நவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளி திருவாரூர் தங்கராசு மரணம்

1521537_10203156494979543_1958554309_n

தமிழகத்தில் நவீன சிந்தனையை பெரியாரே துவக்கி வைக்கிறார்.

2000 ஆண்டுகளாக நம்பிக்கொண்டிந்த புனிதங்களை இந்து மதத்தை பார்ப்பனியத்தை கடவுளை தலைகீழாக்கி நொறுக்கியவர் பெரியாரே. 1925 க்குப் பிறகு தமிழகத்தில் புதிய எதிர் சிந்தனை மரபை அவரே உருவாக்கினார். அதையே தொடந்து மக்களிடம் கல்லடியும், செருப்பு வீச்சையும் எதிர்கொண்டு அஞ்சாமல் தொடர்ந்து பிரச்சாரமும் செய்தார்.

ராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம் இதன் பெருமைகளும் அதனூடக பார்ப்பன மற்றும் பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிக்கர்களின் ஜாதித் திமிருமே, தமிழகத்தின் கலை வடிவங்களாக இருந்தன.

திரும்பும் திசையெங்கும் தெருக்கூத்து, நாடகம், தமிழ் இசை, கர்நாடக சங்கீதம், கதாகாலட்சேபம் என்று எளிய மக்களின் கலைவடிவங்கள் முதல் ஆதிக்ககாரர்களின் கலை வடிவம் வரை இதே கதைதான்.

தமிழகம் பல நூற்றாண்டுகளாக ஆதிக்க ஜாதி இந்துப் புராணக்குப்பைகளால் சக்கர வியூகம், பத்ம வியூகம் போன்று சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. அந்த வியூகங்களை உடைத்து உள் நுழைந்தவர் பெரியார் ஒருவரே.

பெரியார் சிந்தனை மரபில் பல மேதைகள் உருவாகினர். அதில் மிக முக்கியமானவர் திருவாரூர் தங்கராசு அய்யா. (தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர்)

இந்துப் புராணங்களும் ராமனும் ராமாயணமும் அவரிடம் பட்ட பாடு சொல்லி மாளாது. நடிகவேள் எம்.ஆர். ராதாவுடன் இணைந்து அவர் நடத்திய ராமாயணம் நாடகம் அன்றைய காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. ரத்தக்கண்ணீரில் அவருடைய பகுத்தறிவு வசனங்கள் இன்றும் என்றும் அது ஒரு பாடம்.

பள்ளிப் படிப்பை ஆரம்ப நிலையில் மட்டுமே படித்த திருவாரூர் தங்கராசு அவர்கள் தமிழ் புராணக்குப்பைகள் மேல் நடத்திய தாக்குதலை தடுக்க, எந்த பெரிய இந்துக் கண்ணோட்டம் கொண்ட மெத்தப் படித்த தமிழ் அறிஞர்களாலும் முடியவில்லை.

அவர் எழுதிய சிவனடியார் வரலாறு, சிவா விஷ்ணு லீலைகள்  சேக்கிழரையும் பெரியபுராணத்தையும் சைவ சமயத்தையும் சந்தி சிரிக்க வைத்தவை.

நடிகர் ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன் ‘உன் முதுகையே உன் கண்களால் பார்க்க முடியாது. அதற்காக முதுகே இல்லை என்று ஆகிவிடுமா? அதுபோல்தான், கடவுளை பார்க்க முடியவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று ஆகிவிடுமா?’ என்று கேட்டார்.

அதற்கு அய்யா தங்கராசு சென்னை எண்ணூரில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய தெருமுனைக் கூட்டத்தில், இப்படி பதிலளித்தார்:

“முதுகை மட்டுமல்ல, ஒருவன் அவனுடைய ஆசனவாயைக் கூட அவன் கண்களால் நேரடியாக பார்க்க முடியாது. அதுக்காக அதான் கடவுள் என்று சொல்ல முடியுமா? கண்ணாடி உதவியிருந்தால் அவனவன் முதுகையும் ஆசன வாயையும் கூட அவன் கண்களால் பார்க்க முடியும். எத வைச்சி பாரத்தால் உன் கடவுள் தெரிவான்.” என்றார்.

எழுத்து, பேச்சு என்று மட்டமல்லாமல்,  அந்தக் காலத்தில் பெரியாருக்கு எதிராக பேசியவர்கள் கூட்டத்தில் புகுந்து, கலகம் செய்ததிலும் அய்யா தங்கராசுவின்  செயல் போற்றுதலுக்குரியது.

