‘இந்தி’ தலைப்பில் தமிழ் உணர்வாளரின் तमिल सिनेमा; காதல் Vs காமம் = கள்ளக்காதல்

tharamanai

ராம்-राम-Ram ன் அடுத்த படம் ‘தரமணி’ என்று (30-8-2013) நாளிதழில் விளம்பரம் வந்திருக்கிறது. அதில் இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரு புதுமை நடந்திருக்கிறது.

தமிழ் ‘இந்தி’ ஆங்கிலம் மூன்று மொழிகளில் ‘தரமணி’ என்று அறிவித்திருக்கிறார்கள்.தமிழ் உணர்வு அதிகமானால் இப்படியெல்லாம் ஆகுமோ? ஒரு வேளை, தரமணி ரயில் நிலையத்தில் நடைபெறும் காதல் கதையோ?

‘ரயில் நிலையத்தில் எழுதப்பட்ட இந்தி தமிழுக்கு எதிரானது’ என்று திராவிட இயக்கத்தவர்கள் ‘ரயில் நிலைய இந்தி எழுத்தின் மேல்’, தார் பூசினார்கள். அவர்களை கடுமையாக விமர்சிக்கிற தமிழ்த் தேசியவாதிகள் இந்தி பெயரிலேயே படம் எடுக்கிறார்கள். (யதார்த்தம் முக்கியம் அமைச்சரே)

தமிழுக்கு எதிராக இருந்தாலும் யதார்த்ததை கை விடாத படைப்பாளர்கள், காதலை யதார்த்தமாக பார்ப்பதில்லை. அந்த விளம்பரத்தின் கடைசியில் சதை தாண்டி, இச்சை தாண்டி, காமம் தாண்டி சஞ்சரிக்கும் தவம்காதல்என்ற அந்தப் படத்திற்கான ‘பஞ்ச்’ வந்திருக்கிறது.

‘சதை தாண்டி, இச்சை தாண்டி, காமம் தாண்டி’ இதெல்லாம் ஒண்ணுதானே;. எதுக்கு தடகள ஓட்டம் போல் இத்தனைத் தாண்டல்?

‘காமம் தாண்டி சஞ்சரிக்கும் தவம் ‘காதல்’ இப்படி மட்டும் சொல்லியிருக்கலாம். ‘கா’ வுக்கு ‘கா’ எதுகை மோனையோடு எடுப்பா இருந்திருக்கும்.

சரி. அதென்ன சினிமா எடுக்கிற எல்லோரும் ‘காமத்தைத் தாண்டிய காதல்’ என்கிறார்கள்.

காமத்தை எதுக்கு தாண்டனும்? காமத்தை தாண்டி எதுக்கு காதலிக்கனும்? காமம் இல்லாமல் காதலிக்க முடியுமா? முடியுமென்றால், ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் ஏன் காதலிக்க வேண்டும்? எதாவது மரம், செடி, கொடியை காதலிச்சிட்டு போலாமே?

சஞ்சரிக்கும் தவம்காதல்’. தவம் சாமியார்தான் செய்வான். காதலர்களுக்கு எதுக்கு?

காமத்தைத் தாண்டினால், கத்தோலிக்க பாதிரியாகலாம். இந்து சாமியாராகலாம். ஆனால், அவர்களில் பலரே ரிவர்ஸ் கீர் போட்டு, காமத்திற்கு வந்துகொண்டு இருக்கிறார்கள்.

கெழட்டு சாமியார்களுக்கே காமம் வேண்டும் எனும்போது, இளைஞர்களான காதலர்களுக்கு காமம் வேண்டாம் அல்லது காமத்தைத் தாண்ட வேண்டுமென்றால், இது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்.

காமம் தாண்டிய காதல், கல்யாணத்தில் முடிந்தால்; ஹனிமூனுக்கு போக முடியாது. பலனா ‘டாக்டர்’ சேலம் சித்த வைத்தியர் சிவராஜீடம்தான் போகனும்.

காமத்தைத் தாண்டி காதலித்தால் அது காதலை வாழ வைக்காது, கள்ளக் காதலைதான் வாழவைக்கும்.

காதல் எப்படி ஒரு கவுரமான உணர்வோ அதுபோலவே காமமும்.
காதலும்-காமமும் காதலர்களின் உரிமை. அதில் அடுத்தவர்கள் எட்டிப் பார்ப்பதும் தலையிடுவதும் ‘பஞ்சாயத்து’ செய்வதும் தான் அநாகரீகம்.

tharamanai

மத்திய அரசின் தமிழ் விரோதப் போக்கு
*

Facebook ல் நேற்று (30-8-2013) எழுதியது

‘தங்கமீன்கள் சினிமா பற்றி எழுத வேண்டும்’; எதுக்கு எழுதணும்?

