இளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா?

Salesman

இளவரசன் – திவ்யா திருமணம். தர்மபுரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பா.ம.க வன்னிய ஜாதி வெறியர்களின் தாக்குதல்.

அதே கும்பல் மற்றும் நீதிமன்றம், ஊடகங்கள் இளவரசனிடமிருந்து திவ்யாவை திட்டமிட்டு பிரித்தனர். அதன் தொடர்ச்சியாக இளவரசனின் மரணம்.

இவ்வளவு நடந்த பிறகும்கூட இதை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்னிய ஜாதி வெறியர்களின் தாக்குதலாக கண்டிக்காமல்,

‘இது காதலுக்கு ஏற்பட்ட பின்னடைவு’. ‘ஜாதி காதலர்களை பிரித்துவிட்டது’ ‘காதலர்கள் நிம்மதியாகவே வாழ முடியாதா?’ ‘‘திவ்யா இனி என்ன செய்யப் போகிறார்?’ ‘உன்னத காதலின் முடிவு’ என்று சோக ரசம் சொட்டும் சுவாரஸ்யமான காதல் கதையாகவும்,

இளவரசனின் கடிதத்தை வைத்துக்கொண்டு,

‘திவ்யா உனக்கு ஒண்ணு தெரியுமா? நீ என்னோட எல்லா விஷயத்திலும் சேர்ந்திருந்த! ஆனா இப்போ நீ என் கூட இல்ல… ரொம்ப கஷ்டமா இருக்குடா… என்னால உன்னை பிரிந்து வாழ முடியல திவ்யா என்னை மன்னிச்சிடு …’ என்று இளவரசனின் மரணத்தை வெறும் காதலர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையாக திசை திருப்புகிற தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளும், அந்த பத்திரிகையின் செய்தியையே தன் செய்தியாக இணையத்தில் பரப்பி, பத்திரிகை நிர்வாகத்திடம் நல்ல பெயர் பெறத் துடிக்கிற பத்திரிகையாளர்களும்.. ச்சீ என்ன பிழைப்பு இது?

இதை விட மோசமாக,

‘பிராமணர்கள் சிறப்பானவர்கள், இந்து மதம் சிறப்பானது, பகவத் கீதை கருத்தே ஜாதி ஒழிக்க வழி, இது மனுவோ மனுவாதிகளோ (பார்ப்பனர்கள்) செய்த தப்பல்ல. பிராமண ஆழ்வார்களும், நாயன்மார்களும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சேவை செய்தவர்கள்’ என்று எழுதி, ஜூனியர் விகடனில் இன்னும் தொடர்ந்து எழுதுவதற்கு இளவரசன் பிணத்தின் மூலமாக ‘சீட்’  பிடித்து வைக்கும் தமிழருவி மணியன் போன்றவர்களின் இழிவான செயல்,

இவர்களையெல்லாம் பார்க்கும்போது, பா.ம.க.வும், காடுவெட்டி குருவுமே பரவாயில்லை என்று தோன்றுகிறது.

‘உத்தர்காண்ட் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறோம்’ என்ற பெயரில் அங்குள்ள பிணங்களிலிருந்த உடமைகளை கொள்ளையடித்தவர்களுக்கும்

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமையை, வெறும் காதல் பிரச்சினையாக சுருக்கி பிணத்தை வைத்து கல்லா கட்டும் இந்த ஊடகங்களுக்கும், அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம்?

*

ந்தக் கடிதம் இளவரசன் எழுதியதுதானா என்கிற சந்தேகம் இருக்கிறது. அதில் உள்ள கையெழுத்து பெண்ணின் கையெழுத்தைப் போல் இருக்கிறது. அதுபோக அந்தக் கடிதங்கள் சொல்ல வருகிற சாரம் ‘திவ்யா, இளவரசனை மறந்து விட்டார்’ என்பதையே அழுத்தி சொல்கிறது.

கடிதம் போட்ட மூடிச்சுகளே, இளவரசனின் மரணம் பற்றிய மர்மங்களை அவிழ்க்கும். எதிர்பார்க்காத சதிகளை அம்பலப்படுத்தும். விசாரனை நேர்மையாக நடக்குமாயின்.

தொடர்புடையவை:

காதல் – ‘ஜாதியை’ ஒழிக்காது!

வன்கொடுமை தடுப்புச் சட்டமும் பிற்படுத்தப்பட்டவர்களும்

தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?

வன்னியர்: ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

15 Responses to இளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா?

 1. Ragool சொல்கிறார்:

  இதெல்லாம் ரொம்ப அதிகம்யா. வயசு கோளாறுல ரெண்டு நாதாரிக பன்னுன சேட்டைக்கு ஒரு சப்போர்ட் வேற. எதோ லைலா மஜ்னு ரேஞ்சுக்கு பில்டப் பன்றானுகளே. இதுதான் கலிகாலமோ? சங்கராச்சாரியர அழைத்து வந்து யாகம் வளக்கணும்.

