ஜாதியை துண்டாக்கினால் அதற்குள்ளும் ஜாதி..

adi-shankaracharya

ஒரு தாழ்த்தப்பட்டவர்
ஒரு நாளைக்கு 3 வேளை குளித்தாலும்
ஆறு வேளை வழிபட்டாலும்
அவர் சங்கராச்சாரியாக முடியாது.

ஒரு பார்ப்பனர்
3 மாதம் குளிக்காமல் இருந்தாலும்
கொலை, கொள்ளையில் ஈடுபட்டாலும்
அவரை தீண்டாமைக்குள் கொண்டு வரமுடியாது.

பிறக்கும்போதே ஜாதியுடன்
புனிதமும் தீண்டாமையும் பிறக்கிறது.

இது மனுவின் சட்டம்.

அது கயர்லாஞ்சியோ தர்மபுரியோ
ஜாதி வன்கொடுமைக்கு ஆளான
தாழ்த்தப்பட்டவரையே தண்டிப்பதும்..
ஹரியானாவோ பாண்டிச்சேரியோ
கொலை செய்தாலும்
சாட்சியில்லை என்று
பார்ப்பனரை விடுவிப்பதும்;

இன்றைய நவீன சட்டம்.

ஜாதியை வெட்டி துண்டாக்கினால்
அதற்குள்ளும் ஜாதி..
பரம்பொருளைப் போல் எங்கும்
நீக்கமற நிறைந்திருக்கிறான் மனு.

*

படத்தில் இருப்பவர் மனு அல்ல; அவரை மனுவாக புரிந்து கொண்டால் தவறுமில்லை. மனுவின் Intellectual வடிவமான சங்கரர்.

சங்கரர்கள் ஆதியிலும் அப்படிதான் நவீனத்திலும் அதேபோல்தான்.

தொடர்புடையவை:

தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?

பிரேமானந்தாவுக்கு தண்டனை ஜெயேந்திரனுக்கு விடுதலை; இது கம்யுனிஸ்ட் கட்சி ஸ்டைல்..

god is great

சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?

பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தா?; ஜெயேந்திரன் விடுதலை..

ஆனந்த விகடன் ஜாதி எக்ஸ்பிரஸ்: சின்ன விளக்கம் பெரிய திருத்தம்

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

17 Responses to ஜாதியை துண்டாக்கினால் அதற்குள்ளும் ஜாதி..

 1. duraicool சொல்கிறார்:

  இப்பொழுது ஜாதிக்கலவரம் பண்ணுகிறவரகள் மனுவையோ சங்கரரை அறிந்தவர்கள் அல்லர்.இந்த உண்மையை ஏன் மூடுகிறீர்கள்?

 2. K. Jayadev Das சொல்கிறார்:

  \\ஒரு தாழ்த்தப்பட்டவர்
  ஒரு நாளைக்கு 3 வேளை குளித்தாலும்
  ஆறு வேளை வழிபட்டாலும்
  அவர் சங்கராச்சாரியாக முடியாது.\\

  ஆறு மாசம் குளிக்காம கொலை பண்றவன் பதவிக்கு ஒரு தாழ்த்தப்பட்டவர் போகணும்னு நீர் எதுக்கு ஆசைப் படனும்?

 3. R Chandrasekaran சொல்கிறார்:

  அவனவன் முதலாளி ஆவுனும்னு பாத்தா…நீர் சன்யாசி ஆவச் சொல்றிய

 4. Bala சொல்கிறார்:

  ஜாதி கதை தானே இனத்திற்கும். பெரியார், எம்.ஜி.ஆர்., ரஜினி, வைகோ, விஜயகாந்த் இவர்கள் எல்லாம் காலம் காலமாக / தலைமுறைகளாக தமிழ்நாட்டில் வசித்தாலும் இவர்களை யாரும் தமிழன் என்று சொல்வதில்லையே. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இவர்களை வேறு ஊர்காரன் என்று வசைபாடவே செய்கிறான் தமிழன். தமிழ் பேசும் அப்பா, அம்மாவுக்குப் பிறந்தால் மட்டும் தான் தமிழனா? ஏன் அப்புடி. தமிழ்நாட்டில் பிறந்த குஜராத்தி, சேட்டு, மலையாளி எல்லாரையும் தமிழன் என்று அழைப்பீர்களா? ஜாதியை மட்டும் குறை சொல்லி என்ன பிரயஜோனம்.

