ஆர்.எஸ்.எஸ் சின் தமிழ் உணர்வும் மணியரசனின் தலித் உணர்வும்

images

6-11-2014 தேதியிட்ட ஜூனியர் விகடனில் ராஜேந்திர சோழனுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு விழா எடுத்ததைக் குறித்து, பெ. மணியரசன் அவர்கள்:
”சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அம்பேத்கர் விழாவைக் கொண்டாடினார்கள். ஆனால், இவர்களின் பல்வேறு கோட்பாடுகளைக் கடுமையாக எதிர்த்தவர் அம்பேத்கர். பிறகு எப்படி அவர்கள் அம்பேத்கரை கொண்டாகிறார்கள்? அதாவது அவரின் விழாவைக் கொண்டாடி தங்களுக்குப் பெருமை தேடிக் கொண்டார்கள்.

ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்கும் இவர்கள் தமிழ்மொழியை வழிபாட்டு மொழியாக அறிவிக்கப் போராடுவார்களா?” என்று கேட்டு இருக்கிறார்.

அம்பேத்கரிஸ்டை போல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை குற்றம் சாட்டுவது இருக்கட்டும். இவரே சில ஆண்டுகளுக்கு முன் ஆர்.எஸ்.எஸ் ன் அவதூறை நியாயப்படுத்துவது போல், ‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார். அதனால் அவர் இந்துத்துவ ஆதரவாளர்’ என்று அவதூறு செய்தவர் தானே.
அப்படியிருக்க இப்போது மட்டும் எப்படி டாக்டர் அம்பேத்கர் இந்துத்துவ எதிர்ப்பாளராகத் தெரிகிறார்?

‘ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்கும் இவர்கள் தமிழ்மொழியை வழிபாட்டு மொழியாக அறிவிக்கப் போராடுவார்களா?’ என்று ஆர்.எஸ்.எஸ் சை பார்த்து கேட்கிறார்.

தமிழை வழிபாட்டு மொழியாக ‘தமிழ்’ மன்னன் ராஜேந்திர சோழனே தன் ஆட்சியில் செய்யவில்லை. அப்படியிருக்க ஆர்.எஸ்.எஸ் இடம் அதை எதிர்ப்பார்ப்பது என்ன நியாயம்?

ஆக, ராஜேந்திர சோழனை தமிழ் அடையாளமாகப் பார்க்க முடியாது. அவன் சமஸ்கிருத உயர்வை போற்றிய பார்ப்பன அடியாள். அவனை ஆதரிக்கிறவர்கள் நியாயமாக ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்து விழா கொண்டாடுவதுதான் நாணயமானது.

 13 November 

தமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு – தொடரும் ஜாதியின் நிழல்

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

5 Responses to ஆர்.எஸ்.எஸ் சின் தமிழ் உணர்வும் மணியரசனின் தலித் உணர்வும்

 1. VIYASAN சொல்கிறார்:

  அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட திராவிடக்கட்சிகளின் ஆட்சியிலும் கூடத் தான் தமிழை வழிபாட்டு மொழியாக்க முடியவில்லை அப்படியானால் திராவிடத் தலைவர்கள் எல்லோரும் தமிழர்கள் அல்ல என்று கூறுவீர்களா? 🙂

  தேவார திருமுறைகள் சமஸ்கிருதத்தில் இல்லை. தமிழில் தானுண்டு. அவற்றை மீட்டுத் தந்தது ராஜ ராஜ சோழன் தான். சோழர்களின் பெரும்பான்மையான கல்வெட்டுகள் தமிழில் தானுண்டு, மிகச் சிறிய பங்கு தான் சமக்கிருதத்தில் உண்டு. அதன் காரணம், தமிழ் தான் சோழர்களின் ஆட்சி மொழி. இந்தியாவிலேயே அதிகளவு கல்வெட்டுகள் தமிழில் தானுண்டு. அவற்றில் பெரும்பான்மை சோழர்காலக் கல்வெட்டுகள். சோழர்காலத்தில் தமிழ் வழிபாட்டு மொழியாக இருக்கவில்லை என்பதற்கு சரியான ஆதாரங்களைக் காட்டாமல் வசைபாடுவது வெறும் அபத்தம்.

 2. Karthikeyan சொல்கிறார்:

  காழ்ப்பு,காழ்ப்பு,காழ்ப்பு….பெரியாரிய காழ்ப்பு.,திராவிட காழ்ப்பு…எதை பற்றியும் புரிதல் இல்லை.

 3. kavadivel61 சொல்கிறார்:

  Reblogged this on vadivelkannu (வடிவேல்கண்ணு) and commented:
  பார்ப்பன அடியாள்.

 4. Pingback: மனுநீதி சோழன்; ராமனின் வாரிசு, பிரகலாதனின் நண்பன் | வே.மதிமாறன்

 5. Pingback: திருமாலைப் போல் ஜாதி வெறியர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s