அதுதான் பெரியாரின் பணியும் கூட

vaiko

ஆகஸ்ட் 4 அன்று Manoj Kumar என்பவர் தன் பக்கத்தில்
//மரபணு ஆராய்ச்சி பேசும் புரட்சியாளர்களே !
எமது சொந்தங்களான தெலுங்கு பேசும் துப்புரவு பணி செய்பவர்களும்
கன்னடம் பேசும் செருப்பு தெய்க்கும் தோழர்களும்
வந்தேறிகள் தானே !! நீர் வாழ்க !
உங்கள் முன்னோடி குணா வாழ்க !// என்ற எழுதியிருந்தார்.

அதில் நான் எழுதியது..

இது போன்ற மோசடியான இனவாத அரசியலை திராவிட இயக்கத்திற்குள் அறிமுக படுத்தியது வைகோ தான்…காவேரி பிரச்சினையில் கன்னடர்களுக்கு எதிராக பேசியது ..முல்லை பெரியாறு பிரச்சினையில் மலையாளிகளுக்கு எதிராக பேசியது ..என்று..
இன்று அவர் பேசிய இனவாத அரசியல் அவருக்கு எதிராகவே திரும்பி இருக்கிறது. அவரையே தமிழர் இல்லை என்கிறார்கள் ஜாதி வழியாக இனவாத அரசியல் பேசுகிறவர்கள்.

அது மட்டுமல்ல… திராவிட இயக்க கருத்துக்களை பெயரளவில் கூட பேசாத ஓரே திராவிட இயக்க தலைவர் வைகோ தான். திராவிட இயக்க, பெரியார் எதிர்ப்பாளர்களின் கருத்து தான் தமிழ்தேசியம் மற்றும் ஈழ பிரச்சினைகளில் வைகோவின் கருத்தும்.

அதனால் தான் அவர் திராவிட இயக்கத்தை பெரியாரை இழிவாக பேசுகிறவர்களோடு இணைந்து கொண்டு தொடர்ந்து அரசியல் செய்கிறார்.
பெரியார இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் திராவிட இயக்க எதிர்ப்பு தமிழ்த் தேசியவாதிகளை விமர்சிப்பதுபோலவே.. மோடியின் சீடர் வைகோ வையும் விமர்சிக்க வேண்டும். அப்போதுதான் நமது நேர்மையும் நியாயமும் நமது எதிரிகளுக்கு புரியும்.
அதுதான் பெரியாரின் பணியும் கூட.

*
ஆகஸ்ட் 4 – 2014 அன்று எழுதியது.

மிழனா – தெலுங்கனா? தமிழனா – உருது இஸ்லாமியனா?

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

5 Responses to அதுதான் பெரியாரின் பணியும் கூட

 1. லாவண்யா ராமன் சொல்கிறார்:

  உங்கள் கருத்து எந்த வித அடிப்படை நியாயமும் இல்லாமல் உள்ளது,,தண்ணீர் தர
  மறுக்கும் கர்நாடகா,கேரளா அரசுகளை எதிர்த்து எதுவும் சொல்லக்கூடாதா?..
  இவற்றுக்கு உங்கள் நிலைப்பாடு என்ன?..
  வைகோ இன்னும் பல தமிழ் இன உரிமை மீட்பு போராட்டங்களை நடத்தியுள்ளார்..
  அதைப்பற்றிய புரிதல்களை நீங்கள் ஒப்புக்கொண்ட பிறகே மற்ற குற்றச்சாட்டுகளை
  பற்றி பேசலாம்..

 2. Pingback: வைகோ வின் தமிழ் உணர்வு | வே.மதிமாறன்

 3. Pingback: தாலி-மாட்டுக்கறி அரசியல்; கலைஞர், வைகோ – திருமாவளவன், இளங்கோவன் | வே.மதிமாறன்

 4. KARTHIK DEIVANAYAGAM சொல்கிறார்:

  திராவிட இயக்க கருத்துக்களை பெயரளவில் கூட பேசாத ஓரே திராவிட இயக்க தலைவர் வைகோ தான்.

  ….?….! .

 5. மகிழன்,பூண்டி சொல்கிறார்:

  நண்பருக்கு வணக்கம்…தோழர் வை.கோ அவர்களைப் பற்றிய இந்த ஐயப்பாடு தங்களுக்கு மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைவருக்குமே உள்ளது…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s