காதலுக்கு ‘ஆதரவானவர்’களையும் அம்பலப்படுத்துகிறது காதல்

love-cartoons16 வயதுகூட நிரம்பாத சிறுமியை கதாநாயகியாக ஆடை குறைத்து, கிழவர்களுக்கு ஜோடியாகவும் அதைவிட மோசமாக கவர்ச்சி உடையில் பாலியல் பொருளாகவும் காட்டுகிறவர்கள் சொல்கிறார்கள்:

“அந்தப் பொண்ணுக்கு 20 வயது. அதுக்கு என்ன விவரம் தெரியும்? பெத்தவனுக்கு இல்லாத அக்கறையா?”

*

ன்னுடைய தந்தை மேல் காவல்துறையில் புகார் கொடுக்கக் கூடிய அளவிற்கு ஒரு பெண்ணிற்கு தைரியம் இருக்கும்போது, தன் தந்தையை மீறி தன் காதலனை கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன்? கல்யாணம் ஆகி இருந்தால் இந்தப் பிரச்சினை இவ்வளவு தூரம் வந்திருக்காது.

தன் தந்தையை கிரிமினலாக குற்றம்சாட்டி புகார் கொடுப்பதை விட, தன் மனதுக்கு பிடித்தவனை தந்தைக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்வது தவறில்லை. அதுவே தந்தைக்கு காட்டும் மரியாதையும்கூட.

ஏன் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை? அதைத் தடுத்தது, தடுப்பது யார்? இந்த முடிச்சை அவிழ்த்தால், இதன் குற்றவாளிகள் யார் என்று தெரியும்?

*

ல்லவேளை இந்த பையன் தலித்தா இல்ல. இந்நேரம் தலித்தா இருந்தா…. அது அந்த பையனோடு மட்டும் முடியமா, ஒட்டுமொத்த தலித் மக்களை பற்றியும் இழிவா பேசியிருப்பாங்க.

ஆனா பாருங்க ஒருவன் தலித் இல்லைன்னு தெரிஞ்சா போதும், மத்தப்படி அவன் என்ன ஜாதின்னு யாருக்கும் தெரிய வேண்டியதில்ல. ஒரு தலித் செய்கிற ஒவ்வொன்றுக்கும் அவன் ஜாதியோடு முடிச்சுப்போட்டு பார்க்கிற மனோபாவமே நீக்கமற பரம்பொருளைப் போல் எங்கும் நிறைந்திருக்கிறது.

இதுதாங்க ஜாதி உணர்வற்ற சமூகம் (மணமகன் தேவை: ஜாதி தடையில்லை SC., ST நீங்கலாக)

*

‘இயக்குநர்கள் எல்லாம் இப்ப நடிகர்களாக மாறி இருக்கிறார்கள்.’

ஆமா டீ.வில பாத்தேன். ரொம்ப யதார்த்தமா, இயல்பான நடிப்பு. தமிழ் சினிமாவை இன்னொரு கட்டத்திற்கு உயர்த்தி விட்டார்கள்.

இத பாத்து அந்த ‘பொறுக்கி’ பையன் பயந்து இருப்பானோ இல்லையோ, நிச்சயம் தமிழ் முன்னணி நடிகர்கள் நடிங்கிருப்பாங்க.

*

யது வந்த ஆணும் பெண்ணும் ‘காதலுக்கு எதிர்ப்பு காப்பாற்றுங்கள்’ என்று போனால், அதுவும் வசதியான வீட்டு காதல் பிரச்சினையாக இருந்தால் உடனே காவல்துறை ‘கவுன்சிலிங்’ பண்ண ஆரம்பிச்சிடுறாங்க.

கவுன்சிலிங் தேவைதான். அது காதலர்களுக்கு இல்ல. காவல்துறைக்கு.

பொதுமக்களிடம் மரியாதை குறைவாக பேசாமல்; வர்க்க வேறுபாடு, ஜாதி வேறுபாடு இல்லாமல்; சட்டப்படியும் நியாயப்படியும் எப்படி வேலை பார்ப்பது, அப்படின்னு.

