தமிழ்த் தேசிய நாடார்கள்

704a5ac4-7fc4-4708-9454-abb56df49f94_S_secvpf 918fd6b5-df98-411c-856f-4cd9cad183ca_S_secvpf

தூய இனவாதத்தோடு தமிழ்த் தேசியம் பேசுகிற நாடார் ஜாதி உணர்வாளர்கள், ‘என்ன எப்பப் பாரு.. பார்ப்பனர்களையே குறை சொல்றீங்க..?’ என்று பெரியார் தொண்டர்களிடம் கேட்கிறார்கள்.

அவர்களின் இந்தக் கேள்விக்குப் பின் இருப்பது தமிழ் உணர்வல்ல, பார்ப்பன நிறுவனங்களின் மூலமாக லாபமும் புதிய பார்ப்பன உறவும், தனி மனித லாபங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதனால் தான் பெரியாருக்கு துரோகம் செய்தவர்களையே சுட்டிக் காட்டி, ‘இது தான் பெரியார் இயக்கத்தின் யோக்கியதையா?’ என்று நற்பெயர் எடுக்கிறார்கள் தங்களின் பா. நிறுவனங்களிடமும் புதிய பா. உறவுகளிடமும்.

கம்யுனிஸ்ட், திராவிட இயக்கம், பெரியார், தலித் இயக்கம் என்று பலரை விமர்சித்து ஊர் நியாயம் பேசுகிற அவர்கள், தன் ஜாதி உணர்வாளர்களைக் குறித்து கள்ள மவுனம் காக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, ஈழப் பிரச்சினையில் காங்கிரசின் துரோகம் என்ற அடிப்படையில் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ப. சிதம்பரம், நாராயணசாமி; காங்கிரஸ் அல்லாதவர்களில் கலைஞர், திருமாவளவன், வைகோ இவர்களை மிகக் கடுமையாக கண்டிக்கிற அவர்கள்,
காங்கிரசில் இருக்கிற குமரி அனந்தனையும் வசந்த குமாரையும் கண்டிப்பதே இல்லை.

இத்தனைக்கும் இவர்கள் இருவரும் ‘தலைவர் ராஜிவ் காந்தியை கொன்ற 3 தமிழர்களை தூக்கிலிடு’ என்று ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்தினார்கள். அப்போது கூட இவர்கள் தமிழ் உணர்வாளர்களால் கண்டிக்கப்படவேயில்லை.

கேட்டால்.. ‘இவர்களெல்லாம் ஒரு ஆளா?’ என்கிற பாணியில் பதில் சொல்லி, மீண்டும் அவர்களை பாதுகாக்கவே செய்கிறார்கள்.

அது மட்டுமல்ல, ‘கலைஞர் தமிழரல்ல ஆனால் அவர் மகள் கனிமொழி தமிழர்’ என்று சொல்லுகிற ஆய்வாளர்களும் இருக்கிறார்கள். கனிமொழியின் தாயார் நாடாராம்.

நாடார் நிறுவனங்கள் தங்கள் ஊடகங்களில் தமிழர் விரோத கருத்துக் கொண்ட பார்ப்பனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வைத்திருப்பதை மறைமுகமாக கூட சுட்டிக்காட்ட மறுக்கிறார்கள்.

ஈழத் தமிழர்களுக்காக தன்னை தியாகம் செய்த தியாகி முத்துக்குமாரையும் தமிழன் என்று பார்ப்பதைவிட ‘நாடார்’ என்று சுருக்கிப் பார்த்து அவர் எழுச்சியை கொச்சைப் படுத்துகிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார் என்று அவரை புறக்கணிக்கிற இவர்கள், இந்திய தேசியத்தை தீவிரமாக ஆதரித்த காமராஜரை மிகத் தீவிரமாக ஆதரிக்கிறார்கள்.

சுயஜாதி உணர்வும் பார்ப்பன ஆதரவும் மட்டுமே கொண்ட இவர்கள், அதையே தமிழ்த் தேசியமாக அறிவிப்பது வேடிக்கை மட்டுமல்ல வேதனையும் கூட.

