தமிழனத் துரோகி.. ஜாதி வெறியன்..

????????????????????????????????????????

தமிழனத் துரோகி, ஜாதி வெறியன் இவர்களில் யாரை முதன்மையாக எதிர்க்கவேண்டும்.?

எம். முருகன்

இரண்டும் கலந்தவைகளாகத்தான் இருக்கிறார்கள் பலரும்.

ஆனால் சரியாக ஒன்றை மட்டும் சொல்ல வேண்டுமென்றால், சந்தேகமே இல்லாமல் ஜாதிவெறியனைதான்.

தமிழனத் துரோகியாக இருக்கிற ஒருவன்; தன் ஜாதிக்காரனாக இருந்தால் ஆதரிப்பதும் அல்லது விமர்ச்சிக்க மறுப்பதும் இங்கு தமிழ் உணர்வாக குவிந்து கிடக்கிறது.

அதனால்தான்,விடுதலைப் புலிகளை தீவிரமாக ஆதரிக்கிற தலைவர்களின் ஆதரவாளர்களே, ‘நீ யோக்கியமா?’ அவரு யோக்கியமா? ‘இவரு மட்டும் என்ன பண்ணாரு?’ ‘உன் தலைவன் யோக்கியதை தெரியாதா’ ‘எவன்டா யோக்கியம்?’ என்று தெருச் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

2009 ஆம் ஆண்டு தமிழர்கள் குவியலாக கொல்லப்பட்டபோது, ‘யாருக்கு விடுதலைப் புலிகளிடம் அதிக உரிமை’ என்கிற பாணியில் நடந்த வார்த்தை வீச்சுகளையும் பச்சைத் துரோகங்களையும், பல்லாயிரம் தமிழர்களை பலிக் கொடுத்து உணர்ந்தோம்.

‘தமிழன்’ என்கிற உணர்வை ஜாதி உணர்வே தீர்மானிப்பதால்தான், இந்திய தேசியத்திற்காகவே தன் காலம் முழுவதும் வாழ்ந்த தலைவர்களைப் பற்றிய சின்ன விமர்சனம்கூட இல்லாமல், எந்தக் குற்ற உணர்வுமற்று அவர்களை ஒப்பற்றத் தலைவர்களாக கொண்டாடுகிற குற்றத்தைச் செய்கிறார்கள்.

ஜாதி வெறியே தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரி. தமிழனத் துரோகிகளுக்கு நண்பன்.

தொடர்புடையவை:

பெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்!

‘ஜாதி உணர்வை தன் ஜாதிக்காரனிடமும், தமிழ் உணர்வை அடுத்த ஜாதிக்காரனிடமும் ஊட்டு’

தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

2 Responses to தமிழனத் துரோகி.. ஜாதி வெறியன்..

  1. Sridhar Kannan சொல்கிறார்:

    இந்த் சினிமாகாரர்களின் உண்மை காதலைப்பற்றியும் எழுதுங்க தலைவரே…. நீங்க சர்டிபிகேட் கொடுத்த ராஜ்குமார் என்னமா எழுதுரான்,,, உங்க புத்தகத்த படத்தில் காட்டிய பழம் என்னமா காதலை எதிர்க்கிறான். 🙂

  2. Pingback: சத்தியமா நான் தமிழனே இல்லிங்க.. | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s