‘கமலுக்கு வந்தா ரத்தம், விஜய்க்கு வந்தா தக்காளி சட்னி’; இது ‘ஞாநி’ யின் கருத்தல்ல

Vijaiஸ்லாமியர் எதிர்ப்பு படமான கமலின் விஸ்வரூபத்திற்கு கண்டனம் தெரிவித்த இஸ்லாமியர்களை அதிமுகவின் அடியாளாகவும்,

கமலின் மதவாததிற்கு எதிரான போராட்டம் ஜனநாயகத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது என்றும்,

தமிழக அரசை கண்டித்தும் போர்க்குரல் எழுப்பிய கருத்து சுதந்திர ‘ஞாநி’ கள் ‘தலைவா’ படத்திற்கு ஏற்பட்ட ‘தலைவிதி’ யை மாற்ற சொல்லி கருத்து சொல்லியிருக்கிறார்களா?

 கமல் ‘நான் நாட்டை விட்டே போகிறேன்’ என்று சொன்னபோது, ‘போகாதே.. போகாதே என் கணவா?’ என்கிற பாணியில் புலம்பி, ‘ஒரு கலைஞன் இந்த அளவிற்கு மனம் வெறுத்துப் போனதற்கு, தமிழக அரசும் காரணம்’ என்று ரத்தக் கொதிப்பான ‘ஞாநி’கள், தலைவா  பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்? எங்கிருக்கிறார்கள்?

ஒருவேளை ‘தலைவா’ படம் வெளியாகாத தமிழ்நாட்டில் நான் இருக்க மாட்டேன்’ என்று வெளிநாடு போய்விட்டார்களோ?

தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்கிறேன். கண்டுபிடித்தவர்கள் சொல்லவும். ‘ஞாநி’ களை அல்ல;  அவர்களின் ‘கருத்தான’ கருத்தை. அதனால்தானே அவர்கள் ஞாநிகள்.

தொடர்புடையவை:

கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா?

சின்மயி விவகாரமும் ஞாநியின் பஞ்சாயத்தும்

ஞாநி’ யை நான் கவுண்டமணியுடன் ஒப்பிடவில்லை

முற்போக்காளர்களின் ஜாதி உணர்வு

யார் வெறி நாய்?

விஸ்வரூப தந்திரம்

விஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா? பார்த்துச் சொல்லுங்கள்

‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்

மலையாள விஜயும் தமிழ் மோகன்லாலும்

அன்னா அசாரேவிற்கு வாழ்த்து தமிழனுக்கு தூக்கு; இது தாண்டா இளைய தளபதி விஜய் ஸ்டைல்

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

13 Responses to ‘கமலுக்கு வந்தா ரத்தம், விஜய்க்கு வந்தா தக்காளி சட்னி’; இது ‘ஞாநி’ யின் கருத்தல்ல

 1. R Chandrasekaran சொல்கிறார்:

  ஏனங்க நீர்தான் கமல் படம் வெளியாகமல் போனத்துக்கு ஜெ வை பாராட்டினிங்க..மாஞ்சு மாஞ்சு ப்ளாக் போட்டீரு. இப்ப வும் அதே கத தான,….ஜெ பாராட்ட வேண்டியதுதான.. இப்பவும் அதே கேள்விதான்.. கமலுக்கு வந்தா தக்காளி சட்னி விஜய்க்கு வந்தா ரத்தமா

 2. தமிழானவன் சொல்கிறார்:

  மீண்டும் மீண்டும் விஸ்வரூபத்தை இஸ்லாமியர் எதிர்ப்புப் படம் என்று ஏன் சொல்கிறீர்கள். அமெரிக்க ஆதரவு- ஆப்கானியர் (தாலிபன்) எதிர்ப்புப் படமே விஸ்வரூபம். படத்தின் நாயகனே முஸ்லிமாக இருப்பதால் அது முஸ்லிம் ஆதரவுப் படம் என்று சொல்லலாமே.

  மெட்ராஸ் கஃபே படத்தை இந்துக்களுக்கு எதிரான படம் என்று சொல்லலாமா ? இல்லை தமிழர்களுக்கு எதிரான படம் என்று சொல்வீர்களா ?

