அழ வைத்த 6 மெழுகுவர்த்திகள்!

6 candleசமீப நாட்களில் நான் பார்த்த 3 தமிழ் சினிமாக்களில் என்னை அதிகம் நெகிழ வைத்தது, ஷாம் நடித்து வெளிவந்த 6 மெழுகுவர்த்திகள் படத்தில் இடம் பெற்ற இரண்டு காட்சிகள்.

கடத்தப்பட்ட தன் மகனை தேடிப் போபால் நகரத்திற்குப் போன நாயகன், போன இடத்தில் தன் மகன் வயதொத்த ஒரு சிறுமியை அவர்கள் பாலியல் ரீதியாக தொல்லை செய்ய, அந்த சிறுமி தப்பியோட முயற்சிக்கும்போது அவள் எழுப்புகிற கூக்குரல் நம் நெஞ்சை அறுக்கிறது. வெகுடெண்ழுந்த நாயகன், அந்த சிறுமியை காப்பாற்றியதால் தன் மகனை மீட்கும் வாய்ப்பை இழந்து விடுகிறான்.

‘என்ன சார் இப்படி பண்ணிட்டிங்க..? உங்க பையானோட உயிருக்கே ஆபத்தாச்சே..’ என்று உடன் வந்தவர் கேட்க, ‘இவளும் ஒருத்தனடோ பொண்ணுதானே?’ என்று அவன் கதறி அழுதக் காட்சி.. என்னை நிம்மதியில்லாமல் செய்து விட்டது.

படத்தின் கடைசிக் காட்சியில் கல்கத்தாவிற்கு கடத்தி வரப்பட்ட பல சிறுவர்கள் கொத்தடிமையாய் வேலை செய்கிற இடத்தில், தன் மகனை தேடி நாயகன் வரும்போது அங்கிருக்கிற குழந்தைகள் பல மொழிகளில் ‘அப்பா நான்தான் உங்க பையன். என்ன கூப்பிட்டுபோங்க..’ என்று கெஞ்சுவதும் அதை தாங்க முடியாமல் நாயகன் கதறி அழுதபோது, நானும் அழுது விட்டேன். இதை எழுதும்போதும் எனக்கு கண் கலங்குகிறது.

கல்கத்தாவில் நாயகன் அநாதையாக வீதியில் படுத்துக் கிடக்கும்போது அவனை பாதுகாத்து அவன் மகனை தேடித் தருவதில் உறுதுணையாக மிகுந்த அன்பானவராக ஒரு தமிழ் முஸ்லிமை காட்டியிருக்கிறார் இயக்குநர் V.Z. துரை.

முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே காட்டிய தமிழ் சினிமாவில், இப்படி நல்ல முஸ்லிம் காதாபாத்திரம் பல ஆண்டுகள் கழித்து திரையில் பார்த்து மகிழ்சியாய் இருந்தது.
நடிகர் ஷாமின் நடிப்பும் முதிர்ச்சியோடு பக்குவப்பட்ட நிலையிலிருந்தது.

**

Facebook ல் 5.10.2013 அன்று எழுதியது.

தொடர்புடையவை:

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ – காமெடி கலகம்

ஓநாயின் முட்டாள்தனமும் அதனால் பலியான ஆட்டுக்குட்டிகளும்

பகுத்தறிவு கமலின் மதவெறி, பக்திமான் ஏ.பி.நாகராஜனின் மதநல்லிணக்கம்-அழகிகள்-திராவிட இயக்க சினிமா-எது வீரம்?

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

12 Responses to அழ வைத்த 6 மெழுகுவர்த்திகள்!

 1. வணக்கம்
  நீங்கள் சொல்வது உண்மைதான் பதிவு அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. ROBERT சொல்கிறார்:

  இது ஜெயமோகன் கதை வசனம் எழுதிய படம் ஆயிற்றே உங்களுக்கு எப்படி படம் பிடித்தது …………..

 3. வே.மதிமாறன் சொல்கிறார்:

  வசனங்களில் அழுத்தம் இருந்திருந்தால் காட்சிகள் இன்னும் கூடுதல் வலிமை பெற்றிருக்கும். நிறைய இடங்களில் வசனம் செயற்கையாக இருக்கிறது. அது காட்சிகளிலும் தொற்றிக் கொள்கிறது.

 4. தோழன் பாலா சொல்கிறார்:

  அருமையான படம்,கண் கலங்கவைத்த படம்.

 5. valipokken சொல்கிறார்:

  எமக்கு அந்த பாக்கியம் கொடுத்து வைக்கவில்லை. படம்பார்த்து அழுவதற்கு……

 6. shanmuganantham.e சொல்கிறார்:

  அருமையான பதிவுகள். தமிழில் முன்னணி இயக்கநராக தங்களை காட்டிக் கொள்கிறவர்கள் படத்தை பார்க்கட்டும். படத்தை பார்க்கவில்லை. தங்களது பதிவே மனதை கனக்கச் செயதது.

 7. Karthikeyan சொல்கிறார்:

  எழுத்தாளர் ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலில் ஒரு அத்தியாயம்-வசனம் மட்டுமல்ல.

 8. R Chandrasekaran சொல்கிறார்:

  20 வருடங்களுக்கு முன்பே ஒரு படத்தில், கல்கத்தாவில் விபச்சார விடுதியில் தன் பெண்ணை கூட்டிக் கொண்டு வர ஒரு தகப்பன் தவியாய் தவிப்பதாக காட்டினார்களே அப்போது ஏன் அழவில்லை…ஓகோகோ.. அது கமலா…? அதான் …..

 9. பூ.ஆ.இளையரசன் , சொல்கிறார்:

  உங்கள் பதிவில் அந்த படத்தின் உயிரோட்டம் தெரிகிறது படத்தை இன்னும் பார்க்கவில்லை .பார்க’கிறேன் நன்றி..!

 10. Pingback: ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ – காமெடி கலகம் | வே.மதிமாறன்

 11. Pingback: விஜய்; மலையாளிகளை வென்ற மாவீரன் | வே.மதிமாறன்

 12. Pingback: PK; இந்தி சினிமாவைத் தாண்டிய இந்திய சினிமா | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s