தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் தமிழ் வளர்த்து ஜாதி காத்தார்

Daugherty_17b

சுவடிகள் இணைக்கப்பட்டது  ‘நூலால்’. எந்த நூல்? அதாங்க அந்த ‘நூல்’தான்

*

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் பரிமள ராசன் தனது  facebook ல்  ஜூலை 4 ம் தேதி தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் தமிழ் மரபு பற்றி குறிப்பிட்டு இருந்ததை விவாதத்திற்காக வெளியிட்டிருந்தார். அதையும் அதில் நான் எழுதியதையும் சேர்த்து வெளியிடுகிறேன்.

பரிமள ராசன் :

‘தமிழ் மரபு’ குறித்து தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் கூறுகிறார்,
‘ஏழை வேலைக்காரனிடம், “சோறு தின்றாயா?” என்று கேட்பது மரபு.
கனவானிடம் இப்படிக் கேட்பது மரபன்று.
“போஜனம் ஆயிற்றா? நிவேதனம் ஆயிற்றா?” என்பதுதான் தமிழ் மரபு.’

வே. மதிமாறன் :

சோறு தமிழ்ச் சொல். இன்னும் சரியாக சொன்னால் உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்ட மிக பிற்படுத்தப்பட்ட மக்களின் சொல். அவர்கள் சாதம் என்கிற சொல்லை பயன்படுத்த மாட்டார்கள்.
சாதம்,  பிரசாதம் என்பதின் தொடர்ச்சி. அதுவேதான் போஜனம். இவைகள் எல்லாம் சமஸ்கிருதம்.

தமிழ் அல்லாத இந்த வார்த்தைகளை பார்ப்பனர்களும் பார்ப்பன மனோபாவத்தில் இருக்கிற பிள்ளைமார்களும் முதலியார்களும் செட்டியார்களும்தான் பயன்படுத்தவர். இவர்கள் தங்கள் வீடுகளில் ‘சோறு’ என்று சொல்ல மாட்டார்கள். ‘சாதம்’ என்றே சொல்வார்கள்.

//கனவானிடம் இப்படிக் கேட்பது மரபன்று.// என்று தாத்தா குறிப்பிடுகிற கனவான்கள் பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிக்காரர்கைளயும்தான்.
//‘ஏழை வேலைக்காரனிடம், “சோறு தின்றாயா?” என்று கேட்பது மரபு.// ஏழை வேலைக்காரர்கள் என்பது தாழ்த்தப்பட்ட மக்கள்.

தாத்தா ஜாதி வேறுபாடுடன் மட்டுமல்ல வர்க்க வேறுபாடுடனும் தமிழ் சேவை செய்திருக்கிறார்.

ஆனால் பொதுவாகவே மலையாளிகள் ‘சோறு’ என்கிற தமிழ்ச் சொல்லே பயன்படுத்துகிறார்கள்.  ‘ஊண்’ என்கிற தனித் தமிழ்ச் சொல்லை முதன்மை படுத்தி ‘சாப்பிட்டாச்சா’ என்பதை ‘ஊணு கழிஞ்சோ’ என்று பேசுகிற முறையும் மலையாளிகளிடம் இருக்கிறது.

ஆனால் ‘தமிழர்கள்’ என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள்தான், “போஜனம் ஆயிற்றா?” என்கிற தமிழ் விரோத மொழியான சமஸ்கிருதத்தை பயன்படுத்துவதையே  ‘தமிழ் மரபு’ என்கிறார்கள்.

அது மட்டுமல்ல உ.வே.சா. தன்னிடம் தமிழ் படிக்க வந்த ஒரு பார்ப்பனரல்லாவருக்கு ஜாதியின் காரணமாக தமிழ் சொல்லித் தர மறுத்தார். ஆனால் அவர் மட்டும் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் படித்தார்.

அது பற்றி வ.உ.சி என்று நினைக்கிறேன், ‘நீங்க மட்டும் பார்பனரல்லாதவரிடம் தமிழ் படிக்கலாமா?’ என்று கேட்டார்.