  அமெரிக்க ஏகாதிபத்தியம் முஸ்லிம்களுக்கு (மட்டும்)எதிரி என்று மதவாதிகள் பரப்புரை செய்கிறார்கள். அமெரிக்காவுடன் துருக்கி-சௌதி-கடார் போன்ற இஸ்லாமியர் நாடுகள் நட்புடன்தான் இருக்கின்றன. பேரிக்கா ஏகாதிபத்தியத்துடன் தேன் நிலவு கொண்டாடும் சௌதி மன்னரின் பணத்தில்தான் இஸ்லாமைப் பரப்புகிறார்கள். இன்னொரு பக்கம் பேரிக்கா ஏகாதிபத்தியம் கொடுக்கும் ஆயுதங்களை வைத்துத்தான் சிரியாவிலும், (லிபியாவிலும்) சர்வாதிகாரிகளை எதிர்த்து போர் புரிகிறார்கள் முஸ்லிம்கள். பாகிஸ்தானிலும், ஈராக்கிலும், சிரியாவிலும் ஷியாக்களைக் கொல்வது யார் ?

  //விஸ்வரூபத்திற்கு கண்டனம் தெரிவித்த//

  கண்டனம் மட்டும்தான் தெரிவித்தார்களா ? “இறைவனின் திருப்பெயரால்” படத்தை ஓட விடமாட்டோம் என்றெல்லாம் அடாவடியாக படத்தையே தடை செய்யக் கோரினால் எதிர்க்காமல் என்ன செய்வது. உன்னைப்போல் ஒருவனை விமர்சித்தவர்கள் கூடத்தான் இந்தத் தடையை எதிர்த்தனர்.

  // இஸ்லாமியர்களை அதிமுகவின் அடியாளாகவும்//

  இல்லையோ பின்ன !! இந்தப் பதிவை எழுதியது ஞாநி இல்லையே !
  ஜெயாவின் அடியாட்களா இஸ்லாமிய அமைப்புகள் ?
  http://www.vinavu.com/2013/01/30/viswaroopam-jaya-islamic-fundamentalism/

  விஜயும் கமலும் ஒன்றா ? 5 நிமிடம் கூட மேடையில் பேசத் தெரியாத விஜய் விஜய் அரசியலுக்கு வருவதற்காக தமிழன், சுயமரியாதை, இனம், அகதி, தோழா, தமிழா என்றெல்லாம் வசனமும் பாடலும் வைத்துக் கொண்டு வாயசைக்கிறார். தனது மகனையே கொண்டு வந்து ஆட வைக்கிறார். அவரது தந்தையார் எனது மகன் நாளைய தலைவன் என்று பேட்டி கொடுக்கிறார். விஜய் நிறைய சொத்து சேர்த்து விட்டார் அதைக் காப்பாற்ற அரசியலில் சேர்ந்தாக வேண்டியிருக்கிறது. காங்கிரசில் சேரலாம் என்று நினைத்தார். காரணம் கேட்டதற்கு நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்த கட்சி என்றார். கடந்த ஆட்சியில் பிரச்சனை வந்ததால் அய்யாவுக்கு எதிராக அம்மா கட்சிக்கு ஆதரவளித்தார். இதனால் திமுகவினர் ஆதரவையும் இழந்து விட்டார்.

  விஜய்க்கு நடிக்க வரவில்லை..படத்திலும் சரி வெளியிலும் சரி. கமல் அளவுக்கு நடிக்கவோ அரசியல் பண்ணவோ தெரியவில்லை. அதனால்தான் தவிக்கிறார்.

  கமல் பார்ப்பனராக இருப்பதால்தான் எல்லோரும் கமலை ஆதரித்தார்கள், விஜய சிறுபான்மை கிறிஸ்தவர் என்பதால்தான் அவரை யாரும் ஆதரிக்கவில்லை என்றும் கூட சொல்கிறார்கள். அடையாள அரசியலை இது மாதிரி எல்லோரும் பயன்படுத்தத் தொடங்கினால் எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.

  நீங்க ஞாநியை நேரடியாகப் பல முறை விமர்சித்து ஒன்றுமே சொல்லாமல் இருக்கிறாரே ஏன் ?

 3. தமிழானவன் சொல்கிறார்:

  மீண்டும் மீண்டும் விஸ்வரூபத்தை இஸ்லாமியர் எதிர்ப்புப் படம் என்று ஏன் சொல்கிறீர்கள். அமெரிக்க ஆதரவு- ஆப்கானியர் (தாலிபன்) எதிர்ப்புப் படமே விஸ்வரூபம். படத்தின் நாயகனே முஸ்லிமாக இருப்பதால் அது முஸ்லிம் ஆதரவுப் படம் என்று சொல்லலாமே.

