மாடுகளுக்கு நீதி மனிதர்களுக்கு அநீதி; ‘மாடு’பிமான தேசம்!

cow

மாட்டுத்தீவின ஊழல் செய்தவருக்கு தண்டனை தந்தாகிவிட்டது. மனிதக் கொலைகள் செய்தவருக்கு பிரதமர் பதவி காத்திருக்கிறது.

1000 ஆண்டுகளாக இந்திய இந்து அரசியலில் எப்போதும் ஒடுக்கப்பட்ட மனிதர்களைவிட மாடுகளே மகத்தானவை.

மாடுகளைத் தொட்டால் புனிதம். மனிதர்களைத் தொட்டால் தீட்டு.

மாடுகளை கொன்றால் பாவம். குற்றம். தண்டனை. மனிதர்களைக் கொன்றால் வீரம். நல்லாட்சி. வெகுமதி.

மாடுகளுக்கு நீதியும் மனிதர்களுக்கு அநீதியும் வழங்கும் பண்பாடு.

மாட்டுத் தீவனத்திற்கு தருகிற மரியாதையைக்கூட மனிதர்களுக்குத் தராத நாடு.

வாழ்க கோமாதா. வாழ்க ஜனநாயகம். வாழ்க சிறுபான்மை மக்களின் கொலைகள். வாழ்க வருங்கால பிரதமரான புனிதப் பசு.

*

02-10-2013 அன்று காலை facebook ல்  எழுதியது.

தொடர்புடையவை:

சைவம், அசைவம் தாண்டிய மூன்றாவது உணவு முறை

ஜல்லிக்கட்டை ஏன் எதிர்க்கிறார்கள்?

அவன்-இவன்; பாலாவின் ஜல்லிக்கட்டு

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

5 Responses to மாடுகளுக்கு நீதி மனிதர்களுக்கு அநீதி; ‘மாடு’பிமான தேசம்!

 1. Mohamed Rafik சொல்கிறார்:

  நெத்தி அடி கருத்துகள் தோழரே. அருமை.

 2. ஆனந்தம் சொல்கிறார்:

  மாட்டுத்தீவன ஊழல் என்றால் மாடுகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவா பொருள்? அதற்கென்று ஒதுக்கப்பட்ட பணம் கையாடப்பட்டதென்றுதானே அர்த்தம்? தண்டனை அதற்காகத்தானே தரப்பட்டது? அந்தப் பணம் ஊழல் செய்யப்படாமலிருந்தால் தாழ்த்தப்பட்ட மக்களின் நன்மைக்குக்கூடப் பயன்பட்டிருக்கலாம் அல்லவா? அப்படியானால் தாழ்த்தப்பட்ட மக்களின் பணத்தைக் கையாடியவருக்குத் தண்டனை தராமல் அவருக்கும் பிரதமர் பதவி தந்துவிட்டால் நல்லது என்பதுதான் உங்கள் கருத்தா?

 3. M Nithil சொல்கிறார்:

  // அப்படியானால் தாழ்த்தப்பட்ட மக்களின் பணத்தைக் கையாடியவருக்குத் தண்டனை தராமல் அவருக்கும் பிரதமர் பதவி தந்துவிட்டால் நல்லது என்பதுதான் உங்கள் கருத்தா? //

  Here Mathimaran is questioning about BJP’s prime ministerial candidate’s genocide and how he left scot-free by this legal system.

  // மாடுகளைத் தொட்டால் புனிதம். மனிதர்களைத் தொட்டால் தீட்டு.// Can you deny this statement.

  Nithil

 4. ஆனந்தம் சொல்கிறார்:

  @ நிதில் : மாடுகளைத் தொட்டால் புனிதம், மனிதர்களைத் தொட்டால் தீட்டு. இதை நான் மறுக்கவில்லை. வெட்கத்துடனும் வேதனையுடனும் ஒப்புக்கொள்கிறேன். நான் மோதியின் ஆதரவாளரும் அல்ல. அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை தந்தே ஆக வேண்டும். ஆனால் அவரை எதிர்ப்பதற்காக அல்லது அவருக்குத் தண்டனை கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் ஊழலுக்காகத் தண்டிக்கப்படும் ஒருவரை புனிதப்பசு அரசியலின் பேரால் ஆதரிப்பது விவேகமா?
  ஊழல், மதவாதம் இரண்டையுமே எந்தக் காரணத்துக்காகவும் ஆதரிக்க முடியாது. மதவாதத்தைவிட ஊழல் பரவாயில்லை என்று சிலபேர் கருதலாம். ஆனால் என்னால் அதை ஏற்க முடியவில்லை. இரண்டுமே தமது பங்குக்கு நாட்டைச் செல்லரித்துக் கொண்டிருக்கின்றன. இரண்டுக்கும் எதிராக மக்களை சிந்திக்க வைப்பதே சிந்திக்கத் தெரிந்தவர்களின் பணியாக இருக்க வேண்டும். (ஊழலா, மதவாதமா என்ற தற்போதைய கேள்விக்காக இரண்டு என்று சொன்னேன். உண்மையில் சாதியையும் சேர்த்து மூன்று தீமைகள். இவற்றுக்கான காரணங்கள், அது தொடர்பான பழைய கதைகளைப் பேசுவதைவிட்டுவிட்டு செயலில் முனைந்து மூன்றையும் ஒழிக்காதவரை நாடு வல்லரசாவது பற்றிக் கனவு காண்பதுகூட இயலாது.)

 5. GOPALASAMY சொல்கிறார்:

  do not worry. only sonia will win the election. sooner or later shariya law will be enforced in our country. until you achieve this goal, donot stop your job.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s