Monthly Archives: நவம்பர் 2014

பிரபாகரன் – டாக்டர் அம்பேத்கர் – பெரியார்

பிரபாகரன் பிறந்த நாளை இவ்வளவு எழுச்சியோடு கொண்டாடுகிற பெரியார் இயக்கங்கள், தொண்டர்கள்; பெரியார் தீவிரமாக இயங்கிய; பார்பபன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு அரசியலுக்கு நெருக்கமாக என்பதை விடவும் பெரியாரை போலவே செயல்பட்ட டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையும் இதுபோல் கொண்டாடியிருந்தால்… அதுபோலவே தலித் இயக்கங்கள், தலித் அரசியல் கண்ணோட்டத்தைத் தாண்டி, பிரபாகரன் … Continue reading

Posted in பதிவுகள் | 6 பின்னூட்டங்கள்

இராமலிங்க அடிகள் VS நம்பூதிரிபாட்

மார்க்சியத்தை விஞ்ஞானப் பூர்வமாகப் புரிந்து கொண்ட பிறகும், அறிவியலுக்கு எதிராகப் பிறப்பாலேயே உயர்வு தாழ்வு எனறு புனிதப்படுத்திய ‘நாலு வர்ண’ நான்கு வேதங்களில் கம்யுனிசத்தைத் தேடிய, தன் பெயரை மறைத்து தன் ஜாதி பெயரையே தன் பெயராக அடையாளப்படுத்திக் கொண்ட, ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் (1909 –1998) என்ற கம்யுனிஸ்டை விட; விஞ்ஞானத்திற்குப் புறம்பாக … Continue reading

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

தமிழால் ‘இந்து’வாக இணையச் சொல்லுகிற நாளிதழுக்கு மறுப்பு

தமிழால் இணைகிற ‘தி இந்து’ நாளிதழில், ‘எம்.எஸ்.எஸ். பாண்டியன்: இன்றைய சுயமரியாதை இயக்கத்தின்‌‌ மறதி’ என்ற தலைப்பில் சி.லக்‌ஷ்மணன் – அன்புசெல்வம் இருவர் எழுதியக் கட்டுரையை மறுத்து நான் எழுதியது: * பிரச்சினையை தலைகீழாகச் சொல்கிறது கட்டுரை. பெரியாருக்குப் பின் தமிழ் நாட்டில் இந்து மத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு அரசியல் வளரவில்லை. மாறாகப் பெரியார் … Continue reading

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்

ருத்ரையா-எம்.எஸ்.எஸ். பாண்டியன்; ஒப்பாரி வைப்பதால் என்ன பயன்?

இயக்குநர் ருத்ரையா வை 1992 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் நண்பர் தீஸ்மாஸ், (Theesmas Desilva) இயக்குநர் அருண்மொழி,(Arunmozhi Sivaprakasam) நான் மந்தைவெளியில இருந்த அவர் வீட்டில் சந்ததித்தோம். நாங்கள் நடத்திய ‘இசைஞானி இளையராஜா ரசிகன்’ இதழின் சிறப்புப் பேட்டிக்காக. இளையராஜாவுடனான அவர் அனுபங்களைச் சுவரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார். அப்போதும் அவர் அடுத்தப் படத்திற்கான முயற்சியில் … Continue reading

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்

கவுண்டமணி vs சரத்குமார்

‘பொறுமையைக் கையாண்டு கொண்டிருக்கிறார் இந்தச் சரத்குமார்’ – பத்திரிகையாளர் சந்திப்பில் சரத்குமார். ‘அவன் திருந்திட்டான்னு அவனே சொன்னான்’ -கரகாட்டக்காரனில் கவுண்டமணி. 19 November at 17:04 கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும் உலகக்கோப்பை கிரிக்கெட்; கவுண்டமணி, செந்திலை நினைவூட்டுகிறது ஆர்யாவின் திறமையான இன உணர்வும் – சரத்குமார், குகநாதனின் சலசலப்பும் சுப்ரீம் ஸ்டாருக்கு கண்டனமும் நன்றியும்

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்

நன்றி பேராசிரியருக்கு..

20.03.2014 அன்று பெரியார் நூலக வாசகர் வட்டத்தில், ‘பெரியார் ஒருவர் தான் தலித் தலைவர்; அம்பேத்கரியல் பார்வை’ என்ற தலைப்பில் 1 மணி 40 நிமிடங்கள் அடங்கிய என் பேச்சின் முதல் ‘6 நிமிடங்கள்’ குறித்தும் மட்டும், கலைஞர் தொலைக் காட்சியில், ‘ஒன்றே சொல், நன்றே சொல்’ நிகழ்ச்சியில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் பேசுகிறார். … Continue reading

Posted in பதிவுகள் | 3 பின்னூட்டங்கள்

`பாத்துக்க.. ஒழுங்கா.. இரு’

‘காஞ்சிபுரம் என்றால் ஜெயேந்திரன்’ என்று இருந்த இழிவைத் தகர்த்து, காஞ்சிபுரம் என்றால், ‘காஞசி மக்கள் மன்றம்’ என்பதை ஜெயேந்திரனுக்கு எதிரான போராட்டங்களின் மூலமே திருத்தி எழுதிய மக்கள் மன்றத் தோழர்களோடு ஒரு நாள். காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் இன்னும் பல இடங்களில் ‘மக்கள் மன்றம்’ என்றால் ஒரு மரியாதையும் பயமும் இருக்கவே … Continue reading

Posted in கட்டுரைகள் | 1 பின்னூட்டம்