  மெட்ராஸ் கஃபே படத்தை இந்துக்களுக்கு எதிரான படம் என்று சொல்லலாமா ? இல்லை தமிழர்களுக்கு எதிரான படம் என்று சொல்வீர்களா ?

  அமெரிக்க ஏகாதிபத்தியம் முஸ்லிம்களுக்கு (மட்டும்)எதிரி என்று மதவாதிகள் பரப்புரை செய்கிறார்கள். அமெரிக்காவுடன் துருக்கி-சௌதி-கடார் போன்ற இஸ்லாமியர் நாடுகள் நட்புடன்தான் இருக்கின்றன. பேரிக்கா ஏகாதிபத்தியத்துடன் தேன் நிலவு கொண்டாடும் சௌதி மன்னரின் பணத்தில்தான் இஸ்லாமைப் பரப்புகிறார்கள். இன்னொரு பக்கம் பேரிக்கா ஏகாதிபத்தியம் கொடுக்கும் ஆயுதங்களை வைத்துத்தான் சிரியாவிலும், (லிபியாவிலும்) சர்வாதிகாரிகளை எதிர்த்து போர் புரிகிறார்கள் முஸ்லிம்கள். பாகிஸ்தானிலும், ஈராக்கிலும், சிரியாவிலும் ஷியாக்களைக் கொல்வது யார் ?

  //விஸ்வரூபத்திற்கு கண்டனம் தெரிவித்த//

  கண்டனம் மட்டும்தான் தெரிவித்தார்களா ? “இறைவனின் திருப்பெயரால்” படத்தை ஓட விடமாட்டோம் என்றெல்லாம் அடாவடியாக படத்தையே தடை செய்யக் கோரினால் எதிர்க்காமல் என்ன செய்வது. உன்னைப்போல் ஒருவனை விமர்சித்தவர்கள் கூடத்தான் இந்தத் தடையை எதிர்த்தனர்.

  // இஸ்லாமியர்களை அதிமுகவின் அடியாளாகவும்//

  இல்லையோ பின்ன !! இந்தப் பதிவை எழுதியது ஞாநி இல்லையே !
  ஜெயாவின் அடியாட்களா இஸ்லாமிய அமைப்புகள் ?http://www.vinavu.com/2013/01/30/viswaroopam-jaya-islamic-fundamentalism/

  விஜயும் கமலும் ஒன்றா ? 5 நிமிடம் கூட மேடையில் பேசத் தெரியாத விஜய் விஜய் அரசியலுக்கு வருவதற்காக தமிழன், சுயமரியாதை, இனம், அகதி, தோழா, தமிழா என்றெல்லாம் வசனமும் பாடலும் வைத்துக் கொண்டு வாயசைக்கிறார். தனது மகனையே கொண்டு வந்து ஆட வைக்கிறார். அவரது தந்தையார் எனது மகன் நாளைய தலைவன் என்று பேட்டி கொடுக்கிறார். விஜய் நிறைய சொத்து சேர்த்து விட்டார் அதைக் காப்பாற்ற அரசியலில் சேர்ந்தாக வேண்டியிருக்கிறது. காங்கிரசில் சேரலாம் என்று நினைத்தார். காரணம் கேட்டதற்கு நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்த கட்சி என்றார். கடந்த ஆட்சியில் பிரச்சனை வந்ததால் அய்யாவுக்கு எதிராக அம்மா கட்சிக்கு ஆதரவளித்தார். இதனால் திமுகவினர் ஆதரவையும் இழந்து விட்டார்.

  விஜய்க்கு நடிக்க வரவில்லை..படத்திலும் சரி வெளியிலும் சரி. கமல் அளவுக்கு நடிக்கவோ அரசியல் பண்ணவோ தெரியவில்லை. அதனால்தான் தவிக்கிறார்.

  கமல் பார்ப்பனராக இருப்பதால்தான் எல்லோரும் கமலை ஆதரித்தார்கள், விஜய சிறுபான்மை கிறிஸ்தவர் என்பதால்தான் அவரை யாரும் ஆதரிக்கவில்லை என்றும் கூட சொல்கிறார்கள். அடையாள அரசியலை இது மாதிரி எல்லோரும் பயன்படுத்தத் தொடங்கினால் எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.

  நீங்க ஞாநியை நேரடியாகப் பல முறை விமர்சித்து ஒன்றுமே சொல்லாமல் இருக்கிறாரே ஏன் ?