பெரியாரின் தீவீரத் தொண்டரும், திருவாரூர் தங்கராசின் சிஷ்யருமான திருச்சி வீ.அ. பழனியுடன் சேர்ந்து கொண்டு எதிரிகளோடு அவர் நேரடியாக மோதிய சம்பவங்களும் உண்டு.

இந்து மகா சபை தலைவர் மதுரை சிவனாண்டித் தேவர் என்பவர், பெரியாரை திட்டி ‘கருப்புச் சட்டைக்காரனுக்கு என்ன தெரியும்? அரிச்சுவடி பாடத்தை நாங்கள் சொல்லித் தருகிறோம். வரச் சொல்..’ என்று சவால் விட்டு பேசிக் கொண்டிருந்தபோது, பழனியுடன் மேடையருகே சென்று,  பழனி மேடையில் ஏறி சிவனாண்டித் தேவர் பேசிக் கொண்டிருந்த மைக்கை பிடிங்கி கேள்வி கேட்டவுன், கொத்தளித்தது அங்கிருந்த கூட்டம்.

“நீ தானே அரிச்சுவடி சொல்லிக்கொடுக்கிறேன்னு சொன்ன.. சொல்றா.. இல்ல நான் உனக்கு சொல்லிக் கொடுக்கட்டுமா?” என்றதும்.. அதுபோலவே பெரியாரை இழிவாக பேசிய விபூதி வீரமுத்துவை அய்யா பழனியும் மற்றத் தோழர்களும், மேடைஏறி வீரமுத்துவிற்கு எருக்கம் பூ மாலை போட்டதும்… பிறகு அவனை ‘சிறப்பாக’ கவினத்ததிலும்… அய்யா திருவாரூர் தங்கராசுவின் பின்னணி முக்கியமானது.

**

பெரியார் சிந்தனையின் சிறப்பே தர்க்கம் (Logic). எவ்வளவு பெரிய விசயத்தையும் ஒரே ஒரு கேள்வியில் கந்தலாக்குவது.
பெரியாரின் அந்த மரபு திருவாரூர் தங்கராசு அய்யாவிடம் நிரம்பி இருந்தது.

சாதாரண பொதுக்கூட்டத்தில், இப்படி ஒரு கேள்வி கேட்டார் அய்யா தங்கராசு:
“ராமன் காட்டுக்குப் போறேன்னுதானே கிளம்பினான். அயோத்திக்கு எந்தப் பக்கம் காடு இருக்கு? வடக்கு பக்கம்தானே.. இமய மலையே அயோத்திக்கு வடக்குல தானே இருக்கு. அப்புறம் எதுக்குடா ராமன் காட்டுக் போறேன்னு தெற்கு பக்கம் வந்தான்? திருட்டுப் பய.. அதுலதான் நமக்கு எதிரான அரசியல் இருக்கு”

திருவாரூர் தங்கராசு அவர்கள் கேட்ட இந்தக் கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.
நவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளியின் மரணம், மாற்று சிந்தனையாளர்களுக்கு பேர் இழப்பு.

தொடர்புடையவை:

ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

‘இவர்கள்தான் நவீன எழுத்தாளர்கள்’ ; நல்லாயிருக்கு ராஜா நியாயம்!

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

13 Responses to நவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளி திருவாரூர் தங்கராசு மரணம்

 1. Kari Kalan சொல்கிறார்:

  அய்யா, தங்கள் பதிவை நான் திருடிக் கொள்ளலாமா ? அதாவது எடுத்து என் பதிவில் உங்கள் பெயருடன் பதிவிடலாமா?

 2. வே.மதிமாறன் சொல்கிறார்:

  தாரளமாக. திருடுகிறவர்கள் அனுமதி கேட்க மாட்டார்கள். என் கருத்துக்களை பலர் மேடையிலும் தொலைக்காட்சியிலும் எழுத்திலும் தங்கள் கருத்துக்களாக… சொல்லி வருவம் சூழலில்.. நீங்கள் அனுமதி கேட்பது..

  என் பெயருடன் பதிவிட்டால் அது திருட்டு இல்லீயே.. அதற்கு அனுமதியும் அவசியமில்லை

 3. Venkatesan சொல்கிறார்:

  கேள்வியை நான் தவறாக புரிந்துகொண்டுள்ளேன் என நினைக்கிறேன்.

