எம்.ஜி.ஆரையே வீழ்த்திய அன்பழகன்

k-anbazhagan

ஒரு கட்சிக்கு மகளிர் பிரிவு, மாணவர் பிரிவு, தொழிலாளர் பிரிவு, விவசாயிகள் பிரிவு இவைதான் தேவை. சிறுபான்மை பிரிவு தேவையில்லை.

ஆனால், ஓட்டு வாங்குவதற்கும் ‘நன்கொடை’ வசூலிப்பதற்கும் அது பயன்படும் என்பதற்காக அரசியல் கட்சிகள் அப்படி ஒரு பிரிவை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
சரி. அதையாவது சரியாக செய்ய வேண்டாமா?

திமுக வின் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு தலைவராக  மார்வாடி வகுப்பைச் சேர்ந்த எஸ்.டி.உக்கம்சந்தை, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் இன்று அறிவித்துள்ளார்.

மா்வாடிகள் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற கண்ணோட்டத்திலா இந்த தேர்தெடுப்பு?
என்ன ஒரு திராவிடப் பார்வை?

இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்து அமைப்புகளை நன்கொடை கொடுத்தும் வளர்ப்பவர்கள் மார்வாடிகளே. மார்வாடிகள் உதவி இல்லை என்றால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பே இல்லை.

உக்கம்சந்த் கட்சிக்கு உண்மையாக இருக்கிறார், அதற்காக அவருக்கு பதவி தரவேண்டும் என்றால், இதை விட வேறு முக்கியமான பதவியை தந்திருக்கலாமே?

போற போக்க பாத்தா.. ‘பிராமணர்கள்கூட சிறுபான்மைதான். சோ கட்சிக்கு வந்தால் அவருக்கு சிறுபான்மை தலைவர் பதவி தர தயாராக இருக்கிறோம்.’ என்பார்கள் போலும்.

திராவிடம் என்பதே தென்னாட்டை மட்டும் குறிப்பதுதான்.ஆனால், எம்.ஜி.ஆர்., ‘அனைத்து ‘இந்திய’ அண்ணா ‘திராவிட’ முன்னேற்றக் கழகம்’ என்று பெயர் வைத்து, தான் சினிமாவில் கதாநாயகனாக இருந்தாலும், அரசியலில் காமெடியன்தான் என்பதை நிரூபித்தார்.

‘அனைத்து ‘இந்திய’ அண்ணா ‘தமிழ்நாடு’ முன்னேற்றக் கழகம்’ என்று பெயர் வைத்தால் கைகொட்டி சிரிக்க மாட்டோமா? ஆனால், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்றால் கைதட்டி மகிழ்கிறார்கள்.

பேராசிரியர் அன்பழகனின் இன்றைய இந்த அறிவிப்பு நடிகர் எம்.ஜி.ஆரையே வீழ்த்துகிறது.

*

பிப்ரவரி 4 (இன்று) காலை face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

அண்ணாவிற்கு பிறகு நெடுஞ்செழியனா.. கருணாநிதியா? ‘ஜஸ்ட் மிஸ்’

எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்

ஸ்டாலின்-அழகிரி இழிவான சண்டை; ஜெயேந்திரன் நடத்தியது புரட்சிகரப் போராட்டம்

..இவர்களுடன் எம்.ஜி.ஆரும் கலைஞரும் மலையாளிகளும்; தீர்வு தமிழ்த்தேசியம்!?

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

5 Responses to எம்.ஜி.ஆரையே வீழ்த்திய அன்பழகன்

 1. தமிழ்ச்செல்வன் சொல்கிறார்:

  சோ ..வுக்கு சிறுபான்மை தலைவர் பதவி – தேர்தலுக்கு முன் இது நடந்தாலும் நடக்கலாம்..

 2. Karthikeyan.K சொல்கிறார்:

  Ada Mathimaran….Anabalagana Ukkam santha elect panniruparunu nenaikaraey….ada adaaa.enney arasiyal arivu……….

 3. R Chandrasekaran சொல்கிறார்:

  கார்த்தி.. மதிக்கு முதலியார கண்டா பிடிக்காது.. அதான் எல்லாத்துக்கும் அவர் மேல போடறாரு

 4. Pingback: புரட்சித்தலைவரின் புரட்சிகரப் பாடல் | வே.மதிமாறன்

 5. Pingback: புரட்சித் தலைவர் தந்த ‘தடி’ விருந்து | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s