 4. கொம்பன் சொல்கிறார்:

  இந்த நடிகனுங்க எல்லாமே சுயநலவாதிகள் தான் இதுல என்ன ஒருத்தன் மட்டும் ஒசத்தியானு தானே கேக்குறாரு

 5. வே.மதிமாறன் சொல்கிறார்:

  .///ஜெ பாராட்ட வேண்டியதுதான.. //
  ஜெ வை நான் எதற்கு பாராட்ட வேண்டும்? விஸ்வரூபம் இஸ்லாமியர் எதிர்ப்பு படம் என்பதால் என் எதிர்ப்பை பதிவு செய்தேன்.
  அப்போது கருத்துச் சுதந்திரம் பேசியவரகள். இஸ்லாமியர்களையும்-ஜெயலலிதாவையும் விமர்சிப்பதின் மூலம் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுகிறேன் என்ற பெயரில் கமலுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள். இப்போது என்ன செய்கிறார்கள் என்பதுதான் கேள்வி.

  ‘விஜயே ஜெயலிதாவை எதிர்க்கவில்லை. நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும்?’ என்றால், கமல் மட்டும் என்ன ஜெயலிதாவிற்கு எதிராக புரட்சிகர போராட்டத்தை நடத்தினாரா?

 6. Pingback: கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா? | வே.மதிமாறன்

 7. manidhan சொல்கிறார்:

  இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் பெரும்பாலானவைகளில் காவி இந்து தீவிரவாதிகளோட பங்கு உள்ளது என்கிற உண்மை வெளிவந்துக்கொண்டிருக்கும் வேலையில் அதை மறைத்து இந்திய இஸ்லாமியர்களை பொறுப்பாக்கும் கருத்தை விதைத்தது கமலின் உன்னை போல் ஒருவன். அந்த கமலின் விஸ்வரூபம் அடுத்து ஒருபடி மேலே போய் குரானும் தொழுகையும் தீவிரவாதத்தைத்தான் போதிக்கின்றன என்கிற ரீதியில் படம் எடுக்கப்பட்டதை அறிந்து இந்த படம் வெளியே வந்தால் இஸ்லாமியர்களை மேலும் இந்து சகோதரர்களிடமிருந்து அந்நியப்படுத்தும் என்று இஸ்லாமியர்கள் ஜனநாயக வழியில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.அரசிடம் மனுகொடுத்தனர், நீதிமன்றம் சென்றனர். எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. அவர்களின் போராட்டத்தின் நோக்கம் செயற்கையாக ஒரு கருத்தை இஸ்லாமியர்களுக்கு எதிராக விதைத்து மக்களிடம் ஏன் எங்களை அன்னியப்படுத்துகிரீர்கள் என்பதை தவிர வேறென்ன ? அந்த படம் வெளிவந்தால் இது தானே நடக்கும் ? நியாயமான இந்த போராட்டத்தை கருத்து சுதந்திரத்திற்கு எதிரான போராட்டம் என்று கொச்சைபடுத்தி இஸ்லாமியர்களின் நியாயங்களை புறம் தள்ளி தாண்டவமாடிய ஞானிகளும், கருத்து சுதந்திர காவலர்களும் இன்றைக்கு எந்த சந்தில் ஒளிந்துள்ளார்கள் ? இத்தனைக்கும் விஜய்யின் இந்த படம் எந்த மக்களின் எதிர்ப்புக்கும் ஆளாகவில்லை. நியாயங்களை மறைத்துவிட்டு நடுநிலையாளர்கள் என்று வேஷம் கட்டினால் இப்படித்தான் சாயம் வெளுத்து போகும். ஆனால் இதை பற்றி வெட்கமே படாமல் தங்களுடைய ஆழ்மண ரேஷிஷத்தை மறைத்துக்கொண்டு கருத்து சொல்ல கிளம்பிவிடுவார்கள். அந்த ஆழ்மனதிற்கு பாதிப்பு வந்தால் மட்டும்.

 8. R Chandrasekar சொல்கிறார்:

  மதியண்ணே.. உங்க கருத்தையொத்த வினவை கேட்டுப் பாருங்க…” பாய்களை ஜெ பயன் படுத்திக்” கொண்டத பத்தி கட்டுரை போட்ருக்காங்க… அவங்களே அப்படிச் சொல்லும் போது.. சங்கராச்சாரிய ஒப்பிட்டு ஜெ வின் கரத்த வலுப்படுத்தனும்னு ப்ளாக் எழுதிட்டு நான எங்க சப்போர்ட் பண்ணேன்னு சொல்றிங்களே.. சரியா???????

