கமல் – கடவுள் மறுப்பாளரின் இறைஉணர்வு?

kamal-vairamuthu

கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம் உள்ளே கடவுள்
விளங்க முடியாக் கவிதை நான்
மிருகம் கொன்று மிருகம் கொன்று
கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்
ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று
மிருகம் மட்டும் வளர்க்கிறதே

இப்படிக் கடவுள் கருத்தை புனிதமாக்கிய இந்தப் பாடல், நம்ம ‘ஜெயேந்திரன் தியேட்டரில்’ தரை டிக்கெட் பார்ட்டி ராதாகிருஷ்ணன் போன்றவர் நடித்த பாடல் அல்ல, என்பது தெரிந்ததுதான்; அதுபோலவே இது யார் படப் பாடல் என்பதும் அதை விட உறுதியனது.

இந்து சமூக அமைப்பில் எளிய மக்களுக்கு எதிராகச் செய்த சதிகள் அனைத்தையும், கடவுள்களே செய்திருக்கிறார்கள். அந்த வகையில் கடவுளோடு ஒப்பிட்டால் மிருகங்கள் எளிய மனிதர்களுக்கு நன்மையே செய்திருக்கின்றன. இன்னும் நெருக்கிச் சொன்னால், அவை மனிதர் நல்வாழ்விற்குத் தங்கள் உயிரையே தந்திருக்கின்றன. தருகின்றன.
அப்படியானால் ஒரு பகுத்தறிவாளனின் பார்வை எப்படி இருந்திருக்க வேண்டும்?

மிருகம் பாதிக் கடவுள் பாதி
கலந்து செய்த கலவை நான்

வெளியே கடவுள் உள்ளே மிருகம்
விளங்க முடியாக் கவிதை நான்

கடவுள் கொன்று கடவுள் கொன்று
மிருகம் வளர்க்க பார்க்கின்றேன்

ஆனால், மிருகம் கொன்று உணவாய் தின்று
கடவுள் மட்டும் வளர்க்கிறதே

இப்படிதானே இருந்திருக்கனும்?
சரி, மிருகத்தைக் கொடூரத்தின் குறியீடாகச் சில நேரங்களில் சொல்வது பொருத்தமானது தான் என்றாலும்..

கடவுளை உயர்வான குறியீடாக, குற்றமற்ற மனிதனின் அடையாளமாக, புனிதமாக ஒரு பகுத்தறிவாளரால் எப்படிச் சொல்ல முடிகிறது?
அப்படிச் சொன்னால் அவர் எப்படிப் பகுத்தறிவாளர்?
அட பாடல் எழுதியவரையும் சேர்த்துதான் கேட்கிறேன்.

சரி. ‘கடவுள் புனிதம். மிருகம் கொடூரம்’ என்று ஒரு பக்தனைப் போல் ஒத்துக்கொண்டாலும்,
‘அந்த மிருகத்தைப் படைத்ததே கடவுள் தானே’ என்கிற பக்தனின் கேள்விக்குக் கூடப் பதில் அளிக்க மறுக்கிறதே..
கடவுள் மறுப்பாளரின் இறைஉணர்வு?

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

15 Responses to கமல் – கடவுள் மறுப்பாளரின் இறைஉணர்வு?

 1. மதியுள்ளமாறன் சொல்கிறார்:

  ‘அந்த மிருகத்தைப்
  படைத்ததே கடவுள் தானே’
  என்கிற பக்தனின்
  கேள்விக்குக் கூட பதில்
  அளிக்க மறுக்கிறதே..
  கடவுள் மறுப்பாளரின்
  இறைஉணர்வு?////

  நீரு கடவுள் மறுப்பாளரா, கடவுள் மழுப்பாளரான்னு இங்க பார்ப்போம். பன்றிய வெறுக்கிற மதமும் இருக்கு, கடவுளும் இருக்காரு. அதைப்பத்தி நீரு காலஞ்சென்ற பகுத்தறிவாதி பெரியார்தாசன்ட்ட கமலுகிட்ட கேட்ட மாதிரி கேட்டு இருப்பியா. அப்ப உன்கிட்ட மாறன் மட்டும் இருந்து இருப்பான். மதி கழண்டு போய் இருப்பான். அப்படி தானே.. ஒரு கடவுளை திட்டும்போது இருக்கிற பகுத்தறிவு இன்னொரு மத கடவுளை பற்றி பேச நினைக்கும்போது செத்துபோகுது. அந்தோ பரிதாபம்.

