ஆ. ராசா வெற்றிபெற வேண்டும்..

a_raja_dmk_1349433472_1349433505_460x460

இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட மரியாதைக்குரிய ஆ. ராசா வெற்றி பெறவேண்டும் என்று விரும்புகிறேன்.

‘அவர் மட்டும் தோல்வியுற வேண்டும்’ என்று கிரிமினல்கள் உட்பட பலரும் தீவிரமாக வேலை செய்தார்கள். விரும்புகிறார்கள்.
‘காங்கிரஸ், பி.ஜே.பி அதிமுக உட்பட எல்லோரும் ஓர் அணி; ஆ. ராசா தனி’ என்பதாகவே இந்த தேர்தல் இருந்தது.

பார்ப்பனர்களும் பார்ப்பன மனோபாவம் கொண்டவர்களும் பார்ப்பனர்களிடம் நற்பெயர் வாங்கி; வாங்கி.. வாங்கி.. வாழ்க்கை நடத்துபவர்களும்
மோடி வெற்றி பெற வெண்டும் என்று பேசிய நடுநிலையாளர்களும்; ராசா தோற்க வேண்டும் என்று ஆவேசம் கொண்டார்கள்.

ஆ.ராசா விற்கு எதிரான இந்த ஆவேசமும் வெறுப்பும் ஊழலுக்கு எதிரான மனோபாவம் அல்ல; அதையும் தாண்டி காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் கொண்டது.

ஜெயேந்திரன் விடுதலைக் குறித்து கருத்து சொல்லாதவர்களும், மத்தவன் காறி துப்பப் போறான் என்பதற்காக பெயரளவில் ஒப்புக்கு ஜெயேந்திரனுக்கு வலிக்காத அளவுக்கு கண்டித்தவர்களும் ‘பார்ப்பனியம்’ என்றுகூட சொல்ல முடியாத பார்ப்பன எதிர்ப்புப் போராளிகளும்
ஆ.ராசா தோல்வியடைய வேண்டும் என்று வெட்கமில்லாமல் வெகுண்டெழுகிறார்கள்.

ஸ்பெக்டரம் ஊழல் குற்றச்சாட்டு குறித்து தன் மீது வீசப்பட்ட கேள்விகளுக்கு பலமுறை விரிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அந்த விளக்கம் குறித்து குறுக்குக் கேள்வி கேட்க அறிவற்றவர்கள், மீண்டும் ஊழலுக்கு எதிரான போராளிகளாக வேசம் போடுகிறார்கள்.

ஆ.ராசா விற்கு எதிராக நேரடியாகவும் உள்குத்துகளுடனும் அவர் தோற்க வேண்டும் என்று நடந்த சதியை முறியடித்து, அவர் வெற்றி பெறுவர் என்று நம்புகிறேன். தோல்வியுற்றாலும் பிரச்சினையில்லை. அவர் ஒரு சமூக நீதி அரசியலின் ஆய்வாளர். தனது நேரத்தை அதற்காக அதிகம் செலவழிப்பார்.

எனக்குத் தெரிந்து; பெரியார் – டாக்டர் அம்பேத்கரை ஆழமாக படித்து, ஒப்பிட்டு விரிவான விளக்கங்களோடு பேசக்கூடடிய ஆற்றல் உள்ள அறிவாளி ஆ.ராசா.

அப்படி பேசக்கூடியவர்கள் எனக்குத் தெரிந்து இவருவர் மட்டும்தான். ஒன்று அவர். இன்னொன்று நான்.
இதை கர்வத்தோடும் பெருமையோடும் தெரிவித்துக்கொள்கிறேன்.

*

 நேற்று இரவு facebook ல் எழுதியது.

உன் ஜாதி மானங்கெட்ட ஜாதி.. நீ சோத்ததான் திங்கிறீயா..

இந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்

‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

தலித் ‘ஞானப்பழம்’

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

10 Responses to ஆ. ராசா வெற்றிபெற வேண்டும்..

 1. R Chandrasekaran சொல்கிறார்:

  //ஒன்று அவர். இன்னொன்று நான்.///
  ஏற்கனவே திமுகவில தொலைத்தொடர்பு மந்திரி கொடுத்தாச்சு.. உங்களுக்கு கிடைக்காது.. அப்பா.. என்ன ஆச பாருங்க மதிக்கு….

 2. iniyan சொல்கிறார்:

  அவருக்கு மூன்றாம் இடமாம். தவறு செய்யும்போது அதை தட்டிக்கேட்காமல் சாதி பாசம் பார்க்கின்ற நடுநிலை தவறியவர்களுக்கு காலம் தண்டனை தரும்.