 9. A.SAHABUDEEN சொல்கிறார்:

  Yeanendraal vijay oru christian, Kamal oru hindu brahmin. ithuthaan kaaranam.

 10. Kumaran சொல்கிறார்:

  “இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் பெரும்பாலானவைகளில் காவி இந்து தீவிரவாதிகளோட பங்கு உள்ளது ”

  உலகம் முழுக்க குண்டு வைப்பது யார் ? இஸ்லாமிய மத வெறியர்கள் தான்.

 11. munna சொல்கிறார்:

  உலகம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரானா கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.வல்லரசுகளை எதிர்க்க வேறு வழியில்லை. நம் நாட்டு நேதாஜி செய்தால் தியாகி. அவன்நாட்டை காப்பாற்ற அவனுங்க செய்தா தீவிரவாதியா ? நீங்கள் சொல்வது போல் முஸ்லீம்கள் குண்டு வைத்து 6000 பேரை கொன்றிருப்பார்களா 15 வருடங்களில் ? அவர்களை தீவிரவாதி என்கிறோம். ஆனால் அமெரிக்கன் 8 லட்சம் முஸ்லீம்களுக்கு மேல் கொன்று குவித்திருக்கானே இராக்கிலும் ஆப்கானிலும் மட்டும்.அந்த இராக் போரில் மட்டும் மொத்தம் 6 லட்சம் இராக் மக்கள் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகள் மட்டும் 1.5 லட்சம் பேர்.அவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகளை அழிக்கும் கதாநாயகர்களாக அல்லவா நாம் கூறுகிறோம். நம் படத்தில் ( விஸ்வரூபம் ) காட்டுகிறோம். எப்படி இதை பற்றி உங்களால் சிந்திக்க கூட முடியவில்லை? எல்லாம் அவர்களுடைய ஊடக வலிமையினால் தான்.இந்த கொடுமைகளை எதிர்த்து அந்த மக்கள் போராடினால் அவர்களுக்கு மேற்குலக, யூத, ஆரிய மீடியாக்கள் வைத்திருக்கும் பெயர் இஸ்லாமிய பயங்கரவாதிகள். அவர்களின் நியாயமான போராட்டத்தில் கொல்லப்படும் எதிரிகளின் ஒற்றை இலக்க உயிர்கள் மதிப்பில்லாதவை. அமேரிக்கா மற்றும் உலகமே அதை கடுமையாக கண்டிக்கும். கொந்தளிக்கும். இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஒன்றுப்பட்டு அளிப்போம் என்றுகொக்கரிக்கும்.இதையே அமேரிக்கா இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடுகள் தன உரிமைகளுக்காக போராடிய இஸ்லாமிய மக்களை லட்சக்கனக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொன்று குவித்தால் அவர்களின் உயிர் மிக மிக மலிவானவை. அதற்காக ஒருவரும் கவலை படுவது கிடையாது. இது தான் ஆப்கனில் நடக்கிறது. இதுதான் இராக்கில் நடக்கிறது. இதுதான் காஷ்மீரில் நடக்கிறது. இவர்களின் பெயர் இஸ்லாமிய பயங்கரவாதிகள். உலக மீடியாக்களின் இந்த ஒரு வார்த்தை பிரசாரத்தினால் அவர்களின் போராட்ட நியாயங்கள் மறைக்கப்படுகின்றன. மழுங்கடிக்கபடுகின்றன. இதுதான் உண்மை.

 12. KARAN சொல்கிறார்:

  உலகெங்கும் குண்டு வைப்பவர்கள் மதம் மாற்றப்பட்ட அப்பாவிகள் .இதில் மிக பெரிய படித்த மேதைகள், மனோ தத்துவ பேராசிரியர்கள் எல்லாம் உண்டு.அப்படி என்னதான் மதம் அவர்களுக்கு கற்று கொடுக்கிறதோ?சிறந்த கல்வியை விட எந்த மதமும் மனிதாபிமனத்தை ,தன் நம்பிக்கையை ,வாழ்கையை கற்று கொடுப்பதில்லை .ஞானி.மணி,மதி,வினவி,யோனி, இப்படியே தமிழன் படித்து யோசித்து வாழ்கையை தொலைத்து தியாகி ஆகிறான் .தமிழ் வாழ்க !முழக்கம் மட்டும் ஆனால் தமிழன் நிலை?

 13. Pingback: எளிய தமிழர்களை இளிச்சவாயனாக்கும் கட்சி(ஆம் ஆத் மீ) | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s