  இன்று அயோத்தி என அழைக்கப்படும் நகரம்தான் ராமாயணம் கூறும் அயோத்தி என வைத்துக்கொண்டால், அயோத்திக்கு தென்புறமும் காடுகள் உண்டே. ராமாயணம் எழுதப்பட்ட காலத்தில் என்ன நிலை என்ன தெரியவில்லை. ஆனால், இன்றைய காலத்தில் இந்தியாவில் அதிக காடு பரப்பு உள்ள மாநிலங்கள் என ஒரிசா, சட்டீஸ்கர், மத்திய பிரேதேசம், மகாராஷ்டிரா போன்றவற்றை விக்கிபீடியா கூறுகிறது. இவை அனைத்தும் அயோத்திக்கு தெற்கே தானே உள்ளன. வீடு-நாடு துறப்போர் செல்வது இமயமலை என்ற அடிப்படையில் ராமன் ஏன் அங்கே செல்லாமல் தெற்கே வந்தான் என்று வேண்டுமானால் கேட்கலாம்! வானப்ரஸ்தம் என பதில் வரக்கூடும்.

 4. duraicool சொல்கிறார்:

  இராமாயணம் என்பது இங்கு பாரம்பரியமாக சொல்லப்பட்டு வந்த ஓரு நீதிக்கதை. அதிலே திராவிட ஆரிய அரசியலை புகுத்தியது உங்கள் திறமை.

 5. samy சொல்கிறார்:

  அவர் எழுதிய புத்தகம் எங்கு கிடைக்கும்

 6. suvan சொல்கிறார்:

  Ayya Thangarausu Avargallukku Veera Vannakkam!

 7. ஆனந்தம் சொல்கிறார்:

  /பெரியார் சிந்தனையின் சிறப்பே தர்க்கம் (Logic). எவ்வளவு பெரிய விசயத்தையும் ஒரே ஒரு கேள்வியில் கந்தலாக்குவது.//
  அடப்பாவமே! இதை டைப் அடிக்கறப்போ இருந்த லாஜிக் சிறப்பு இப்ப காணாமப்
  போச்சா?
  என்னோட முந்தின பின்னூட்டத்துக்கு பதில் சொல்ல நேரம் உங்களுக்கு நேரம் இல்லாட்டியும் வெளியிட்டிருக்கலாமே? பின்னூட்டம் போடற சிறப்பு தர்க்க லாஜிக் புகழ் பெரியார் சிந்தனையுள்ள மத்தவங்களாவது தகுந்த பதில் சொல்லியிருப்பாங்களே?
  அப்புறம் இன்னொரு விஷயம்: பாரதி பக்தர்களின் கள்ள மௌனம் என்ற கொக்கரிப்பும் இதே ரகம்தானோ? பின்னூட்டம் போட்டவர்களை எல்லாம் மட்டுறுத்திவிட்டீர்களோ? பாரதி பக்தர்களின் மட்டுறுத்தப்பட்ட மௌனம் என்று அதை மாற்றி வாசித்துக் கொள்ளலாமா?

 8. ஆனந்தம் சொல்கிறார்:

  எனது முந்தைய கமென்டில் சொல்ல விடுபட்ட விஷயம்: படித்ததும் மறக்காமல் அதை மட்டுறுத்திவிடவும். அதாவது முதலாவது கமென்ட் போல இரண்டாவதையும் ஓ, மறுபடி ஞாபக மறதி…….. இந்த மூன்றாவதையும் சேர்த்து மட்டுறுத்திவிடவும்.
  இனி உங்கள் தளத்தில் பின்னூட்டம் போட்டு உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன். பதில் இல்லாதவர்களிடம் கேள்வி கேட்டுப் பயன் என்ன? எதையும் கேள்வி கேட்டபின்பே ஏற்றுக் கொள்ளச் சொன்ன பகுத்தறிவுப் பகலவன் வாழ்க! நன்றி.

 9. Pingback: எஸ்.எஸ்.ஆர்: தற்கொலைக்கு முயன்றேன் – பெரியார் என்னை அவமானப்படுத்தி விட்டார் | வே.மதிமாறன்

 10. Pingback: இயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது! | வே.மதிம

 11. Pingback: ருத்ரையா-எம்.எஸ்.எஸ். பாண்டியன்; ஒப்பாரி வைப்பதால் என்ன பயன்? | வே.மதிமாறன்

 12. Pingback: மற்றபடி, மிகச் சிறந்த வாழ்க்கை அவருடையது | வே.மதிமாறன்

 13. Pingback: இயக்குநர் K. பாலசந்தர் மரணமும் ‘முற்போக்கு’ ஒப்பாரிகளும் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s