 2. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  கடவுள்,மனிதன்,மிருகம்,புனிதம்,பக்தி,கொடுரம் போன்றவை இருக்கட்டும்.
  காட்டுமிராண்டி என்றால் என்ன?விளக்கம் தேவை நண்பரே.

 3. ல.எழில்மாறன் சொல்கிறார்:

  பாம்பின் கால் பாம்பறியும்.விளக்கம் தேவையா நண்பரே !

 4. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  அவசியம் தேவை நண்பரே.

 5. ல.எழில்மாறன் சொல்கிறார்:

  அறிந்தது தானே.பிறகு எதற்கு விளக்கமும், அவசியமும், நண்பரே.

 6. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  விதண்டாவாததிற்க்கு அல்ல .அவசியம் தேவை என்பதால் தான் கேட்கிறேன் ..கூறுங்கள் நண்பரே.

 7. ல.எழில்மாறன் சொல்கிறார்:

  விடையை ( பாம்பின் கால் பாம்பறியும் ) விதண்டாவாதமாக படிப்பது உங்களுடைய பார்வை நண்பரே. நேரத்தைக் கருதி (காட்டுமிராண்டி என்பது நாகரிகம் அற்றவர் என்று கருதும் ஒருவரைக் குறிக்கும் சொல்.)

 8. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  மேற்கொண்டு எனது கருத்தை தெரிவிக்கும் முன்னர் நண்பர் மதிமாறனின் பதிலுரையும் இதுதானா?என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
  (நான் விதண்டாவாதமாக படித்தேன் என சொல்லவில்லை.பதில்கூர நினைப்போர் ஒரு விதண்டாவாதத்திற்காக கேட்கிறேன் என அலட்சியபடுத்திவிடக்குடாது என்பதற்காக சொல்லி இருந்தேன்.வழக்கம்போலவே தவறாகவே புரிந்துகொண்டுள்ளீர்கள்.)

 9. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  நண்பர் எழில்மாரனுக்கு பதிலளிப்பதற்கு முன்னர் நண்பர் மதிமாரனுக்கு கேள்வி ,,,,,,,

  ஒருவேளை அந்த பாடல் பின்வருமாரு இருந்திருந்தால் நண்பர் மதிமாரனுக்கு ஏற்ப்புடையதாக இருந்திருக்குமா?
  புத்தன் பாதி புலியும் பாதி
  கலந்து செய்த கலவை நான்
  வெளியே புலியாம் உள்ளே புத்தனாம்
  விளங்க முடியாக் கவிதை நான்
  புலியை கொன்று புலியை கொன்று
  புத்தன் வளர்க்க பார்க்கின்றேன்
  ஆனால் புத்தனை கொன்று உணவாய் தின்று
  புலி மட்டும் வளர்க்கிறதே!

  பகுத்தறிவு கடவுளைதான் ஏற்றுகொள்ளாது .ஆனால் புத்தனை ஏற்றுகொள்ளுமல்லவா? கடவுள் எனும் சொல்லையும் சில சின்னங்களையும் எதிர்த்து பேசுவதுதான் இவர்களது பகுத்தறிவு.

 10. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  நண்பர் ல.எழில்மாரனுக்கு ,,

