மோடிக்குப் போட்டி அம்மா, மந்திரிகள் வரிசையில் கலைஞர், அடுத்து நயன்தாரா..

Rio-Jesus1

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக, திமுக பலமான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது. ‘கூட்டணி’ என்ற வார்த்தையை அதிமுக உச்சரிக்கக்கூட மறுக்கிறது.

திமுக தலைவர், தங்களுடன் கூட்டணி அமைக்க, விஜயகாந்த் உட்பட பலரை, ‘வாங்க வாங்க நேரா டெல்லிதான் வழியில எங்கேயும் நிக்காது.’ என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கு நேர் எதிராக அதிமுக தலைவர், தங்களிடம் கூட்டணி அமைக்க ஆர்வம் கொண்ட கட்சிகளை ‘ஏண்டா கொரங்கே?’ என்றுகூட கேட்க மறுக்கிறார்.
குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேரார்வம் கொண்ட, பாராம்பரியம் மிக்க கம்யுனிஸ்ட் கட்சிகளை கூட ஒரு பொருட்டாகவே அவர் மதிக்கவில்லை.

திமுகவின் கூட்டணிக்குள் திருமாவளவன் இருக்கிறார். கிருஷ்ணசாமியும் ஆதரவை அறிவித்திருக்கிறார் விஜயகாந்த் வருவது உறுதியாகி இருக்கிறது. இன்னும் யாரும் வரலாம். கோபாலபுரம் பா.ம.க வை கூட சேர்த்துக் கொள்ளலாம். கலைஞர் பிரேசில் நாட்டின் இயேசு சிலையைபோல் இரண்டு கைகளையும் விரித்தபடி கூட்டணிக்குள் யார் வந்தாலும் தழுவிக் கொள்ள தயாராயிருக்கிறார்.

இதற்கு நேர் எதிராக போயஸ் தோட்டத்தின் கதவுகள் பூட்டி இருப்பது மட்டுமல்ல; அதன் சாவி தூர வீசப்பட்டிருக்கிறது. கூட்டணிக்கு முயற்சிப்பவர்கள் ‘கேட்டு’க்கு வெளியேயும் கொடநாடு தேயிலைத் தோட்டங்களிலும் ‘சாவி’யை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

சாவி கிடைக்கும்போது.. நாடாளுமன்ற தேர்தல் முடிந்து விடும்.
காரணம், சாவியை கண்டுபிடிப்பவர்களால் வீட்டு உரிமையாளருக்கு எந்த உதவியும் இல்லை. கண்டுபிடிப்பவர்களுக்குத்தான் லாபம். இவர்களுக்கு பயந்துதான் சாவியே தூர வீசப்பட்டிருக்கிறது.

‘சாவியை தேடுபவர்களுக்கு.. தலா ஒரு சீட்டு ரெண்டு சீட்டு கொடுப்பதினால் அவர்கள் எம்.பி ஆவார்கள். ஆனால் நமக்கு..?’

‘இந்த செல்வாக்கற்ற கட்சிகளை சுமந்து கொண்டு போய் டெல்லியில் சேர்ப்பதற்கு பதில், டெல்லியையே நாம் கைப்பற்றினால்…?’

அதற்கு, ‘நாற்பதும் நமக்கே’ என்ற திட்டமே அம்மாவிடம் இருப்பதாக தெரிகிறது.

ஆக, ‘அம்மா திமுக’ வின் கூட்டணி, தேர்தலுக்கு பிறகுதான்.

காங்கிரஸ் – பி.ஜே.பி. இவர்களில் யார் வெற்றி பெற்று வருகிறார்களோ அவர்களுடனே ஆட்சியிலும் கூட்டணி. இதுவே அம்மாவின் தேர்தல் வியூகமாக இருக்கும்.

திமுக கூட்டணி வெற்றி பெற்றால் திமுக அமைச்சரவையில் இடம் பெறும். அதிமுக வெற்றி பெற்றால், மத்தியில் ஆட்சியை அமைக்கும் கட்சியில் இரண்டாவதாக இருக்கும்.
அப்படியானால் பிரதமர் பதவியும் இரண்டாக இருக்கலாம்.

அப்போ வைகோ?
End கார்டு போட்டு எகத்தாளம் பண்ணலாம்னு நினைக்காதீங்க..
அடுத்து நயன்தாரா..

images

 26-01-2014  அன்று face bookல்  எழுதியது.

தொடர்புடையவை:

தேர்தல்: மதவாதக் கட்சிக்கு எதிர்ப்பு ஜாதியக் கட்சிக்கு ஆதரவா?

தேர்தல் கூட்டணி முடிவாகிவிட்டது!

இந்திய ராஜபக்சே! வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா?

தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

மூலதனமும் நீயே.. மூலப்பொருளும் நீயே.. அன்புடன் ஆட்கொள்வாய் கூட்டணித் தாயே!

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

4 Responses to மோடிக்குப் போட்டி அம்மா, மந்திரிகள் வரிசையில் கலைஞர், அடுத்து நயன்தாரா..

  1. Pingback: இல. கணேசன் மீன் விற்கிறாரா.. வாங்குகிறாரா? | வே.மதிமாறன்

  2. Pingback: கருப்பு – பி.ஜே.பி – கெஜ்ரிவால் – சித்தார்த், பிருத்விராஜ் | வே.மதிமாறன்

  3. Pingback: புரட்சித் தலைவர் தந்த ‘தடி’ விருந்து | வே.மதிமாறன்

  4. Pingback: அம்மா வியூகமும் காங்கிரஸ் – கம்யுனிஸ்ட்டுகளின் கையறுநிலையும் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s