Monthly Archives: ஏப்ரல் 2014

சாலை மறியல்!

கடந்த ஜனவரி மாதம் சென்னை நந்தனம் YMCA வில் நடந்த புத்தகக் காட்சியின்போது 6, 7 நண்பர்களுடன் 5 முறை சாலை மறியல் செய்தேன். ஆமாங்க. புத்தகக் கடையில் நான்கு நபர்கள் மட்டும் கூடி, ஒரே புத்தகத்தை கொடுத்து வாங்கிக் கொண்டதை, ‘புத்தக வெளியீட்டு விழா’ என்று அறிவிக்க முடியுமென்றால், நான், 4 பேர்களுக்குமேல் போக … Continue reading

Posted in பதிவுகள் | பின்னூட்டமொன்றை இடுக

அந்தப் பாடலில் வரும் இசை நிலைகுலைய செய்கிறது!

  வார்த்தைகளின் பின்னணியில் குழைந்து குழைந்து இனிமை சேர்க்கிறது வயலின். அந்த நீண்ட பல்லவி முடிந்தவுடன் இடையிசையின் இடையில், மிகச் சரியாக வீணையின் இனிமையை தொடர்ந்து துவங்குகிறது ஷெனாயின் உருக்கும் உன்னதம்.‘மாவிலைத் தோரணம் ஆடிடக் கண்டான்…’என்று முடித்தவுடன் மீண்டும் இசைக்கிற ஷெனாய் நம்மை திக்குமுக்காட வைக்கிறது.‘ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்… அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்’ என்ற … Continue reading

Posted in பதிவுகள் | 6 பின்னூட்டங்கள்

தேர்தலோ தேர்தல்..!

‘ஓட்டு போடாமல் இருப்பதால் என்ன மாற்றம் நடந்திடபோது?’‘ஓட்டு போட்டுக்கிட்டேதான் இருக்கிறார்கள். என்ன மாற்றம் நடந்திருக்கிறது?’‘மோடி’ யிடம் வந்து நிற்கிறது. ஏப்ரல் 23 மோடி யை எதிர்க்க காங்கிரஸ்காரராக இருந்தாலே போதும்; ஆனால் ‘அவர்கள்’ காங்கிரஸ்காரராக இருக்கக் கூட லாயக்கற்றவர்கள். ஏப்ரல் 23 தி.மு.க. ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் துரோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்டி புறக்கணிப்பவர்கள்; C.P.M. … Continue reading

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்

ஜோ டியை ஆதரிக்கும் மோடி ; நவயனா வ.கீதாவின் சந்தர்ப்பவாத காமெடி

Jennifer உடன் கீதா பாரதிய ஜனதா, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காமல் இருந்திருந்தால், அது யோக்கியமான கட்சி ஆகி விடாது. அதுபோல் ஜோ டி குரூஸ், மோடி யை ஆதரிக்காமல் இருந்திருந்தால் அவர் ‘சமூகநீதி’ எழுத்தாளராகி விடமாட்டார். அவரின் மோடி ஆதரவு திடிரென்று முளைத்த ஒன்றல்ல. கிறத்துவரான அவர் இந்துக் கண்ணோட்டம் கொண்ட இலக்கியவாதியாக (சந்தர்பவாதியாக) … Continue reading

Posted in கட்டுரைகள் | 9 பின்னூட்டங்கள்

மோடி பிரதமரானால் தீட்சிதர்களை ஒழித்துக் கட்டுவார்!

மோடி ஆட்சிக்கு வந்தால்தான் இந்தியா வல்லரசு ஆகுமாம். தமிழக மக்கள் எல்லாம் தாமரை சின்னத்தில் வாக்களிக்க தவமிருக்கிறார்களாம். இந்த சமூக நீதி கருத்தை உதிர்த்தது, சிதம்பரம் கோயிலை தீட்சிதர்களிடம் இருந்து மீட்பதற்காக போராடிய மாவீரன் முன்னாள் அமைச்சர் வி.வி. சுவாமிநாதன். மோடி ஆட்சிக்கு வந்தால், இந்தியா வல்லரசு ஆகுறது இருக்கட்டும். சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் கையிலிருந்து … Continue reading

Posted in பதிவுகள் | 5 பின்னூட்டங்கள்

இன்று முதல் தெனாலிராமன்.. ஆவலோடு!

இன்று வடிவேலுவின் தெனாலிராமன் வெளியாகிறது. அவர் காமெடியில் வசனத்திற்கு முக்கிய பங்களிப்பு இருக்கும். ஆனால் இந்த படத்திற்கு வசனம், நகைச்சுவை உணர்வே இல்லாமல் செயற்கையான சென்டிமெண்ட் வசனங்களை எழுதி குவித்த ஆரூர் தாஸ். (பாசமலர்)அவர் எந்த அளவிற்கு காமெடி வசனங்களை எழுதியிருப்பார்? இருந்தாலும் வடிவேலு பேசுகிற ‘பாவனை’ க்கு எந்த வசனத்தையும் தூக்கி நிறுத்தி விடும் … Continue reading

Posted in பதிவுகள் | 4 பின்னூட்டங்கள்

சைவ சமயத்திற்குள் ‘ – ’ எவ்வளவு முக்குனாலும்..

சமயக் குரவர்கள் நால்வரில் திருநாவுக்கரசைத் தவிர மற்ற மூவரும் பார்ப்பனர்களே. இதற்கு நிகழ்கால சாட்சி, சைவ சமய ஈடுபாடு கொண்ட பார்ப்பனர்கள், (அய்யர்கள்) இன்றும் திருநாவுக்கரசு பெயரை வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஞானசம்பந்தன், சுந்தரம், மாணிக்கவாசகம் போன்ற பெயர்களையே அவர்களிடம் பார்க்க முடியும். அவ்வளவு ஏன்? சடகோபன், வரதராஜன், ஜானகிராமன், சீதாராமன், கோபாலன், ரங்கராஜன், ரங்கநாதன், … Continue reading

Posted in கட்டுரைகள் | 19 பின்னூட்டங்கள்