பாரதியை புரிந்து கொள்வது எப்படி?

all-book-wrappersசங்க இலக்கியத்திற்குச் சென்றும்,பெரியாரும், அம்பேத்கரும்கூட இப்படிதான் என்று திரித்துப் பொய்சாட்சி சொல்லியும்; மார்க்ஸ், லெனின் என்று சுற்றி வந்தும், டால்ஸ்டாயை கொடுமைப்படுத்தியும், ‘ பாரதியைப் புரிந்து கொள்வது எப்படி?’ என்று விளக்கப் படாதபாடு படுகிறார்கள் நம் அறிஞர்கள்.

‘பாரதியை எப்படிப் புரிந்து கொள்வது?’ என்பதற்குச் சுலபமான வழியை நம் அறிஞர்களுக்குப் பணிவோடு சொல்லித் தருவோம்.

பாரதியிடம், உயர்ந்த மொழி ஆங்கிலமா? தமிழா?என்றால் ‘பராசக்தி தமிழுக்கு ஒரு தீங்கா?’ என்று பொங்கி எழுவான்.
தமிழா? சமஸ்கிருதமா? என்று நெருக்கிப் பாருங்கள், ‘சமஸ்கிருதம் ஒன்றுதான் தேவ பாஷை’ என்று குழைவான்.

‘அல்லாவைப் பற்றி பாட்டெழுதி முசுலீம் கடையில் டீ குடித்திருக்கிறான். அதனால் அவன் முசுலீம்.’
‘ஏசுவைப் பற்றிப் பாடியிருக்கிறான். அவன் ஒரு கிறித்தவன்.’
‘பிறப்பால் அவன் இந்துவாக இருக்கிறான் இந்து மதத்தின்மீது ஈடுபாடு இருக்கிறது. அதனால் அவன் ஒர் இந்து’ என்று பாரதியின் ‘ஏசு, அல்லா பாட்டை’ தனியாகக் கழட்டிப் பார்த்து, அவரை மத நல்லிணக்கவாதியாகக் காட்டி மகிழ்ச்சியடையலாம்.

இந்து மதமா? இசுலாமா?
கிறித்தவமா? இந்து மதமா?
என்று நெருக்கிப் பிடித்துப் பாருங்கள்.
இசுலாமியர்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்து, மசூதிக்குச் சென்று கஞ்சி குடித்துவிட்டு மாலை பொதுக்கூட்டத்தில்,
‘இது இந்து நாடு, ராமன் பிறந்த அந்தப் புண்ணிய பூமியில் அவனுக்குக் கோயில் கட்டியே தீருவோம்’ என்று சவால் விட்டுப் பேசுகிற அத்வானி வாஜ்பாயைப் போல் நெற்றியில் நீட்டி இடப்பட்ட குங்குமத்தோடும், கையில் சூலத்தோடும் வழி மறிப்பான் மகாகவி.

பவுத்தம் குறித்து சிலாகிக்கிற பாரதியை ‘பவுத்தமா? வேதமா?’ என்று நெருக்கினால்,
‘நல்ல வேளை ஆதி சங்கரர் பவுத்தத்திடம் இருந்து வேத மதத்தைப் பாதுகாத்தார்’ என்று நிம்மதி மூச்சு விடுவான்.

பார்ப்பன எதிர்ப்பு பாடிய பாரதியை, ‘பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று நெருக்கிப் பிடித்தால், ‘இந்த பிராமணரல்லாதார் கிளர்ச்சி காலகதியால் தானே மங்கி அழிந்து விடும்’ என்று சாபமிடுவான்.

அவ்வளவுதான் பாரதி.

-வே. மதிமாறன்

*

‘பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்’ நூலிலிருந்து.. (மூன்றாம் பதிப்பு)

சென்னையில் ‘கீழைக்காற்று – புக் பாயிண்ட் – பனுவல்’ புத்தகக் கடைகளில் கிடைக்கும்.

அங்குசம் வெளியீடு
ஞா. டார்வின்தாசன்
9444 337384

தொடர்புடையவை:

மக்கள் தொலைக்காட்சி பேட்டி

நாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு… விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து…

பெரியாருக்கு ஒரு நியாயம்; பாரதிக்கு ஒரு நியாயமா?

