இளையராஜா வை விட ‘Iyer Sisters’ great!

Vidhya and Vandhanaஅவரு அப்படி சொல்லல; ஆனா, அதுக்கு அதுதான் அர்த்தம்.

*

‘கர்நாடக சங்கீதம், சாஸ்திரிய இசை பார்ப்பனத் தன்மை நிறைந்தது. அதைத்தான் இளையராஜா இசையாகத் தருகிறார், இளையராஜாவின் இசையும் சனாதனத் தன்மை நிறைந்தது’
என்று ராஜாவை தொடர்ந்து அவதூறு செய்த அ. மார்க்ஸ்,

Facebook ல் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன, நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து நேற்று (4.10.2013) அவர்களுக்கு ஒரு பரிசு தருகிறார்:

பிறந்த நாளை நினைவுறுத்தி வாழ்த்துச் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்…
நன்றி தெரிவிக்கும் முகமாக மகாகவி பாரதியின் “ஆசை முகம் மறந்து போச்சே… இதை யாரிடம் சொல்வேனடி தோழி… நேசம் மறக்கவில்லை நெஞ்சம்.. நினைவு முகம் மறக்கலாமோ…”
“வித்யா வந்தனாவின் இனிய குரலில்…”

பெருமிதத்தோடு தன்னுடைய பிறந்தநாள் பரிசை அள்ளி வழங்குகிறார் பேராசிரியர் அ. மார்க்ஸ்.

அ. மார்க்ஸ்க்கு இனிமைத் தருகிற வித்யா – வந்தனாவின் குரல்களில், கர்நாடக சங்கீதத்தில் உள்ள சனாதன நெய், இசையாக உருகி ஓடுகிறது. அது மட்டுமல்ல தமிழை அவர்கள் பார்ப்பன உச்சரிப்பில் போட்டு அரைக்கிற அரைப்பு தாங்க முடியல… ‘மெல்ல தமிழ் இனி சாகும்…’ என்ற பாரதியின் வரிகளை நினைவுப்படுத்துகிறது.

‘ஆசை முகம்..’ என்பதை ‘ஆஸை முகம்..’ என்றும் ‘யாரிடம் சொல்வது..’ என்பதை ‘யாரிடம் ஸொல்வது..’ என்றும் ‘நேசம் மறக்கவில்லை..’ என்பதை ‘நேஸம் மறக்கவில்லை..’ என்றும் உச்சரித்து ‘ச’ வை ‘ஸா’ வடிக்கிறார்கள்.

முழுக்க முழுக்க பார்ப்பன நெய்யினால் தயாரிக்கப்பட்ட வித்யா – வந்தனாவின் இசையை, குரல்களை; ‘சனதான எதிர்ப்பும் சமூகநீதி அரசியலும் கலந்த ‘இனிமையாய்’’ ரசிக்கிற அ. மார்க்ஸ்தான், இளையராஜாவின் இசை பார்ப்பனத் தன்மை நிறைந்தது என்று நிராகரித்திருக்கிறார்.

இளையராஜாவை அவர் நிராகரிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததல்ல, ஆனால் இளையராஜாவிடம் இல்லாததை தவறாக சுட்டிக் காட்டி, அவரை என்ன காரணத்திற்காக நிராகரிப்பதாக சொன்னாரோ,
அதே காரணத்திற்காக வித்யா – வந்தனா சகோதரிகளின் குரல்களையும் பாடலையும் அ. மார்க்ஸ் சிலாகிப்பது வேடிக்கையாக இல்லை, அதைவிட மோசமாக இருக்கிறது.

இந்தச் சனாதன சிலாகிப்பு, ‘தமிழ் இந்து’ வில் ஒரே ஒரு கட்டுரை வந்ததாற்காகவா? இல்லை இதுவரை ‘ஆனந்த விகடன்’ ‘குமுதம்’ இவைகளில் தொடர்ந்து கட்டுரைகள் வந்து கொண்டிருப்பதற்கும் சேர்த்தா?

சரி ஆகட்டும். இரண்டில் ஏதோ ஒன்று. அல்லது இரண்டுமே.
நானும் பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களுக்கு வாழ்த்துகளோடு வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்து பிறந்தநாளுக்கு. வருத்தம் அவருடைய இளையராஜா பற்றிய மதிப்பீடுக்கு அல்ல, வித்யா – வந்தனாவின் பரிந்துரைக்கு… முடியில.. காதக் கட்டுது..

இருந்தாலும் அவர் இப்படி பண்ணியிருக்கக் கூடாது. அன்போடு வாழத்துச் சொன்ன நண்பர்களுக்கு இப்படியா…?

(‘வித்யா வந்தனா என்பது இருவர். சகோதரிகள். சூலமங்கலம் சகோதரிகள் போல். அவர்களுக்கு Iyer Sisters என்ற பெயரும் உண்டு. ஆனால் அ. மார்க்ஸ் அவர்களை ஒருவராக மட்டும் நினைத்திருக்கிறார் போலும்.)