சுதந்திரப் போரட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு ராஜ துரோகியாக, அரசு விரோதியாக வ.உ.சி கடும் சிறையில் இருந்தபோது திருக்குறளின் அறத்துப்பாலுக்கு உரை எழுதினார். அதில் ஏற்பட்ட சந்தேகத்தை கேட்பதற்காக அவர் உ.வே.சா விற்கு ஒரு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தை உ.வே.சா வெள்ளைக்கார கவர்னரிடம் கொண்டு போய் கொடுத்து ‘நான் இதற்கு என்ன செய்வது?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த கவர்னர் ‘பதில் எழுதுங்கள்’ என்று சொன்ன பிறகே பதில் எழுதினார்.

தாத்தா எவ்வளவு உஷார்..?

தொடர்புடையவை:

 பெண்ணியவாதிகளின் பெரியார் எதிர்ப்பு

சென்னை தமிழா.. பார்ப்பனத் தமிழா; எது இழிவானது அல்லது உயர்வானது?

நாறும் தமிழ் மூச்சும் மணக்கும் சமஸ்கிருத‘வாயு’த் தொல்லையும்’ இதுதான் ஞானக்கூத்து!

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

16 Responses to தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் தமிழ் வளர்த்து ஜாதி காத்தார்

 1. காமக்கிழத்தன் சொல்கிறார்:

  உண்மையிலேயே இன்று ஜாதிப்பற்று இல்லாதவர்கள் எத்தனை பேர்? உ.வே சா. வாழ்ந்த காலத்தை மனதில் இருத்துங்கள்.

  கவர்னரிடம் அனுமதி கேட்டதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? மேலதிகாரிகளிடம் பணிந்து போகும் குணம் மற்ற ஜாதிக்காரர்களைவிட பிராமணர்களுக்குச் சற்றுக் கூடுதல். அவ்வளவுதான்.

  குறிப்பிட்ட சில குறைகளை வைத்து உ.வே சா.வை எடை போடுவது சரியல்ல என்பதே என் கருத்து.

  தமிழின் மீதிருந்த அளவு கடந்த ஆர்வம் காரணமாக, “சமஸ்கிருதம் படி” என்ற பெற்றோரின் கட்டளையைக்கூட அலட்சியம் செய்தவர் உ.வே சா. பட்டிதொட்டியெல்லாம் அலைந்து திரிந்து, எத்தனையோ இடர்ப்பாடுகளைக் கடந்து, கரையான் அரித்துத் தின்றது போக எஞ்சிய பல நல்ல தமிழ் நூல்களை அச்சேற்றிய அவரது தொண்டு மறக்கக் கூடியதா என்ன?

  நீங்கள் சொல்வது போல,தாத்தா ‘உஷார்’ பேர்வழியாக இருக்கலாம். அதே நேரத்தில், தமிழுக்காகத் தன் சுகபோகங்களைத் தியாகம் செய்த பிழைக்கத் தெரியாத ‘அப்பாவி’ என்பதையும் மறந்துவிடக் கூடாது.

  தயவு செய்து, வாழ்ந்து மறைந்த பெரியவர்களைக் குறை கூறுவதற்கு முன்னால் அவர்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது அவசியத் தேவையாகும்.

  இவை, தங்களின் பரிசீலனைக்காக முன் வைத்த கருத்துகளே தவிர, தங்களோடு விவாதம் புரிய நான் தயாராயில்லை.

  நன்றி.

 2. வே. மதிமாறன் சொல்கிறார்:

  நல்லது.
  நானும் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் ஓலைச்சுவடிகளை கண்டுபிடிக்கவில்லை.தமிழுக்கு எதுவும் செய்யவில்லை என்று சொல்லவில்லை.

