கருணாநிதி எதிர்ப்பு: Be Careful

Karunanidhi

கருணாநிதி ஒரு தமிழனத் துரோகி. ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது பதவி சுகம் அனுபவித்தவர். கனிமொழிக்காக கட்சிகளிடம் கையேந்தும் கருணாநிதி, ஈழத் தமிழர்கள் நலனுக்காக இப்படி செய்ததுண்டா? தன் குடுபத்திற்காக கட்சி நடத்துகிறார். இந்தியாவின் பெரிய பணக்காரர்களில் ஒருவர். திருவாரூரி்ல் இருக்கும்போது சோத்துக்கு சிங்கி அடித்துக் கொண்டிருந்தவர். இன்றைக்கு இந்த நாட்டையே விலைக்கு வாங்கும் அளவிற்கு வசதியானவர். அவரை நீ ஆதரிப்பது நீயும் அவரைப் போல் ஒரு தமிழனத் துரோகியாக இருந்து பணம் சேர்ப்பதால்தான்.

-யாருப்பா நீ? (எழுதியவர் பெயர் குறிப்பிடாததால் இப்படி குறிப்பிட்டிருக்கிறேன்.)

கருணாநிதியை திட்டி எழுதி எனக்கெதுக்கு அனுப்பியிருக்கிறீர்கள்? என்னால் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? நானே கஷ்டத்துல இருக்கேன். எங்கிட்ட ஒன்னும் பேறாது.

இத குமுதத்திற்கு அனுப்பியிருந்தாலாவது.. ‘லம்ப்பா’ எதவாது கிடைச்சிருக்கும், இல்ல நல்ல சம்பளத்துல வேலையாவது போட்டுக் கொடுத்திருப்பாங்க. உங்க திறமையை வீண் பண்ணிட்டிங்களே. கூடிய விரைவில் ஜூனியர் விகடன், தினமணியில்  சிறப்புக் கட்டுரைகள் எழுதுவீர்கள்.பத்திரிகையுலகில் உங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். வாங்க அடுத்த ‘தமிழருவி’ நீங்கதான்.

இதையும் மீறி இன்னொரு முறையும் இதேபோல் எனக்கு எழுதி அனுப்புனா, 55 ரூபாய்க்கு என் செல்போன் நம்பருக்கு டாப்-அப் பண்ண சொல்லுவேன். Be Careful.

தொடர்புடையவை:

‘நாய் நக்கித்தான் குடிக்கும்’ – அப்போ சிங்கம் என்ன சொம்புல மொண்டா குடிக்கும்?

உண்மையான தமிழ்த் தேசியவாதிகள்!

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

10 Responses to கருணாநிதி எதிர்ப்பு: Be Careful

 1. கரும்புலி சொல்கிறார்:

  ஸ்பெக்டரம் அலைபேசி முறைகேடுல லட்சம் கோடின்னு அடிச்ச கைகளின் கூஜாக்(மதி)களுக்கு 55 அலைபேசி டாப் அப் கார்ட் எல்லாம் தூசியாச்சே.

 2. r.k.seethapathi naidu சொல்கிறார்:

  dum dumm dummm- ippothu- “muthuku sorinthu vituvathu” kalaiger productions…….

 3. Vijay Gopalswami சொல்கிறார்:

  சீதபேதி நாயுடு, இந்த ப்ளாகுல எதாவது புதுசா எழுதிருந்தா முழுசா படிச்சுக் கூட பாக்காம கமெண்ட் பாக்ஸ்ல வந்து கழிஞ்சு வைக்க வேண்டியது. சொம்ப எடுத்துக்கிட்டு எங்கயாச்சும் கம்மாய்க் கரைக்கு போக வேண்டியது தானே. இங்க என்னத்துக்கு வற்றீங்க.

 4. சம்பூகன் சொல்கிறார்:

  கருத்தைக் கருத்தால் சந்திக்க முடியாத கோழைகளே தனி மனிதத் தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள்.அவர்களை அலட்சியப்படுத்துக்கள்.