நொந்த மீன்கள்: ‘இந்து’ எதிர்ப்பு – துணைக்கு பெரியார்; என்ன ஒரு பெரியார் பற்று?

கண்டிப்பா அவர பாராட்டிதாங்க ஆகனும்; சாதாரண விசயமா அவுரு பண்ணது?

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

17 Responses to ‘இந்தி’ தலைப்பில் தமிழ் உணர்வாளரின் तमिल सिनेमा; காதல் Vs காமம் = கள்ளக்காதல்

 1. நந்தன் சொல்கிறார்:

  இந்தப் பயலுவ எதெல்லாம் உண்மையில்லையோ அதையெல்லாம் வச்சு கல்லாக்
  கட்றதுன்னு முடிவு பண்ணிட்டாணுவ… பெரியார் சொன்னாரே, ஒரு ஆணுக்கும்
  பெண்ணுக்கும் இடைல இருக்கிற பாசம், ஆசை, நற்பு, அதுதான் காதல். அதுக்கு
  கல்யாணம் ஒரு தேவையில்லாத சடங்கு… இதைவிட ஒரு பொருத்தமான ஜனநாயகப்
  பூர்வமான விளக்கத்த சொல்ல முடியுமா? காமத்தைத் தாண்டின முத்தம்ன்றான்,
  காமத்தைத் தாண்டின காதல்ன்றான்… இனி காமத்தைத் தாண்டின கல்யாணம்,
  காமத்தைத் தாண்டின தேனிலவு எல்லாம் வச்சுக்கலாம்.
  நானெல்லாம் ரொம்ப நல்லவன், நல்லவன், நல்லவன்! நு சொல்றவனப்
  பாத்திருப்பிங்க்லே! இருக்கிரதிலேயே அயோக்கியந்தான் நான் ரொம்ப
  யோக்கியன்னு சொல்லிக்கிட்டே திரியிறான்…. காமத்தைத் தாண்டினதுன்னு
  எதுக்கு திரும்பத்திரும்பச் சொல்லணும்? எவன் காமத்தைப் பத்தியே எப்பவும்
  யோசிக்கிரானோ, அவன்தான் “இது காமமேல்லாம் இலிங்கோ இல்லிங்கோ!” நு
  சொல்லிக்கிட்டே இருக்கான். யோக்கியனுக்கு இருட்டில என்னடா வேலை???

 2. Duraicool சொல்கிறார்:

  உங்களுக்கு என்ன ஆச்சு? ராம் என்ற பார்ப்பண பெயரை மாற்றவேண்டுமா?

 3. காசிமேடுமன்னாரு சொல்கிறார்:

  மனிதனின் தன்னியல்பான காம உணர்வு என்பது இவர்களைப் பொறுத்தவரை ஒரு பாவ உணர்வாகவே பார்க்கப் படுகிறதோ என்னவோ…! உயிர்கள் இனப்பெருக்கம் அடைவதன் அடிப்படையே இந்தக் காமம்தானே! மற்றவர்களுக்கு காமம் தவறு என்று போதனை செய்யும் இவர்கள், கதை டிஸ்கசன் என்ற பெயரில் அறை எடுத்து காமவிளையாட்டு விளையாடுவது என்பதை ஒரு கட்டாயச் சடங்காகவேக் கொண்டு, ஆட்டம் போடும் இவர்கள் அந்தக் காமத்தை தவறு என்று நமக்கு உபதேசம் செய்ய வந்து விட்டார்கள் சற்றும் வெட்கமேயில்லாமல்! ஒருவேளை இராமதாசு வகையறாக்களிடம் நற்சான்று பெறுவதற்காக இருக்குமோ இப்படி ஒரு தொடர் தாண்டல்கள்!
  கிறித்தவப் பாதிரியார்கள் ரிவர்சு கியரில் காமத்தைத் தேடி ஓடுகிறார்களா…! சற்றே திருத்துங்கள் நண்பர் மதி அவர்களே…! அவர்கள் காமத்திலே உள்நீச்சல் அடிக்கிறார்கள்! நமக்கு ஒரு மனைவிதான்: அவர்களுக்கோ வாரம் ஒரு மனைவி! பாதிரியார்கள் தங்கள் முன் மாதிரியாகக் கொள்வது இதுவிடயத்தில் இயேசுவை அல்ல! கீதையின் கோபியர் கொஞ்சும் காம வெறியன், கண்ணனையே பாதிரியார்கள் தங்களின் முன் மாதிரியாகக் கொள்கிறார்கள்! காமக்களியாட்டத்தில் சும்மா வெளுத்தல்லவா வாங்குகிறார்கள் அவர்கள்!
  ஆணுறை கண்டு பிடித்தது பாதிரியார்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்! ஆணுறை என்ற ஒரு சமாச்சாரம் இல்லையென்றால், பால்வினை, எய்ட்சு நோய்களில் ஏகப்பட்ட பாதிரிகள் மாட்டி, நாறிப் போயிருப்பார்கள்! இணைய உலகில் பாதிரிகளை காமவெறிப் பாதிரிகள் என்றே குறிப்பிடும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார்கள்! மனிதர்களிலேயே இழி பிறவிகள் என்று வேண்டுமானால் நாகரிகமாக பாதிரியார்களைக் குறிப்பிடலாம்! அவர்களைப் பற்றிப் பேசினால் நம் வாயைக் கழுவத்தான் வேண்டும் அவ்வளவு அசிங்கங்கள் அங்கு!
  உயிர்களின் காம உணர்வைப் பற்றி புதுமையாகவும், அதன் முதன்மைத்துவத்தை நாகரீகமாகவும், யாருமே எடுத்துரைக்காத வகையில், உண்மையிலேயே உள்ளத்தைத் தொடும் விதமாக, மிகச்சிறந்த முறையில் குறிப்பிட்டுள்ளமை மிகவும் பாராட்டுக்குரியது! நன்றி மதி!