 3. syamvel.pd@gmail.com சொல்கிறார்:

  ithu poll jathi sarntha petchu nattuku nallathalla. (nanum oru bc)

 4. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  நீங்கள் யார் என தெள்ள தெளிவாக காட்டிவிட்டீர்கள். நன்றி.
  உங்களுக்கு ராசா என்றால் அவாளுக்கு ஜெயேந்திரன்.
  இரு பக்கத்திலும் உள்ள கூட்டதின் பெயர் தான் வேறு .மற்றபடி வித்தியாசம் ஏதும் இல்லை.
  பொதுநோக்கில் தவறுகளை உணர்ந்துகொள்ளும் மனப்பான்மையோ, ஏற்றுகொள்ளும் மனப்பான்மையோ உங்களிடத்தும் கிடையாது.
  ஆனால் இதே தவறை அடுத்தவர் செய்யும்போது நீங்கள் கூவொ கூவுஎன்று கூவுவது அர்த்தமுடையதாக இல்லை.
  ஒரு சராசரி பொதுமனிதனுக்கான தன்மை கூட உங்களிடம் கிடையாது.ஆனால் உங்களை நீங்களே பெரிய சமுக அக்கறையுள்ளவராக எண்ணி கொண்டிருப்பது உங்களுக்கு அழகல்ல.

 5. இளசெ (இ.ஜெயக்குமார்) சொல்கிறார்:

  திராணியுள்ளவர்கள் எவரும் தந்தி தொலைக்காட்சியில் ஆ.ராசாவின் நேர்கானலைப் பார்த்துவிட்டு அதற்கு பதிலளிக்கவும் ,கொஞ்சமேனும் நேர்மையிருந்தால் 2G-ல 1.76 லடசம் கோடிலயிருந்து 33ஆயிரம் கோடியா மாறி இப்ப 0 வானது ( recent TRAI report said no loss was caused due to alleged irregularities in spectrum allocation.- the economic times Oct 22, 2011 ) மாற்று கருத்திருந்தால் வழக்கு தொடுத்து விட்டு அதை இங்கு பதிவிடவும்.

  – இளசெ (இ.ஜெயக்குமார்)

 6. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  “அவர் ஒரு சமூக நீதி அரசியலின் ஆய்வாளர். தனது நேரத்தை அதற்காக அதிகம் செலவழிப்பார்.

  எனக்குத் தெரிந்து; பெரியார் – டாக்டர் அம்பேத்கரை ஆழமாக படித்து, ஒப்பிட்டு விரிவான விளக்கங்களோடு பேசக்கூடடிய ஆற்றல் உள்ள அறிவாளி ஆ.ராசா.

  அப்படி பேசக்கூடியவர்கள் எனக்குத் தெரிந்து இவருவர் மட்டும்தான். ஒன்று அவர். இன்னொன்று நான்.
  இதை கர்வத்தோடும் பெருமையோடும் தெரிவித்துக்கொள்கிறேன்.”

  சமுக நீதி போன்ற பெரிய விசயங்களை எல்லாம் விடுங்கள்.அடிப்படை சுயமரியாதைகேனும் தன் மீதான குற்றசாட்டுகள் நிரூபணம் ஆகும்வரை அல்லது அவை பொய் என நிரூபணம் ஆகும்வரை நான் போட்டி இடப்போவதில்லை அதுவரையும் எந்த பதவியும் வகிக்கப்போவதில்லை என்றேனும் கூறிஇருந்தால் நீங்கள் இந்த கட்டுரையை எழுதுவதற்க்கான அவசியமே இருந்திருக்காதே.
  அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல சுய மரியாதைக்கு மதிப்பளிகாதவர்கள் சமுக நீதியை காக்கும் லட்சணம் அனைவருக்கும் தெரிந்ததே.அடுத்தவர் பேசுவதை கேட்காமல் பேசுவதில் இருவரும் வல்லவர்களாக இருந்துவிட்டு போங்கள். நாட்டிற்க்கு புதிதாக நஷ்டம் ஏதும் வந்துவிடப்போவதில்லை.

  இதில் ஊழலே நடை பெறவில்லை, ஊழல் தொகை ஊடகங்களில் வருவதுபோல அவ்வளவு பெரிய தொகை அல்ல,பிரதமருக்கும் இதில் பங்கு உள்ளது அவருக்கு தெரியாமல் ஏதுவும் நடைபெறவில்லை இதுவும் இதுபோன்ற பல பல்டிகளையும் குறிப்பிட மறந்துவிட்டீர்களே நண்பர் ஜெயக்குமார்.முதலில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை முடித்துவிட்டு வாரும்.பின்னர் புதுவழக்கு போடுவதுபற்றி பார்ப்போம்.நம் நாட்டில் வழக்கு தொடுப்பதற்கா பஞ்சம்?

 7. இளசெ (இ.ஜெயக்குமார்) சொல்கிறார்:

  CBI சொன்ன 33 ஆயிரம் கோடில தொடங்கி இப்ப நீதி மன்றம் இழப்பு எவ்வளவு சொல்லுதுனு கொஞ்சம் கேட்டு சொல்றீங்களா.வேண்டிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு , தேதியை மாற்றியது , தலைமை அமைச்சருக்கும் & நிதி அமைச்சருக்கும் தகவல் சொல்லல , அனுபவமில்லாத& தகுதியில்லாத நிறுவனங்கள் – இப்படி எல்லாத்தலையும் பல்டியடிச்சது , இன்னும் பல்டி அடிச்சுகிட்டு இருக்கறது (மறைக்கிறது)ஊடகங்களும் , வக்கீல்களும் .சொல்லுங்க வேலுமணி சரவணகுமார்.

