மனோரமா-ஸ்ரீதேவி: இவர்களுக்கு இணையாக ஆண்-பெண் இருபாலர்களிலும் நடிக்க ஆள் இல்லை

manoramaதிரைப்பட நடிகர்களைப் பற்றி அதிகம் சொல்கிறீர்கள். நடிகைகளைப் பற்றி ஒன்றுமே சொல்வதில்லையே?

-சி.பாக்யலட்சுமி, சென்னை.

சொல்லியிருக்கிறேன். மீண்டும் அதை அழுத்தத்தோடு சொல்வதற்கான வாய்ப்பாக உங்கள் கேள்வியை பயன்படுத்திக் கொள்கிறேன். மனோரமா, ஒட்டுமொத்த நடிகர்களின் திறமையையும் ஊதி தள்ளிய நடிகை. உலகத் தரம் வாய்ந்த ஒரே இந்திய நடிகை.

ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டில் போன்ற இந்தியாவின் சிறந்த நடிகைகளை விடவும் சிறந்த நடிகை. இந்த இருவரிடமும் மேற்கத்திய நடிகர்களின் தாக்கம் அல்லது மேற்கத்திய மேனரிசங்கள் நிறைந்திருக்கும். திறமை வாய்ந்த இயக்குநர்கள் மூலம் தங்கள் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியவர்கள்.

ஆனால் மனோரமா ஒரு சுயம்பு. மிக மட்டமான இயக்குநர்களிடமும், கதாநாயகி அந்தஸ்த்தில் இல்லாதபோதும் தனக்கு வழங்கப்பட்ட குறைந்த வாய்ப்பில் நிறைவாக செய்தவர். மொழியை அவர் பயன்படுத்திய லாவகம், அவரின் உடல் மொழி, முழுக்க முழுக்க சுயமான ஒரு தமிழ் அடையாளம்.

அதுபோல் கதாநாயகிகளில் ஸ்ரீதேவி. எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதிலும் கைதேர்ந்த முழுமையான நடிகை.

திறமையான கதாநாயகர்கள் கூட ஸ்ரீதேவியுடன் நடிக்கும் போது நிறைய குறைபாடுகள் உள்ளவர்களாக தெரிவார்கள். குறிப்பாக கமல்ஹாசன்; ஸ்ரீதேவியின் முன் அவரின் நடிப்புத் திறமை, திக்கித் திணறுவதும் (சிப்பி இருக்குது.. முத்து இருக்குது.. பாடல் காட்சி) – ஸ்ரீதேவியின் நடன நளினத்தின் முன் கதாநாயக அந்தஸ்தோடு கமல் ஆடுகிற நடனம்,  ஒரு கோமாளி கூத்தைப்போல் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை. (வாழ்வே மாயம் படத்தில் “தேவி.. ஸ்ரீதேவி..” “மழைக்கால மேகமொன்று..” பாடல் காட்சி)

‘மூன்றாம் பிறை’ படத்திற்கு ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது கிடைக்காமல், கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் விருது  கிடைத்தது. இது சிவாஜிக்கு  சிறந்த நடிகர் விருது தராமல், ரிக்ஷாக்காரன் திரைப்படத்தில் ‘சிறப்பாக நடித்ததற்காக’ எம்.ஜி.ஆருக்கு தேசிய விருது தந்தது போன்ற தமாசு.

Sridevi

வழக்குரைஞர் கு. காமராஜ் நடத்திய ‘சமூக விழிப்புணர்வு’2007 செப்டம்பர்   மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து…

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

உன்னதம்: இளையராஜா-மகேந்திரன்-ஸ்ரீதேவி-ரஜினி

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

தமிழ் சினிமாவின் முதல் நவீன நடிகர்

World War Z; ஹாலிவுட்டின் உன்னதமும் சீரழிவும் அமெரிக்க மூடத்தனமும்

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

7 Responses to மனோரமா-ஸ்ரீதேவி: இவர்களுக்கு இணையாக ஆண்-பெண் இருபாலர்களிலும் நடிக்க ஆள் இல்லை

  1. duraicool சொல்கிறார்:

    மனோரமா பார்ப்பனர் இல்லையோ?

  2. Pingback: உன்னதம்: இளையராஜா-மகேந்திரன்-ஸ்ரீதேவி-ரஜினி | வே.மதிமாறன்

  3. Pingback: ராஜபார்ட் ரங்கதுரையை மற்ற கழிசடைகளோடு.. | வே.மதிமாறன்

  4. Pingback: மனோரமா-சிவாஜி ஒப்பீடல்ல.. | வே.மதிமாறன்

  5. Pingback: ‘தகுதி’யற்ற விமர்சகர்களும்; ஷோபாவும் சுஹாசினியும் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s