  தமிழன்,ஆரியன்,திராவிடன்,என ஒருவனையோ ஒரு இனத்தையோ சுட்டிகாட்டுவதுபோல சுட்டிக்காட்ட முடியாதது “காட்டுமிராண்டி” என்பது.
  நீங்கள் குறிப்பிட்டதைப்போல நாகரீகம் அற்றவர் என்பதை சுட்டுவதாக விளங்கிகொன்டாலும் நாகரீகம் என்பதுவும் மனிதனுக்கு மனிதன் சமுதாயத்திற்கு சமுதாயம் காலத்திற்கு காலம் மாறுபடக்குடியது.
  ஆடை உடுத்துபவனுக்கு ஆடை அணியாதபவன் காட்டுமிராண்டி ,பச்சை காய்கறிகளை மட்டும் சாப்பிடுபவனுக்கு அசைவம் சாப்பிடுபவன் காட்டுமிராண்டி,அசைவத்திலும் சமைத்து சாப்பிடுபவனுக்கு அதை (பச்சையாக) சாப்பிடுபவன் காட்டுமிராண்டி,சிலவகை மிருகங்களின் கறியை உண்ணாத அசைவ உணவர்களுக்கு வேறு சிலவகை மிருகங்களின் கறியை சாபிடுபவன் காட்டுமிராண்டி,அன்பு கருணை ,கோபம் இப்படி எல்லா விசயங்களிலும் இந்த அளவீடு மாறிகொண்டே இருக்கக கூடியது (எவ்வாறு ஒரு முழம் என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடக்கூடிய அளவீடோ அதேபோலதான்). ,,,இப்படிதான் காட்டுமிராண்டி என்பதும்.அது ஒரு தன்மையை,நிலைமையை,இயல்பை குறிப்பது. இதற்க்கு ஒரு வரைமுரையையோ,ஒரு உருவத்தையோ,இருப்பிடதையோ,அல்லது இது இல்லாது இருக்குமிடதையோ இதன் தோற்றம் மற்றும் மறைவையோ நம்மால் குறிப்பிடமுடியாது.
  ஆனால் ஒரு கீழான நிலை என்பதை நமக்கு உணர்த்துகிறது .
  அதே போலதான் கடவுள் என்பதும் .காட்டுமிராண்டி என்பதற்கு மேற்குறிப்பிட்ட எல்லா குறிப்புகளும் கடவுள் என்பதற்கும் பொருந்தும்.ஆனால் எதிர்நிலை .அவ்வளவுதான்.
  அதாவது காட்டுமிராண்டி தாழ்ந்த நிலை.கடவுள் உயர்ந்த நிலை.அவ்வளவுதான்.
  இதில் காட்டுமிராண்டியை எவ்வித ஆராய்ச்சியுமின்றி ஏற்றுக்கொள்ளும் பகுத்தறிவு கடவுள் எனும் சொல்லைகண்டால் மட்டும் (அதுவும் குறிப்பாக ஒரு மதத்தினரது கடவுள்களுக்கு மட்டும் )சீறுவது ஏன்?சில அடையாளங்களை மட்டும் கண்ணை மூடிக்கொண்டு சாடுவது ஏன்? பகுத்தறிவு வேலைசெய்யுமிடங்கள் என ஏதேனும் வரைமுறை உள்ளதா?அல்லது இதுதான் பகுத்தறிவா?
  பகுத்தறிவுவாதிகள் என சொல்லிகொள்வோர் கடவுளை பற்றி கேட்க்கும் எல்லா கேள்விகளையும் விமர்சங்களையும் காட்டுமிராண்டி என்பதை குறித்தும் உங்களுக்கு நீங்களே கேட்டு ஒப்பீடு செய்து பாருங்கள்.விளக்கம் கண்டுபிடித்துபாருங்கள்.
  இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் எதிர் நிலை என்பதைத்தவிர எந்த ஒரு வேறுபாடும் இல்லாதிருப்பதை உணருவீர்கள்.
  இதில் ஒன்றை அர்த்தம் புரியாத நிலையிலும் ஏற்றுக்கொண்டு ஒன்றைமட்டும் கண்டு கடந்தவர் போல விமர்சிப்பது ஏற்கத்தக்கதல்ல.

 11. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  சரி. ‘கடவுள் புனிதம். மிருகம் கொடூரம்’ என்று ஒரு பக்தனைப் போல் ஒத்துக்கொண்டாலும்,
  ‘அந்த மிருகத்தைப் படைத்ததே கடவுள் தானே’ என்கிற பக்தனின் கேள்விக்குக் கூட பதில் அளிக்க மறுக்கிறதே..
  கடவுள் மறுப்பாளரின் இறைஉணர்வு?

  பெண்ணை படைத்ததும் கடவுள்தான் என்றாலும் தாய், சகோதரி, மனைவி, மகள் என வேறுபடுத்தி உணர,நடந்துகொள்ள தெரிகிறதல்லவா நண்பர் மதிமாறன்.

 12. R Chandrasekaran சொல்கிறார்:

  கமலுக்கு என்ன தைரியம் இருந்தால் அன்பே சிவம் என்று எடுப்பார்… அன்பே மிருகம் என்றால்லா எடுக்க வேண்டும்.. அப்படி எடுத்திருந்தால் மதி போனால் போகிறது என்று சர்டிபிகேட் கொடுத்திருப்பார்… சேச்சேசேசேசேசே

 13. Karthikeyan.K சொல்கிறார்:

  velumani……Sorry neenga Roomba time waste panirnga….this people wont worth or deserve this…
  Chandrasekar…but your reply is nice and funny…..

 14. Pingback: கமல்-மதன்-திருவள்ளுவர் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s