 5. Vijay Gopalswami சொல்கிறார்:

  கரும்பிலி கொ**டை எடுத்த பிலின்னு நெனைக்கிறேன்…

 6. Vijay Gopalswami சொல்கிறார்:

  இப்படி ஒரு கேள்வியைக் கேட்க தான் சரியான ஆள் கிடையாது, குமுதத்துக்கு அனுப்பி வைத்தாலாவது எதிர்கால நன்மைக்கு ஏதுவாகும்னு சொல்றாரு. அதையும் கூட முதுகு சொறிவது, கூஜா தூக்குவதுன்னு சொன்னா எதால சிரிக்கிறதுன்னு தெரியல :))

 7. Adangudi சொல்கிறார்:

  கருணாநிதி ஏதோ தன்னுடைய கையிலே சக்ராதயுததை வைத்திருந்ததை போலவும், அதை பயன்படுத்தி ஈழ மகளை காப்பாற்றாது போலவும், ஈழ மக்கள் சாவுக்கு கருணாநிதி தான் காரணம் என்பது போலவும், பேசியும், எழுதியும் அவரும் தலைவர்களும், மீடியாக்களும் மக்களை முட்டாளாக்குகிறார்கள்.
  ஈழ மக்களின் இந்த நிலைமைக்கு காரணம் அவர்களேதான். ஈழ பிரச்னை இந்தியா மட்டும் சம்பத்த பட்டு இருந்த போது, இந்தியாவின் பேச்சை அவர்கள் கேட்கவில்லை. அது உலக பிரச்சினை ஆகி, வல்லரசு நாடுகள் ஒன்று சேர்ந்து தீவிர வாதத்துக்கு முடிவு கட்ட ஒருமித்து இலங்கைக்கு ஆதரவு கொடுக்கும்போது இந்தியாவால் என்ன செய்து இருக்க முடியும். கடைசியாக இந்திய தலை எடை எந்த வாய்ப்பும் இல்லாமல் போனது. அந்த சூழ்நிலையில்,ஒரே ஒரு நபர் நினைத்து இருந்தால் அத்தனை மக்களையும் காப்பாற்றி இருக்க முடியும். பிரபாகரன், சரண் அடைந்து இருந்தால், அத்தனை மக்களும் காப்பற்றப்பட்டு இருப்பார்கள்.
  இன்றைக்கு, ஈழத்தை சேர்ந்த ஒரு பகுதி மக்கள் அகதிகள் என்ற போர்வையில் மேலை நாடுகளில் குடியேறி வசதியா வாழ்ந்து கொண்டு, ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு, ஈழ மக்களுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து கொண்டு தமிழ் நாட்டில் இருக்கும் தலைவர்களையும், இந்தியாவையும் அதன் ஆளுமையும் குறை சொல்லியும், கேவலமாக பேசுவதையும் ஒரு காலும் ஏற்று கொள்ள முடியாது.

  ஈழ பிரசினைகாக, தனது உடலை தீக்கு இறை ஆகிய இளைஞர்கள் எதனை பேர்? இதேபோல் மேலை நாடுகளில் குடியேறி வசதியா வாழ்ந்து கொண்டு இருக்கும் ஈழத்தை சேர்ந்தவர்கள் எதனை பேர் தன்னை தியாகம் செய்து இருகிறார்கள்.

 8. Adangudi சொல்கிறார்:

  ஈழத்தை சேர்ந்த அகதிகள் என்ற போர்வையில் மேலை நாடுகளில் குடியேறி வசதியா வாழ்ந்து கொண்டு, ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு இன்டர்நெட்டில் கமெண்ட் போடும் எந்த ஈழ அகதிக்கும் கருணாநிதியை குறை சொல்ல அருகதை கிடையாது.

 9. சாமிநாதன் சொல்கிறார்:

  Adangudi இப்படி எழுதினால் உங்களை தமிழர் விரோதி என்பார்கள்.

 10. ponsingh சொல்கிறார்:

  கருணாநீதி இன் கோவணம் வரை தமிழ் மக்கள் தெளிவாக பார்த்தாச்சி இன்னும் மூடிமாரைக்க ஒன்றும் இல்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s