*

துல, சமூக பொறுப்புள்ள கோபக்கார அந்த டைரக்டர்கள் மட்டும் இல்லிங்க… ஹாலிவுட்ல இருந்து Steven Spielbergக கூட கூட்டி வரட்டும். அதனால என்ன பிரயோஜனம்?

பொண்ணு நம்ம பக்கம் இல்லியே?

பெத்தமகளே அப்பனுக்கும் ஆதரவா இல்லாபோது, இதுல மத்தவங்க ஆதரவுதான் ரொம்ப முக்கியமோ?

*

உரிய வயது வந்த காதலர்கள் சேர்ந்து வாழவோ, பிரிந்து போகவோ முடிவெடுத்தால், அவர்களை கட்டாயப்படுத்தி பிரித்து வைக்கவோ, சேர்ந்தே வாழ வேண்டும் என்று தொல்லை செய்யவோ பொற்றோர்களுக்கே உரிமையில்லை.

ஆனால், அவர்களை பிரித்து சட்டத்திற்கு புறம்பாக, நியாயத்திற்கு எதிராக அதில் தீவிரமாக பஞ்சாயத்து பேசுகிற அநாகரீகமாக கருத்துச் சொல்கிற ‘கந்தசாமி’கள் மற்றும் ‘கண்ணமா’க்களின் தொல்லை தாங்க முடியில.

அதிலும் கூடுதல் கொடுமை;  ‘அது அவரின் தனிப்பட்ட பிரச்சினை அதில் கருத்துச் சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை’ என்று கறாரா கருத்துவேறு சொல்கிறார்கள்.

அடப்பாவிகளா, அதை நாங்க சொல்லணும்.

அடுத்தவன் வசனத்தை பேசுறத இங்க குட் பெர்பாமென்ஸா அங்கிகரிக்கப்படுகிறது.

தொடர்புடையவை:

காதல்: ஆச்சாரமான அப்பாக்களும் தமிழ்த் தேசிய தந்தைகளும்

காதல் – ‘ஜாதியை’ ஒழிக்காது!

இளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா?

‘நாய் நக்கித்தான் குடிக்கும்’ – அப்போ சிங்கம் என்ன சொம்புல மொண்டா குடிக்கும்?

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

8 Responses to காதலுக்கு ‘ஆதரவானவர்’களையும் அம்பலப்படுத்துகிறது காதல்

 1. தோழர்வலிப்போக்கன் சொல்கிறார்:

  கவுன்சிலிங் தேவைதான். அது காதலர்களுக்கு இல்ல. காவல்துறைக்கு.

  பொதுமக்களிடம் மரியாதை குறைவாக பேசாமல்; வர்க்க வேறுபாடு, ஜாதி வேறுபாடு இல்லாமல்; சட்டப்படியும் நியாயப்படியும் எப்படி வேலை பார்ப்பது, அப்படின்னு.

 2. Duraicool சொல்கிறார்:

  நன்று. நல்ல பதிவு.அது என்ன “நீக்கமற நிறைநதிருக்கும் பரம்பொருளைப்போல்”??????

 3. நிரஞ்சன் தம்பி சொல்கிறார்:

  காதலை கண்மூடித்தனமாக எதிர்க்கும் பெற்றோர்களும், சமூகமும், அரசியல் சக்திகளும் ஒன்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் நீங்கள் ஆயிரம் காரணங்கள் கூறினாலும் அவை நியாயமானதோ, அநியாயமானதோ இந்திய சட்டத்தை மீறி காதலர்கள் ஒன்றும் அக்கிரமம் செய்துவிடவில்லை. 18 வயது நிரம்பிய பெண் ஒருத்தி 21 வயது நிரம்பிய ஆணை ஒருவனை எவ்வித சாதி, சமயம், மொழி, பொருளாதார வேறுபாடுகளைக் கருதாமல் மனப் பூர்வமாக மணந்து வாழ இந்திய சட்டம் வழி வகுத்துள்ளது.

