சன்-கலைஞர்:சொத்துக் குவிப்பு ‘திரும்ப திரும்ப பேசுற நீ’

1tv 34d64722dd9e363bdb6598a720883736

சன் டி.வி. கலைஞர் டி.வி இரண்டும் சொத்துக்குவிப்பு வழக்குப் பற்றி, ‘நிலைய வித்துவான்’களை வைத்து திரும்ப திரும்ப மொக்கையா பேசுனதையே பேசி சாவடிக்குது.

நிகழ்ச்சியை நடத்துகிற சிலர்… எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் போல் உளறுவது.. அதுவும் நான் ஸ்டாப்பா. அறியாமையை அதிகாரத்தோட பேசுறது.. முடியில.. (நிகழ்ச்சியை கட்டுக்குள்ள வைச்சிருக்காங்களாமா..)

கடந்தகால தவறுக்கு வழங்கப்பட்டிருக்கிற தண்டனை, ‘அது என்ன கடந்தகால தவறு?’ என்று நிகழ்காலத்தில் மக்களுக்கு தெரிந்திருக்க அல்லது நினைவிலிருக்க வாய்ப்பில்லை.

ஆக, என்ன சொத்துக்கள் வாங்கப்பட்டன? வாங்கிய பொருட்கள் என்ன? அம்மா இப்போது எளிமையாக காட்சிளிப்பதற்கான பின்னணி என்ன? பல லட்சம் மதிப்புள்ள காலணிகள், ஆடம்பர திருமணம் எப்படி நடத்தப்பட்டது? வளர்ப்பு மகன் திருமணத்தின் போது இருவரும் பட்டுபுடவை, நகைகள், ஒட்டியானம் கட்டிக் கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், மிக பிரம்மாண்டமான அந்தத் திருமண ஊர்வலத்தில் அவர்கள் நடந்து சென்றது’ இதுபோன்ற கோப்புக் காட்சிகளை வரிசைப்படுத்தி, இந்தத் தீர்ப்பு விவரம் பின்னணியில் ஒலிக்க, அதை ஒரு டாக்குமெண்டரிபோல் நேர்த்தியாக தொகுத்து ஒளிபரப்பினால் மக்களுக்கு உண்மை விளங்கும்.

சொத்துக் குவிப்பு விவரங்கள் குறித்த நேர்த்தியான script, மிகத் தெளிவாக நிதிபதியே தன் தீர்ப்பின் வடிவத்தில் தந்திருக்கிறார். அதை வைத்துக்கொண்டு விளையாடலாம். அப்படி செய்தால்.. அந்த தீர்ப்பின் நியாயம் மக்களுக்கு தெளிவாகப் புரியும்.

இத விட்டுட்டு.. அரைச்சமாவையே அரைச்சிகிட்டு…
காட்சி ஊடகத்திலேயும் ரேடியோ மாதிரி தொண தொணன்னு.. அதிகம் பேசிக்கிட்டே இருக்காங்க… அதுவும் பேசினதையே…

‘திரும்ப திரும்ப பேசுற நீ’

நன்றி:அதிமுக வினருக்கும் இன்னும் சில..

வின்னர் பட வடிவேலுவையே வீழ்த்திட்டாங்க.

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

4 Responses to சன்-கலைஞர்:சொத்துக் குவிப்பு ‘திரும்ப திரும்ப பேசுற நீ’

  1. yarlpavanan சொல்கிறார்:

    சிறந்த பதிவு
    தொடருங்கள்

  2. பூஆ.இளையரசன் சொல்கிறார்:

    சும்மா தொன தொனனு பேசனதையே பேசுறா௩க. நீ தி௫ம்ப தி௫ம்ப பேசுற…

  3. Pingback: தீர்ப்பை எதிர்த்து சிறப்பாக நடக்கும் பெரியார் பணி | வே.மதிமாறன்

  4. Pingback: மக்கள் ஜாமீனை விரும்பவில்லையா? | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s