 3. Heyilston சொல்கிறார்:

  தோழர். மதிமாறன் அவர்களுக்கு
  பதிவில் கோபம் கொப்பளிக்குதே தவிர ஆழமாக இல்லை. உங்கள் எழுத்தின் விசிறி என்ற முறையில் உங்கள் அனைத்து பதிவுகளையும் நான் படிப்பதுண்டு. ஆனால் சமீபகாலமாக தாங்கள் எழுதும் பதிவுகள் ரொம்ப சுருக்கமாகவும், ஆழமாக ஆராயாமல் வெறும் உணர்ச்சிகளை மட்டும் வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் ஏனோதானோவென்று இருக்கிறது. பதிவுகள் ஆழமாக இருக்கவேண்டியதில்லை – உடனடியான எதிர்வினை தான் தேவை என்ற கருத்து காரணமாகவா? சுரா வின் புகைப்படக்கண்காட்சி பற்றிய தங்கள் கட்டுரை மற்றும் பாரதி ஜனதா பார்ட்டியின் செறிவுதான் இன்றைக்கும் என்னை தங்கள் வாசகனாக தக்கவைத்துள்ளது. ஆனால் சமீபத்தில் தாங்கள் காலச்சுவடில் பிஏ கிருஷ்ணன் எழுதிய கட்டுரைக்கு ஆற்றிய எதிர்வினை எனக்கு ஆயாசத்தையே கொடுத்தது. இன்றைக்கு பெரியாரிய சிந்தனையில் ஊன்றிநின்று பார்ப்பனியத்தை எதிர்க்கும் துணிச்சல் மிக்க அதே நேரத்தில் சரியாக பகுப்பாயும் திறமையுள்ள தோழர்கள் மிக அரிதாகிக்கொண்டிருக்கும் சூழலில் தாங்களே எங்களைப் போன்றவர்களின் நம்பிக்கை. ‘பழத்திற்குள் ஊசி இறக்குவது போல’ பெரியாரையும் அவரது போர்க்குணமிக்க பொருள்முதல்வாதக் கருத்துக்களையும் கரிதேய்ப்பதன் மூலம் பார்ப்பானையும் பார்ப்பனக் கருத்தியலையும் நாசூக்காக நியாயப்படுத்துவதை காலச்சுவடும், பிஏ கிருஷ்ணனும், ரவிக்குமார் வகையறாக்களும் அறிவுத்தளத்தில் செய்கின்றனர். இதற்கு தெரிந்தோ தெரியாமலோ முற்போக்கு பேசும் நமது தோழர்களும் பலியாகியுள்ளனர் என்பதற்கு பிஏகிருஷ்ணனின் கட்டுரைக்கு உதவியவர்களின் பட்டியலே சாட்சி. போர்க்குணமிக்க பொருள்முதல்வாதம் இயங்கியலை தன்னகத்தே கொள்ளாமல் இருப்பதாலேயே அது எதிர்க்கப்பட வேண்டியதாக – விமர்சனத்துக்குரியாக தன்னளவில் சிலர் புரிந்து கொண்டிருக்கின்றனர். இதனாலேயே, பெரியாரும் அவரது போராட்ட வடிவங்களும் இன்று புரட்சியை நேசிக்கும் சக்திகள் பலராலும் குறைத்து மதிப்பிடப்படுவதும், கேலி செய்யப்படுவதும் சர்வசாதரணமாகி விட்டது. ஆனால் போர்க்குணமிக்க பொருள்முதல்வாதிகள் மற்றும் அவர்களின் போராட்டவடிவங்களை எந்த ஒரு புரட்சிகரசக்தியும் கைக்கொள்ள வேண்டியதன் தற்கால தேவையை லெனின் உணர்த்தியிருக்கிறார். இதை சரியாக புரிந்துகொள்ளாததாலே இன்றைய தலைமுறை பார்ப்பனிய எதிர்ப்பை விட பெரியார் துவேஷமே தலையாய கடைமையாக நினைக்கிறது. இத்தகைய சிந்தனைப்போக்கால் பிஏ கிருஷ்ணன் – காலச்சுவடு கும்பலின் சூழ்ச்சிக்கு எளிதாகப் பலியாகிறது. இத்தகையொருடன் கருத்துப்போராட்டம் நடத்தும் உங்களைப் போன்ற பெரியாரியவாதிகள் மேம்போக்காகவும், ஏனோதானோவென்றும் பதிலளிப்பதன் மூலம் “நான் என் எதிர்ப்பை பதிவு செய்துவிட்டேன்; என் கடமை முடிந்தது” என்று வாளாயிருப்பது எமக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அறிவுத்தளத்தில் உங்களது பங்களிப்பு (மிதவாத வேடமணிந்த) பார்ப்பனிய சக்திகளை கருவறுப்பதுடன், புரட்சிகர அணிகளுக்குள் கருத்துத் தளத்தில் ஊடுருவியிருக்கும் (பார்ப்பனிய ஆதரவு) சந்தர்ப்பவாதத்திற்கு எதிராகவும்கூர்மையுடனும் போர்க்குணத்துடனும் இருக்க வேண்டும் என்பதே எம்போன்றவர்களின் அவா. இன்றைய சமூகத் தேவைகளைக் கணக்கிலெடுத்து தங்கள் எழுத்தை ஆழமாகவும் கூராகவும் தீட்ட வேண்டுகோள் விடுக்கிறேன்.
  தோழமையுடன்
  எயில்ஸ்டன்

