பெரியாரை கேவலமாக பேசியவன், பிரபாகரனை பேசியிருந்தால்… நடக்கிறத வேற..

531815_478006805575500_383249206_n

‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று பா.ஜ.க. எச் ராஜா பேசியிருக்கிறார். பெரியாருக்கு பதில் பிரபாகரன் என்று சொல்லியிருந்தால் நடக்கிறதே வேற..

தமிழ்த் தேசியவாதிகள் மட்டுமல்ல, பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே சும்மா விட்டிருக்க மாட்டாங்க… தலித் இயக்கங்களும் புறப்பட்டு இருப்பாங்க.. ஜுனியர் விகடனில் கூட கண்டித்து கவர் ஸ்டோரி வந்திருக்கும்.

அவ்வளவு ஏன்..? தன்னை திராவிட இயக்க தலைவராக அடையாளப்படுத்திக் கொள்கிற வைகோ, பிரபாகரனை பற்றி எச். ராஜா இப்படி பேசியிருந்தால், மறுநாள் அவருடன் சிரித்து சிரித்துப் பேசி கூட்டணி முடிவு செய்திருப்பாரா?

இதற்கு முன் எழுத்தாளர் சிவகாமி விவகாரத்திலும் இதைப் பார்த்தோம்.

சிவகாமி பெரியாரை பற்றி அவதூறாக பேசியபோது வராத எதிர்ப்பு, புலிகள் பற்றி பேசியபோதுதான் மிக மோசமான வசவுகளை அவர் சந்திக்க நேர்ந்தது. அதற்கு பிறகு அவரை எந்த ஊடகங்களிலும் பார்க்க முடியவில்லை.

இப்படி இருந்தால்.. எச். ராஜா என்ன.. இன்னும்..?

பெரியார் எதிர்ப்பு தமிழ்த் தேசியவாதிகள், பெரியாரை இழிவாக பேசிய, பெரியார் சிலையை இடித்த இந்துமத தலைவர்கள் உடன் இணைந்து, ‘தமிழ் உணர்வை’ ஊட்டுகிற வேலையை பெரியார் இயக்கங்கள் செய்யாமல் இருந்தாலே அதுவே பெரியாருக்கு செய்கிற பெரிய பணிதான்.

*

ஜனவரி 24 அன்று face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

பெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது?

அ.மார்க்சை அழைத்த; ‘பெரியார் அவதூறு’ பேர்வழிகளை அழைக்காத திராவிடர் கழகத்திற்கு பாராட்டுகள்

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

11 Responses to பெரியாரை கேவலமாக பேசியவன், பிரபாகரனை பேசியிருந்தால்… நடக்கிறத வேற..

 1. தமிழ்ராசா சொல்கிறார்:

  கொலையை வெறுத்த பெரியாரோடு முஸ்லிம்களை கொன்ற கொலைகாரன் பிரபாகரனை ஒப்பிடுவது சரியா. மனித வெடி குண்டு தயாரிப்பாளர்களை பற்றி பேச அச்சப்படுவது இயல்பு தானே.

 2. Bala சொல்கிறார்:

  அய்யா தமிழ் ராசா ,

  உங்களைப்போன்ற சிலர் எதை எதோடு ஒப்பிடுவதென்ற விவஸ்தையில்லாமல் ஒப்பிட்டு விடுகிறீர்கள்.

  பெரியார் போராடிய காலம் வேறு ,நாடு வேறு , அதற்கு தேர்ந்தெடுத்த போராட்ட முறை வேறு.

  இலங்கையில் , இந்தியவைப்போல தமிழ்நாட்டைப்போன்ற சூழல்நிலவவில்லை , அதனால் பெரியாரின் போராட்ட முறைமையை இலங்கையில் கைக்கொள்ள முடியாதிருந்தது .

  ஆய்தப்போராட்டத்தின் மூலமே சிங்கள இனவாத அடக்கு முறையிலிருந்து மீள்வதற்கான ஒரே தெரிவாக இருந்தது.

  இந்த வகையில் இரு தலைவர்களுமே வெவ்வேறு தளங்களில் இயங்கியவர்கள் . அவர்களது காலம் ,நாடு , எதிரியின் தன்மை ஆகியவற்றை கொண்டே தமது போராட்ட முறைகளை அமைத்திருந்தார்கள் .

