Monthly Archives: ஜூலை 2013

கதரும் மில்லும்; காந்தி நடத்தும் நாடகம்

கதர் துணி, மில் துணி இவை இரண்டில் எது சவுக்கியமான விலைக்குக் கிடைக்கிறதோ, அதை அணிவதால் தான் ஏழைகள் தற்காலப் பொருளாதார நிலைமையைச் சமாளிக்க முடியுமென நாம் கருதுகின்றோம். ஆகையால்தான் கதரை விட மில் துணிகளை ஆதரிப்பது நலமெனக் கூறுகின்றோம். காங்கிரஸ் மில் துணிகளையும் ஆதரித்து, கதரையும் போற்றி வருவதிலிருந்தே கதர் ஒழிந்துவிடுமென்பது விளங்கவில்லையா? இன்னும் … Continue reading

Posted in பதிவுகள் | 2 பின்னூட்டங்கள்

மனோரமா-ஸ்ரீதேவி: இவர்களுக்கு இணையாக ஆண்-பெண் இருபாலர்களிலும் நடிக்க ஆள் இல்லை

திரைப்பட நடிகர்களைப் பற்றி அதிகம் சொல்கிறீர்கள். நடிகைகளைப் பற்றி ஒன்றுமே சொல்வதில்லையே? -சி.பாக்யலட்சுமி, சென்னை. சொல்லியிருக்கிறேன். மீண்டும் அதை அழுத்தத்தோடு சொல்வதற்கான வாய்ப்பாக உங்கள் கேள்வியை பயன்படுத்திக் கொள்கிறேன். மனோரமா, ஒட்டுமொத்த நடிகர்களின் திறமையையும் ஊதி தள்ளிய நடிகை. உலகத் தரம் வாய்ந்த ஒரே இந்திய நடிகை. ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டில் போன்ற இந்தியாவின் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 7 பின்னூட்டங்கள்

ஐ.டி. கம்பெனி ஊழியர்களும் டீக் கடை ஊழியர்களும்

ஐ.டி. கம்பெனிகளின் சம்பளத்தைப் பார்த்த பிறகு தான் தெரிகிறது, இவ்வளவு நாள் இந்திய முதலாளிகள் நம் தொழிலாளர்களுக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவு குறைவானது என்று? -க.சத்தியமூர்த்தி, சேலம். உண்மையில் ஐ.டி கம்பெனிகள் தருகிற சம்பளம் குறைவானது. ஒப்பிட்டளவில் இதே வேலையை பார்க்கிற அமெரிக்கர், ஐரோப்பியர்களுக்குத் தருகிற சம்பளத்தில் பாதிதான் இந்தியர்களுக்குத் தரப்படுகிறது. இந்த குறைந்த சம்பளத்திற்காகத்தான் இந்தியர்களுக்கு அன்னிய … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 2 பின்னூட்டங்கள்

‘மெக்காலே’ வின் கல்வியும் ‘தினமணி’ யின் தகுதி, திறமையும்

இந்தியக் கல்விமுறை மனப்பாடம் செய்யும் முறையாக இருப்பதும், மாணவர்களின் தனித்தன்மையை ஊக்குவிக்கும் முறையாக சமூக பொறுப்பை, எளிய மக்களின் பால் அக்கறையை ஏற்படுத்துகிற கல்வியாக இல்லாமல் இருப்பதும் பெரும் குறைதான். வெள்ளைக்காரர்கள் தங்களுக்கு குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக கொண்டு வந்த கல்விமுறை இது. சரியாக சொல்ல வேண்டுமானால் அடிமைகளை உருவாக்க வந்த கல்விமுறை. பிறகு அந்தக் கல்வியில் … Continue reading

Posted in கட்டுரைகள் | 13 பின்னூட்டங்கள்

ஆனந்த விகடன் ஜாதி எக்ஸ்பிரஸ்: சின்ன விளக்கம் பெரிய திருத்தம்

ஜாதி வெறியர்கள் இந்தப் படத்தில் காட்டுவது போன்று கொடூரமான முகத்தோடு இல்லை. அவர்கள் பார்ப்பதற்கு சாதுவாக நன்கு படித்த டாக்டர்களாக இருக்கிறார்கள். கண்ணில் ஞானஒளி தெரிகிற சங்கராச்சாரியார்களாக இருக்கிறார்கள். கெட்டவர்கள் என்றால் அவர்கள் வேட்டி, லுங்கி கட்டிக் கொண்டு கறுப்பாக இருப்பார்கள் என்பது கால காலமாக நம் பொதுப்புத்தியில் ஊறிப்போன சிந்தனை.  ‘சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ … Continue reading

Posted in பதிவுகள் | 8 பின்னூட்டங்கள்

தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் தமிழ் வளர்த்து ஜாதி காத்தார்

சுவடிகள் இணைக்கப்பட்டது  ‘நூலால்’. எந்த நூல்? அதாங்க அந்த ‘நூல்’தான் * திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் பரிமள ராசன் தனது  facebook ல்  ஜூலை 4 ம் தேதி தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் தமிழ் மரபு பற்றி குறிப்பிட்டு இருந்ததை விவாதத்திற்காக வெளியிட்டிருந்தார். அதையும் அதில் நான் எழுதியதையும் சேர்த்து வெளியிடுகிறேன். பரிமள … Continue reading

Posted in பதிவுகள் | 16 பின்னூட்டங்கள்

இளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா?

இளவரசன் – திவ்யா திருமணம். தர்மபுரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பா.ம.க வன்னிய ஜாதி வெறியர்களின் தாக்குதல். அதே கும்பல் மற்றும் நீதிமன்றம், ஊடகங்கள் இளவரசனிடமிருந்து திவ்யாவை திட்டமிட்டு பிரித்தனர். அதன் தொடர்ச்சியாக இளவரசனின் மரணம். இவ்வளவு நடந்த பிறகும்கூட இதை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்னிய ஜாதி வெறியர்களின் தாக்குதலாக கண்டிக்காமல், ‘இது காதலுக்கு … Continue reading

Posted in கட்டுரைகள் | 15 பின்னூட்டங்கள்