ஓரினச்சேர்க்கை: உறவல்ல, நோய்

Gay-Marriage lalogay

ஓரினச்சேர்க்கை; எதிர்பாலினத்தோடு உறவுகொள்ள வாய்பில்லாதவர்களால் அதிக அளவில் கடைபிடிக்கப்படுகிறது. சிறையில், ராணுவத்தில், ஒரே பாலினங்கள் மட்டும் தங்கும் இடங்களில்.

அதுபோலவே, பாலுறவு வேட்கையின் துவக்க நிலையில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்குள்ளும் உறவின் அறிமுகமாக ஓரினச்சேர்க்கையின் சீண்டல்கள் ஒரு சுயஇன்ப உணர்வுடனே நடக்கிறது.

அந்த நேரத்து தேவை, சூழல், மாற்று பாலினத்தோடு தன் உறவை பகிர்ந்து கொள்வதில் உள்ள அச்சம்; இவையே ஓரினச்சேர்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பின்பு அதுவே பழக்கமாகி பாழய்போனவர்களும் இருக்கிறார்கள்.

உயிரனங்களின் இயல்புக்கு மாறான, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது ஒரு மனநோய். இந்த மனநோயை தன் இயல்பாக மாற்றிக் கொண்டவர்கள், உலக அளவில் பாசிஸ்டுகளாகவும் மாறியிருக்கிறார்கள்.
ஹிட்லர், முசோலினி போன்றவர்கள்.

ஓரினச்சேர்கையை ஆதரிப்பது புதுமையும் அல்ல, எதிர்ப்பது பழமையான மதவாதிகள் கருத்துமல்ல.
பைபிளின் பழைய ஏற்பாட்டிலேயே ஓரினச்சேர்க்கை நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்து மதம் ஓரினச்சேர்க்கையையும், விலங்குகளுடன் உறவு கொள்வதையும் நியாயப்படுத்தியிருக்கிறது. புனிதமான இந்து கடவுள்கள், ஓரினச்சேர்க்கையில் மட்டுமல்ல, விலங்குகளுடனும் உறவில் ஈடுபட்டவர்கள்தான்.

கடவுள்கள் அப்படி உறவில் ஈடுபட்டதினாலேயே, பிறந்த கடவுள்களும் இருக்கிறார்கள். அய்யப்பனை போல்.

ஓரினச்சேர்க்கையை இயல்பாக்கிக் கொண்டவர்களை குற்றவாளிகள் போல் பார்க்காமல், அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டுவருதற்கு மருத்துவ ரீதியான மனநல ஆலோசனைகளுகளை செய்ய அரசு முன் வர வேண்டும்.

*

இன்று காலை face book ல் எழுதியது

தொடர்புடையவை:

பாலியல் தொழிலா? விபச்சாரமா?

பாலியல் முதலாளி

ஊதாரி ஓஷோவும் – நரமாமிச மோடியும்

 மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேவா?

ஓமோ செக்ஸ்… சூப்பர்டா மச்சான்…

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

19 Responses to ஓரினச்சேர்க்கை: உறவல்ல, நோய்

 1. Duraicool சொல்கிறார்:

  பைபிளில் ஓரினச்சேர்க்கை நியாயப்படுத்தப்படவில்லை.ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதற்காக யகோவா ஒரு நகரத்தை அழிக்கிறார்.

 2. இளசெ(இ.ஜெயக்குமார்) சொல்கிறார்:

  ஆக்கப்பூர்வமான செயல்களில் , ஆக்கப்பூர்வமான போராட்டங்களில் மனிதன் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இம்மாதிரியான நோய்கள் ஊக்குவிக்கப்ப ( விளம்பரபடுத்தப் ) படுகிறது .

  சான்றாக ’90 களின் தொடகத்தில் பல ஊடகங்களிலும் குடும்ப பெண்கள் தடம் புரள்கிறார்கள் என்ற தவறான கருத்து தொடர்ந்து வேண்டுமென்றே பரப்பபட்டது.

  இளைஞர்கள் இவற்றையெல்லாம் புரிஞ்சு , கெட்டிகாரதனமாக தங்கள் இலக்கிலேயே கவனமாக யிருக்க வேண்டும்.பொழுது போக்கிற்கு குடும்பம் , சொந்தம் , பயிலும் இடம் இவையே சிறந்தது.