  அடுத்து முஸ்லிம்கள் விவகாரம் . இதுவும் தமிழ்நாட்டுநிலையும் , இலங்கைநிலையும் முற்றிலும் வெவ்வேறானவை.
  தமிழ் நாட்டில் எந்தப்போராட்டமாக இருந்தாலும் , அது இந்தி எதிர்ப்பாக இருந்தாலும் சரி , மானில சுயாட்சி போராட்டமாக இருந்தாலும் சரி தமிழ் நாட்டு முஸ்லிமகள் தமிழ் நாட்டு மக்களது எண்ணப்போக்கிற்கு இசைவாகவே நடந்து கொண்டார்கள் . என்றுமே இந்த போராட்டங்களை காட்டிக்கொடுக்க முற்பட்டதில்லை .

  ஆனால் இலங்கையில் அப்படியா ? தமிழ் அவர்களுக்கு தாய் மொழியாக இருந்தாலும் , தம்மை தமிழர்கள் என தம்மை ஒருபோதும் அழைத்துக்கொண்டதில்லை.

  ஆயுதப்போராட்டதின்போது சிங்கள அரசுடனும் , இராணுவத்துடனும் இணைந்து தமிழ் மக்களுக்கெதிராக எவ்வளவோ கொடூரங்கள் புரிந்த்துள்ளார்கள்.
  பல தம்ழ் கிராமங்களில் சிங்கள ராணுவத்துடன் புகுந்து குழந்தைகள் பெண்கள் என குடும்பம் குடும்பமாக கொலை செய்துள்ளார்கள் . ஏனைய தமிழர்கள் காடுகலுக்குள் தப்பி ஒடிவிட அந்த தமிழ் கிராமங்கள் அனைத்தும் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன .
  முஸ்லிம் ஊர்காவல் படையினர் , சிங்கள ராணுவத்திடமிருந்து ஆயுதங்கள் பெற்று , அரை குறைப்பயிற்சியுடன் தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்து விட்ட கொடூரம் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது.
  இந்த கொடூர முஸ்லிம் ஊர்காவல் படையினரின் கொட்டத்தை அடக்காது பிரபாகரனை என்ன சேலைய சுற்றிக்கொண்டு உட் கார்ந்திருக்க சொல்கிறீர்களா ?

  என்னமோ ஒண்ணுமே தெரியாத அப்பாவி முஸ்லிமகளை பிரபாகரன் கொன்று விட்டார் என ஒரேயடியாக பீலா விடுகிறீர்கள் ?
  இலங்கையின்நிலமை என்னவென்று சரியாகத்தெரியா விட்டல் பொத்திக்கொண்டிருங்கள் . எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக கருத்து சொல்ல வந்து விடாதீர்கள் .உங்கள் கருத்துகளை தமிழ் நாடு இந்தியாவோடுநிறுத்திக்கொள்ளுங்கள்.

 3. saniyan சொல்கிறார்:

  Well said Bala.

 4. Pingback: ஸ்டாலின்-அழகிரி இழிவான சண்டை – ஜெயேந்திரன் நடத்தியது புரட்சிகர போராட்டம் | வே.மதிமாறன்

 5. Fact சொல்கிறார்:

  தமிழ்ராசா said one hundred percent true.

 6. eelamboy சொல்கிறார்:

  அப்படி போடுங்க அருவாளை பாலா. அரைவேக்காடுகளூக்கு விடை அளிப்பதே சுத்த நேரவிரயம்.

  கிழக்கில் இலங்கை கூலிப்படைகளுடன் சேர்ந்து கொல்லப்பட்ட தமிழ் மக்கள், கெடுக்கப்பட்ட பெண்கள், பறிக்கப்பட்ட காணிகள் பற்றி தமிழ்ராசா அறியாமல் இருப்பது வேடிக்கையானது. அல்லது வேணுமென்றே தெரியாதாதது போல் நடிக்கிறாரா??

 7. Pingback: யுவன் சங்கர் ராஜா மதம் மாறினார் இளையராஜா இழிவுபடுத்தப்படுகிறார் | வே.மதிமாறன்

 8. Pingback: சுப்ரீம் ஸ்டாருக்கு கண்டனமும் நன்றியும் | வே.மதிமாறன்

 9. Pingback: பிரபாகரன் – டாக்டர் அம்பேத்கர் – பெரியார் | வே.மதிமாறன்

 10. Pingback: ‘பெரியாரிடம் தத்துவம் இல்லை’;அப்போ பிரபாகரனிடம்..? | வே.மதிமாறன்

 11. Pingback: இரண்டில் ஒன்று.. எது? | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s