 4. வே. மதிமாறன் சொல்கிறார்:

  தோழர் எயில்ஸ்டன் நன்றி.
  உங்கள் கருத்தை கணக்கில் எடுத்துக் கொள்கிறேன். பின்னூட்டம் இந்தக் கட்டுரைக்கு மாறி வந்திருக்கிறது

 5. unmai சொல்கிறார்:

  Bharathi waste, UVESA worst… you are the best. Tks a lot.

 6. வே. மதிமாறன் சொல்கிறார்:

  unmai இப்படி பொய் சொல்லலாமா?

  டாக்டர் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் இன்னும் எவ்வளவோ தலைவர்களை ஆதரித்து எழுதியிருக்கிறேன்.
  அவர்களெல்லாம் பாரதி, உ.வே.சா. அளவிற்கு திறமைசாலிகளோ புரட்சியாளர்களோ இல்லை என்பதால் நீங்கள் அவர்களோடு என்னையும் சேர்த்து புறக்கணிக்கிறீர்களோ?

 7. Govindaraju Kannan சொல்கிறார்:

  //ஆனால் ‘தமிழர்கள்’ என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள்தான், “போஜனம் ஆயிற்றா?” என்கிற தமிழ் விரோத மொழியான சமஸ்கிருதத்தை பயன்படுத்துவதையே ‘தமிழ் மரபு’ என்கிறார்கள்.//

  1930 வாக்கில் தமிழில் கலந்த சொற்களில் எது தமிழ் எது வடமொழி என்றே அறிய முடியாத அளவுக்கு எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் கலந்திருந்தது, கால்டுவெல்லின் திராவிட மொழியின் ஆய்வுக் குறிப்புடன் தனித்தமிழ் ஆர்வலர்கள் இன்ன இன்ன வடசொற்கள் இன்ன இன்ன தமிழ் சொற்கள் என்று பல கட்டுரைகளை எழுதி அவற்றை நாளிதழ்களிலும் எழுதி (அப்போ பத்திரிக்கா / பத்திரிக்கை என்று தான் சொல்லுவார்கள்), நடைமுறைக்கு கொண்டு வந்தபிறகு தான் தமிழ் ஓரளவு பண்பட்டது, பெரியாரின் பேச்சிலும் / எழுத்திலும் அவர் வாழ்ந்த காலத்து கொடுந்தமிழ்தான் இருந்தது எனவே அவற்றில் பல வடமொழிச் சொற்களைக் காணலாம்.

  ஒருவேளை உவேசாவிற்கு சோறா / சாதமா ? எது தமிழ் சொல் என்ற அறியாமையில் அவ்வாறு கூறி இருக்கலாம், அவர் வளர்ந்த சமூகம், வாழ்ந்த காலம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் ஓரளவு விளங்கிக் கொள்ள முடியும்.

