தாது மணல்: தினத்தந்தியின் ‘துணிவு’ம் தமிழர்களின் துயரமும்; ‘ஆண்டவரே.. கடவுளே..!’

???????????????????????????????

தூத்துக்குடி மாவட்ட மீனவ மக்கள் அணு உலைக்கு எதிராக தங்கள் முழு கவனத்தையும் செலுத்தி, சமரசமின்றி போரடிக் கொண்டிருக்கும்போது, மீனவர் காலுக்கடியில் குழிபறிப்பது போல். கடல் மணலை, களவாடி விற்றிருக்கிறது ஒரு கும்பல்.

கூடங்குளம் அணு உலை செயல்பட்டால், எப்படி முதலில் மீனவர்களே அதிகம் பாதிக்கப்படுவா்களோ, அதற்கு நிகழ்கால உதாரணம்போல், தாது மணல் கொள்ளையால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள் மீனவ மக்களே.

தமிழகத்தில் மிக அதிகமாக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்கள் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கடற்கரை மக்களே. புற்றுநோயால் மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு, தாது மணலை தோண்டி எடுப்பதால் அதிலிருந்து எழுகிற கதிவீச்சே காரணம் என்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள்.

கடற்கரையில் குவிந்திருக்கிற இந்தக் கனிம வளம், களவு போவதை கண்டுபிடிக்க ஒரு குழுவை தமிழக அரசு நியமித்தது. அந்தக் குழு தொடர்ந்து அந்தப் பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக நாளிதழ்களில், தொலைக்காட்சிகளில் அந்தச் செய்தியே முதன்மையாக இருக்கிறது. இது அறிந்ததே.

ஆனால், தினத்தந்தியை மட்டும் ஒருவர் தொடர்ந்து படித்து வந்தால், ‘தாது மணலா? கொள்ளையா? அப்படின்னா என்னங்க?’ என்று கேட்பார்.

செய்திகளை முந்தி தருகிற தினத்தந்தி, தாது மணல் கொள்ளை குறித்த ஆய்வு செய்தியை ஒரு காலம் அளவிற்குக் கூட வெளியிடவில்லை.
இத்தனைக்கும் அ.தி.மு.க அரசின் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தந்து வெளியிடுகிற தினத்தந்தி, தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தன் ஆதரவை தெரிவிக்கவில்லை.

ஏன் தினத்தந்தி இப்படி பம்முது?
ஒருவேளை தினத்தந்தியோட ‘தமிழ் உணர்வு’ தான் காரணமா இருக்குமோ?

நல்லவேளை, ஸ்டெர்லைட் ஆலை மார்வாடி கம்பெனியா இருந்தது. கூடங்குளம் அணு உலை ரஷ்ய ஆதரவு பெற்ற இந்திய அரசு நிறுவனமாக இருக்கு.

அதற்கு மாறாக, ஸ்டெர்லைட் ஆலைக்கும், அணு உலைக்கும் ‘பச்சைத் தமிழர்’ முதலாளியாக இருந்திருருந்தால்,
தினத்தந்தி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான செய்திகளையும் அணு உலைக்கு எதிரான போராட்ட செய்திகளையும் ஒரு ‘பிட்டு’ கூட போட்டிருக்காது.

நடக்க விட்டாதானே செய்தி போடுவதற்கு?

கந்தகப் பொடியில் கருகி சாகிற சிவகாசி மக்களுக்கு நேர்ந்த கதிதான் கூடங்குளம் மீனவர்ளுக்கும் நேர்ந்திருக்கும்.

இந்திய சமூக அமைப்பில் முதலாளித்துவத்தைவிட, ஏகாதிபத்தியத்தைவிட ஜாதிய கட்டுமானம் தீவிரமாக இருக்கிறது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் போராடி விடலாம். ஆனால், ஏகாதிபத்தியத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் எடுபிடிகளாக இருக்கிற உள்ளுர் வஸ்தாதுகளை எதிர்த்துப் போராடுவதுதான் சிரமம்.

அந்த வஸ்தாதுகள், மிகப் பெருபான்மையான மக்களைக் கொண்ட ஜாதியை சேர்ந்தவர்களாக இருந்தால், இன்னும் சிரமம். அவர்கள் வசதியாக அந்த ஜாதிக்குப் பின்னால் ஒளிந்துக் கொள்வார்கள். அவர்களை எதிர்த்துப் போராடினால், ஒட்டுமொத்தமாக அந்த ஜாதி மக்களையே எதிர்க்கும் நடவடிக்கையாக மாற்றிவிடுவார்கள்.
ஓட்டுக் கட்சிகளும் இன்னும் சில அமைப்புகளும் அது குறித்து மவுனம் காப்பதற்கு ‘பெரும்பான்மையான ஜாதியின் விரோதம்’ என்கிற பயமே காரணம்.

ஜாதி சங்கங்களும் இது போன்ற முதலாளிகளின் நலனுக்காகத்தான் இருக்கிறது. தன் ஜாதியை சேர்ந்த தொழிலாளியையே கடுமையாக ஒடுக்குமுறைக்கு உள்ளக்குகிற முதலாளியை, தொழிலாளர்கள் எதிர்த்தால், அந்த ஜாதி சங்கமோ முதலாளியைத்தான் ஆதரிக்கும். அதுதான் நடந்திருக்கிறது.

‘ஆண்டவரே.. என்னை நண்பர்களிடமிருந்து காப்பாற்று. எதிரிகளை நானாக கவனித்துக் கொள்கிறேன்’ என்கிற புகழ் பெற்ற வாக்கியத்தை,
களத்தில் போராடும் உழைக்கும் தமிழர்கள் சொல்வதாக இருந்தால்,

இப்படித்தான் சொல்வார்கள்:
‘ஆண்டவரே… தமிழ் முதலாளிகளிடமிருந்து எங்களை காப்பாற்று. எங்களுக்கு எதிரான ஏகாதிபத்திய, மார்வாடி நிறுவனங்களை நாங்களே கவனித்துக் கொள்கிறோம்’

*

நவம்பர் 9 அன்று face book ல் எழுதியது

தொடர்புடையவை:

தினத்தந்தியின் சாட்டையடி!

‘இவர்களை வைத்து சம்பாதிக்கிறார்களே!’ தினத்தந்தியின் ஆதங்கம்

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

3 Responses to தாது மணல்: தினத்தந்தியின் ‘துணிவு’ம் தமிழர்களின் துயரமும்; ‘ஆண்டவரே.. கடவுளே..!’

  1. eswarpandi சொல்கிறார்:

    தினதந்தியும் நாடார் மணல்கொள்ளையனும் நாடார் என வௌிபடையாக எழுதவேண்டியது தானே ்அதை விடுத்து இந்தன பம்மல் ்மழுப்ல் உங்கள் கட்டுரையில்

  2. duraicool சொல்கிறார்:

    அருமையான கட்டுரை

  3. Pingback: தினத்தந்தியின் ராஜபக்சே புகழ்;வைகோ – மதிமுக சீற்றம் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s