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

14 Responses to பாரதியை புரிந்து கொள்வது எப்படி?

 1. krishnamoorthys சொல்கிறார்:

  அற்புதமான சிந்தனை .அதுவும் அவர் பிறந்த நாளில்.

 2. அமுதவன் சொல்கிறார்:

  பாரதியை எதற்காக ‘நெருக்கிப்’ பார்க்கவேண்டும்? கொஞ்சம் அப்படியே பார்த்தும் பழகுங்கள். பாரதி போன்ற ஒரு கவிஞனை தமிழ் இழந்துவிட வேண்டும் என்று நினைக்கும் நினைப்பே அபாயமானது. நீங்கள் நினைப்பதுபோல் கோடிக்கணக்கான தமிழர்கள் – பாரதியைப் படித்தவர்கள் -அவன் ஒரு பார்ப்பனன், அவன் ஒரு இந்துத்துவா என்பதற்காகவெல்லாம் படித்தவர்கள் இல்லை. உலக இலக்கியக்கர்த்தாக்களுடன் வைத்து, இந்த நூற்றாண்டின் மகா கவிஞர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்குமளவு கவிதை செய்தவன் என்ற கோணத்தில்தான் மக்கள் பாரதியைக் கொண்டாடுகிறார்கள்.

  இந்த ‘நெருக்கிப் பார்க்கும்’ கோமாளித்தனத்தையெல்லாம் நீங்கள் எல்லாரிடமும் வைத்துக்கொள்வதில்லையே ஏன்?
  கொஞ்சம் இளையராஜாவையும் ‘நெருக்கிப்பார்த்து’ கட்டுரைகள் பதிவதுதானே!

 3. வே.மதிமாறன் சொல்கிறார்:

  நெருக்கிப் பார்க்கிற கோமாளித்தனத்தை செய்ததால்தான் பாரதியின் பக்தியில் இருந்த மதவெறியும், இளையராஜாவின் பக்தியில் இருக்கிற அறியாமையையும் புரிந்து கொள்ள முடிந்தது.
  நீங்கள் முன் முடிவோடுதான் எதையும் பார்ப்பதாக இருந்தால்.. உங்களின் முட்டாள்த்தனத்திற்கு இந்தக் கோமாளியால் பதில் சொல்ல முடியாது. முட்டாளாக இருப்பதும் தனிநபர் உரிமைதானே.

 4. Duraicool சொல்கிறார்:

  பார்பணர் யாராக இருந்தாலும் இகழ வேண்டும்.இதுதான் பெரியார் வழி

 5. Karthick சொல்கிறார்:

  சொல்லு வதை பார்த்தால் பெரியாரையும் அம்பேத்க்காரையும் தவிர எல்லோரும் அயோக்கியர்களா

 6. bala சொல்கிறார்:

  தயவுசெய்து தத்துபித்தென்று உளர வேண்டாம். பாரதி ஆரம்ப நாட்களில் அவர் தம்பி விஸ்வநாதனுக்கு எழுதிய ஒரே கடிதம் கண்டாலே அவன் மனநிலை புரிந்துவிடும். “ஒன்று தமிழில் கடிதம் எழுது, இல்லையேல் சமஸ்கிருதத்தில் எழுது. எந்நாளும் ஆங்கிலத்தில் எழுதாதே”.

  “இந்து மதமா? இசுலாமா?கிறித்தவமா? இந்து மதமா?”….
  தப்பு தப்பு தலைவலி மோளம். கிறித்துவ பாதிரிகள் இல்லாததையும் பொல்லாததையும் சொல்கிறார்கள் என்று தான் சாடுகிறான். அம்புட்டு தான். அவனுடைய சந்திரிகையின் கதையை படியுங்கள். சர்வ சமயவாதி என்பது தெளிவாக புரியும். இந்த மாதிரி செய்யும் கிறித்துவ பாதிரிகளை எதிர்த்திருக்கிறானே, அவன் எங்காவது ஒரு வார்த்தை முஸ்லீமை எதிர்த்திருக்கிறானா? இல்லை. “எல்லா மதமும் உண்மை. பரம்பொருள் ஒன்றே” என்று கட்டுரையில் தெளிவாக மண்டையில் அடித்து சொல்லியிருக்கிறானே.