  குறைச் சொல்வதற்கு மட்டுமே எழுதியமாதிரி உள்ளது உங்கள் கட்டுரை. பார்பனர்களும் நல்ல தமிழ் சொற்களை புழங்கிவந்துள்ளனர், அகத்துகாரர் (ஆத்துக்காரர்), ஆம்படையாள், சாற்றமுது (ரசத்தின் பெயர்), அகம் > அகத்து > ஆத்து, அவர்கள் சுருங்கி அவாள்….இன்னும் நிறைய சொல்லலாம்.

 8. வே. மதிமாறன் சொல்கிறார்:

  நன்றி Govindaraju Kannan
  //பார்பனர்களும் நல்ல தமிழ் சொற்களை புழங்கிவந்துள்ளனர், அகத்துகாரர் (ஆத்துக்காரர்), ஆம்படையாள், சாற்றமுது (ரசத்தின் பெயர்), அகம் > அகத்து > ஆத்து, அவர்கள் சுருங்கி அவாள்….இன்னும் நிறைய சொல்லலாம்.//

  நல்லது. ஆனால் இது ஒட்டுமொத்த தமிழர்கள் வழக்காக இல்லாமல் ஏன் தனி ஜாதி வழக்காக இருக்கிறது? என்று நான் உங்களை கேட்கவில்லை. நேரம் இருக்கும்போது அதைப் பற்றி விளக்குங்கள்.

  தாத்தா உ.வே.சா பற்றி உங்கள் கருத்து மிகத் திறமையானது. ஆனாலும் நீங்கள்
  //பார்ப்பனரல்லாவருக்கு ஜாதியின் காரணமாக தமிழ் சொல்லித் தர மறுத்தார்.// என்பதை பற்றி ஏன் விளக்கம்தர மறந்துவிட்டிர்கள்? ஒருவேளை கவனிக்காமல் விட்டிருப்பீர்கள்.

 9. வே. மதிமாறன் சொல்கிறார்:

  //ஒருவேளை உவேசாவிற்கு சோறா / சாதமா ? எது தமிழ் சொல் என்ற அறியாமையில் அவ்வாறு கூறி இருக்கலாம்.//
  திரு. Govindaraju Kannan //எது தமிழ் சொல் என்ற அறியாமையில்// உ.வே.சா வை இதைவிட மோசமாக அவமானப்படுத்த முடியாது

 10. duraicool சொல்கிறார்:

  இவரையும் விடலையா?

 11. Unmai சொல்கிறார்:

  Mathimaran,
  I like your views. But you a cynic when it comes to Brahmins. Periyar hated Brahminism, not Brahmins. Remove your tinted glass; you can become a valuable Periyarist. Ilayaraja who practises Brahminism more vehemently than Brahmins is a hero for you. But you wouldn’t acknowledge Brahmins who contributed immensely to Tamil and Tamil Nadu. You are letting yourself down. Please don’t think you are a scholar just because you slinging stones at great people. Be truthful.

 12. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  தமிழ் தாத்தா உ .வே.சாமிநாத ஐயர் தமது தமிழ் தொண்டிர்க்காகதான் நமது மனதில் இன்றளவும் நிற்கிறாரே தவிர அவர் சமுதாய புரட்சியாளராக தம்மை நிலைநிறுத்தி கொள்ளவும் முயற்சித்ததும் இல்லை ,அவ்வாறு அறியப்படவும் இல்லை.அப்படி இருக்க அவரை தேவையில்லாமல் இந்த சர்ச்சைக்குள் கொண்டுவருவது முறையல்ல. பின்னலாடை தொழிலுக்கு புகழ்பெற்ற திருப்பூரில் அல்வா சுவையாக இல்லை என்று புலம்புவதுபோல இருக்கிறது தங்களின் புலம்பல்.ஆட்களின் ஜாதி பார்த்து விமர்சிப்பதை விடுத்து உண்மையான சாராம்சம் பார்த்து ஆராய்ந்து கருத்துகளை தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