  -இளசெ(இ.ஜெயக்குமார்)

 3. Viyasan Viyas சொல்கிறார்:

  இவ்வளவு நாளும் திரு. மதிமாறன் அணிந்திருந்த முற்போக்கு முகமூடியை இந்த ஒரு பதிவு கிழித்துப் போட்டு விட்டது. 🙂

  வயது வந்தோர் இருவர், அவர்களிருவரின் பூரண சம்மத்தத்துடன் என்ன செய்தால் தான் யாருக்கு என்ன? இது அவர்களின் தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் செயல். அவர்களின் உடல்களுக்கு அவர்கள் தான் பொறுப்பே தவிர, அரசாங்கமோ, அயலவர்களோ அல்ல. இந்த 21 ம் நூற்றாண்டில் 18ம நூற்றாண்டுக் கருத்தான ஓரினச்சேர்க்கை மனநோய் என்று உங்களுக்குள் நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை, உங்களின் அறியாமையை எல்லோருக்கும் வெட்கமில்லாமல் எழுத்திலும் காட்டும் உங்களைப் பார்க்க சிரிப்பாக இருக்கிறது. அப்படியானால் ஓரினச் சேர்க்கையை தடை செய்யாத நாடுகள் எல்லாம், தமது மக்களிடையே மனநோய் வளர உதவுகிறார்கள் என்று கருத்தா? ஐயா உங்களின் காமெடி தாங்க முடியவில்லை. 🙂

 4. Thaz சொல்கிறார்:

  I totally agreeing with your view. If we allow this then people may rally to legalize zoophilia, as time pass by people may argue and come up with logcial reason that zoophilia is normal because it is legal in several foreign countries and it is between the pet and the owner. I am just giving ‘zoophilia’ as an example for abnormal sexual desire, not only zoophilia even people come up with logical reason for Necrophilia as time pass by people can argue that there is nothing wrong in it. They need medical treatment and consuling for this.

 5. Stalin சொல்கிறார்:

  உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. பாபா ராம்தேவ்வின் மட்டமான கருத்தகளுக்கும் வித்தியாசமும் இல்லை. நெக்ரோபிலியா இதுவும் ஒன்றல்ல. It’s just a personality issue and a matter of sexual preference, somewhat akin to the situation where a few people choose to be left-handed. http://timesofindia.indiatimes.com/india/SC-ruling-on-homosexuals-irrational-Experts/articleshow/27310535.cms எல்லாவற்றிற்கும் மேல், இந்த தீர்ப்பு தனி மனித உரிமையில் தலையீடல். பாலியல் குற்றங்களுக்கு கூட இவ்வளவு பெரிய தண்டனை இருக்காது

 6. களஞ்சியம் சொல்கிறார்:

  //ஓரினச்சேர்கையை ஆதரிப்பது புதுமையும் அல்ல, எதிர்ப்பது பழமையான மதவாதிகள் கருத்துமல்ல.//

  ஓரினச்சேர்க்கையில் விசயம் தீண்டாமையும் தனி மனித வருப்பமும் அடங்கியுள்ளன. அறிவியலில் ஓரினச்சேர்க்கை விருப்பம் அல்லது அதற்கான காரணம் மரபுக் கூர்களில் பதிந்துள்ளன என்கின்றனர். ஓரினச்சேர்க்கையார்களை அண்ணன் முசோலினியுடன் ஒப்பிட்டு முன்பு பதிவு எழுதியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

 7. இளசெ(இ.ஜெயக்குமார்) சொல்கிறார்:

  தனிமனித சுதந்திரத்திம்னா

  அப்பா-மகள் , அம்மா-மகன் , அண்ணன்-தங்கை , அக்கா-தம்பி உறவு வெச்சுகிட்டா இதப்பத்தி, மிருகங்களுடன் உறவு (as THAZ mentioned) பற்றி …

  இளசெ(இ.ஜெயக்குமார்)

 8. களஞ்சியம் சொல்கிறார்:

  இப்ப யாரு ‘பாரதிய ஜனதா பார்ட்டி’ ?
  Homosexuality is an unnatural act and cannot be supported: BJP
  http://m.ibnlive.com/news/homosexuality-is-an-unnatural-act-and-cannot-be-supported-bjp/439589-37-64.html

 9. dowe doit சொல்கிறார்:

  If two people do something after consent, if it does not bother you financially, physically or legally what is your fucking problem ? Why suddenly bring in Bible etc., ? We must think , Do we ask for consent from a dog/bitch before we “adopt” it as a pet and remove it’s uterus/balls for our convenience? Do we ask consent from chicken or goat before we kill it for a meal?

 10. Pingback: ஓமோ செக்ஸ்… சூப்பர்டா மச்சான்… | வே.மதிமாறன்

 11. A. Dosan சொல்கிறார்:

  where in the bible homo sexuality is justified?

