Monthly Archives: ஓகஸ்ட் 2013

‘இந்தி’ தலைப்பில் தமிழ் உணர்வாளரின் तमिल सिनेमा; காதல் Vs காமம் = கள்ளக்காதல்

ராம்-राम-Ram ன் அடுத்த படம் ‘தரமணி’ என்று (30-8-2013) நாளிதழில் விளம்பரம் வந்திருக்கிறது. அதில் இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரு புதுமை நடந்திருக்கிறது. தமிழ் ‘இந்தி’ ஆங்கிலம் மூன்று மொழிகளில் ‘தரமணி’ என்று அறிவித்திருக்கிறார்கள்.தமிழ் உணர்வு அதிகமானால் இப்படியெல்லாம் ஆகுமோ? ஒரு வேளை, தரமணி ரயில் நிலையத்தில் நடைபெறும் காதல் கதையோ? … Continue reading

Posted in கட்டுரைகள் | 17 பின்னூட்டங்கள்

‘தங்கமீன்கள் சினிமா பற்றி எழுத வேண்டும்’; எதுக்கு எழுதணும்?

‘மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று’- இந்த அபத்தமான வரிகள் தான் தங்கமீன்கள் படத்தை பார்ப்பதற்கு  பரிந்துரைக்கப்பட்ட வாக்கியம். அப்படியானால், ‘மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று’- இப்படியும் சொல்லாம். மகள்களை பெறாதா அப்பாக்களும், மகன்களை பெறாதா அம்மாக்களும், குழந்தையே இல்லாத … Continue reading

Posted in கட்டுரைகள் | 15 பின்னூட்டங்கள்

தியாகராஜ சுவாமிகள் சக்கிலியராகவோ, நாயுடுவாகவோ இருந்திருந்தால்…?

this program sponsored by ‘இசைமேதை’ கருப்பையா   ‘சாஸ்திரிகள்’-( போட்டுக்கலாம்னு  ஆசைதான்  கடைசிவரை முடியலையே) பூணூல் போட்டவா யாரும் மேளம் அடிக்க மாட்டா, மேளம் அடிக்கிறவா யாரும் பூணூல் போட மாட்டா, அதனாலேயே தோளில் துண்டும் போட விட மாட்டா  * கருநாடக இசைக்கு மொழியில்லை ஜாதி இருக்கிறது அதுதான் சுருதி சேர்க்கிறது லயமாகவும் பின் தொடர்கிறது … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 13 பின்னூட்டங்கள்

பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) உடல் தானமும் இஸ்லாமியர்களின் மதஉணர்வும்

சென்னை குளோபல் மருத்துவமனையில் 26-07-2013 அன்று முதல் சிகிச்சை முடிந்து, ‘நான் குணமாகிவிட்டேன்’ என்று மகிழ்ச்சியோடு பேராசிரியர் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டபோது, அவருடன் நான். செல்போனில் படம் எடுத்தது அவரின் மகன் சுரதா. * பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களின் மரணத்தை ஒட்டி அவர் உடல் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைப்பது என்ற அவரின் குடும்பத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், … Continue reading

Posted in பதிவுகள் | 58 பின்னூட்டங்கள்

‘கமலுக்கு வந்தா ரத்தம், விஜய்க்கு வந்தா தக்காளி சட்னி’; இது ‘ஞாநி’ யின் கருத்தல்ல

இஸ்லாமியர் எதிர்ப்பு படமான கமலின் விஸ்வரூபத்திற்கு கண்டனம் தெரிவித்த இஸ்லாமியர்களை அதிமுகவின் அடியாளாகவும், கமலின் மதவாததிற்கு எதிரான போராட்டம் ஜனநாயகத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது என்றும், தமிழக அரசை கண்டித்தும் போர்க்குரல் எழுப்பிய கருத்து சுதந்திர ‘ஞாநி’ கள் ‘தலைவா’ படத்திற்கு ஏற்பட்ட ‘தலைவிதி’ யை மாற்ற சொல்லி கருத்து சொல்லியிருக்கிறார்களா?  கமல் ‘நான் நாட்டை … Continue reading

Posted in கட்டுரைகள் | 13 பின்னூட்டங்கள்

மலர்ந்தும் மலராத ‘பாசமலர்’

‘மலர்ந்தும் மலராத… பாதிமலர் போல..’ கேட்பவர்களுக்கு சிறகு முளைக்க வைக்கும் அதிசியப் பாடல். நூற்றாண்டின் உன்னதங்களில் ஒன்று. விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இந்தப் பாடலை தன்னால் முடிந்தவரை  இசை கெடாமல், கண்ணிரும் – குழந்தையின் சிரிப்புமாக படமாக்கியிருப்பார் பீம்சிங். சிவாஜிக்கு பின்னால் இருக்கும் புத்தர் சிலை இந்தப் பாடல் தரும் மன நிறைவையும் சோகமான சூழலிலும் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 2 பின்னூட்டங்கள்

காதலுக்கு ‘ஆதரவானவர்’களையும் அம்பலப்படுத்துகிறது காதல்

16 வயதுகூட நிரம்பாத சிறுமியை கதாநாயகியாக ஆடை குறைத்து, கிழவர்களுக்கு ஜோடியாகவும் அதைவிட மோசமாக கவர்ச்சி உடையில் பாலியல் பொருளாகவும் காட்டுகிறவர்கள் சொல்கிறார்கள்: “அந்தப் பொண்ணுக்கு 20 வயது. அதுக்கு என்ன விவரம் தெரியும்? பெத்தவனுக்கு இல்லாத அக்கறையா?” * தன்னுடைய தந்தை மேல் காவல்துறையில் புகார் கொடுக்கக் கூடிய அளவிற்கு ஒரு பெண்ணிற்கு தைரியம் … Continue reading

Posted in பதிவுகள் | 8 பின்னூட்டங்கள்