 13. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  திரு.வே .மதிமாறன் அவர்களே ! ஆரம்ப காலத்தில் உயர்ஜாதி வகுப்பினர் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை புறக்கணித்து சமுதாயத்தில் சாதி அடிப்படையில் ஒரு பிரிவினையை உண்டாக்கி வைத்திருந்தனர்.தற்போது தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையே” நம்மை ஒதுக்கியவர்கள், சாதியை வைத்து அடிமைப்படுத்தியவர்கள் “என உயர் சாதியினரை அடையாளம் காட்டி நீங்கள் உண்டாக்கிவருவதும் ஒரு பிரிவினைதான்.பிரச்னை இடம்மாறி இருக்கிறதே தவிர மக்களுக்கு இடையேயான பிரிவினைவாதம் இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.ஒரு சமுதாய விழிப்பை உண்டாக்குபவன் எனும் விதத்தில் தங்கள் எழுத்துக்களால் பேச்சுக்களால் செயல்களால் நாம் இந்த பிரிவினைவாதத்தை வேரறுத்து மனிதநேயத்தை வளர்ப்பதுதான் சரியான வழிகாட்டு முறையாக இருக்குமே அன்றி மீண்டும் மீண்டும் வேறொரு பாணியில் பிரிவினை வாதத்தை விதைத்துவிடக்குடாது.உயர் சாதியினரின் ஆதிக்க முறையை நீங்கள் சுட்டுகாட்டுவது அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவதர்க்காக எனும் விதத்தில் இருத்தல் நலம்.ஆனால் எப்போதுபார்த்தாலும் உயர் சாதிகாரகளின் தவறுகளை தோண்டி துருவி கண்டுபிடித்து (அவர்களின் பல மேம்பட்ட குணங்கள்,சேவைகள் இருந்தபோதும்) சொல்லிகொண்டிருப்பது ஒரு நல்ல வழிகாட்டுமுறையல்ல. அனைத்து மனிதர்களுமே தவறானவர்கள்தான் என சொல்லி இந்த சமுதாயத்திற்கு நீங்கள் உணர்த்த விரும்புவதென்ன ?நடுநிலை இன்றி வெறும் தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டி இந்த சமுதாயம்முழுவதும் இப்படிதான் இருக்கிறது என சொல்லுவதால் படிக்கும் அனைவருக்கும் அனைவருமே இப்படிதான் எனும்போது நாம் மட்டும் மாறி என்னவாகிவிடப்போகிறது எனும் அவநம்பிக்கையும் ,பார்ப்பவரிடமெல்லாம் தவறு கண்டுபிடித்து ஒதுக்கும் மனப்பான்மையும் பெருகுமே தவிர நல்ல விளைவுகள் ஏதும் ஏற்ப்படபோவதில்லை.உங்களது எழுத்துகளால்,பேச்சுக்களால்,செயல்களால் மக்களிடையே விழிப்புணர்வு வருமானால் அதை நான் வரவேற்க்கிறேன்.அதைவிடுத்து அன்று உயர் சாதிமக்கள் செய்ததை இன்று உங்கள் எழுத்துகள்,பேச்சுகள்,செயல்கள் செய்யுமாயின் என்னை பொறுத்தவரை நீங்களும் அவர்களும் வேறு வேறில்லை.ஒன்றுதான் என்றுதான் கருதவேண்டி இருக்கிறது.தாங்கள் விளைவிக்க வேண்டுவது என்ன என்பதை முடிவுசெய்துவிட்டு காரியத்தில் இறங்குங்கள்.

 14. Pingback: ‘நானும் பெரியாரிஸ்டுதான்..’ | வே.மதிமாறன்

 15. gopalasamy சொல்கிறார்:

  I think, in swanithan’s period, only your family may be exception in practicing caste. What i understand is, all communities are practicing this. Even forty years before, my thevar friend was not allowed to take food in blacksmith’s house by his family members. Only your family and forefathers might be different. that is why this confusion.

 16. மாரிமுத்து சொல்கிறார்:

  //உ.வே.சா. தன்னிடம் தமிழ் படிக்க வந்த ஒரு பார்ப்பனரல்லாவருக்கு ஜாதியின் காரணமாக தமிழ் சொல்லித் தர மறுத்தார்.

  மொழியா? சாதியா? என்றால் சாதிதான் வென்று இருக்கிறது.
  அரிய தகவல் .
  மிக்க நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s