    இனி இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம் எனும் முடிவுக்கு வந்துவிட்டோம். தேவைப்பட்டால் அடுத்த பாக்கிஸ்தானுக்கும் ரெடி. “புலி வருது புலி வருது” என புருடா விட்டான். இதோ வந்துவிட்டது. உன்னால் என்ன புடுங்கமுடியும்?.

  31. G.Sundar சொல்கிறார்:

    MSV deserved Bharath Rathna. Atleast he could have been awarded Padma Vibushan.

  32. kalai சொல்கிறார்:

    நல்ல பதிவு.. இப்போது தான் பார்க்கிறேன் .. என்னுடைய கருத்தும் இதே தான். நன்றி ..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s