பட்டாசு: வெடித்து சிதறும் தொழிலாளர்கள்

Sivakasi ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பெய்கிறதோ இல்லையோ, சிவகாசி பட்டாசுத் தயாரிப்பில் ‘தொழிலாளர்கள்’ வெடித்து சிதறுவது தவறாமல் நடக்கிறது. நேற்றும் படுகொலைகள். பேரனும் பாட்டியும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

சீன தயாரிப்பு பட்டாசுகள் வந்தால், மொதாலாளிகளுக்கு எந்த நஷ்டமும் இல்ல, தொழிளார்களின் வாழ்க்கை தான் பாதிக்கப்படும் என்பதுபோல் கருணையோடு அந்நிய முதலீடு எதிர்ப்பாளர்கள் போல்,
தொழிலாளர்களை முன்னிறுத்தி போராடுகிற முதலாளிகளும் முதலாளிகளின் தொழிற்சங்கங்களும்;
தொழிலாளர்கள் இப்படி வெடித்து சிதறுவதைப் பற்றி வாய் திறப்பதே இல்லை.

இந்தியா – சீன சண்டையின் போது பெரியார் சொன்னார், சீனாக்காரன் ஜெயிக்கனும். அவன் வந்து நம்மள ஆளட்டும். ஏன்னா அவனுக்கு ஜாதி கெடையாது.’ ஜாதி வெறி கொண்ட இந்த தேசத்தை விட சீனாகாரன் எவ்வளவோ மேல் என்ற தொனியில்.

அதுபோல் சீன பட்டாசு வந்தால் வேலைதான் போகும். உயிர் போகாது இல்ல. இப்ப என்ன சிவாகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் 3 வேளையும் விருந்து சாப்பிட்டு பென்ஸ் கார்லயா போகிறார்கள்?

இப்படி உயிரையே பணயம் வைத்து வாழ்ந்து, பாதி வயிறு கஞ்சியை குடிப்பதற்கு பட்டினியே மேல்.
உயிரே போனதற்குப் பிறகு வேலை எதற்கு?
பட்டாசு கம்பெனி முதலாளிகள் கோடி கோடி யாக சம்பதிப்பதற்காக?

(படத்தில் நீங்கள் பார்ப்பது ஈழத்தமிழர்கள் மேல் சிங்கள ராணுவம் போட்ட குண்டல்ல. சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலை தொழிலாளார்கள் மீது இந்த சமூகம் போட்ட குண்டு)

July 4 அன்று facebook ல் எழுதியது

தமிழ் முதலாளிகளின் தாக்குதல்களும், தமிழர்களின் படுகொலைகளும்

பிண ‘வாசத்தை’ மீறும் பூ நாற்றம்

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

6 Responses to பட்டாசு: வெடித்து சிதறும் தொழிலாளர்கள்

 1. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  சில விவரமான நாடுகள் தங்களுக்கு வேண்டிய உணவு பொருட்களில் அதிகம் தண்ணீர் தேவைப்படும் உணவுப்பயிர்களை ஒன்று இறக்குமதி செய்துகொள்கின்றன,அல்லது தங்கள் நாட்டில் விளைவதாக இருந்தால் அதன் ஏற்றுமதியை தவிர்த்துவிடுகின்றன அல்லது மிக கட்டுக்குள் வைத்திருக்கின்றன.
  தங்களது நாட்டின் நீராதாரத்தை காப்பதன் பொருட்டு அந்நாட்டு அரசாங்கங்கள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
  ஆனால் நமது நாட்டில் மனித உயிர்கள் அதுவும் ஏழைகளின் உயிர்கள் மதிக்கப்படுவதே கிடையாது என்பதற்கு சிவகாசி பட்டாசு ஆலைகளே சான்று.
  இதில் இன்னுமொரு விஷயம் புரிவதே இல்லை.
  கடத்தி சென்று கொத்தடிமைகளாக வைத்திருந்தார்கள் என்று கூட இல்லாமல் இந்த தொழிலாளர்களும் பாதுகாப்பு குறைபாடுகளை எல்லாம் அறிந்தேதானே வேலைக்கு செல்கிறார்கள்?
  இவர்கள் இப்படி உயிர் விடுவதற்கு பதிலாக அத்தகைய ஆலைகளை புறக்கணித்து விடலாமே?
  அவரவர் பாதுகாப்பை அவரவர்களே முன்னிலைப்படுத்தாவிட்டால் எப்படி?

 2. Online Tamil News சொல்கிறார்:

  அணைத்து பதிவுகளும் மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள். மேலும் தமிழக செய்திகள் மற்றும் உலக செய்திகளை அறிய தமிழன்குரல் இணையதளத்தை பார்க்கவும்.

 3. Pingback: ‘ஜாதி உணர்வற்ற’ தமிழ் முதலாளிகள் | வே.மதிமாறன்

 4. Pingback: ஹுத்ஹுத் – பட்டாசு | வே.மதிமாறன்

 5. Pingback: ..இதுகூடவா இந்து மதத்திற்கு எதிரானது? | வே.மதிமாறன்

 6. Pingback: முதலீடு மட்டும் அந்நியமல்ல, அரசே அந்நியம் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s