இதுபோன்ற காரணங்களுக்காக தான் கிறிஸ்த்துவ நாடார்களையும் இந்து நாடார்களையும் உறவாக இணைக்கிற ‘ஜாதி’ உணர்வு பற்றி எழுதியிருந்தேன்.
(‘‘மதமெல்லாம் பாக்காம தாயா புள்ளயா பழகுறாங்க.. இது தான் உண்மையான மத நல்லிணக்கம்’ என்று விளக்கம் கொடுத்தாலும் கொடுப்பார்கள்.)
*
“இதையும் அதையும் படித்தால் நாடார் சமூகத்தில் இருக்கிற பெரியார் தொண்டர்களும் கோபித்துக் கொள்வார்கள்..”

என்னங்க இது.. அப்புறம் எப்படிங்க அவர்கள் பெரியார் தொண்டர்கள்?

June 19  அன்று facebook ல் எழுதியது.

இயேசு நாடார்…?

‘கிறிஸ்த்துவர்கள் மீதான தாக்குதல்’ என்ற பெயரில் தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள்

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

3 Responses to தமிழ்த் தேசிய நாடார்கள்

 1. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  இன்னைக்கு எடுத்துவச்ச சாணியை எவன்மேலடா அடிக்கலாம்ன்னு பார்த்துகிட்டு இருக்கையில சிக்கினாண்டா அண்ணாச்சி.
  அட்ரா சாணிய அண்ணாச்சி மேல……ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.இனி அடுத்த சாணி பார்சல் வரும்வரைக்கும் காத்துட்டு இருக்க வேண்டியதுதான்.

  இந்திய சுதந்திர போராட்டம் முதல் இன்றைய தூக்குதண்டனை கைதிவரை சாதியை மட்டுமே வைத்து பிரிவினைவாதத்தை தூண்டிவிட்டபடியும் தங்களுக்கான பிழைப்பை சாதி பிரிவினையை வைத்தே ஒட்டிகொண்டிருக்கும் நீங்கள் இதைப்பற்றி பேச தகுதி இல்லாதவர் திரு.மதிமாறன்.

  உண்மையில் சமுதாயத்தில் உள்ள மத்திய தர வர்க்கம் அதுவும் சொந்த ஊரில் இருப்பவர்கள் மட்டுமே சூழ்நிலை காரணங்களால் சாதியை இன்னமும் விட முடியாமல் இருக்கிறார்கள்.வேறு இடங்களுக்கு சென்று குடியமர்ந்தவர்களிடம் அந்த அளவிற்கு சாதி பிடிவாதம் இல்லை.மேலும் இன்றைய உலகில் கல்வி முதல் கலவி வரை அனைவரும் சிறப்பானது எதுவோ தங்களுக்கு கட்டுபடியாவது எதுவோ அதைதான் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள். நாடார் பள்ளியில்தான் படிப்பேன் கவுண்டர் மெஸ்ஸில் தான் சாப்பிடுவேன் என எந்த நாடாரும் கௌண்டரும் பிடிவாதம் பிடித்துகொண்டிருப்பதில்லை.

  மறைந்த தோழர் முத்துகுமார் விசயத்தில் மட்டுமல்ல இன்று வரைக்கும் குதூசிமுதல் அணுசக்தி ஆராய்ச்சிவரை அனைத்திலும் யார் சாதியை முன்னிறுத்தி வருகிறார்கள் என்பதை திரு.மதிமாறன் அவர்கள் நிலை கண்ணாடி முன் நின்று கேட்டுகொண்டால் பதில் கிடைக்கும்.

  மக்களில் பெரும்பாலோனோர் சாதியை ஒரு செருப்புபோல தான் உபயோகித்து வருகிறார்கள்.ஆனால் சாதி பிரிவினையை எதிர்பதாக சொல்லிகொள்ளும் தங்களைபோன்றோர்தான் சாதியை தங்களது சுவாசமாகவே வைத்திருக்கிறார்கள்.
  நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விசயமெல்லாம் கட்சி எனும் அமைப்பின் கீழ் வருவதுதானே தவிர தனிப்பட்ட ஒரு சாதியின் கீழ் வருவதல்ல.

