Monthly Archives: ஒக்ரோபர் 2014

‘ஆசை வெட்கம் அறியாது’ ஜாதி..

‘ஆசை வெட்கம் அறியாது’ ஜாதி உணர்வும்தான். அதுவும் ‘ஜாதி ஒழிப்பு’ பேசுகிற ‘முற்போக்காளர்’களிடமிருந்து வெளிபடுகிற ஜாதி உணர்வு – வெட்கம் மட்டுமல்ல; சூடு, சொரணை, மானம், மரியாதை எதையுமே அறியறதில்ல. அற்பத்தனம் தமிழன்; வர்க்க உணர்வும் – ஜாதி உணர்வும் கலந்து செய்த கலவை

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

‘அரசியல் நாகரீகம்’-அரியர்ஸ் இல்லாமல் ‘பாஸ்’

நேற்று, மருத்துவர் அய்யா வீட்டின் திருமண நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்ட வைகோவும் ஸ்டாலினும் பரஸ்பரம் அன்பை பரிமாறிக் கொண்டு, பத்திரிகையாளர்களிடம் பேசினார்கள், ‘இது அரசியல் நாகரீகம்’ அன்று கலைஞருக்கு திருமண அழைப்பிதழை தந்து விட்டு, கோபாலபுர வீட்டு வாசலில் நின்று மருத்துவர் அய்யா சொன்னார், ‘அரசியல் நாகரீகம் தெரிந்தவர் கலைஞர்.’ அடுத்தவர்கள் அரசியல் நாகரீகம் பற்றி … Continue reading

Posted in பதிவுகள் | 2 பின்னூட்டங்கள்

விஜய்; மலையாளிகளை வென்ற மாவீரன்

கேரளாவில் திரையரங்குகள் குறைவு. மலையாளப் படங்களை திரையிடுவதற்கே தியேட்டர்கள் கிடைப்பதில்லை. இந்தச் சூழலில், ‘கத்தி’ திரைப்படம் மொழி மாற்றம் கூட செய்யப்படாமல் கேரளா முழுவதும் நேரடியாக தமிழிலேயே 200 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. மலையாள சினிமாவின் மீதும் மலையாளிகளின் மீதும் நிகழ்த்தப்பட்டிருக்கிற இந்த ‘கத்தி’ குத்து, பெரிய வன்முறை. தமிழர்கள் மீதும் தமிழ்த் திரைப்படங்ள் மீதும் … Continue reading

Posted in பதிவுகள் | 2 பின்னூட்டங்கள்

எஸ்.எஸ்.ஆர்: தற்கொலைக்கு முயன்றேன் – பெரியார் என்னை அவமானப்படுத்தி விட்டார்

எம்.ஜி.ஆர் முதல் இன்னும் பலரும் தன்னுடைய பிரபலத்திற்காக, அதிகாரத்திற்காக அரசியலை, தான் சார்ந்த கட்சியை பயன்படுத்தியபோதும்; தன் பிரபலத்தை, தன் பணத்தை தான் சார்ந்த கட்சியின் வளர்ச்சிக்காக பயன்படுத்தியவர் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். திரை நடிகர்களிலேயே இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் என்ற அரசியல் நிலைக்கு உயர்ந்த பிறகும், அதை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி, தலைமை … Continue reading

Posted in கட்டுரைகள் | 7 பின்னூட்டங்கள்

கத்தி: நிறைய விமர்சனங்களோடு அதிகமாக பிடித்திருக்கிறது

இந்திய சினிமாவில் பன்னாட்டு நிறுவனத்தை வில்லனாக்கி ஒரு தமிழ் சினிமாவா? மல்டி நேஷன் கம்பெனிகளுக்கு 50 பேர்கள் மட்டுமே அடியாட்கள் அல்ல; அவர்களுக்கு அடியாள் வேலை பார்ப்பதே அரசாங்கம் தான். ‘சிறுத்தை’ சினிமா பாணியில் ஒரே உருவம் கொண்ட இருவர் ஆள் மாறாட்டம் மூலமாக தனிமனித சாகசம் செய்து, ‘பங்கஜ்லால் அடகு கடையை’க் கூட ஒழிக்க … Continue reading

Posted in பதிவுகள் | 5 பின்னூட்டங்கள்

எல்லா அறிவாளிகளும் நம்ம நாட்லதான் இருக்காங்க..

கொலைக் குற்றத்தில் உள்ள போய் வந்த ஆளு Chair ல ஒக்கந்தும்… மந்திய மந்திரி தரையில் ஒக்காந்தும் இருக்கிற இந்த பண்பாடு.. உலகத்துல எந்த நாட்லயும் நடக்காதது… பார்ப்பனியத்தை விமர்சிக்க மறுக்கிற கம்யுனிஸ்டுகளும்.. இணையத்தில் இருக்கிற பாரதி போன்ற முற்போக்காளர்களும்.. இதற்கு விளக்கம் கண்டிப்பா கொடுக்க மாட்டாங்க.. அவ்வளவு ஏன்..? Like கூட பண்ணமாட்டாங்க.. காரணம் … Continue reading

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

..இதுகூடவா இந்து மதத்திற்கு எதிரானது?

சுற்றுச் சூழல் ஆர்வலர்களாக காட்டுயிர்கள் மீது அக்கறை கொண்டவர்களாக பறவைகள் மொழி தெரிந்தவர்களாக நவீன இலக்கியவாதிகளாக இன்னும் கம்பனிடம் கம்யுனிசம் காண்பவர்கள் பாரதியிடம் உலகின் ஒட்டு மொத்த தீர்வையும் தரிசிப்பவர்கள் பெரியாரை தவிர்ப்பதற்காகவே தலித் மக்கள் துயரம் நினைத்து தூக்கம் வராமல் தவிப்பவர்கள் சுற்றுச் சூழல் முதல் பெண்ணிய விடுதலை வரை ஆண்டாளின் திருப்பாவையில் ‘பேன்’ … Continue reading

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்