 12. Sam சொல்கிறார்:

  Again and Again your are proving yourself that you doesn’t know anything about Bible… your writings are lack in coherence… please don’t try to entertain people with your false taught..

 13. RAJA MOHAMED சொல்கிறார்:

  இஸ்லாம் என்ன சொல்கிறது என்று சொல்லவில்லையே?

  திருக்குரானில், முந்தைய சமூகம் செய்த இச்செயல் மானகேடானது என்று கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மரண தண்டனைக்குரிய குற்றம் என்கிறார்கள்.
  உலகத்தில் உங்களுக்கு முன் எவருமே செய்யாத மானக்கேடான ஒரு செயலையா செய்கிறீர்கள்? காம இச்சையைத் தணிப்பதற்காக பெண்களை விட்டுவிட்டு ஆண்களிடம் செல்கிறீர்களே! நீங்கள் வரம்பு மீறும் சமூகமாகவே இருக்கிறீர்கள் என இறைத்தூதர் லூத் கூறினார். திருக்குர்ஆன் 7:80,81

  உங்களில் ஒருவர் ஒருபால் உறவு கொள்வதை நீங்கள் கண்டால், செய்தவனுக்கும், அதற்கு இணங்கியவனுக்கும் மரண தண்டனை கொடுங்கள் கொன்றுவிடுங்கள்” என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
  அறிவித்தவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
  நூல்: அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, திர்மிதீ மற்றும் இப்னுமாஜா

 14. Duraicool சொல்கிறார்:

  சரி.இந்த சட்டத்தையும் மதரீதியா பிரிச்சுடுவோம்.இஸ்லாமிய சிவில் சட்டத்தைப்போல.

 15. தி.இரத்தினவேலு சொல்கிறார்:

  உடல் உறவு அதற்கென்றுள்ள(யார் சொன்னார்?) உறுப்புகளால் மட்டுமே கொள்ளப் படவேண்டுமென்றால், முத்தம் வருடுதல் அணைத்தல் இன்னபிற அனைத்தும் தவறா?
  (கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும் ஒண்தொடி கட்டே உள.குறள் 1101)
  இன்று அறிவியல் சொல்வது கருத்தில் கொள்ளப்படவேண்டும்.
  கிரேக்க அரசர்க்குப் பெண்கொடுப்பார் சீதனமாக அழகிய ஆண்/அலி ஒருவரையும் தருவர்.பின்னாள் மனைவி கணவனை ஊடுங்காலம் ” அவன் என்னில் இன்பம் தருவானோ?” என்பதும் உண்டு.

  உடன்பாடு மட்டுமன்றி, உடன்விளைவு, பின்விளைவு தெளிவுள்ளார்
  எச்சேர்க்கையும் கொள்வது சட்டத்திற்குட் பட்டது ஆக்குவது உரிமை மீறல்.
  எச்சேர்க்கையும் என்கையில் விலங்கொடுறவு என்பதும் உடன்விளைவு, பின்விளைவு தெளிவுள்ளார் கொள்ளின் பிழையில்லை.உடனபாடு விலங்கினால் தெரிவிக்கமுடியுமா என்பதும் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்.

 16. TSri சொல்கிறார்:

  இவ்வளவு நாளும் திரு. மதிமாறன் அணிந்திருந்த முற்போக்கு முகமூடியை இந்த ஒரு பதிவு கிழித்துப் போட்டு விட்டது.
  முற்போக்குவாதிகள் இயற்கைக்கு விரோதமானதை ஆதரிக்க வேண்டுமா :-c
  இயற்கையை ஆதரிப்பவன் பிற்போக்குவாதியா :-c

 17. Viyasan Viyas சொல்கிறார்:

  எல்லா மதங்களும் பெயரளவில் ஓரினச்சேர்க்கையை தடை செய்தாலும் கூட, தொன்று தொட்டு இந்து, இஸ்லாமிய(அரேபிய-பாரசீக), ஐரோப்பிய, சீனக் கலாச்சாரங்களில் மட்டுமல்ல, அமெரிக்க செவ்விந்தியர்களிடம் கூட ஓரினச்சேர்க்கை பாரம்பரியம் இருந்தது என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டு.

 18. களஞ்சியம் சொல்கிறார்:

  வி.ஹி.ப. வும் அண்ணனும் ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள்
  //Homosexuality an imported disease, needs treatment, says VHP //
  http://m.ibnlive.com/news/india/homosexuality-an-imported-disease-needs-treatment-says-vhp/439972-3.html
  இதுக்கு என்ன மருந்து?

 19. GOPALASAMY சொல்கிறார்:

  i think , m maran’s opinion based on holy khurran only. it is the eternal and final word for mankind.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s