  ஒஹோ! பெரியார் தொண்டர்களிலும் நாடார் பெரியார் தொண்டர் ,வன்னிய பெரியார் தொண்டர் என்றெலாம் இருக்கிறதா ? இதல்லாம் எனக்கு இப்பொழுதுதான் தெரியும் திரு.மதிமாறன்.அதிருக்கட்டும் உலகத்திலேயே உங்களையும் திரு.ராசாவையும் தவிர யாருக்கும் பெரியாரையோ அம்பேத்க்காரையோ தெரியாதுன்னு நீங்களே கர்வத்தோடு சொல்லி இருக்கறீங்க, பிறகு எதற்கு (இல்லாதவங்களை பற்றி) மற்ற பெரியார் தொண்டர்களை பற்றி பேச்சு?
  அனாவசியமாக அரசியல் கட்சிகளையும் சாதியையும் ஒன்றாக போட்டு குழப்பிக்கொள்ளவேண்டாம் திரு.மதிமாறன்.

 2. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  “டாக்டர் அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார் என்று அவரை புறக்கணிக்கிற இவர்கள், இந்திய தேசியத்தை தீவிரமாக ஆதரித்த காமராஜரை மிகத் தீவிரமாக ஆதரிக்கிறார்கள்” என்கிறீர்கள்.

  அப்படிஎன்றால் அன்று விருதுநகரில் அதே காமராஜரை தோற்கடித்த (மகா பாதக) செயலை செய்தவர்கள் யார் என்பதை விளக்குவீர்களா?

  இதை எந்த கண்ணோட்டத்தில் விமர்சிப்பீர்கள்?

  இந்திய தேசியத்தை ஆதரித்ததற்க்காகஅன்று நாடார்கள் அம்பத்காரை எதிர்ததுபோலவே காமராஜரையும் எதிர்த்தார்கள் என விளக்கம் சொல்வீர்களா?

  “மேலும் பெரியாருக்கு துரோகம் செய்தவர்களையே சுட்டிக் காட்டி, ‘இது தான் பெரியார் இயக்கத்தின் யோக்கியதையா?’ என்று பெரியார் தொண்டர்களிடம் கேட்கிறார்கள்”என்கிறீர்கள்.
  இந்த கேள்வியை கேட்பவர்கள் நாடார்கள் மட்டுமல்ல சமுதாய உணர்வுள்ள அனைவருமே இந்த கேள்வியை கேட்டுகொண்டேதான் இருக்கிறார்கள்.
  இதற்க்கு தங்களது பதில் என்ன என்று சொல்லாமல் “என் டௌசர் மட்டுமா ஓட்டை? இதோபார் உன்னுடையதையும்” எனும் ரீதியில் பதில் சொல்லிருப்பது (நீங்களே சொல்லிகொல்வதுபோல)எதையும் ஆராய்ந்து,தனிபார்வையுடன் பார்க்கும் தங்களுக்கு அழகல்ல.

  “சுயஜாதி உணர்வும் பார்ப்பன ஆதரவும் மட்டுமே கொண்ட இவர்கள், அதையே தமிழ்த் தேசியமாக அறிவிப்பது வேடிக்கை மட்டுமல்ல வேதனையும் கூட” ,,,
  ,,,, தாங்கள் எப்படி?
  மேற்குறிப்பிடிருப்பதில் நீங்களும் சுய சாதி உணர்வில் யாருக்கும் சளைத்தவர் அல்ல.
  பார்ப்பன ஆதரிப்பு விசயத்தில் வேண்டுமாயின் (கண்முடி தனமாக அவர்கள் செய்வது எல்லாமே தவறு என விமர்சிப்பதில்)நீங்கள் தனி ரகம்.

  உங்களது இடுகையில் நீங்கள் சாடியிருப்பது சில நிறுவனங்களையும் அரசியல் கட்சி தலைவர்களையுமே.

  அதை நீங்கள் எந்தவித சாதிப்பின்னனியும் இல்லாமல் நேரடியாகவே சொல்லிருக்கலாம்.

  ஏனெனில் இந்த கேள்வியை கேட்பது ஒரு சாதியை சார்ந்தவர்கள் மட்டுமல்ல.
  ஆனால் எதையுமே சாதி வர்ணம் பூசியே பார்க்கும் தங்களைபோன்றோருக்கு அவை புரிய வாய்ப்பில்லை.

 3. Pingback: வைகோ வின் தமிழ் உணர்வு | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s