  //ஜாதியை வெட்டி துண்டாக்கினால்//

  ஜாதி பார்ப்பவரும் வெட்டுகிறார். பார்க்கவில்லை என்பவரும் வெட்டுகிறார்.

 5. மாசிலா சொல்கிறார்:

  duraicool says : //இப்பொழுது ஜாதிக்கலவரம் பண்ணுபவர்கள் மனுவையோ சங்கரரை அறிந்தவர்கள் அல்லர்.இந்த உண்மையை ஏன் மூடுகிறீர்கள்?//

  நீங்கள் குறிப்பிட்டுள்ளதை முற்றிலும் தவரென்று கூற முடியாதுதான்.

  இன்று சாதிகள் பெயரை சொல்லி அடாவடித்தனம் செய்யும் ஆதிக்க சாதி மடையர்களுக்கு மனு எனும் மண்ணாங்கட்டி உருவாக்கி கொடுத்த சாதிகள் அடுக்கெனும் பொய் பித்தலாட்ட கட்டுக்கதைகள்தான் பசுத்தோல் போத்திய புலிகளாக உலா வரும் உதவாகரை ஆதிக்க சாதி கேப்மாறிகளுக்கு தலித்துகளை அழித்தொழிக்க இந்து மதம் பூரண ஆசியும் அதிகாரமும் அளிக்கிறது. இந்த உண்மையை நீங்களும் மறைககவோ மறுக்கவோ முடியாது.

 6. மாசிலா சொல்கிறார்:

  R Chandrasekaran says : //ஆறு மாசம் குளிக்காம கொலை பண்றவன் பதவிக்கு ஒரு தாழ்த்தப்பட்டவர் போகணும்னு நீர் எதுக்கு ஆசைப் படனும்?//

  விலாசம் தெரியாதகொலைவெறி பிடித்த நாடோடி ஆரிய குமபல்கள் சூழ்ச்சிகள் செய்து தமிழனுடைய தடயங்களை அழித்து பொன்னையும் பொருளையும் திருடி மண்னையும் கோயில்களையும் குலங்களையும் ஆக்கிரமித்து அபகறித்தே ஊண் வளர்த்தவர்கள்தான் இன்றைக்கும் நாம் காணும் இந்து மத அதிகார வர்க்கம். தமிழர்கள் இழந்த தன்மானத்தை மீட்டு நிலை நிறுத்த முயற்சி செய்தால், ‘பதவிக்கு ஆசையா?’ என கேள்வி கேட்பது சுத்த முட்டாள்தனம்.
  ஆதியில் பதவிகளை திருடியவன் நாடோடி ஆரிய கூட்டமே.

 7. வே.மதிமாறன் சொல்கிறார்:

  சரியான விளக்கங்கள்.
  நன்றி தோழர். மாசிலா.

 8. மாசிலா சொல்கிறார்:

  Bala says : //பெரியார், எம்.ஜி.ஆர்., ரஜினி, வைகோ, விஜயகாந்த் இவர்கள் எல்லாம் காலம் காலமாக / தலைமுறைகளாக தமிழ்நாட்டில் வசித்தாலும் இவர்களை யாரும் தமிழன் என்று சொல்வதில்லையே. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இவர்களை வேறு ஊர்காரன் என்று வசைபாடவே செய்கிறான் தமிழன்.//

  Bala says : //தமிழ் பேசும் அப்பா, அம்மாவுக்குப் பிறந்தால் மட்டும் தான் தமிழனா? ஏன் அப்புடி. தமிழ்நாட்டில் பிறந்த குஜராத்தி, சேட்டு, மலையாளி எல்லாரையும் தமிழன் என்று அழைப்பீர்களா? ஜாதியை மட்டும் குறை சொல்லி என்ன பிரயஜோனம்.//

  பதிவின் கருத்துக்களுக்கு முற்றும் ஒவ்வாத கேள்விகள். முதலில் பதிவை ஒன்றுக்கு இரண்டு முறை படித்துவிட்டு இது கூற வரும் கருத்தாக்கங்களை நன்கு உள்வாங்கிய பின் கருத்து தெரிவிப்பது அழகு.

  மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் கட்டி வளர்த்த கோயில் தளங்களில் பின் புற தோட்டத்து கதவுகள் வழியாக அடாவடித்தனமாக உட்புகுந்து இடம் பிடித்த சூழ்ச்சிக்கார கொலை வெறி ஆரிய கும்பல்கள் இன்று தமிழன் அர்ச்சகராகவோ தமிழில் அர்ச்சனை செய்யவோ கூடாது என அடம் பிடிக்கும் மனு ரவுடிகளுக்கு வக்காலத்து வாங்கும் நீங்களெல்லாம் இப்போது தமிழர் அடையாளம் குறித்து முதலை கண்ணீர் வடிப்பதை நினைத்தால் எதால் சிரிப்பது என தெரியவில்லை!

 9. Bala சொல்கிறார்:

  //பிறக்கும்போதே ஜாதியுடன் புனிதமும் தீண்டாமையும் பிறக்கிறது.//

  மாசிலா நீங்கள் தான் பதிவை நன்றாகப் படிக்க வேண்டும். மேலே இருக்கும் வரியை நன்றாக கூர்ந்து படியுங்கள் அதன் பின் என் பதிலைப் படிக்கவும்.

 10. Bala சொல்கிறார்:

  யாரப்பா வந்தேறிகள். கலைஞரின் நம்பிக்கைப் பாத்திரமான, தமிழை செம்மொழி என்று முதன்முதலில் கூறிய‌ பரிதிமாற் கலைஞர் கூறுவதைப் படியுங்கள்.

  //புராதன இந்தியரைத் துரத்தியவர்கள் மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து வந்தவர்கள். அவர்கள் தமிழர்களாவார்கள்….//

  பார்க்க பக்கம்: 13……
  ஆதாரம்: http://projectmadurai.org/pm_etexts/pdf/pm0452.pdf

  எல்லோருமே ஆப்பிரிக்காவிலிருந்து வந்த வந்தேறிகள் / நாடோடிகள் தான். ஆரியர்கள் 3000-5000வருடம் என்றால், தமிழன் ஒரு 8000-100000 வருஷம் என்று வைத்துக் கொள்ளலாம். அம்புட்டு தான்…

  (அரைவேக்காடுகள் தமிழ் நாட்டில் இருக்குவரை யாரும் வெளியிலிருந்து வந்து எங்களை அசைக்க முடியாது. நாங்களே எங்கள் மீது சேறை அடித்துக் கொள்வோம். ஹ்ஹா)

 11. Bala சொல்கிறார்:

  sorry…it’s 8000-10000 (ten thousand)….

 12. duraicool சொல்கிறார்:

  தென்பகுதியை கலக்கிக்கொண்டிருக்கும் ஐயாவழி சிவசந்திரன் அவர்கள் காலில் விழுபவர்கள் ஜாதி பார்ப்பதில்லை.அவர் எங்கு பிறந்தார் என்று அறிந்துவிட்டு வாருங்கள்

 13. ஆ இராஜ்குமார்மழவராயண் சொல்கிறார்:

  Bala says:
  )))எல்லோருமே ஆப்பிரிக்காவிலிருந்து வந்த வந்தேறிகள் / நாடோடிகள் தான். ஆரியர்கள் 3000-5000வருடம் என்றால், தமிழன் ஒரு 8000-100000 வருஷம் என்று வைத்துக் கொள்ளலாம். அம்புட்டு தான்…(((((

  தமிழன் ஓன்னும் ஆப்பிக்காவில் இருந்து வந்தவன் இல்லை அவன் குமரி கண்ட மண்ணிண் மைந்தன் 50000. (ஐயம்பது ஆயிரவருடம்) வருடத்திற்கும் முற்பட்ட வறலாறு உனடு முதலா வரலாற்றை தெளிவா படி ஆப்புறம் விவாதம் செய்யலாம்

 14. ramamurthi valudareddy villupuram சொல்கிறார்:

  தோழர் மதி உங்களின் வினாக்களுக்கு பதில் சொல்லாமல் உங்களை பயங்கரவாதி என்று கூறுவது அவர்களின் நியாயங்கள் திவலாகியிருப்பதை காட்டுகிறது . எழுதுங்கள் அன்பின் கண்களும் நியாயத்தின் விரல்களும் உங்களை வாசிக்க காத்திருக்கின்றன

 15. Pingback: தமிழ் உணர்வாளரின் தெலுங்கு டப்பிங் | வே.மதிமாறன்

 16. Pingback: ‘மனு’ விற்கு மறுபெயர் | வே.மதிமாறன்

 17. Pingback: தலித்தல்லாதவர் கூட்டணியின் யோக்கியதை.. | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s