 4. சம்பூகன் சொல்கிறார்:

  மிக நல்ல பதிவு.சினிமாக்காரர்களை இந்த அளவுக்குக் கொண்டாடுகிற ஒரு சமூகம் ஒருபோதும் உருப்படாது.தன் வாழ்க்கைக்கான எதையும் சினிமா மூலமே தெரிந்துகொள்ள விழையும் சமூகம் அதன் ஒப்பனைகளையும் உண்மை என நம்புகிறது.இதில்தான் கடந்த 40 ஆண்டுகால தமிழகம் சிக்கிச் சீரழிந்துவருகிறது.ஒரு காமராசரை மீண்டும் நாம் பெறமுடியாமல் போனதற்குக் காரணமும் இதுதான்.வெட்கம்…வெட்கம்…

 5. Vijay Gopalswami சொல்கிறார்:

  தோழர் இல. வேந்தன் அவர்களின் முகநூல் நிலைத்தகல். பொருத்தமாகத் தோன்றியதால் இங்கே பதிகிறேன்:

  காதலுக்கு நாங்கள் எதிரியில்ல. ஆனால் இருவரில் யாராவது ஒருவருக்கு பொருளாதார விடுதலை வேண்டும். நல்ல வேலை கிடைத்ததற்கு பிறகு திருமணம் செய்து கொள் என்று சொல்வது தப்பா? – இயக்குனர் கரு.பழனியப்பன்.

  ######

  இப்ப சமூக யதார்த்தத்த பதார்த்தமாக பேசக்கூடிய நீங்க எடுக்குற படத்துல மட்டும், பொறுக்கி, ரௌவுடி, குடிகாரனை நல்லவனா காட்டுவீங்க. ரௌவுடிகள் கதாநாயகர்கள் என்ற கருத்தை நீங்க சமூகத்தை விதைப்பீங்க.. ஆனா உங்களுக்கு வந்தா தான் சமூக யதார்த்தம் குறுக்கே நிக்குதோ?

  பழைய படங்களில் கதாநாயகர்கள் என்றால் அறம் சார்ந்து ஒழுக்கத்துடன் இருப்பவர்களை தான் உருவகப்படுத்துவார்கள். ஆனால் இன்று சிகரெட் புகையை ஊதுவது, தண்ணியடிச்சு குத்தாட்டம் போடுபவர்கள், அப்பாக்களை ஏளனமாக கேளிசெய்பவர்கள் தான் கதாநாயகர்கள். (ஒரு வேளை சந்துரு ஒழுக்கங்கெட்டவனாகவே இருந்தாலும்) நீங்க உருவகப்படுத்திய கதாநாயக இலக்கணத்துக்கு உங்கள் வீட்டு பெண்ணே பலியாகிறார் என்று தான் அர்த்தம்.

  பருத்திவீரன் படத்தின் கதாநாயகனை கதாநாயகி எப்படி எல்லாம் உருக உருக காதலிப்பார்…

  ஆனால் படத்தில் அவன் கதாநாயகன் !நிஜத்தில் இவன் பொறுக்கி! என்னங்கய்யா உங்க லாஜிக்.

 6. Pingback: ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ – காமெடி கலகம் | வே.மதிமாறன்

 7. அப்துல் பாஷித் சொல்கிறார்:

  வெவேறு ஜாதியினர் சேர்ந்து வாழலாம் ஆனால் வெவேறு மதத்தவர்கள் எப்படி ஒன்றாக திருமணம் செய்து வாழ்வது ???
  சாத்தியமேயில்லை. இஸ்லாமில் இதற்க்காத்தான் காதல் திருமணத்துக்கு முழு அங்கீகாரம் கிடையாது.
  பெற்றவர்களுக்கு தெரியாதா தகுந்த மணமகனை தேர்ந்தெடுக்க ………

 8. Pingback: ..காதல் உணர்வல்ல.. வர்க்க உணர்வு! | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s