Monthly Archives: திசெம்பர் 2014

தீவிரவாதத்தை விட ஆப்பத்தனாது ‘முற்போக்கு’

இந்து மதத்தை மற்ற மதங்களோடு ஒப்பிட்டு ஒரே அடியாக, ‘எல்லா மதங்களைப்போலும் மோசமானது தான் இந்து மதமும்’ என்று ஆணியடிப்பதே, முற்போக்கு வேடமிட்ட இந்து மனோபாவம் தான். ‘இந்து மதம்’ என்று ஒன்று கிடையாது. மற்ற மதங்களைப் பார்ப்பதைப்போல் அதைப் பார்க்க முடியாது. மதமாக இருப்பதற்குக் கூட லாயக்கற்றது ‘இந்து மதம்’ 20 November at … Continue reading

Posted in கட்டுரைகள், பதிவுகள் | 1 பின்னூட்டம்

தினத்தந்தியின் ராஜபக்சே புகழ்;வைகோ – மதிமுக சீற்றம்

தமிழகத்தில் 2008 வாக்கில் இலங்கை அரசைச் சேர்ந்த ‘அம்சா’ என்பவர் விரித்த வலையில், விரும்பிச் சிக்கி ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக, தமிழர்களுக்கு எதிராகப் பல பத்திரிகைள் செய்தி வெளியிட்டன. ‘அம்சா’ கொடுத்த விருந்தில் பல பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு இலங்கை அரசைக் கவுரப்படுத்தி, தமிழர்களைக் கேவலப்படுத்தினர். இலங்கைக்கு இன்பச் சுற்றுலாவும் சென்று வந்தனர். அம்சா வலையில் சிக்காத … Continue reading

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

கயல்: கதறுகிறது காதல்; காப்பாற்றுங்கள் சினிமாக்காரர்களிடமிருந்து..

இந்திரனின் பொம்பள பொறுக்கித் தனத்தினால், அவனைக் கவுதம முனி, ‘உடலெல்லாம் பெண்குறியாகப் போகட்டும்’ என்று சபித்தான். அதுபோல் தமிழ் சினிமாவை, ‘காலம் முழுவதும் காதலை மட்டும் தான் சொல்லித் தொலைக்க வேண்டும். வேறு எதையாவது சொன்னாலும் அதையும் காதல் வழியாகத்தான் சொல்லவேண்டும்’ என்று எந்த முனிவன் சபித்தானோ தெரியவில்லை. இந்திய மற்றும் உலகச் சினிமாக்கள் எவ்வளவோ … Continue reading

Posted in கட்டுரைகள் | 8 பின்னூட்டங்கள்

‘என்னடா நியாயம் இது?’

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இயங்கியவர்கள், அல்லது பிரிட்டிஷ் அரசைப் பார்த்துப் பயந்தவர்கள்; தன்னைப் பாதுகாத்துக் கொள்ளப் பிரான்ஸ் அரசுக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த புதுச்சேரி போன்ற பகுதிகளில் தஞ்சம் அடைந்தார்கள். பாரதியைப் போல். ‘பயந்தவர்கள்’ என்று சொல்வதற்குக் காரணம், பாரதியை விட அதிக வழக்குகளில் சம்பந்தப்பட்ட வ.உசி., புதுச்சேரியில் சென்று ஒளிந்து கொள்வதற்கு ஒருபோதும் முயற்சித்ததுகூட இல்லை. … Continue reading

Posted in பதிவுகள் | 5 பின்னூட்டங்கள்

இயக்குநர் K. பாலசந்தர் மரணமும் ‘முற்போக்கு’ ஒப்பாரிகளும்

மதமாற்றத்தைக் கண்டித்துத் தமிழில் வந்த ஒரே படம், ‘கல்யாண அகதிகள்’ அதை எடுத்தவர் இயக்குநர் கே. பாலசந்தர். ‘பெரியார் வழி குஷ்டரோகம் பிடித்தபாதை’ என்று குறியீடாக்கினார்.. ‘தில்லு முல்லு’ படத்தின், ஒரு பாடல் காட்சியில். ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் பெரியாரின், கடவுள் மறுப்பு வாசகங்களை மிக இழிவாகக் கண்டித்தவர். இடஒதுக்கீட்டை தொடர்ந்து எதிர்த்தவர் பாலசந்தர். அதன் … Continue reading

Posted in கட்டுரைகள் | 12 பின்னூட்டங்கள்

PK; இந்தி சினிமாவைத் தாண்டிய இந்திய சினிமா

மதமற்றவனாகக் காட்டுவதற்கும் மதங்களைக் கேலி செய்து கிழிப்பதற்கும் ‘வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவன்’ என்ற நாயகனின் அடையாளம் ரொம்பப் புத்திசாலித்தனம். ‘அறிவாளியாக’ மதங்களை அம்பலப்படுத்தும்போது எழுகிற எதிர்ப்பு, ‘அப்பாவியாக’ கேட்கிற கேள்விகளில் மதங்கள் கிழிந்துத் தொங்குவதை மதவாதிகளே கை தட்டி வரவேற்கிற முறையாக மாறிவிடுகிறது. நாயகனின் ‘வெகுளி’த்தனம்; இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி அறிவாளி, மாமேதை என்பதை அடையாளப்படுத்துகிறது. இவரின் … Continue reading

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்

லிங்கா; ஹாலிவுட் ரேன்ஞ்..

‘லிங்கா’ படத்தின் கிளைமாக்ஸ் பற்றிச் சிலர் விமர்சிக்கிறார்கள். ஸ்பைடர்மேன், பேட்மேன் மாதிரியான ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை ஏற்றுக்கொள்பவர்கள், அதுபோல் தமிழில் எடுத்தால் ஏற்க மறுக்கிறார்கள். – இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் . ஸ்பைடர்மேன், பேட்மேன் படங்களில் ஆரம்பத்தில் நாயகர்கள், பிக்பாக்கெட்டாக இருந்துவிட்டு, படம் முடிவில் பறந்து பறந்து மாயஜாலம் செய்யவில்லை. ஆரம்பித்திலிருந்தே அவர்கள் அது போன்ற ‘சக்தி’யை … Continue reading

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்