வின்னர் பட வடிவேலுவையே வீழ்த்திட்டாங்க

vadivelu

வந்த, ‘சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை பற்றி என்ன சொல்றீங்க?’ என்றால்..
வராத ஸ்பெக்ட்ரம் ஊழல் ‘தீர்ப்பை’ வரவேற்று பொங்குகிறார்களே..? இந்தக் கோமாளித்தனங்களுக்கு ஒரு முடிவோ எல்லையோ கிடையாதா?

September 28

திருவள்ளுவர் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது முந்தைய திமுக அரசு. ஆட்சிக்கு வந்த உடனேயே அதை மாற்றி, இந்து பார்ப்பன சமஸ்கிருத நாளான சித்திரை ஒன்றையே மீண்டும் தமிழ்ப்புத்தாண்டாக நிறுவினார் அம்மா.
அம்மாவின் தமிழ் விரோத நடவடிக்கையை மறந்தும் கண்டிக்காத முற்போக்காளர்கள் சொல்கிறார்கள்..
‘ஊழலுக்கு எதிரான இந்தத் தீர்ப்பின் மூலமாக, தமிழ் விரோத இந்து மத சக்திகள் தமிழகத்தை கைப்பற்றி விடுவார்களாம்’

September 28

அரசியல் ஆய்வோ, தெளிவோ இல்லாத சாதாரண தொண்டர்களாக இருக்கிற அதிமுகவினர் அம்மா கைது குறித்து, ‘சுப்பிரமணிய சுவாமி ஒழிக, கருணாநிதி ஒழிக’ என்று சம்மந்தப்பட்ட அரசியலுக்குள்ளே முழங்குகிறார்கள்.

அரசியல் ஆய்வும் தெளிவும் நிறைந்த மேதைகளோ, அதற்கு நேர் எதிராக பட்டையை கிளப்புகிறார்கள்.
அதில் ஒரு மேதை நேற்று டி.வியில், ‘காவேரி பிரச்சினையில் சட்ட ரீதியாக அம்மா எடுத்த அதிரடி முடிவுகளால பாதிக்கப்பட்ட கன்னட வெறியர்கள், அம்மா மீதும் தமிழர்கள் மீதும் வெறிகொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் பெங்களுரில்…. இந்த தமிழ் இன விரோதிகளை..’ என்று வீரம் பொங்க பொங்க பேசினார்.

வின்னர் பட வடிவேலுவையே வீழ்த்திட்டாங்க.

September 29

‘சிலர் சிரிப்பார்.. சிலர் அழுவார்.. நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்.’
அம்மா ஜெயிலுக்குப் போனாலும் போனாங்க… இந்த திமுக எதிர்ப்பு ‘நடுநிலை’களும் கட்சிகாரர்களும், மந்திரி சபையும் செய்கிற காமெடி சிரிச்சி.. சிரிச்சி.. கண்ணுல தண்ணியே வந்திருச்சி.

September 30

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து தன்னை கைது செய்தபோது கூட அம்மா வை கண்டிக்காமல் காவல் துறையை மட்டுமே கண்டித்த அய்யா பழ. நெடுமாறன் கூட, அம்மாவிற்கு வழங்கிய தண்டனையை வரவேற்று இருக்கிறார். வாழத்துகள்.

அம்மா ஊர்ல இல்ல என்கிற தைரியமா?

September 28

தன் தலைவரின் நினைவிடத்திற்கு வண்டியில் போனவர்களை வழிமறித்து, ‘கலவரம் செய்கிறார்கள்’  என்று காரணம் காட்டி பரமக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய காவல் துறை,

இப்போது கலவரம் செய்கிறவர்களுக்கு பாதுகாப்பாக பந்தோபஸ்துக்கு செல்கிறது.

September 28

நன்றி:அதிமுக வினருக்கும் இன்னும் சில..

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

6 Responses to வின்னர் பட வடிவேலுவையே வீழ்த்திட்டாங்க

 1. Priyan சொல்கிறார்:

  அந்த கடைசி புள்ளிவிவரத்தோட நிகழ்ச்சியை நினைத்துப் பார்க்கையில், கண்களில் கண்ணீரே வருகிறது…

  என்னைப் பொருத்தவரை ஜெயாவின் கைது,

  7 பேர்களின் உயிரு,
  12,500 பேர்களின் வயிறு…

 2. Pingback: நன்றி:அதிமுக வினருக்கும் இன்னும் சில.. | வே.மதிமாறன்

 3. Pingback: சன்-கலைஞர்:சொத்துக் குவிப்பு ‘திரும்ப திரும்ப பேசுற நீ’ | வே.மதிமாறன்

 4. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த பதிவு
  தொடருங்கள்

  யாழ்பாவாணனின் மின்நூலைப் படிக்கலாம் வாங்க!
  http://wp.me/pTOfc-bj

 5. Pingback: தீர்ப்பை எதிர்த்து சிறப்பாக நடக்கும் பெரியார் பணி | வே.மதிமாறன்

 6. Pingback: மக்கள் ஜாமீனை விரும்பவில்லையா? | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s