  //‘பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று நெருக்கிப் பிடித்தால், //

  ஆமாம். இதனால் தமிழ்நாட்டில் ஜாதிவெறி தான் மிஞ்சும் என்று அன்றே தீர்க்கதரிசித்தான். வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு ஜாதிவெறி இருப்பதாக தெரியவில்லை. அவன் நினைத்தது உண்மைதானே. ஜாதியை ஒழிக்கறேன் என்று கிளம்பி இன்று ஜாதிவெறி தான் மிஞ்சியது.

  //தனியாகக் கழட்டிப் பார்த்து//
  நீங்கள்தான் அண்ணா எல்லாவற்றையும் கழட்டி பார்க்கிறீர்கள். பாரதியிம் ஒட்டு மொத்த உருவம் நமக்கு உணர்த்துவது “பரம்பொருள் ஒன்றே”.

  அப்பு, பாரதி கட்டுரைகளை ஃபுல்லா படிச்சுட்டு எழுதுங்க!!!! ஏற்கனவே, ம‌.வெங்கடேசன் உங்களுக்கு பதிலடி கொடுத்தாகிவிட்டது. இன்னும் எம்புட்டு நாள் அரச்ச மாவையே அரைப்பீங்க.

 7. களஞ்சியம் சொல்கிறார்:

  மதன் ஆபாச எழுத்தாளன், ரஹ்மான் பார்ப்பன கைக்ககூலி, மணிரத்னம் இஸ்லாமிய விரோதி இவையெல்லாம் முன்முடிவுகள் இல்லாமல் சொல்லப்பட்டவை என்பதை அறிக!

 8. வே.மதிமாறன் சொல்கிறார்:

  bala என்கிற இந்த ‘ஜாதி மறுப்பாளரே’ பாரதி பார்ப்பான ஜாதி உணர்வாளன் என்பதற்கு சாட்சி.

 9. Bala சொல்கிறார்:

  //bala என்கிற இந்த ‘ஜாதி மறுப்பாளரே’ பாரதி பார்ப்பான ஜாதி உணர்வாளன் என்பதற்கு சாட்சி.//

  “பாரதி பக்தர்களின் கள்ள மவுனம்” எழுதிய ஆசிரியரின் கள்ள மவுனம். ஹா ஹா..

 10. bandhu சொல்கிறார்:

  //முட்டாளாக இருப்பதும் தனிநபர் உரிமைதானே.//
  உங்கள் உரிமையை மறுக்க நான் யார்?

 11. இளசெ(இ.ஜெயக்குமார்) சொல்கிறார்:

  ஈனப்பறையன் , தீயபுலையன்…. இவை யாரோட வரிகள்.
  எங்கள எவன்டா பறையன் ,புலையன்,…. ஈனசாதினு சொன்னது.

  பாரதி,காந்தி…னு முகமூடிகளை உடைக்க அம்பேத்கரை,பெரியாரை, குத்தூசிகுருசாமியை,வே.மதிமாறனை,…..படிங்க.

  -இளசெ(இ.ஜெயக்குமார்)

 12. இளசெ(இ.ஜெயக்குமார்) சொல்கிறார்:

  பட்டியல் தொடருது …… பாவலேறு பெருஞ்சித்திரனார் , திக , திராவிடர் விடுதலை கழகம் ,பெரியார் திராவிடர் கழகம் ,சுபவீ , விடுதலை சிறுத்தைகள் , ஆதி தமிழர் பேரவை , புதிய தமிழகம்,போர்பறை ……..இவர்களின் அனைத்து போராட்டங்களையும் , வெளியீடுகளையும் உள்வாங்கிங்க .

  மறக்காம இந்த காணொளிகள பாருங்க :
  தலைப்பு :உடையும் ஆரியமா பகுதி-1 ,2,3,4 :

  http://www.youtube.com/watch?v=Tn_Dzzz-KPQl

  -இளசெ(இ.ஜெயக்குமார்)

 13. இளசெ(இ.ஜெயக்குமார்) சொல்கிறார்:


  இளசெ(இ.ஜெயக்குமார்)

 14. இளசெ(இ.ஜெயக்குமார்) சொல்கிறார்:

  இளசெ(இ.ஜெயக்குமார்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s