அ. மார்க்ஸ் வழங்கிய பரிசு இதோ….
http://youtu.be/ib3r6mPD3aY

Facebook ல் 5.10.2013 அன்று எழுதியது.

தொடர்புடையவை:

பார்ப்பன எதிர்ப்பா? இளையராஜா மீதான வெறுப்பா?

அ.மார்க்சை அழைத்த; ‘பெரியார் அவதூறு’ பேர்வழிகளை அழைக்காத திராவிடர் கழகத்திற்கு பாராட்டுகள்

தியாகராஜ சுவாமிகள் சக்கிலியராகவோ, நாயுடுவாகவோ இருந்திருந்தால்…?

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

9 Responses to இளையராஜா வை விட ‘Iyer Sisters’ great!

 1. kaarigan kisco சொல்கிறார்:

  இளையராஜாவை விமர்சித்த மார்க்சை போட்டுத் தாக்கியிருக்கும் நீங்கள் அவர் இளையராஜா மீது சொன்ன குற்றச்சாட்டைப் பற்றி எதுவுமே சொல்லாமல் விலகிப் போவது ஏனோ?

 2. வே.மதிமாறன் சொல்கிறார்:

  kaarigan kisco அதற்கான விளக்கம் இந்த இணைப்பில் இருக்கிறது.
  பார்ப்பன எதிர்ப்பா? இளையராஜா மீதான வெறுப்பா?
  https://mathimaran.wordpress.com/2009/11/20/article-253/

 3. rozavasanth (@rozavasanth) சொல்கிறார்:

  மதிமாறன், அறிவும் நியாயம் அற்ற ஒரு இளையாராஜா வெறுப்பு ஒரு தொற்று நோய் போல தமிழ் சூழலில் பரவி, நாற்றம் வீசும் சூழலில், தொடர்ந்து நீங்கள் முன்வைக்கும் இளையராஜா பற்றிய பார்வை அழகியல்ரீதியாக மட்டுமின்றி அரசியல்ரீதியாகவும் மிக முக்கியமானது.

 4. Sridhar Kannan சொல்கிறார்:

  என்னப்பா பாடுராங்க அவிங்க… மார்க்ஸ் சார் கொஞ்சம் டமில் ல ட்ரான்பர் பண்ணி போடுங்க… உங்க பரிச அனுப்பிக்க….

 5. மா. தமிழ்ப்பரிதி சொல்கிறார்:

  ஆசை=ஆஸை
  நேசம்=நேஸம்
  சொல்வேன்=ஸொல்வேன் என
  தமிழ்க்கொலை செய்திருக்கும் தோழிகளின் குரலை, தங்களால் இணைக்கப்பட்ட காணொளி வாயிலாக தெளிவாக அறிந்தோம். மார்க்ஸ் ஒருவேளை தோழிகளின் குரலைக்கேட்காமல், காணொளியை மட்டும் பார்த்திருப்பாருன்னு நினைக்கின்றேன்.

 6. bganesh55 சொல்கிறார்:

  ­என்­ன­வென்­று ­­ஷொல்­வேன் ­என் ­க­ருத்­தை? ­­மொ­லி ­வால்­க! என்­று ­உச்­ச­ரிப்­பை ­ச­ரி­யா­க ­அ­ழுத்த்­தா­மல் ­தான் ­சா­­வ­டிப்­பாங்­கன்­னு ­நெ­னச்­சுட்­டி­ருந்­தேன். இப்­ப­டி ­அ­ழுத்­த­மா ­உச்­ச­ரிச்­சும் ­கூ­ட­வா? (ஆ­னா ­கு­ரல்­கள் ­இ­னி­மை­தான்)

 7. வே.மதிமாறன் சொல்கிறார்:

  ஆமாம். ஸ – ஷ இரண்டுமே இருக்கிறது. ஆனால் ச தான் இல்லை.

 8. வித்யாசாகரன் சொல்கிறார்:

  தமிழ்க்கொலை! மார்க்ஸ் அவர்களின் பதிவைப் பார்த்தபோதே தோன்றியது, எப்படி இதை ரசிக்க முடிந்ததென. தமிழ்மறந்து, திறம்வியந்தால் ரசிக்க முடியுமோ என்னவோ! நம்மால் முடியாது அது..
  பல மாதங்கள் முன்பே இந்த வீடியோவைப் பார்க்க நேர்ந்து, ஒரு நிமிடத்துக்குள்ளாகவே தொடர முடியாமல் மூடி விட்டேன். இப்போது, நீங்கள் கொடுத்த இணைப்பைச் சொடுக்கச் சென்ற ஒருநொடியில் மனதுக்குள் அபாயச் சங்கு ஒலிக்க, நல்லவேளையாகத் தப்பினேன்.

 9. veluswamy .b சொல்கிறார்:

  tamil eni speeda saakum

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s