  கொஞ்சமேனும் நேர்மையிருந்தால் தந்தி தொலைக்காட்சியில் ஆ.ராசாவின் நேர்கானலைப் ( http://www.youtube.com/watch?v=vR38lMCvNJA ) , புதிய தலைமுறை ஆ. ராசாவின் அக்னி பரீட்சை இவைகளை பார்த்துவிட்டு அதற்கு பதிலளிக்கவும் . திராணியுள்ளவர்கள் வழக்கு தொடுங்க.

  நிருபயாவிற்காக போராட்டம் , தமிழ்நாட்டுல காதலுக்கு துணை நின்ற மாணவிய வன்புண்ர்ந்து கட்டைய உறுப்புல ஏத்தி கொன்னது செய்தியா கூட வெளிவராது . அடடா என்ன உங்க நேர்மை .

  இளசெ (இ.ஜெயக்குமார்)

 8. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  எங்களது நேர்மை பற்றி நீங்கள் விமர்சிப்பது இருக்கட்டும்.நாங்கள் ஒன்றும் அம்பேத்காரையோ பெரியாரையோ கரைத்துக்குடித்தவர்கள் என்றோ, சுயமரியாதை சிங்கங்கள் என்றோ எங்களைப்பற்றி உலகம் முழுக்க பறைசற்றிகொள்ளவும் இல்லை.அதைவைத்து அதிகாரமோ ஆதாயமோ அடைந்தவர்களுமில்லை.
  கருத்து தெரிவிக்காத விசயங்களில் நாங்கள் ஆதரவு தெரிவிப்பதாக எண்ண வேண்டாம்.இன்னமும் சொல்லப்போனால் இந்த விசயத்தில் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கூட நீங்கள் சொன்ன வெளிவராத விசயங்களைபற்றி(நிருபா மற்றும் வன்புணர்ச்சி ) கருத்து குறி இருக்க மாட்டார்கள்.அதற்காக அவர்களை குற்றம் சொல்ல முடியுமா அல்லது இந்த விஷத்தை பற்றி கருத்து தெரிவித்தார்கள் என்பதற்காக சொன்னவர்களை எல்லாம் உலக மகாயோக்கியர்கள் என்று சொல்லிவிட முடியுமா என்ன?
  ராசா விசயத்தில் நீங்கள் குறிப்பிடும் மற்ற விசயங்களெல்லாம் வழக்கின் மற்ற அம்சங்கள் தானே தவிர பல்டிகளல்ல.
  வழக்குதான் இருக்கிறதே.மறுபடியும் வழக்கு தொடுங்கள் வழக்குதொடுங்கள் என ஏன் குவிகொண்டிருகிரீர்கள்.
  நாங்கள் கேட்பது திராணி இருந்தால் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படும்வரை பதவியிலிருந்தும் தேர்தலில் போட்டி இடுவதிலிருந்தும் விலகி இருப்பதுதானே ?
  கொஞ்சமேனும் நேர்மை இருந்தால் இதை செய்ய வேண்டியதுதானே?
  வழக்கின் தீர்புகளிலும் இருவகை உண்டு.ஒன்று “நீதிமன்ற விசாரணைகளின் அடிப்படையில் இவர் குற்றமற்றவர் என அறிவிக்கபடுகிறார்” என்பது முதல் வகை.
  “போதிய சாட்சிகளும் ஆதாரங்களும் இல்லாததால் குற்றம் சரிவர நிரூபிக்கப்படாததால் இவரை நீதிமன்றம் விடுவிக்கிறது ” என்பது இரண்டாம்வகை. இதில் இரண்டாம் வகை தீர்ப்பில் நீதிபதி உட்பட அனைவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளிதான் என தெரிந்திருந்தாலும் நீதிமன்ற வரையறைக்குட்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் இல்லாததால் சட்டப்படி தண்டிக்கமுடியாது என்பதால் விடுவிப்பது.
  ஆனால் இரண்டுமே விடுதலைதான்.ஜாமீனில் வெளிவந்ததர்கே விழா எடுத்தவர்கள் மத்தியில் இரண்டாம் வகை தீர்ப்பின் உள்நோக்கமெலாம் எங்கு புரியப்போகிறது.

 9. இளசெ (இ.ஜெயக்குமார்) சொல்கிறார்:

  நிருபயாவிற்காக இங்கு போராட்டம் த்துவீங்க . ஆனா தமிழ்நாட்டுல தாழ்த்தப்பட்ட -பிற்படுத்தபட்ட இணையின் காதலுக்கு துணை நின்ற தாழ்த்தப்பட்ட மாணவிய 4/5 பேர் வன்புண்ர்ந்து கட்டைய உறுப்புல ஏத்தி கொன்னது செய்தியா கூட தெரியாது . அடடா என்ன உங்க நேர்மை .

  இளசெ (இ.ஜெயக்குமார்)

 10. இளசெ (இ.ஜெயக்குமார்) சொல்கிறார்:

  // த்துவீங்க // – நடத்துவீங்க

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s