 4. Pingback: ‘தங்கமீன்கள் சினிமா பற்றி எழுத வேண்டும்’; எதுக்கு எழுதணும்? | வே.மதிமாறன்

 5. தமிழானவன் சொல்கிறார்:

  காதலும் காமமும் ஒன்றுதான். காமத்தின் கவித்துவமான இலக்கியச் சொல்தான் காதல். காமத்தை ஏன் தவறு என்பது போல் சித்தரிக்கிறார்களோ, காமம் இல்லை என்றால் அது போற்றுதலுக்குரிய புனிதமாகி விடுகிறது. என்ன எழவோ. பெண்கள் எப்படி உடையணிய வேண்டும் என்று வசனம் வைத்து விட்டு, பாடல் காட்சியில் நாயகியைத் துகிலுரித்து ஆண் ரசிகர்களுக்கு படையல் வைப்பதுதான் காலம்காலமாக திரைப்படங்கள் செய்வது.

  இந்தப் புகைப்படத்திலும் நடிகைக்கு வெள்ளுடை அணிவித்து நீரில் நனைத்து உள்ளாடையை தரிசிக்க வைத்துவிட்டு, கீழே இப்படி ஒரு வசனம்.

 6. சாங்கியன் சொல்கிறார்:

  ///எப்படி உடையணிய வேண்டும் என்று வசனம் வைத்து விட்டு, பாடல் காட்சியில் நாயகியைத் துகிலுரித்து ஆண் ரசிகர்களுக்கு படையல் வைப்பதுதான் காலம்காலமாக திரைப்படங்கள் செய்வது.

  இந்தப் புகைப்படத்திலும் நடிகைக்கு வெள்ளுடை அணிவித்து நீரில் நனைத்து உள்ளாடையை தரிசிக்க வைத்துவிட்டு, கீழே இப்படி ஒரு வசனம்.///

  சரியான பார்வை நண்பரே

 7. munna சொல்கிறார்:

  மிக எதார்த்தமான பதிவு. அருமை.

 8. Pingback: நொந்த மீன்கள்: ‘இந்து’ எதிர்ப்பு – துணைக்கு பெரியார்; என்ன ஒரு பெரியார் பற்று? | வே.மதிமாறன்

 9. Pingback: ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ – காமெடி கலகம் | வே.மதிமாறன்

 10. Pingback: ‘பீட்ஸா- 2 வில்லா’: இது, ‘வாந்தி-பேதி’க்கு எந்த வகையிலும் பொறுப்பல்ல.. | வே.மதிமாறன்

 11. Pingback: அன்பின் அழகியல் | வே.மதிமாறன்

 12. ravi @ ravichandran சொல்கிறார்:

  sathai,ichai,kaamam…. poovum, puspamum pola….. kolkai, koatpadu pola……

 13. Pingback: கண்டிப்பா அவர பாராட்டிதாங்க ஆகனும்; சாதாரண விசயமா அவுரு பண்ணது? | வே.மதிமாறன்

 14. Pingback: பொறியாளன் சினிமாவும் புரட்சிகர இயக்குநர்களும் | வே.மதிமாறன்

 15. Pingback: கயல்: கதறுகிறது காதல்; காப்பாற்றுங்கள் சினிமாக்காரர்களிடமிருந்து.. | வே.மதிமாறன்

 16. Pingback: PK; இந்தி சினிமாவைத் தாண்டிய இந்திய சினிமா | வே.மதிமாறன்

 17. சிவம் சொல்கிறார்:

  உண்மையில் நானும் கயல் என்ற படத்தலைப்பை பார்த்து ஏமாந்தவர்களில் ஒருவன். அருமையான கவித்துவமான தலைப்பை சாலமன் பாழடித்து விட்டார் என்றே தோன்றுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s