Monthly Archives: திசெம்பர் 2013

ஜனவரி 1 பிப்பரவரி 14 மே 1

கிறிஸ்துமஸ் என்ன கிழமையில் வருகிறதோ அதே கிழமையில்தான் ஆங்கிலப் புத்தாண்டும் வரும். கிறிஸ்து பிறப்பு தொடர்பான நம்பிக்கைதான் ஆங்கிலப் புத்தாண்டும். கிறிஸ்துவ மதம் நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவ வடிவத்திற்கு மாறியப் பிறகு, கிறிஸ்துவமும் புத்தாண்டும் வர்த்தகமாக மாறிப்போனது. ஜனவரி முதல் தேதியை மதச்சார்ப்பற்ற நாளாக மாற்றிய ‘பெருமை’ முதலாளித்துவத்தையே சேரும். புத்தாண்டை மதச்சார்பற்ற ‘கேளிக்கை’ நாளாக மாற்றியதின் … Continue reading

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

மூலதனமும் நீயே.. மூலப்பொருளும் நீயே.. அன்புடன் ஆட்கொள்வாய் கூட்டணித் தாயே!

திமுக; காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியில் வந்ததும், பா.ஜ.க., வோடு கூட்டணி இல்லை என்று அறிவித்ததும் காங்கிரசுக்கும் பா.ஜ.க விற்கும் பிரச்சினையானதோ இல்லையே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘காங்கிரசு, பா.ஜ.க அணிகள் இல்லாத அணியில்தான் நாங்கள் இருப்போம்’ என்று இதுவரை சொல்லிவந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், இப்போது திமுக வின் நெருக்கடியின் காரணமாக ‘அதிமுக … Continue reading

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் கொள்கை பயிலரங்கு

B.H.E.L. தொ.மு. சங்க வளாகம், 29-12-2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. ‘ஜாதி ஒழிப்பும் டாக்டர் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில், காலை 11 மணிக்கு நான் பேசுகிறேன். பிறகு கேள்வி நேரமும் உண்டு. திருச்சி பகுதித் தோழர்கள் கலந்து கொள்ளவும். தொடர்புக்கு: தோழர். குணா 9865 596940

Posted in பதிவுகள் | 2 பின்னூட்டங்கள்

அசுரனின் தாடி மயிரைக்கூட அசைக்க முடியாது

கருப்பு ராஜாவால் நன்மை பெற்ற கருப்பர்கள் வெள்ளை ராஜாவுக்கு விசுவாசமாகி முதுகில் கத்தி வைக்கிறார்கள். விரோதிகளும் துரோகிகளும் ஓரே அணியில்.. ஆனாலும் வீழ்த்த முடியாத வீரம். அவன் உயிர்.. அவன் பெயரிலோ புகழிலோ இல்லை எதிரிகளை அச்சம் கொள்ள வைத்த அவனின் உண்மையிலிருக்கிறது. எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும் இந்த அசுரனின் தாடி மயிரைக்கூட அசைக்க முடியாது. … Continue reading

Posted in கட்டுரைகள் | 18 பின்னூட்டங்கள்

அய்யாவும் அண்ணலும்

பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘பெரியாரியல் பயிலரங்கம்’ இன்று புதுச்சேரியில் ‘ஒலாந்திரியா சமுதாயக் கூடம், அசோகன் தெரு, நேதாஜி நகர், உப்பளம் பகுதியில் நடைபெறுகிறது. ‘அய்யாவும் அண்ணலும்’ என்ற தலைப்பில் மாலை 3.30 மணிக்கு நான் பேசுகிறேன். முடிவில் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன. த.வ. உதயக்குமார் தலைமை. வரவேற்புரை கோகுல் காந்திநாத். நிகழ்ச்சியை பெரியார் திராவிடர் … Continue reading

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்

K.J.ஜேசுதாஸின் பக்தியும் ‘நவீன’ இலக்கியவாதிகளின் புத்தியும்; சாகித்திய அகடாமி விருது!

சைவ சமயத்தை சேர்ந்த ‘கிறிஸ்துவருக்கு’ இம்முறை சாகித்திய அகடாமி விருது அருளப்பட்டிருக்கிறது. ‘ஆரூத்ரா தரசினம்’ நாளில் அறிவிப்பு வந்தது தற்செயலானதல்ல. என்று சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பற்றி நேற்று face book ல் எழுதினேன். Tnfishermen Voices என்கிற பெயரில் பெரியார்-டாக்டர் அம்பேத்கர் கருத்துக்களை வீச்சோடு face book … Continue reading

Posted in பதிவுகள் | 17 பின்னூட்டங்கள்

அன்பின் அழகியல்

கருணை எப்போதும் அழகுதான்.  அன்பின் அழகியலில்  கருணைக்கே முதலிடம். படம் எடுத்தவர் அதை ஒரே still -லில்  அழகாக சொல்லியிருக்கிறார். ஆனால், ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’  படத்தின் ஒட்டுமொத்தக் கதையும் இதுதாங்க. இந்த still -ல் ஏற்படுத்துகிற உணர்வை  அந்த முழுநீளப் படம் ஏற்படுத்தவில்லை. * நவம்பர் 20 ஆம் தேதி face book ல் எழுதியது படம் … Continue reading

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்