Monthly Archives: ஏப்ரல் 2015

பெரியார் திடலை பாதுகாத்தவர்களுடன்..

இந்து மதவாத குண்டர்களிடமிருந்து பெரியார் திடலை பாதுகாக்க சிறை சென்ற, திராவிடர் கழகத் தோழர்களுடன். ‘இது தான் பெரியார் பிறந்த மண்ணின் யோக்கியதையா?’

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

தேசத் துரோகி – குருத் துரோகி பாரதிதாசனும் தேசப்பக்த அறிஞர்களும்

என்னுடைய ‘பாரதி’ய ஜனதா பார்ட்டி’ புத்தகத்தில் ஓர் இடத்தில்கூட பாரதிக்கு மாற்று பாரதிதாசன் என்று குறிப்பிடவில்லை. அப்படியிருந்தும் அறிஞர்கள், அவர்களின் விவாத வசதிக்காக, ‘‘இவர்கள் பாராட்டுகிற பாரதிதாசனே, பாரதியை புகழ்ந்தும், அவரை இகழ்ந்து பேசியவர்களை இகழ்ந்தும் பேசி இருக்கிறார். அதற்கு இவர்கள் என்ன சொல்கிறார்கள்?’’ என்று மிகப்பெரிய ‘பாயின்டை’ எடுத்து விட்டு மடக்கி விட்ட பாணியில். … Continue reading

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

பாரதி-தாசன்; பி.ஜே.பி, சி.பி.எம், ஆர்.எஸ்.எஸ், சி.பி.ஐ

பாரதியின் ‘இந்து’ உணர்வை நான் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியபோது, எனக்குப் பதில் சொல்வதாக, “பாரதிதாச‘னே’ பாரதியை தீவிரமாக ஆதரித்தவர்.” என்று ‘னே’ போட்டுப் பாரதிதாசனை மிகப் பெரிய கவிஞராக விளித்தவர்கள் யாரும்; அப்போதும், இப்போதும், எப்போதும் அவரை ஒரு கவிஞராக, பாரதியைக் கொண்டாடுவது போல் கொண்டடுவதில்லை. பார்ப்பனர்கள், இந்து அமைப்புகள் மட்டுமல்ல, கம்யுனிஸ்டுகள், பகுத்தறிவுப் பொங்கும் பேராசிரியர்கள், … Continue reading

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

கோமாதா Vs மாட்டுக்கறி – நிலநடுக்கம்

1000 கணக்கான மக்கள், நேபாளத்தில் நிலநடுக்கத்தால் மரணமடைந்திருக்கிறார்கள். அவர்களை அவமானப்படுத்துவது போல் ‘மாட்டுக்கறிச் சாப்பிட்டதினால் பூகம்பம் வந்தது’ என்கிறார் ஒரு இந்து தலைவர். உலகின் ஒரே இந்து நாடு நேபாளம். பதிலுக்கு ‘இந்து நாடாக இருப்பதினால்தான் நிலநடுக்கம் வந்தது’ என்றால்… இந்து தலைவர்கள் என்ன விளக்கம் தருவார்கள்? அது சரி. இந்து நாடாக அறிவித்திருக்கிற அங்கேயே … Continue reading

Posted in கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

‘ஆள்’ அதே ‘..மால்’ தானே

டீ கடையில் டீ குடிக்கும் போது, தற்செயலா இரண்டு வார்த்தைக்கூட பேசுவதற்கு லாயக்கற்றவர்களோடு, டீ.வி யில எல்லாம் பேச நேரிடுவது கொடுமை. 23 April at 08:50 ‘ஆள்’ அதே ‘..மால்’ தானே * தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும், பி.ஜே.பி மற்றம் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்து மதம், வேதம், புராணம் குறித்து‘ம்’ அடிப்படை … Continue reading

Posted in பதிவுகள் | 3 பின்னூட்டங்கள்

‘தந்தி’ தொலைக்காட்சிக்கு மட்டுமல்ல..

நெற்றியில் குங்குமம், திருநீர் வைத்திருக்கிற ஒரு நபரை, இந்துவாக மட்டும் பார்க்காமல், அவரை ஒரு பொதுநபராகக் கருதி, பல பிரச்சினைகள் குறித்துக் கருத்துக் கேட்கிற ஊடகங்கள்; தொப்பியும், தாடியும் வைத்திருப்பவரை பொதுநபராகக் கருதி, அவரிடமும் பொதுப் பிரச்சினைகளைக் கேட்காமல், ‘முஸ்லிமாக’ மட்டுமே அவரை அடையப்படுத்துவது ஏன்? இந்தக் கேள்வி ‘தந்தி’ தொலைக்காட்சிக்கு மட்டுமல்ல.. 12 April … Continue reading

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்

முடியில.. நன்றியோ நன்றி..

‘சக்கரவள்ளி கிழங்கே சமைஞ்சது எப்படி..?’ என்று தமிழ் உணர்வை ஊட்டி தமிழர்களைத் தட்டியெழுப்பிய அய்யா பெருந்தமிழர் ‘வாலி’ அவர்களின் படத்தை, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மாட்டியிருக்கிறார்கள். பச்சைத் தமிழர் அய்யா ‘வாலி’ அவர்களின் வீரமரணத்திற்குப் பிறகு இது நடந்திருக்கிறது. அன்புத் தம்பி Thilip Kumar இந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்து ‘ரசித்தது’ மட்டுமல்ல; தாங்க முடியாமல் படமாக … Continue reading

Posted in கட்டுரைகள் | 4 பின்னூட்டங்கள்