 2. Anand சொல்கிறார்:

  கடிதத்தை மறைத்ததாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 3. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  “இவர்களையெல்லாம் பார்க்கும்போது, பா.ம.க.வும், காடுவெட்டி குருவுமே பரவாயில்லை என்று தோன்றுகிறது”.
  சபாஷ்.
  இவர்களின் காதல் பிடிக்காது இவ்விருவரின் பெற்றோர்களும் ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தாலும் பரவாயில்லை.அது பெற்றோர் எனும் எல்லைக்குள் வருவதாக வைத்துகொள்ளலாம்.
  ஆனால் இங்கு திருமணமென்பது,” நான் தனியாளாக நாடாளுவேன்” என குரைத்துகொண்டிருக்கும் ஒருவரின் தனிப்பட்ட விசயமாக ,அவர்பார்த்து முடிவுசெய்யும் விசயமாக ஆனதுதான் கொடுமை.
  ஆனாலும் இந்தவிசயதிலும் தாங்கள் மேல்ஜாதி கீழ்ஜாதி பார்த்து சம்பந்தப்பட்டுரை உயர்த்தி இருப்பது கொடுமையிலும் கொடுமை.
  தாங்கள் எழுதும்போது ஒரு மணிசத்தத்தால் தொந்தரவு வருகிறதென்றால் அதை இடையுறு என்று சொல்லும்முன்னர் அதை அடித்தவன் பார்பானா,பார்ப்பானலாதவனா என பார்த்தபின்பே அதை இடையுறு அல்லது சமுதாய எழுசிர்க்கான ஒலி என தங்களுக்கு தகுந்தாற்ப்போல் விமர்சிப்பீர்கள்.
  உண்மையில் சாதி பார்ப்பதில் பார்பானையும் விஞ்சியவர் நீங்கள்.

 4. Pingback: ஆனந்த விகடன் ஜாதி எக்ஸ்பிரஸ்: சின்ன விளக்கம் பெரிய திருத்தம் | வே.மதிமாறன்

 5. kothandaraman சொல்கிறார்:

  natlla rupiee mathipu 10% koruci nama ellam kadgaran aittu erukum atha pathi kavalla padatha kathala patha kavlapadrigale apparam eppadi inthiya urpadum

 6. raja சொல்கிறார்:

  பா.ம.க மட்டும் இல்லை நாட்டில் இருக்கும் அணைத்து சாத்திய சங்கங்களையும் கட்சிகளையும் களையெடுக்க வேண்டும், அதற்கு இந்த ஓட்டு கட்சிகளையும் அரசாங்கத்தையும் நம்புவது முட்டாள் தனமானது, அனைத்து தரப்பு உழைக்கும் மக்களையும் அணி திரட்டி சாதி வெறிக்கு அடித்தளமாக திகழும் இந்து மத வெறியையும் சாதி வெறியையும் நம் நாட்டை விட்டே விரட்டியடிக்க வேண்டும். அதற்கு புரட்சிகர ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி அவர்கள் தலைமையில் மக்கள் திரள வேண்டும்………………………………..

 7. Pingback: காதல்: ஆச்சாரமான அப்பாக்களும் தமிழ்த் தேசிய தந்தைகளும் | வே.மதிமாறன்

 8. Pingback: காதலுக்கு ‘ஆதரவானவர்’களையும் அம்பலப்படுத்துகிறது காதல் | வே.மதிமாறன்

 9. Pingback: ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ – காமெடி கலகம் | வே.மதிமாறன்

 10. Pingback: தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? | வே.மதிமாறன்

 11. Pingback: ..காதல் உணர்வல்ல.. வர்க்க உணர்வு! | வே.மதிமாறன்

 12. Pingback: ஜாதி வெறி; எவ்வளவு எச்சரிக்கையான வார்த்தை? | வே.மதிமாறன்

 13. Willswords M சொல்கிறார்:

  சாதியே கடவுளப்பா! சரணம் பேத மூத்திரக்
  குழிகட்குள் புரளும் பார்ப்பனீய பன்றி சாதியப்பா!

  காதல்வதம் கவுரவகொலை ஆதரவுவன் கொடுமையாளனுக்கு;
  முதலமைச்சர் வேட்பாளர் கொக்கரிப்பு அடையாளம்!

  தேளாகி நாமம்விபூதி மறைவில் மதமாற்றம் திணிப்போர்கு;
  தலித்பெண் உடலுறவுகற்பை சூறையாடுவது அடையாளம்!

  கற்பழிப்பு நிகழ்ந்தும் கல்பொம்மை கோயிலாய் மெளனம்காப்பது;
  கற்பனை சாதிமூத்திர குழிகூர்மங்கட்கு அடையாளம்!

  நாடுவிட்டு வெளியேறா முதலாம் அன்னியன்வழி பேதவம்சத்தோர்கு;
  குடுமிநூலை அகற்றிடாதிமிர் குற்றப்பேச்சு அடையாளம்!

  சாதி மூத்திர குழிகட்குள் மூச்சுவிடும் மானுட பன்றிகட்கு,
  ஓதுமதம் பேதஓட்டு கூட்டுவேட்டை அடையாளம்!

 14. Pingback: Rohith Vemula | வே.மதிமாறன்

 15. Pingback: ஒப்பாரிகளே போராட்ட முறை-பிணத்தை அடக்கம் செய்வதே லட்சியம் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s