‘புரட்சிகர மாற்றம்! தி இந்து’ வில். ஆச்சரியம் ஆனால் உண்மை; அதே விலை!

the hindu tamilநேற்றைய (16-09-2013) ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பக்கத்திற்கு பக்கம் மோடியின் புகழும், இந்துக் கண்ணோட்டமும் நிரம்பி வழிந்ததை, அடையாளம் கண்டு, இணையத்தில் அம்பலப்படுத்தியன் காரணமாக, இன்றைய (17-09-2013)   ‘தி இந்து’ வில் ஒரு இடத்தில் கூட மோடி பற்றிய செய்தி இல்லை.

மாறாக, தமிழ் மக்களுக்கு எந்த வகையிலும் முக்கியம் இல்லாத, அல்லது தமிழ் பத்திரிகைக்கு தலைப்பாக இருக்க வேண்டிய அவசியம் இல்லாத, உத்திரப் பிரதேசத்தில் தலைப்பாக வரவேண்டிய, .பி. கலவர பூமியில் சிங், சோனியா, ராகுல்’ – ‘பாதிக்கப்பட்டவர்களிடம் நிவாரணத்துக்கு உறுதி.’ என்று காங்கிரஸ் ஆதரவு செய்தி முதல் பக்க தலைப்பாக வந்திருக்கிறது. (பேலன்ஸ் பண்றாங்களாமா! இந்திய செய்திகள் பக்கத்தில் 3 காலம் வரவேண்டியது தலைப்பாக… )

மூடநம்பிக்கைகளை ஒழிக்க அவசரச் சட்டம்’ – ‘இது மகாராஷ்டிர மாநிலத்தில் என்ற தலைப்பில் பகுத்தறிவுக் கட்டுரை வேறு.

பகுத்தறிவு பகலவன் பெரியாரின் 135 வது பிறந்த தினத்தை நினைவுகூரும் வேளையில்,’ – தி.க. வின் விடுதலை நாளிதழில் வரும் கட்டுரையின் ஆரம்பம் போல் துவங்கிறது ‘தி இந்து’ வில் அந்தச் செய்திக் கட்டுரை.

அது மட்டுமல்ல, குறுக்கெழுத்து போட்டியில் பெரியார் படத்தை வைத்து, போட்டி வேறு. முடியில.

இதெல்லாம் பத்தாதுன்னு, மோடியை விமர்சனம் செய்து ‘ஞாநி’ யின் சிறப்புக் கட்டுரை. (அதுகூட ‘அவுங்க’ கிட்டதான் வாங்கு வாங்க போல.. அதையே நம்ம கொடுத்தா போடுவாங்களா? ஜனநாயகம், கருத்து சுதந்திரம், தேசப்பற்று இதெல்லாம் ராஜாஜி, சுப்பிரமணிய பாரதி, ஞாநி இவுங்ககிட்டதானே ஏராளமா இருக்கு.)

நேத்து, அவசர அவசரமா ‘ஞாநி’ யை எழுதச் சொல்லி வாங்கியிருப்பாங்களோ?

அது எப்படி புதுசா டி.வி வந்தாலும், பத்திரிகை வந்தாலும் ‘டக்’ னு ஞாநி போன்றவர்களிடம் கருத்து வாங்கி வெளியிடுறாங்க.

இவுங்களா வாய்ப்புக் கேட்டுப் போறங்களா, அவுங்களா தேடி வர்றாங்களா?

நாம கதை சொல்றதுக்கு முன்னாடி.. அடச்சே..  கட்டுரை எழுதறதுக்கு முன்னாடி அத கண்டுபுடிக்கணும்.

**

இன்று (17-09-2013) மாலை 3 மணியளவில் facebook ல் எழுதியது.

தொடர்புடையது:

தி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை

பத்திரிகைகளின் பாலியல் வன்முறையும் தூக்கு தண்டனையும்

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

8 Responses to ‘புரட்சிகர மாற்றம்! தி இந்து’ வில். ஆச்சரியம் ஆனால் உண்மை; அதே விலை!

 1. கொம்பன் சொல்கிறார்:

  ஜனநாயகம், கருத்து சுதந்திரம், தேசப்பற்று இதெல்லாம் ராஜாஜி, சுப்பிரமணிய பாரதி, ஞாநி இவுங்ககிட்டதானே ஏராளமா இருக்கு***

  எனக்கு இது ஒரு புதிராகவே இத்தனை நாள் இருந்துள்ளது இப்பொழுது தான் புரிகிறது

 2. Pingback: தி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை | வே.மதிமாறன்

 3. மதகுபட்டி சண்முகவேல் சொல்கிறார்:

  ஹ ஹா… ஹ ஹா…. அருமை. அதெல்லாம் அவுக ரத்தத்தில் ஊறியது. மறைக்க முடியாது. மறைக்க நினைத்தால் இப்படிதான் காமெடியாக போகும்.

 4. veera balu சொல்கிறார்:

  இதெல்லாம் பத்தாதுன்னு, மோடியை விமர்சனம் செய்து ‘ஞாநி’ யின் சிறப்புக் கட்டுரை. (அதுகூட ‘அவுங்க’ கிட்டதான் வாங்கு வாங்க போல.. அதையே நம்ம கொடுத்தா போடுவாங்களா? ஜனநாயகம், கருத்து சுதந்திரம், தேசப்பற்று இதெல்லாம் ராஜாஜி, சுப்பிரமணிய பாரதி, ஞாநி இவுங்ககிட்டதானே ஏராளமா இருக்கு.)////////////அருமை தோழர் .இவங்களால் தானே முற்போக்காக பேசி பிற்போக்கு கருத்துக்களை விதைக்க முடியும் அதான்.கமல் ஹாசனை விட்டுட்டீங்களே …….

 5. Pingback: இந்திய ராஜபக்சே! வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா? | வே.மதிமாறன்

 6. Pingback: நொந்த மீன்கள்: ‘இந்து’ எதிர்ப்பு – துணைக்கு பெரியார்; என்ன ஒரு பெரியார் பற்று? | வே.மதிமாறன்

 7. Pingback: தமிழால் ‘இந்து’வாக இணையச் சொல்லுகிற நாளிதழுக்கு மறுப்பு | வே.மதிமாறன்

 8. Pingback: ‘என்னமோ போடா மதிமாறா?’ | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s