உயிரா உணர்வா? : தடைகளைத் தகர்த்து, தொடர்கிறார் தியாகு

thiyaguஇந்திய அரசே ! மன்மோகன் சிங்கே கொழும்பு உச்சி மாநாட்டிற்குச் செல்லாதே! காமன்வெல்த்திலிருந்து இலங்கையை நீக்க வலியுறுத்து!’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி ‘வெற்றி அல்லது வீரச் சாவு…’ என்ற முழக்கத்தோடு பட்டினிப் போராட்டத்தை தொடங்கிய தோழர் தியாகு, இன்றோடு, பத்து நாட்களை கடந்திருக்கிறார்.

முன்னதாக அக்டோபர் 7 ஆம் தேதி, தமிழக அரசு அவரை உண்ணாவிரதப் பந்தலிலிருந்து கைது செய்து, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொன்று சேர்த்தது. அங்குப் போன பிறகும் தனது பட்டினிப் போராட்டதை தொடர்ந்தார். தொடர்கிறார்.

4 ஆம் தேதி அவரை நான் உண்ணாவிரத பந்தலில் சந்தித்தேன். இன்றும் (10.10.2013) மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். அன்று இருந்த மன உறுதி இன்னும் கூடுதலாகி இருக்கிறது அவரிடம்.

ஆனால் அரசுக்கு அதுதான் பிரச்சினையாக இருக்கிறது. தோழர் தியாகு சாப்பிடாமல் இருக்கிறாரே என்கிற ‘அக்கறையில்’ அரசு அவரை சாப்பிடச் சொல்லி வற்புறுத்துகிறது. குளுக்கோஸ் ஏற்றிக் கொள்வதற்கும் முற்றிலுமாக மறுத்து விட்டதால், இன்று அவரை மருத்துவமனையிலிருந்து வெளியேற சொல்லியிருக்கிறார்கள்.

‘வெளியேற்றுவதாக இருந்தால் டி சார்ஜ் சம்மரி தாருங்கள்’ என்று கேட்டிருக்கிறார் தோழர். அது மட்டுமல்ல, வெளியேறினால் வெளியில் உண்ணாவிரத்தை தொடர்வதற்கு உரிமையிருக்கிறது என்றும் கமிஷனர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

தோழர் தியாகுவின் உறுதியைப் பார்த்து, மருத்துவமனையிலிருந்து வெளியேற சொன்னதை, கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் மருத்துவமைனை நிர்வாகம் திரும்பப் பெற்றிருக்கிறது.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலேயே தன் போராட்டத்தை தொடர்கிறார் தோழர்.

‘மன்மோகன் சிங்கே கொழும்பு உச்சி மாநாட்டிற்குச் செல்லாதே’ என்று தன் உயிரை அர்ப்பணித்து போராடுகிறார் தமிழ்த் தேசிய அரசியலில் தீவிரமாக இயங்கும் தோழர் தியாகு.

ஆனால் இன்னொருபுறம், மோடியை பிரதமாராக்குவதற்காக ராப்பகலா பாடுபடுகிறார்கள். அவர்களும் தமிழ்த் தேசியவாதிகள் தானம்.

அடுத்த மாதம் இலங்கையில் நடக்கப் போகிற காமன்வெல்த் மாநாட்டை எதிர்ப்பதை விட, அடுத்த ஆண்டு நடக்கப் போகிற நாடாளுமன்றத் தேர்தல்தான் அவர்களுக்கு நாட்டம் அதிகம் இருக்கிறது.

அதாங்க அவரு பிரதமாராயிட்டாருன்னா.. இலங்கை தமிழர்களுக்கு சொல்ல முடியாத அளவிற்கு நன்மை செய்துவிடுவாராம்.

வானம் ஏறி வைகுண்டம் போறது இருக்கட்டும். மொதல்ல கூரை ஏறி கோழி புடிக்கச் சொல்லுங்க..

குறைந்தப் பட்சம் எதிர்க்கட்சி நிலையிலிருந்தாவது, மன்மோகன் சிங்கின் இலங்கை பயணத்திற்கு எதிராக ஒரு அறிக்கை விடுவாரா மோடி? அதையாவது செய்ய வைப்பார்களா மோடியின் தமிழ்த் தேசிய பிரிவு.

தோழர் தியாகுவின் போராட்டத்திற்கு துணை நிற்போம்.

இந்துத்துவ தமிழ்த் தேசிய சந்தர்ப்பவாதிகளை அம்பலப்படுத்துவோம்.

தொடர்புடையவை:

இந்திய ராஜபக்சே! வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா?

தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

3 Responses to உயிரா உணர்வா? : தடைகளைத் தகர்த்து, தொடர்கிறார் தியாகு

  1. மா.தமிழ்ப்பரிதி சொல்கிறார்:

    தோழர் தியாகு அவர்களின் உறுதியான எழுச்சியானப் போராட்டத்திற்கு துணை நிற்போம். வாருங்கள் தோழர்களே குரல் கொடுப்போம்.

  2. verum maramum சொல்கிறார்:

    i regret that Tamil people are very DULL &LAZY in fighting against Indians!

  3. thambi சொல்கிறார்:

    எங்க கலைஞர் உண்ணாவிரதத்தை நக்கல் பண்ற மாதிரி இருக்கு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s